மன்னாரன் கம்பெனி கும்பல் மீதான நடவடிக்கைக்கு மோடி மச்சான் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய கிசு கிசுக்களை பற்றி நமக்கு தெரிந்த வட்டாரங்களில் கேட்டபொழுது அவர்கள் சொன்ன விடயம் கொஞ்சம் புதுசாக இருந்தது . அவர்கள் கூறியது என்னன்னா பாரத பிரதமர் கனவில் இருக்கும் மோடி, மற்றுமொரு பிரதமர் போட்டியாளரான மாயாவதியுடன் நடனராசன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் தனது தமிழகத்து பார்ப்பனிய தொடர்புகளை முடுக்கி நடனத்திற்கு கட்டம் கட்டும் வேலைகளை சொடுக்கி விட்டார் என்பது தானாம். அதே போன்று தேசிய அளவில் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த நாயுடு சமூகத்தை சேர்ந்த விசயகாந்தை தமிழ்நாட்டில் வளர விட்டால் அது தங்கள் சாதியின் அரசியல் ஆட்டத்தை மட்டு படுத்தி விடும் என்ற கணக்கில் விசியகாந்திற்கு எதிராக மன்னாரன் கும்பல் நகர்த்திய நகர்வுகளை விசியகாந்த் தேசிய அளவில் உள்ள தனது சாதி பிரமுகர்களிடம் கூறி புலம்பி இருந்தாராம். பாரதிய சனதாவில் குறுப்பிடத்தக்க செல்வாக்கோடு இருக்கும் நாயுடு சாதி பிரமுகர்கள் மோடி மச்சான் மூலம் செயாவை முடுக்கி மன்னாரன் கும்பலுக்கு ஆப்பு வைத்தார்கள் என்ற செய்தியும் அவர்களிடமிருந்து கசிகிறது
அதிகார வட்டங்களில் கசியும் மற்றுமொரு தகவலையும் கூறி கொள்கிறேன். அம்பிகளோட செல்லப்பிள்ளையாக மாறி கொண்டிருக்கும் பச்ச்சையான முத்து என்ற
அவர் மூலம் பார்கவ குல உடையார் சாதி சங்க பிரமுகர்கள் மத்திய தமிழ்நாட்டில் மன்னார்குடி மாபியாக்களின் சாதிக்காரர்களை மட்டுபடுத்த திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்களாம் . அதிலும் அவர்கள் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ரூசோவின் ஆத்மா சாந்தியடைவதற்கான வேலைகளில் பல்வேறு வழிகளிலும் ஈடுபட்டு வருகிறார்களாம். அதெப்படிங்க ரூசோ கிருத்துவரல்லவா என்று யாரவது கேட்கலாம் சாதி வெறி பிடித்து விட்டால் மதங்கள் அதற்கு தடையாக இருக்காது
முக்குலம் ஒன்றாக இருப்பது தங்களுடைய வசதிக்கு ஏற்ற செயல் அல்ல என்று அம்பிங்க அரைமண்டையை சொரிய ஆரம்பித்து விட்டார்களாம். கூடிய விரைவில் உட்சாதி அரசியல் அரங்கேற்றப்படும் என்ற தொரு செய்தி கசிகிறது. அதன் தொடர்ச்சியாக மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் குரு பூசையை பசும்பொன்னில் நடைபெறும் குரு பூசைக்கு போட்டியாக நடத்த அம்பலத்தில் அகம்படிந்து இருக்கும் சாதிக்காரர்களோடு பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.
அடுத்து மற்றொரு முக்கிய உயர் அதிகாரியான சுந்தரமான ராமருக்கு வலை காத்து இருக்கிறதாம். ராமானாதபுரம் ராச பரம்பரை என்ற கெத்தோடு சின்னமாவிடம் வளைய வந்தவர். கடந்த ஆட்சியில் தலைமை செயலகம் கட்டியதில் பெரியவருக்கும் இளையவருக்கும் தெரியாமல் இவரு ஒரு பெரும் தொகையை ஆட்டைய போட்டவர் . ஆனால் சின்னம்மாவிடம் உள்ள நெருக்கத்தால் தூசி தட்ட பட்ட புதிய தலைமை செயலக கட்டடம் பற்றிய கோப்புகள் குப்பை தொட்டியில் வீசப்பட்டன . அவை மறுபடியும் தூசி தட்டபடலாமாம்
நம்மிடம் வந்து சேரும் எல்லா செய்திகளிலும் நூறு விழுக்காடு உண்மை என்று அறுதியிட்டு கூற முடியாது. அதன் நம்பகத்தன்மை பற்றி நமக்கு கேள்வி குறிகள் இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாதே..... அது தான் நம்ம மண்டையையும் குடையுது
No comments:
Post a Comment