Sunday, February 12, 2012

முக்குலத்தை சாதி ரீதியாக உடைக்க அரை மண்டைகள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டார்களாம் . குறிப்பாக மன்னாரன் கும்பல் சார்ந்த சாதியினரை அடக்கி விட்டு அவர்களது குடுமியை அகம்படிந்தவர்கள் மற்றும் பசும்பொன்னின் சாதியை சேர்ந்தவர்கள் மூலம் சிரைக்க வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறதாம் அதனடிப்படையில் மன்னாரன் கும்பல் சார்ந்த சாதியை சேர்ந்தவர்களின் அமைச்சர் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அகம்படிந்தவர்களிடமும் , பசும்பொன்னின் சாதியை சேர்ந்தவர்களிடமும் வழங்கப்படலாமாம் ......

அதில் நடனராசனிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த செல்லூர் ராசா கொஞ்சம் அதிகமான கலக்கத்தில் இருக்கிறாராம்

ஒரு மருத்துவருடைய படுகொலையின் பிண்ணனியில் குழப்பப்பட்ட சமூக குட்டை


ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கர்ப்பிணி பெண்ணின் இறப்பும் அதையொட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரையும் பற்றியதான பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களிலும் போது இடங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அப்ப இப்ப யாரும் அதை பற்றி பேசலையா என்று யாராவது கேட்கலாம். பரபரப்பை வைத்து பொழுது போக்கும் நம்மாளுங்க அடுத்த பரபரப்பு வந்தாச்சின்னா அதை அப்படியே போட்டு விட்டு அடுத்ததை பிடிக்க போய் விடுவாங்க என்பது தெரிந்த கதை தானே. அதில் ஒரு சாரார் மருத்துவர் மோசமானவர் என்றும் , இன்னொர் சாரார் கொலை செய்தவன் மனவக்கிரம் படைத்தவன், கொடூரன் எனவும் கடுமையான வாதங்களை முன்வைத்தார்கள். சரி இருவருமே மோசமானவர்களாக இருக்கட்டும் ஆனால் அப்படிப்பட்ட மருத்துவர்களையும் கொலையாளிகளையும் உருவாக்குவது யார்.... இந்த சமூகம் தானே ? சிறுவயதிலேயே குழந்தைகளை பணம் காய்க்கும் மரமாக சமூக அக்கறை அற்ற சுய சாதி, இன, மொழி, மத வெறி கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதில் தானே இச்சமூகம் மும்முரமாக இருக்கிறது. கல்வியும் மருத்துவமும் வியாபாரமயமாகி விட்டது தான் மனித நேயமற்ற ஒழுக்கமற்ற சமூகத்தின் மூலகாரணங்களாகி விட்டது. பின்பு எப்படி மனித நேயமற்ற மனிதர்களை எதிர்பார்க்க முடியும். இந்த நேரத்தில் தங்களுடைய நாட்டில் உள்ள கிடைத்த வசதிகளையும் சுகங்களையும் தூர எரிந்து விட்டு இந்தியாவுக்கு சேவை நோக்கத்தோடு வந்து கல்விசாலைகளையும், மருத்துவமனைகளையும் ஏற்படுத்தி இந்த சமூகத்தை பண்படுத்திய வெள்ளைத்தோல் துறவிகளை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.

மருத்துவர்கள் எங்கோ வானத்தில் இருந்து வெடித்து வந்தவர்கள் அல்ல. அவர்களை உருவாக்குவதும் இந்த சமூகம் தானே. தன்னிடம் வருகிற நோயாளிகளை சாதி பார்த்து மருத்துவம் செய்த மருத்துவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மருத்துவர் தனக்கு மருத்துவம் பார்க்க கூடாது என்று அரசு பொதுமருத்துவமனையில் குரல்கள் எழுப்பிய நோயாளிகளும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தானே. அதற்கெல்லாம் நாம் எவ்விதமான எதிர்ப்பை காட்டினோம் என்பதையும் இச்சமூகம் சிந்தித்து பார்க்க வேண்டும். உண்மையில் இச்சமூகம் தான் மனநோய் பிடித்து அலைகிறது .அதை குணப்படுத்த சமூக அக்கறையுள்ள போராளிகள் போராடவேண்டும்

தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவர்களது வசதிக்கு ஏற்றார் போல் கட்டணத்தை வாங்குகிற அதே நேரத்தில் ஏழைகளுக்கு பணம் வாங்காமல் தன்னிடம் மருந்து நிறுவனங்கள் கூடுதலாக அன்பளிப்பாக தரும் மருந்துகளை அந்த ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கும் மருத்துவர்களும். உண்டு ஆனால் இந்த சமூகம் அவர்களை கொண்டாடுவதில்லை. அவர்களை போன்றவர்களிடம் தான் பேரம் பேசும். அது மற்றுமொரு வெட்ககேடான விடயம்.

உண்மையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட்டு விட்டு, சக்களத்தி சண்டை போல் அவசரத்தில் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை ஒருவர் மீதுமாறி ஒருவர் அள்ளி வீசுவது தீர்வுக்கு வழி வகுக்காது

ஒரு பக்கம் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்காக போராடும் ஒரு கூட்டம், மறுபக்கம் மருத்துவர் கொல்லப்பட்டது சரிதான் என்று கட்டுமிராண்டித்தனத்தோடு ஆர்ப்பரிக்கும் மற்றொரு கூட்டம். ஆனால் ஒரு விடயத்தில் இரண்டு கூட்டத்தவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர், அது தங்களுடைய தவறுகளை மறைத்து அடுத்தவர்களுடைய தவறுகளை பெரிதுபடுத்தி நியாயம் பேசுவதில் முண்டி கொண்டு நிற்கிற செயல்பாடுகளில். தங்கள் பக்கம் இருக்கும் தவறை இரு கூட்டமும் சமூக அக்கறையோடு உணரும் நாள் எந்நாளோ, அந்த நாள் வரும் வரை இரண்டு பக்கமும் மனிதநேயம் என்பது கல்லறையில் உறங்கும் எலும்புக்கூடாக தான் இருக்கும். அதே நேரத்தில் நடுநிலையாக நியாயத்தின் பக்கம் நின்று போராடும் மருத்துவர்களின் குரல்கள் இரண்டு சாராராலும் காதில் வாங்கி கொள்ளப்படுவதில்லை.

இங்கு மற்றொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இறந்து போன படுகொலை செய்யப்பட்ட மருத்துவருக்காக திமிறி எழுந்த மருத்துவர்களின் குரல்வளைகள் கல்பாக்கத்தில் கதிர் வீச்சுகளோடு மரண போராட்டம் நடத்தி கொண்டிருக்கிற மக்களுக்காக போராடிய மக்கள் மருத்துவர் புகழேந்திக்கு அதிகார வர்க்கத்தால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட போது தங்களுக்கு தாங்களே சுருக்கிட்டு கொண்டனவே. இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் எழுப்பும் குரல்கள் எல்லாம் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் எழும்புகிறதேயன்றி படுகொலை செய்யப்பட்டவருக்கான நீதி வேண்டி எழும்பவில்லை என்றே தோன்றுகிறது

எல்லா தவறுகளையும் மருத்துவர்கள் பக்கம் போட்டு விட்டு தங்களை ஒழுக்க நெறி வழுவாமல் நடந்து கொள்வதாக காட்டி கொள்ளும் கூட்டம் குட்டையை குழப்புவதில் தங்களது உழைப்பை செலவிடுகிறது. அதில் அவர்கள் சுமத்தும் கேலிக்குரிய குற்றச்சாட்டுகளில் ஓன்று அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இல்லை அது அசுத்தமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகள் அசுத்தமாக இருப்பதற்கு மருத்துவர்கள் என்ன செய்ய முடியும். அது ஆட்சியாளர்களிடம் முன் வைக்கப்படவேண்டிய குற்றச்சாட்டு அல்லவா. இப்படி தேவையற்ற குற்றசாட்டுகளை வைப்பவர்களில் பலர் வீட்டில் இருக்கிற குப்பையை எடுத்து பக்கத்தில் இருக்கிற திறந்த வெளியில் கொட்டுபவர்களும் , குப்பை தொட்டி அருகில் இருந்தாலும் அதன் அருகில் சென்று குப்பைகளை அதில் போட வெட்கப்பட்டு தூரத்தில் இருந்தே வீசி எறியும் பெருமக்களாக தான் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் மருத்துவர்களாக செல்லும் மாணவர்களை உருவாக்கிய பள்ளிகள் கட்டணம் வசூலிக்காமல் பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிகள். இப்ப அப்படியா ..... தங்களது குழந்தைகளை மருத்துவர்களாக பொறியியல் வல்லுனர்களாக மாற்றி பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்ற சிந்தையில் அலையும் பெற்றோர்கள் அவர்களை கொண்டு சேர்ப்பதும் கல்வியை மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் சமூக கொலைக்கூடங்களில் தானே


அரசு மருத்துவமனையில் பணி செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக தனியாக மருத்துவ கூடத்தை நடத்தி கல்லா கட்டி கொண்டிருந்த ஒரு பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை கண்டித்து போராடும் பெரியாரின் சமூக நீதி போராட்டத்தால் கல்வி பெற்ற கூட்டம் ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில் இன்னமும் சமூக நீதியை நோக்கி செல்ல விடாமல் தடுத்து வைக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தமிழக் காவல் துறையை சேர்ந்த காவாலிகளால் கற்பழிக்கப்பட்ட நிகழ்வை கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கும் மொத்த சமூக கூட்டம். ... ஆனால் அதே நேரத்தில் சமூக நீதி போராளிகளின் போராட்டத்தால் முன்னேறிய சமூகம் தங்களுக்குள்ளே பிரிந்து கொண்டு சண்டையிடுவதை தூரத்தில் நின்று நமுட்டு சிரிப்போடு ரசித்து கொண்டு தங்களது கல்லா பெட்டியை நிரப்பி கொண்டிருக்கும் பார்ப்பனிய கூட்டம்.
என்ன சமூகமோ இது ?
எந்த சமூகம் கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரமாக்குகிறதோ அச்சமூகம் தனது அழிவு நாளை முன் குறித்து விடுகிறது.