இல்லாத ஒன்றை இருப்பதாக தேடி அலைந்து காணாமல் போகிறவர்களுக்கு மத்தியில் இருக்கின்றவைகளை சரியாக புரிந்து கொள்ள வாழ்பவன்
Tuesday, August 24, 2010
இந்தியாவில் பட்டங்கள் விருதுகள் வழங்கப்படும் முறைகளும் மோசடிகளும்
சமீபகாலமாக பல்வேறு பட்டங்கள் வழங்கப்படுகிற வேகமும், அவைகளை வாங்குகிற ஆட்களின் தகுதிகளையும் பார்த்த போது நகைப்புக்குரிய விசயமாக தான் இருக்கிறது. சரி ... இதுவரை அந்த பட்டங்கள் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன என்று வரலாற்றை பின்னோக்கி பார்த்த போது மிகப்பெரிய அதிர்ச்சி தான் காத்து இருந்தது .எடுத்துக்காட்டாக பாரத ரத்னா வழங்கப்பட்ட முறைகளை குறுப்பிடலாம். தமிழ் சினிமா வரலாற்றில் ஆபாச பண்பாட்டை தனது படங்களின் மூலம் கொண்டு வந்த எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா 1988 லும், எல்லாரும் அவரவர் குலதொழிலை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற முற்பட்ட ராசாசிக்கு 1954 லிலும், இந்திய ஜனநாயகத்தின் குறள் வளையை அவசர சட்டத்தின் மூலம் நெரித்த இந்திராவுக்கு 1971 லும், இந்திராவுக்கு அடிமையாக இருந்த வி.வி.கிரிக்கு 1975 லும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசியலமைப்பின் சிற்பியும் ஒடுக்கப்பட்ட மற்றும் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக போராடியவரும், பொருளாதாரத்திலும் சட்டத்திலும் நிபுணத்துவம் பெற்றவரும், சர்வதேச சமுதாயத்தால் கடந்த நூற்றாண்டின் சிறந்த அறிஞர்களில் ஒருவர் என்று போற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கருக்கு அவர் இறந்த பிறகு அதுவும் 1990 ல் தான் வழங்கப்பட்டது. இந்தியாவில் தான் தகுதியற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுவதும் தகுதி உள்ளவர்களுக்கு அவர்களின் சாதனைகள் அங்கீகரிகப்படாமலிருப்பதும் காலம் காலமாய் நடந்து வருகிறது. இந்த பட்டங்கள் எதனடிப்படையில் வழங்கப்படுகிறது என்று உற்று கவனித்தால் ஆதிக்க சாதியினருக்கும் அவர்களின் எடுபிடிகளாக இருந்தவர்களுக்கும் , கவர்ச்சி ஆட்டம் ஆடிய சினிமா நடிகர்களுக்கும், இந்திய விளையாட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தங்களது மூலதனமாக்கி பல்வேறு வரி ஏய்ப்புகளை செய்த மற்றும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்களுக்குமே கிடைக்கிறது. அதிலும் விளையாட்டு வீரர்களின் சாதி பின்னணியும் அவர்களின் பிராந்திய பின்னணியும் மிகவும் உற்று பார்க்கபடுகிறது . அதில் சில நேரங்களில் சாதி பின்னணி பிராந்திய பின்னணியை காட்டிலும் முக்கியத்துவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவரை விட தென் இந்தியாவில் உள்ள ஆதிக்க குடுமிகளுக்கு முன்னுரிமை அழைக்கபடுகிறது . குடுமிகள் என்று வருகிற போது அவர்களின் பிராந்திய பின்னணியை பற்றி இந்திய அதிகார வர்க்கம் கவலை படுவதில்லை என்பது வேறு விடயம். அதே நேரத்தில் இந்திய அதிகார வர்க்கத்தால் வட இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்களது சாதனைகளும், தென்னிந்தியாவில் உள்ள ஏனைய சமூகத்தவர்களின் சாதனைகளும் (குடுமிகளையையும் அவர்களுடைய கைத்தடிகளையும் தவிர்த்து) காலம் காலமாக அங்கீகரிக்கபடாமலேயே உள்ளது. இந்தியாவின் ஆதிக்க சமூகம் எந்த அளவுக்கு நஞ்சு தன்மையோடு இருக்கிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் அண்ணல் அம்பேத்கர் படித்த கொலம்பியா பல்கலைகழகத்தில் அண்ணலின் பெயரால் ஏற்படுத்தப்பட இருந்த விருது அப்போது அந்த பல்கலைகழகத்தின் இந்திய ஆதிக்க சமூக வெறியர்களால் ஏற்படுத்தபடாமல் தடுக்கப்பட்ட சம்பவத்தை கூறலாம். அதே போல விளையாட்டு துறையிலும் எவ்வளவோ சாதனைகள் புரிந்த வீரர்கள் சாதிய, பிராந்திய பாகுபாட்டினாலும் கண்டுகொள்ள படாமல் விடப்படுகிற அதே நேரத்தில் குடுமிகளின் சின்ன சாதனைகள் கூட தேசிய சாதனையாக விளம்பரம் கொடுக்கப்படுகிறது. இன்று உலக அளவில் இந்திய சதுரங்க வீரர்களின் திறமை பரவ காரணமாக இருந்த மனுவேல் ஆரோனின் தியாகங்கள் அங்கீகரிக்கபடாமல் இருக்க, விஸ்வநாதனின் (சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர் என்பதில் எந்த ஐயமுமில்லை) சாதனைகள் விளம்பரபடுத்தப்படுகிறது. ஒரு வேளை குடுமிகளின் சமூகத்தில் பிறக்காமல் இருந்து இருந்தால் கிரிக்கெட்டில் காம்ப்ளியின் நிலைமை தான் அவருக்கு நடந்து இருக்கும். இந்தியாவில் குடுமிகளின் சமூகத்திலும் அவர்களின் கைத்தடிகளின் சமூகத்திலும் இருந்து வரும் விளையாட்டு வீரர்கள் தேசத்தின் பாதுகாவலர்களாகவும் சித்தரிக்கப்பட்டு வருவதும், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக விளையாட்டு வீரர்களின் அங்கீகாரம் வெகு சாதுர்யமாக பின்னுக்கு தள்ளப்படுவதும் முன்பிருந்ததை விட வேகமாக முன்னெடுக்கபடுகிறது. குடுமிகள் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டுகளிலும் சரி, மற்ற துறைகளிலும் சரி ஏனைய ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் பார்வையாளர்கள் அளவிலேயே அனுமதிக்க படுகின்றனர். ஆதிக்க சமூகத்தவரும், அதிகார வர்க்கத்தவர்களும் விளையாடும் விளையாட்டுகளும் அவர்கள் தலைமை வகிக்கின்ற விளையாட்டு கூட்டமைப்புகளுமே இந்திய அரசின் போதிய நிதியுதவிகளையும் சலுகைகளையும் பெறுகின்றன . அந்த நிதி உதவியும் அந்த கூட்டமைப்புகளை தங்களது கைப்பிடியில் வைத்து இருக்கிற ஆதிக்க சமூக மோசடியாளர்களால் ஏப்பம் விடப்படுகிறது. அதற்க்கு மிகச்சிறந்த உதாரணம் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் நடக்கும் பொருளாதார முறை கேடுகள் . இவனுங்க தான் யார் யாருக்கெல்லாம் பட்டங்களும் விருதுகளும் வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலைமையில் இருக்கிறார்கள். உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் உலக அளவில் ஒரு விளையாட்டில் முதல் பரிசை வென்றாலே டாக்டர் பட்டம் குடுக்கிற நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது. அவர்கள் அந்த விளையாட்டின் அல்லது துறையின் முன்னேற்றத்திற்க்காக என்ன செய்தார்கள் என்பதெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள படுவதில்லை. அப்படியே அந்த விளையாட்டுக்கோ அல்லது துறையின் முன்னேற்றத்துக்காகவோ உணமையிலேயே பாடுபட்டு இருந்தாலும் ஆதிக்க சமூகத்தில் பிறக்கவில்லை என்றால் அவர்களது திறமைக்கான அங்கீகாரம் என்பது கானல் நீரை போன்றது தான். கௌரவ டாக்டர் பட்டங்களும் சரி ஏனைய விருதுகளும் சரி தற்போதெல்லாம் யாருக்கு வழங்கப்படவேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் கேலி கூத்தாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி தான் டெண்டுல்கர்கள் கௌரவ ராணுவ கேப்டன்களாக உலா வருகின்றனர். எத்தனையோ கிராண்ட் மாச்டர்களை ( Grand master) உருவாக்கிய ஆரோனின் சாதனைகள் குப்பை தொட்டியில் வீசப்பட விசுவநாதனின் சாதனைகள் குடுமிகளின் சமூகத்தில் பிறந்தமையால் இலவசமாக விளம்பர படுத்தப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment