அவளிடத்தில் அவன்
தன்னை தேடித்தேடி
அலுத்து தெளிந்த
அன்று தான் தெரிந்தது
அடகு வைக்கப்பட்ட
மீட்கப்படா இதயங்களை – அவள்
குப்பைத்தொட்டியில் எறிபவளென்று
தற்போது அவன்
உடைந்து போன கனவுகளும்
சிதைந்து போன குறிக்கோள்களும்
மண்டிக்கிடக்கும் குப்பைத்தொட்டியில்
தூக்கியெறியப்பட்ட இதயத்தை தேடி
தளர்ந்த நடைகளோடு
ஒவ்வொரு அடியையும் பின்னோக்கி
1 comment:
நன்று அருமையான எளிமையான வரிகள்
Post a Comment