Saturday, January 21, 2012

பண்ணையாரின் ஆவியும் மன்னாரன் கும்பலின் பயமும்

பண்ணையாரின் ஆவியும் ஆலடிக்காரரின் ஆவியும் மன்னாரன் கும்பலை இப்ப ரொம்பவே பயமுறுத்துகிறதாம்... எப்படியும் கூடிய சீக்கிரத்தில் ஒரு விக்கெட் விழலாமாம். ஏதாவது ஒரு முக்கியமான விக்கெட்டை போட்டு தங்களிடம் அனுப்புமாறு அவங்க சொந்தக்காரங்களிடம் ரெண்டு பேரின் ஆவியும் ரொம்பவே வற்புறுத்த ஆரம்பித்து விட்டதாம். அதற்கு பரிகாரமாக ஏதாவது பண்ணனும் இல்லை என்றால் ரெண்டு பேரின் ஆவிகளும் நம்மளை சும்மா இருக்கவிடாது வந்து தொண தொணத்து கொண்டே இருக்கும் என்ற முடிவில் அவற்றின் சொந்தக்காரங்க இருப்பதாக செய்தி கசிகிறது. வானளாவ அதிகாரம் படைத்த பாண்டிய மன்னர், பத்திரிகை அதிபர், உலகின் முன்னணி பணக்காரர், வைகுண்டக்காரர் என முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மிகப்பெரும் கூட்டணி உருவாகி இருக்கிறதாம்.


அவங்களோட எண்ணங்களில் மூன்று வித்தியாசமான திட்டங்கள் ஓடுகிறதாம். அவற்றில் ஓன்று பண்ணையாரை அனுப்புவது போல் அனுப்புவது
, இரண்டாவது அகில இந்திய அளவில் உள்ள ஒரு தாதாவை பயன்படுத்தலாம் என்றும் அதில் குறிப்பாக கர்நாடகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பெயர் அடிபடுகிறது. மூன்றாவது ஈழ போராளிகளின் அமைப்பில் எதையாவது ஒன்றை பயன்படுத்துவது. தற்போது மன்னாரன் கும்பலின் தலைச்சன் பிள்ளையான நடனராசன் கொடுக்கல் வாங்கலில் சர்வதேச அளவில் ஈழ போராளிகளின் சார்பாக இயங்கியவர்களின் பகையை சம்பாதித்து இருக்கிறாராம். அவர்களுக்கு நடன ராசன் தங்களுடைய உள் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது பிடிக்க வில்லையாம்.


இப்ப மன்னாரன் கும்பல் சாதி போரில் கொல்லப்பட்ட லோக்கல் ரவுடிக்காக எதற்கு களத்தில் இறங்கினோம் என்ற நிலையில் உள்ளதாம். தேவையில்லாமல் பண்ணையாரை தொட்டு விட்டோமோ என்றும் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம். கராத்தேவில் ஆரம்பித்து என்கவுண்டரில் தொடர்ந்து, துப்பாக்கி சூடு வரை கொண்டு போய் விட்டோமே என்று சொல்லவெண்ணா பயத்தில் குமுறி கொண்டு இருக்கிறார்களாம். இதுவும் போதாதென்று இப்ப பரமக்குடி காரங்களும் அவங்க சொந்தங்களின் ஆன்ம சாந்திக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்களாம்.


புலிவாலை பிடித்த சாதிவெறியனின் கதை நல்ல முடிவாக இருக்காது. புலிகளின் கண்களுக்கு ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா என்றெல்லாம் தனித்து தெரிவதில்லை. உன்னுடைய எதிரி எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நீ தான் தீர்மானிக்கிறாய்.

மன்னாரன் கும்பலை பின்னணியாக கொண்டு வெளிவரும் கிசு கிசுக்கள்



1 comment:

Unknown said...

சிக்ஸரா பவுண்ட்ரியானு பொருத்திருந்து பாக்க வேண்டிதுதான்...

Post a Comment