Saturday, November 24, 2012

ஒரு அடிமாட்டின் கதை




பள்ளி இனத்தில் பிறந்த திருமாவளவன்களும் உண்டு .... வள்ளுவ இனத்தில் பிறந்த காடு வெட்டி குருக்களும் உண்டு ...

அதற்கு எடுத்துகாட்டாக என் வாழ்வில் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்வேன் ... கொஞ்ச நாளைக்கு முன்பு  சூழ்நிலை நிமித்தமாக பல்லாவரத்திற்கு அருகில் உள்ள அனகாபுத்தூரில் ஒரு அரை எடுத்து தங்கி இருந்தேன் .... அப்போது அந்த அறையை வாடைக்கு விட்ட அதன் சொந்தகாரர் எனக்கும் பக்கத்துக்கு வீட்டில் குடியிருப்பவரும் பயன்படுத்தும் விதத்தில் ஒரு கழிவறையை காண்பித்தார் அது எங்கள் இரு வீட்டிற்கும் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறி விட்டார் .... பக்கத்து வீட்டு காரரும் அக்கழிவறையை மற்ற வீடுகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தா வண்ணம் ஒரு பூட்டை போட்டு சாவிகளுள் ஒன்றை என்னிடம் தந்தார் .... நானும் ஆரம்பத்தில் அவர் நல்ல மனிதர் என்று நினைத்து கொண்டு அவருடன் அவ்வப்போது அளவளாவுவேன் (சில நேரங்களில் அவர் போதையிலும் இருப்பது உண்டு அப்படிப்பட்ட நேரங்களில் மனிதன் ஏதோ சோகத்தில் தண்ணி அடித்து இருக்கிறார் என்று பெரிதாக எடுத்து கொள்வதில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து தான் தெரியும் இது அவருடைய சின்ன வீட்டிற்கு என்று எடுத்து கொடுத்த வாடகை வீடு என்று)... ... அப்படி பேசும் போது அவர் தன்னை இந்திய கம்முநிட்டை சேர்ந்தவர் என்றும் தங்கள் இயக்கம் தான்  தான் உண்மையான சமூக அக்கறை கொண்ட இயக்கம் என்றும் மார்க்சிஸ்ட் கம்முனிட்டுகள் முதலாளிகளை மிரட்டி பணம் பறிக்கும் கூட்டம் என்று சந்திலே அவருடைய கட்சியின் சோக சிந்தை பாடினார்  ... அப்போது நான் அவரிடம் போட்டு வாங்கும் விதமாக தா.பாண்டியனை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன் ... அதற்கு அவர் பாண்டியனை போன்று ஒரு சிறந்த கம்முனிட்டை வேறு எங்கும் பார்க்க முடியாது.... அதற்கு நான் அவரிடம் பாண்டியன் சுய சாதி பிடித்தவர் என்று பேசி கொள்கிறார்களே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஏற்று வின எழுப்பினேன் ... நான் கேட்டது தான் தாமதம் மனிதர் கஞ்சா அடிக்காமலேயே ... இதை பாருங்க தம்பி நானும் இந்த திருமாவளவன் மற்றும் புரட்சி பாரதம் போன்ற சாதி கட்சியில் பெரும்பான்மையாக  இருக்கும்  வள்ளுவ இனத்தை சேர்ந்தவன் தான் ... அவனுங்க எல்லாம் சாதி கட்சி நடத்தி அரசியல் பண்ணுகிறவனுங்க ஆனா எங்க தா. பாண்டியன் அப்படி கிடையாது என்று சொனார் பார்க்கலாம் எனக்கு அவர் தண்ணியடிக்காமல் என்னிடம் பேசி கொண்டு இருந்தாலும் அவருடைய வார்த்தையில் இருந்த வீச்சம் என்னை அத்துடன் அவருடன் நடந்த உரையாடலை முடிக்குமாறு கொண்டு விட்டது ... அதற்கப்புறம் நான் அவர் வாயில் இருந்துவரும் சாக்கடைக்கு பயந்து ஒரு சிறு புன்முர்வளுன் நகர்ந்து சென்று விடுவேன் ... நாட்கள் நகர்ந்தது  .... அப்புறம் நானுண்டு என்னுடைய வேலையுண்டு என்று கடந்து சென்று விடுவேன் ... அப்புறம் கழிவறையை அவருடைய குடும்பம் உபயோகப்படுத்தும் விதத்தில் எமக்கு சில மனக்குறைகள் உண்டு .. பிறிதோர் அறையை சேர்ந்தவரும் அந்த கழிவறையை உபயோகப்படுத்துகிறாரே என்ற உணர்வி கிசித்து இல்லாதவர்களை போன்று அந்த குடும்பம் கழிவறையை பயன்படுத்தி விட்டு அதில் தண்ணி ஊற்றாமல் சென்று விடுவார்கள் நானும் விதியே என்று பல நேரங்களில் தண்ணி ஊற்றி கழுவி விட்டு கழிவறையை பயன்படுத்துவேன் ...அப்படி ஒரு நாள் அதிகாலையில் நான் கழிவறையை பயன்படுத்த சென்ற பொழுது அந்த போதை பார்டி உள்ளே இருந்தார் ... சரி நானும் வெளியே பொறுமையாக காத்திருந்தேன் .. கழிவறையை விட்டு வெளியே வந்தவர் அப்படியே வீட்டுக்குள் சென்று கதவை தாழ்பாழ் இட்டு கொண்டார் நான் கழிவறைக்கு சென்ற பொழுது அவர் வெளியேற்றிய மலம் கழிவறையில் மிதந்து கொண்டிருந்தது .... எனக்கு வந்த கோவத்திற்கு அவர் வீட்டுக்கு வெளியே பிடித்து வைக்கபட்டு இருந்த தண்ணியை எடுத்து கழிவறையில் கொட்டி கழுவி விட்டேன் .... நானும் பின்பு சென்று விட்டேன்.. அந்த நிகழ்விற்கு பின்பு அந்த குடும்பம் என்னை பார்த்தால் கொஞ்சம் விறைப்பாக நடந்து கொல்வதும் தொடர் கதையாகி போனது ... அப்படி நாட்கள் கடந்து கொண்டிருந்த போது ஒருநாள் அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக நான் வாளியை வைத்து இருந்தேன் அந்த போதை பார்ட்டியின் மனைவி என்னுடைய வாளியை எட்டி  உதைத்தாள். அதற்கு நான் அவளிடம் எதற்கு என்னுடைய வாளியை அப்படி உதைத்து தள்ளி விடுகிறாய் என்று கேட்டது தான் தாமதம் அந்த பெண்மணி "எங்கிருந்தோ எங்க பகுதிக்கு தஞ்சம் பொழைக்க வந்த நாய் நீ எங்க வீட்டு தண்ணியையே எடுத்து கழிவறையில் ஊற்றுகிறாயா என்று கேட்டாள் நானும் பதிலுக்கு நீங்க எல்லாரும் மலம் கழித்து விட்டு மற்றவர்கள் பயன்படுத்துவர்களே என்ற எண்ணம் துளியும் இல்லாதவர்களாக கழிவறையில் தண்ணீர் உற்றாமல் போனால் நான் என்ன செய்வேன்.. அதை தான் செய்வேன் என்றேன் ... உடனே அவள் இன்றிலிருந்து நீயும் கழிவறையை வாரா வாரம் கழுவி விட வேண்டும் ... அதற்கு அவளிடம் .. நான் தன் தினமும் நீங்க அசிங்கம் பண்ணி விட்டு தண்ணி ஊற்றாமல் போகும் போது நான் தானே கழுவி விடுகிறேன்... வேண்டும் என்றால் நீ கழு விடு என்றேன்... அவ்வளவு தான் அந்த பெண்மணி ... டேய் என்னை என்ன தோட்டி என்று நினைத்து விட்டாயா (ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நவீன பார்ப்பனிய குளியல் )...இரு என் கணவன் வரட்டும் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று மழை காலத்து தேரை கத்துவது போல் கத்தி கொண்டு இருந்தாள்... அன்றி சாயங்காலம் அவளுடைய கணவனை என்னிடம் சண்டை போட கூட்டி கண்டு வந்தாள் அவனும் என்னுடைய அறைக்கு முன்னால் இருந்து கத்தி கொண்டு இருந்தான் .. தே உன்னை பார்த்தாலே மாவோயிச்ட்டு தீவிரவாதி மாதிரி தெரியுது .... லவ்டே கபால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தி கொண்டு இருந்தான் ... திடீரென்று உள்ளே வர எத்தனித்தவன் என்னுடைய அறையின் ஓரத்தில் கிடந்த கத்தியை பார்த்த பின்பு  என்ன நினைத்தானோ தெரியவில்லை அப்படியே வெளியே நின்று கொண்டே உன்னை இந்த இடத்தில் இருந்தே விரட்டி விடுகிறேன் பார் என்று கத்தினான் ... நானும் உன்னால் முடிந்ததை பார் என்று சொல்லி விட்டு பேசாமல் படுத்து விட்டேன்... அதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு தான் அந்த அறையை காலி செய்யும் எண்ணத்தில் வேறு ஒரு வீட்டை பார்த்து முன்பணமும் கொடுத்து இருந்தேன் ஆனால் அவன் அப்ப்டி பேசியதும் எனக்குள் இருந்த சுயமரியாதை  காசு போனாலும் பரவாயில்லை அந்த அறையை காலி பண்ணாமல் மேலும் சில மதங்கள் வைத்து விடலாம் எண்ணத்தில் வைத்து இருந்தேன் .... பையன் பயந்து ஓடிவிடுவான் என்ற எண்ணத்தில் கத்தியவனுக்கோ நான் அவன் முன்னாடி வேண்டும் என்றே உலவுவதை பார்க்கும் போதெல்லாம் தேள் கொட்டுபட்டவனை போல் திரு திருவென முழித்து கொண்டே செல்வான் ....

எதற்கு இந்த நிகழ்வை சொல்ல வந்தேன் என்றால் தன்னுடைய சமூகம் அடிமைத்தனத்தில் கிடந்தது கொண்டிருக்கிறது என்ற எண்ணம் கிஞ்சித்தும் கொண்டிராமல் ...அந்த சமூகத்திற்காக போராடுபவர்களை எல்லாம் சாதி வெறியன்கள் என்று சொல்லி கொண்டு பார்ப்பனிய சகதியில் புரண்டு கொண்டு பல்வேறு கட்சிகளிலும் அடிமையாக இருப்பதையே பிறவி பயனாக எண்ணும் அன்னகாவடிகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலும் உண்டு என்பதை உணர்த்துவதற்காக தான் ..


அதே வேளையில் சாதி வெறியர்கள் நிறைந்த சமூகம் என்று பார்ப்பனியத்தால் மற்றவர்களுக்கு எதிராக கொம்பு சீவி விடப்படும் அடிமாடுகளாக நடத்தப்படும் பள்ளி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தன்னுடைய இன்னுயிரை தந்த தமிழரசன்களும் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ....

Friday, August 24, 2012

கல்வி தந்தை பற்றிய புதிய கிசு கிசு

கல்வி தந்தையின் மீதான பிடி இறுகுவதன் பிண்ணனியில் கூடங்குளம் போராட்டத்தை முடக்க நினைக்கும் ஆதிக்க பார்ப்பனிய சக்திகளின் கையும் இருக்கிறதாம், அவரை கொண்டு கூடங்குளத்தில் போராடும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் போராட்டத்தை உடைத்து விட தான், அதற்கான் பேரங்கள் நடக்கிறதாம் என்று சமீபகாலமாக பட்சி ஒன்றி இறைக்கையடித்து சொல்லுகிறது .... பின்ன எவ்வளவோ மொள்ளமாரி தனத்தை பண்ணி விட்டு சுதந்திரமாக பலர் உலவும் போது .... அத விடுங்க கடந்த காலத்திலேயே கல்வி தந்தை பண்ணிய எவ்வளவோ மொள்ளமாரி தனத்தை கண்டுக்காத அதிகார வெறி பிடித்த வர்க்கம் இப்போது மட்டும் தந்தையை ஓட ஓட விரட்டுவதன் மர்மம் என்ன .... தான் சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்து இருக்கலாம் அதை விடுத்து நடிகர்களின் பின்னால் ஓடினால் என்ன கதி என்பதை இனி வரும் சந்ததியினராவது தெரிந்து கொள்ளட்டும் ......

பின்குறிப்பு: இறந்து போன தொழிலாளர்களின் உயிரை எந்தவிதத்திலும் சாதாரண விடயமாக எடுக்க இந்த பதிவை போடவில்லை ... அந்த குடும்பங்களின் வலியையும் உணர்ந்து தான் இந்த பதிவை பதிகிறேன் ... ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் தனது சமூகத்தை பற்றிய அக்கறை இல்லாமல் தான் தோன்றி தனமா நடந்து கொள்வதால் வரும் மோசமான விளைவுகளை பார்க்கிற வழியில் எழுதுகிறேன்

Sunday, February 12, 2012

முக்குலத்தை சாதி ரீதியாக உடைக்க அரை மண்டைகள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டார்களாம் . குறிப்பாக மன்னாரன் கும்பல் சார்ந்த சாதியினரை அடக்கி விட்டு அவர்களது குடுமியை அகம்படிந்தவர்கள் மற்றும் பசும்பொன்னின் சாதியை சேர்ந்தவர்கள் மூலம் சிரைக்க வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறதாம் அதனடிப்படையில் மன்னாரன் கும்பல் சார்ந்த சாதியை சேர்ந்தவர்களின் அமைச்சர் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அகம்படிந்தவர்களிடமும் , பசும்பொன்னின் சாதியை சேர்ந்தவர்களிடமும் வழங்கப்படலாமாம் ......

அதில் நடனராசனிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த செல்லூர் ராசா கொஞ்சம் அதிகமான கலக்கத்தில் இருக்கிறாராம்

ஒரு மருத்துவருடைய படுகொலையின் பிண்ணனியில் குழப்பப்பட்ட சமூக குட்டை


ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கர்ப்பிணி பெண்ணின் இறப்பும் அதையொட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரையும் பற்றியதான பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களிலும் போது இடங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அப்ப இப்ப யாரும் அதை பற்றி பேசலையா என்று யாராவது கேட்கலாம். பரபரப்பை வைத்து பொழுது போக்கும் நம்மாளுங்க அடுத்த பரபரப்பு வந்தாச்சின்னா அதை அப்படியே போட்டு விட்டு அடுத்ததை பிடிக்க போய் விடுவாங்க என்பது தெரிந்த கதை தானே. அதில் ஒரு சாரார் மருத்துவர் மோசமானவர் என்றும் , இன்னொர் சாரார் கொலை செய்தவன் மனவக்கிரம் படைத்தவன், கொடூரன் எனவும் கடுமையான வாதங்களை முன்வைத்தார்கள். சரி இருவருமே மோசமானவர்களாக இருக்கட்டும் ஆனால் அப்படிப்பட்ட மருத்துவர்களையும் கொலையாளிகளையும் உருவாக்குவது யார்.... இந்த சமூகம் தானே ? சிறுவயதிலேயே குழந்தைகளை பணம் காய்க்கும் மரமாக சமூக அக்கறை அற்ற சுய சாதி, இன, மொழி, மத வெறி கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதில் தானே இச்சமூகம் மும்முரமாக இருக்கிறது. கல்வியும் மருத்துவமும் வியாபாரமயமாகி விட்டது தான் மனித நேயமற்ற ஒழுக்கமற்ற சமூகத்தின் மூலகாரணங்களாகி விட்டது. பின்பு எப்படி மனித நேயமற்ற மனிதர்களை எதிர்பார்க்க முடியும். இந்த நேரத்தில் தங்களுடைய நாட்டில் உள்ள கிடைத்த வசதிகளையும் சுகங்களையும் தூர எரிந்து விட்டு இந்தியாவுக்கு சேவை நோக்கத்தோடு வந்து கல்விசாலைகளையும், மருத்துவமனைகளையும் ஏற்படுத்தி இந்த சமூகத்தை பண்படுத்திய வெள்ளைத்தோல் துறவிகளை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.

மருத்துவர்கள் எங்கோ வானத்தில் இருந்து வெடித்து வந்தவர்கள் அல்ல. அவர்களை உருவாக்குவதும் இந்த சமூகம் தானே. தன்னிடம் வருகிற நோயாளிகளை சாதி பார்த்து மருத்துவம் செய்த மருத்துவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மருத்துவர் தனக்கு மருத்துவம் பார்க்க கூடாது என்று அரசு பொதுமருத்துவமனையில் குரல்கள் எழுப்பிய நோயாளிகளும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தானே. அதற்கெல்லாம் நாம் எவ்விதமான எதிர்ப்பை காட்டினோம் என்பதையும் இச்சமூகம் சிந்தித்து பார்க்க வேண்டும். உண்மையில் இச்சமூகம் தான் மனநோய் பிடித்து அலைகிறது .அதை குணப்படுத்த சமூக அக்கறையுள்ள போராளிகள் போராடவேண்டும்

தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவர்களது வசதிக்கு ஏற்றார் போல் கட்டணத்தை வாங்குகிற அதே நேரத்தில் ஏழைகளுக்கு பணம் வாங்காமல் தன்னிடம் மருந்து நிறுவனங்கள் கூடுதலாக அன்பளிப்பாக தரும் மருந்துகளை அந்த ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கும் மருத்துவர்களும். உண்டு ஆனால் இந்த சமூகம் அவர்களை கொண்டாடுவதில்லை. அவர்களை போன்றவர்களிடம் தான் பேரம் பேசும். அது மற்றுமொரு வெட்ககேடான விடயம்.

உண்மையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட்டு விட்டு, சக்களத்தி சண்டை போல் அவசரத்தில் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை ஒருவர் மீதுமாறி ஒருவர் அள்ளி வீசுவது தீர்வுக்கு வழி வகுக்காது

ஒரு பக்கம் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்காக போராடும் ஒரு கூட்டம், மறுபக்கம் மருத்துவர் கொல்லப்பட்டது சரிதான் என்று கட்டுமிராண்டித்தனத்தோடு ஆர்ப்பரிக்கும் மற்றொரு கூட்டம். ஆனால் ஒரு விடயத்தில் இரண்டு கூட்டத்தவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர், அது தங்களுடைய தவறுகளை மறைத்து அடுத்தவர்களுடைய தவறுகளை பெரிதுபடுத்தி நியாயம் பேசுவதில் முண்டி கொண்டு நிற்கிற செயல்பாடுகளில். தங்கள் பக்கம் இருக்கும் தவறை இரு கூட்டமும் சமூக அக்கறையோடு உணரும் நாள் எந்நாளோ, அந்த நாள் வரும் வரை இரண்டு பக்கமும் மனிதநேயம் என்பது கல்லறையில் உறங்கும் எலும்புக்கூடாக தான் இருக்கும். அதே நேரத்தில் நடுநிலையாக நியாயத்தின் பக்கம் நின்று போராடும் மருத்துவர்களின் குரல்கள் இரண்டு சாராராலும் காதில் வாங்கி கொள்ளப்படுவதில்லை.

இங்கு மற்றொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இறந்து போன படுகொலை செய்யப்பட்ட மருத்துவருக்காக திமிறி எழுந்த மருத்துவர்களின் குரல்வளைகள் கல்பாக்கத்தில் கதிர் வீச்சுகளோடு மரண போராட்டம் நடத்தி கொண்டிருக்கிற மக்களுக்காக போராடிய மக்கள் மருத்துவர் புகழேந்திக்கு அதிகார வர்க்கத்தால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட போது தங்களுக்கு தாங்களே சுருக்கிட்டு கொண்டனவே. இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் எழுப்பும் குரல்கள் எல்லாம் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் எழும்புகிறதேயன்றி படுகொலை செய்யப்பட்டவருக்கான நீதி வேண்டி எழும்பவில்லை என்றே தோன்றுகிறது

எல்லா தவறுகளையும் மருத்துவர்கள் பக்கம் போட்டு விட்டு தங்களை ஒழுக்க நெறி வழுவாமல் நடந்து கொள்வதாக காட்டி கொள்ளும் கூட்டம் குட்டையை குழப்புவதில் தங்களது உழைப்பை செலவிடுகிறது. அதில் அவர்கள் சுமத்தும் கேலிக்குரிய குற்றச்சாட்டுகளில் ஓன்று அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இல்லை அது அசுத்தமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகள் அசுத்தமாக இருப்பதற்கு மருத்துவர்கள் என்ன செய்ய முடியும். அது ஆட்சியாளர்களிடம் முன் வைக்கப்படவேண்டிய குற்றச்சாட்டு அல்லவா. இப்படி தேவையற்ற குற்றசாட்டுகளை வைப்பவர்களில் பலர் வீட்டில் இருக்கிற குப்பையை எடுத்து பக்கத்தில் இருக்கிற திறந்த வெளியில் கொட்டுபவர்களும் , குப்பை தொட்டி அருகில் இருந்தாலும் அதன் அருகில் சென்று குப்பைகளை அதில் போட வெட்கப்பட்டு தூரத்தில் இருந்தே வீசி எறியும் பெருமக்களாக தான் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் மருத்துவர்களாக செல்லும் மாணவர்களை உருவாக்கிய பள்ளிகள் கட்டணம் வசூலிக்காமல் பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிகள். இப்ப அப்படியா ..... தங்களது குழந்தைகளை மருத்துவர்களாக பொறியியல் வல்லுனர்களாக மாற்றி பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்ற சிந்தையில் அலையும் பெற்றோர்கள் அவர்களை கொண்டு சேர்ப்பதும் கல்வியை மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் சமூக கொலைக்கூடங்களில் தானே


அரசு மருத்துவமனையில் பணி செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக தனியாக மருத்துவ கூடத்தை நடத்தி கல்லா கட்டி கொண்டிருந்த ஒரு பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை கண்டித்து போராடும் பெரியாரின் சமூக நீதி போராட்டத்தால் கல்வி பெற்ற கூட்டம் ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில் இன்னமும் சமூக நீதியை நோக்கி செல்ல விடாமல் தடுத்து வைக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தமிழக் காவல் துறையை சேர்ந்த காவாலிகளால் கற்பழிக்கப்பட்ட நிகழ்வை கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கும் மொத்த சமூக கூட்டம். ... ஆனால் அதே நேரத்தில் சமூக நீதி போராளிகளின் போராட்டத்தால் முன்னேறிய சமூகம் தங்களுக்குள்ளே பிரிந்து கொண்டு சண்டையிடுவதை தூரத்தில் நின்று நமுட்டு சிரிப்போடு ரசித்து கொண்டு தங்களது கல்லா பெட்டியை நிரப்பி கொண்டிருக்கும் பார்ப்பனிய கூட்டம்.
என்ன சமூகமோ இது ?
எந்த சமூகம் கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரமாக்குகிறதோ அச்சமூகம் தனது அழிவு நாளை முன் குறித்து விடுகிறது.

Saturday, January 21, 2012

பண்ணையாரின் ஆவியும் மன்னாரன் கும்பலின் பயமும்

பண்ணையாரின் ஆவியும் ஆலடிக்காரரின் ஆவியும் மன்னாரன் கும்பலை இப்ப ரொம்பவே பயமுறுத்துகிறதாம்... எப்படியும் கூடிய சீக்கிரத்தில் ஒரு விக்கெட் விழலாமாம். ஏதாவது ஒரு முக்கியமான விக்கெட்டை போட்டு தங்களிடம் அனுப்புமாறு அவங்க சொந்தக்காரங்களிடம் ரெண்டு பேரின் ஆவியும் ரொம்பவே வற்புறுத்த ஆரம்பித்து விட்டதாம். அதற்கு பரிகாரமாக ஏதாவது பண்ணனும் இல்லை என்றால் ரெண்டு பேரின் ஆவிகளும் நம்மளை சும்மா இருக்கவிடாது வந்து தொண தொணத்து கொண்டே இருக்கும் என்ற முடிவில் அவற்றின் சொந்தக்காரங்க இருப்பதாக செய்தி கசிகிறது. வானளாவ அதிகாரம் படைத்த பாண்டிய மன்னர், பத்திரிகை அதிபர், உலகின் முன்னணி பணக்காரர், வைகுண்டக்காரர் என முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மிகப்பெரும் கூட்டணி உருவாகி இருக்கிறதாம்.


அவங்களோட எண்ணங்களில் மூன்று வித்தியாசமான திட்டங்கள் ஓடுகிறதாம். அவற்றில் ஓன்று பண்ணையாரை அனுப்புவது போல் அனுப்புவது
, இரண்டாவது அகில இந்திய அளவில் உள்ள ஒரு தாதாவை பயன்படுத்தலாம் என்றும் அதில் குறிப்பாக கர்நாடகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பெயர் அடிபடுகிறது. மூன்றாவது ஈழ போராளிகளின் அமைப்பில் எதையாவது ஒன்றை பயன்படுத்துவது. தற்போது மன்னாரன் கும்பலின் தலைச்சன் பிள்ளையான நடனராசன் கொடுக்கல் வாங்கலில் சர்வதேச அளவில் ஈழ போராளிகளின் சார்பாக இயங்கியவர்களின் பகையை சம்பாதித்து இருக்கிறாராம். அவர்களுக்கு நடன ராசன் தங்களுடைய உள் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது பிடிக்க வில்லையாம்.


இப்ப மன்னாரன் கும்பல் சாதி போரில் கொல்லப்பட்ட லோக்கல் ரவுடிக்காக எதற்கு களத்தில் இறங்கினோம் என்ற நிலையில் உள்ளதாம். தேவையில்லாமல் பண்ணையாரை தொட்டு விட்டோமோ என்றும் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம். கராத்தேவில் ஆரம்பித்து என்கவுண்டரில் தொடர்ந்து, துப்பாக்கி சூடு வரை கொண்டு போய் விட்டோமே என்று சொல்லவெண்ணா பயத்தில் குமுறி கொண்டு இருக்கிறார்களாம். இதுவும் போதாதென்று இப்ப பரமக்குடி காரங்களும் அவங்க சொந்தங்களின் ஆன்ம சாந்திக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்களாம்.


புலிவாலை பிடித்த சாதிவெறியனின் கதை நல்ல முடிவாக இருக்காது. புலிகளின் கண்களுக்கு ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா என்றெல்லாம் தனித்து தெரிவதில்லை. உன்னுடைய எதிரி எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நீ தான் தீர்மானிக்கிறாய்.

மன்னாரன் கும்பலை பின்னணியாக கொண்டு வெளிவரும் கிசு கிசுக்கள்