இல்லாத ஒன்றை இருப்பதாக தேடி அலைந்து காணாமல் போகிறவர்களுக்கு மத்தியில் இருக்கின்றவைகளை சரியாக புரிந்து கொள்ள வாழ்பவன்
Friday, August 24, 2012
Sunday, February 12, 2012
முக்குலத்தை சாதி ரீதியாக உடைக்க அரை மண்டைகள் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து விட்டார்களாம் . குறிப்பாக மன்னாரன் கும்பல் சார்ந்த சாதியினரை அடக்கி விட்டு அவர்களது குடுமியை அகம்படிந்தவர்கள் மற்றும் பசும்பொன்னின் சாதியை சேர்ந்தவர்கள் மூலம் சிரைக்க வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறதாம் அதனடிப்படையில் மன்னாரன் கும்பல் சார்ந்த சாதியை சேர்ந்தவர்களின் அமைச்சர் பதவிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அகம்படிந்தவர்களிடமும் , பசும்பொன்னின் சாதியை சேர்ந்தவர்களிடமும் வழங்கப்படலாமாம் ......
அதில் நடனராசனிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த செல்லூர் ராசா கொஞ்சம் அதிகமான கலக்கத்தில் இருக்கிறாராம்
ஒரு மருத்துவருடைய படுகொலையின் பிண்ணனியில் குழப்பப்பட்ட சமூக குட்டை
ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கர்ப்பிணி பெண்ணின் இறப்பும் அதையொட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரையும் பற்றியதான பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களிலும் போது இடங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அப்ப இப்ப யாரும் அதை பற்றி பேசலையா என்று யாராவது கேட்கலாம். பரபரப்பை வைத்து பொழுது போக்கும் நம்மாளுங்க அடுத்த பரபரப்பு வந்தாச்சின்னா அதை அப்படியே போட்டு விட்டு அடுத்ததை பிடிக்க போய் விடுவாங்க என்பது தெரிந்த கதை தானே. அதில் ஒரு சாரார் மருத்துவர் மோசமானவர் என்றும் , இன்னொர் சாரார் கொலை செய்தவன் மனவக்கிரம் படைத்தவன், கொடூரன் எனவும் கடுமையான வாதங்களை முன்வைத்தார்கள். சரி இருவருமே மோசமானவர்களாக இருக்கட்டும் ஆனால் அப்படிப்பட்ட மருத்துவர்களையும் கொலையாளிகளையும் உருவாக்குவது யார்.... இந்த சமூகம் தானே ? சிறுவயதிலேயே குழந்தைகளை பணம் காய்க்கும் மரமாக சமூக அக்கறை அற்ற சுய சாதி, இன, மொழி, மத வெறி கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதில் தானே இச்சமூகம் மும்முரமாக இருக்கிறது. கல்வியும் மருத்துவமும் வியாபாரமயமாகி விட்டது தான் மனித நேயமற்ற ஒழுக்கமற்ற சமூகத்தின் மூலகாரணங்களாகி விட்டது. பின்பு எப்படி மனித நேயமற்ற மனிதர்களை எதிர்பார்க்க முடியும். இந்த நேரத்தில் தங்களுடைய நாட்டில் உள்ள கிடைத்த வசதிகளையும் சுகங்களையும் தூர எரிந்து விட்டு இந்தியாவுக்கு சேவை நோக்கத்தோடு வந்து கல்விசாலைகளையும், மருத்துவமனைகளையும் ஏற்படுத்தி இந்த சமூகத்தை பண்படுத்திய வெள்ளைத்தோல் துறவிகளை நன்றியோடு நினைத்து பார்க்கிறேன்.
மருத்துவர்கள் எங்கோ வானத்தில் இருந்து வெடித்து வந்தவர்கள் அல்ல. அவர்களை உருவாக்குவதும் இந்த சமூகம் தானே. தன்னிடம் வருகிற நோயாளிகளை சாதி பார்த்து மருத்துவம் செய்த மருத்துவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மருத்துவர் தனக்கு மருத்துவம் பார்க்க கூடாது என்று அரசு பொதுமருத்துவமனையில் குரல்கள் எழுப்பிய நோயாளிகளும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தானே. அதற்கெல்லாம் நாம் எவ்விதமான எதிர்ப்பை காட்டினோம் என்பதையும் இச்சமூகம் சிந்தித்து பார்க்க வேண்டும். உண்மையில் இச்சமூகம் தான் மனநோய் பிடித்து அலைகிறது .அதை குணப்படுத்த சமூக அக்கறையுள்ள போராளிகள் போராடவேண்டும்
தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவர்களது வசதிக்கு ஏற்றார் போல் கட்டணத்தை வாங்குகிற அதே நேரத்தில் ஏழைகளுக்கு பணம் வாங்காமல் தன்னிடம் மருந்து நிறுவனங்கள் கூடுதலாக அன்பளிப்பாக தரும் மருந்துகளை அந்த ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கும் மருத்துவர்களும். உண்டு ஆனால் இந்த சமூகம் அவர்களை கொண்டாடுவதில்லை. அவர்களை போன்றவர்களிடம் தான் பேரம் பேசும். அது மற்றுமொரு வெட்ககேடான விடயம்.
உண்மையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விட்டு விட்டு, சக்களத்தி சண்டை போல் அவசரத்தில் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை ஒருவர் மீதுமாறி ஒருவர் அள்ளி வீசுவது தீர்வுக்கு வழி வகுக்காது
ஒரு பக்கம் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்காக போராடும் ஒரு கூட்டம், மறுபக்கம் மருத்துவர் கொல்லப்பட்டது சரிதான் என்று கட்டுமிராண்டித்தனத்தோடு ஆர்ப்பரிக்கும் மற்றொரு கூட்டம். ஆனால் ஒரு விடயத்தில் இரண்டு கூட்டத்தவரும் ஒரு புள்ளியில் இணைகின்றனர், அது தங்களுடைய தவறுகளை மறைத்து அடுத்தவர்களுடைய தவறுகளை பெரிதுபடுத்தி நியாயம் பேசுவதில் முண்டி கொண்டு நிற்கிற செயல்பாடுகளில். தங்கள் பக்கம் இருக்கும் தவறை இரு கூட்டமும் சமூக அக்கறையோடு உணரும் நாள் எந்நாளோ, அந்த நாள் வரும் வரை இரண்டு பக்கமும் மனிதநேயம் என்பது கல்லறையில் உறங்கும் எலும்புக்கூடாக தான் இருக்கும். அதே நேரத்தில் நடுநிலையாக நியாயத்தின் பக்கம் நின்று போராடும் மருத்துவர்களின் குரல்கள் இரண்டு சாராராலும் காதில் வாங்கி கொள்ளப்படுவதில்லை.
இங்கு மற்றொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இறந்து போன படுகொலை செய்யப்பட்ட மருத்துவருக்காக திமிறி எழுந்த மருத்துவர்களின் குரல்வளைகள் கல்பாக்கத்தில் கதிர் வீச்சுகளோடு மரண போராட்டம் நடத்தி கொண்டிருக்கிற மக்களுக்காக போராடிய மக்கள் மருத்துவர் புகழேந்திக்கு அதிகார வர்க்கத்தால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட போது தங்களுக்கு தாங்களே சுருக்கிட்டு கொண்டனவே. இதை எல்லாம் பார்க்கும் போது இவர்கள் எழுப்பும் குரல்கள் எல்லாம் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் எழும்புகிறதேயன்றி படுகொலை செய்யப்பட்டவருக்கான நீதி வேண்டி எழும்பவில்லை என்றே தோன்றுகிறது
எல்லா தவறுகளையும் மருத்துவர்கள் பக்கம் போட்டு விட்டு தங்களை ஒழுக்க நெறி வழுவாமல் நடந்து கொள்வதாக காட்டி கொள்ளும் கூட்டம் குட்டையை குழப்புவதில் தங்களது உழைப்பை செலவிடுகிறது. அதில் அவர்கள் சுமத்தும் கேலிக்குரிய குற்றச்சாட்டுகளில் ஓன்று அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் இல்லை அது அசுத்தமாக இருக்கிறது. அரசு மருத்துவமனைகள் அசுத்தமாக இருப்பதற்கு மருத்துவர்கள் என்ன செய்ய முடியும். அது ஆட்சியாளர்களிடம் முன் வைக்கப்படவேண்டிய குற்றச்சாட்டு அல்லவா. இப்படி தேவையற்ற குற்றசாட்டுகளை வைப்பவர்களில் பலர் வீட்டில் இருக்கிற குப்பையை எடுத்து பக்கத்தில் இருக்கிற திறந்த வெளியில் கொட்டுபவர்களும் , குப்பை தொட்டி அருகில் இருந்தாலும் அதன் அருகில் சென்று குப்பைகளை அதில் போட வெட்கப்பட்டு தூரத்தில் இருந்தே வீசி எறியும் பெருமக்களாக தான் இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் மருத்துவர்களாக செல்லும் மாணவர்களை உருவாக்கிய பள்ளிகள் கட்டணம் வசூலிக்காமல் பாடம் சொல்லி கொடுக்கும் பள்ளிகள். இப்ப அப்படியா ..... தங்களது குழந்தைகளை மருத்துவர்களாக பொறியியல் வல்லுனர்களாக மாற்றி பெரிய பணக்காரனாகி விட வேண்டும் என்ற சிந்தையில் அலையும் பெற்றோர்கள் அவர்களை கொண்டு சேர்ப்பதும் கல்வியை மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் சமூக கொலைக்கூடங்களில் தானே
அரசு மருத்துவமனையில் பணி செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக தனியாக மருத்துவ கூடத்தை நடத்தி கல்லா கட்டி கொண்டிருந்த ஒரு பெண் மருத்துவர் கொல்லப்பட்டதை கண்டித்து போராடும் பெரியாரின் சமூக நீதி போராட்டத்தால் கல்வி பெற்ற கூட்டம் ஒரு புறம் இருக்க, மறுபுறத்தில் இன்னமும் சமூக நீதியை நோக்கி செல்ல விடாமல் தடுத்து வைக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தமிழக் காவல் துறையை சேர்ந்த காவாலிகளால் கற்பழிக்கப்பட்ட நிகழ்வை கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கும் மொத்த சமூக கூட்டம். ... ஆனால் அதே நேரத்தில் சமூக நீதி போராளிகளின் போராட்டத்தால் முன்னேறிய சமூகம் தங்களுக்குள்ளே பிரிந்து கொண்டு சண்டையிடுவதை தூரத்தில் நின்று நமுட்டு சிரிப்போடு ரசித்து கொண்டு தங்களது கல்லா பெட்டியை நிரப்பி கொண்டிருக்கும் பார்ப்பனிய கூட்டம்.
என்ன சமூகமோ இது ?
எந்த சமூகம் கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரமாக்குகிறதோ அச்சமூகம் தனது அழிவு நாளை முன் குறித்து விடுகிறது.
Saturday, January 21, 2012
பண்ணையாரின் ஆவியும் மன்னாரன் கும்பலின் பயமும்
பண்ணையாரின் ஆவியும் ஆலடிக்காரரின் ஆவியும் மன்னாரன் கும்பலை இப்ப ரொம்பவே பயமுறுத்துகிறதாம்... எப்படியும் கூடிய சீக்கிரத்தில் ஒரு விக்கெட் விழலாமாம். ஏதாவது ஒரு முக்கியமான விக்கெட்டை போட்டு தங்களிடம் அனுப்புமாறு அவங்க சொந்தக்காரங்களிடம் ரெண்டு பேரின் ஆவியும் ரொம்பவே வற்புறுத்த ஆரம்பித்து விட்டதாம். அதற்கு பரிகாரமாக ஏதாவது பண்ணனும் இல்லை என்றால் ரெண்டு பேரின் ஆவிகளும் நம்மளை சும்மா இருக்கவிடாது வந்து தொண தொணத்து கொண்டே இருக்கும் என்ற முடிவில் அவற்றின் சொந்தக்காரங்க இருப்பதாக செய்தி கசிகிறது. வானளாவ அதிகாரம் படைத்த பாண்டிய மன்னர், பத்திரிகை அதிபர், உலகின் முன்னணி பணக்காரர், வைகுண்டக்காரர் என முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு மிகப்பெரும் கூட்டணி உருவாகி இருக்கிறதாம்.
அவங்களோட எண்ணங்களில் மூன்று வித்தியாசமான திட்டங்கள் ஓடுகிறதாம். அவற்றில் ஓன்று பண்ணையாரை அனுப்புவது போல் அனுப்புவது, இரண்டாவது அகில இந்திய அளவில் உள்ள ஒரு தாதாவை பயன்படுத்தலாம் என்றும் அதில் குறிப்பாக கர்நாடகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பெயர் அடிபடுகிறது. மூன்றாவது ஈழ போராளிகளின் அமைப்பில் எதையாவது ஒன்றை பயன்படுத்துவது. தற்போது மன்னாரன் கும்பலின் தலைச்சன் பிள்ளையான நடனராசன் கொடுக்கல் வாங்கலில் சர்வதேச அளவில் ஈழ போராளிகளின் சார்பாக இயங்கியவர்களின் பகையை சம்பாதித்து இருக்கிறாராம். அவர்களுக்கு நடன ராசன் தங்களுடைய உள் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது பிடிக்க வில்லையாம்.
இப்ப மன்னாரன் கும்பல் சாதி போரில் கொல்லப்பட்ட லோக்கல் ரவுடிக்காக எதற்கு களத்தில் இறங்கினோம் என்ற நிலையில் உள்ளதாம். தேவையில்லாமல் பண்ணையாரை தொட்டு விட்டோமோ என்றும் புலம்ப ஆரம்பித்து விட்டார்களாம். கராத்தேவில் ஆரம்பித்து என்கவுண்டரில் தொடர்ந்து, துப்பாக்கி சூடு வரை கொண்டு போய் விட்டோமே என்று சொல்லவெண்ணா பயத்தில் குமுறி கொண்டு இருக்கிறார்களாம். இதுவும் போதாதென்று இப்ப பரமக்குடி காரங்களும் அவங்க சொந்தங்களின் ஆன்ம சாந்திக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறார்களாம்.
புலிவாலை பிடித்த சாதிவெறியனின் கதை நல்ல முடிவாக இருக்காது. புலிகளின் கண்களுக்கு ஆண்ட பரம்பரையா அடிமை பரம்பரையா என்றெல்லாம் தனித்து தெரிவதில்லை. உன்னுடைய எதிரி எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை நீ தான் தீர்மானிக்கிறாய்.
மன்னாரன் கும்பலை பின்னணியாக கொண்டு வெளிவரும் கிசு கிசுக்கள்
Thursday, January 19, 2012
யார் இந்த தமிழர் விரோத போக்கை கொண்ட மலையாளிகள் ?
கொஞ்ச நாட்களாக இணையத்தில் தமிழர் விரோதிகளாக ஒட்டு மொத்த மலையாளிகளையும் அடையாளம் காட்டி சல்லி அடித்து கொண்டிருக்கிறது தமிழ் தேசியம் என்ற பெயரில் சாதி வெறிக்கு சொரிந்து விட்டு கொண்டிருக்கும் கும்பல். சரி அப்படி தமிழர்களுக்கு விரோதிகளாக செயல்படுகிறார்கள் என்று அன்பர் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்ட நபர்களின் அடையாளம் என்ன என்று ஆராய்ச்சி பண்ணியதில் கிடைத்த தகவல்களை இங்கே பதிவிடுகிறேன் . தோழர்கள் யாருக்கேனும் இதை தவிர்த்து மேலதிக தகவல்கள் அறிந்து இருந்தால் அதை என்னுடன் இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டி கொள்கிறேன்
1. என். பெர்னான்டஸ் -ஜனாதிபதியின் செயலாளர் --- இவர் தங்களுடைய மூதாதையர் நம்பூதிரிகள் என்று பெருமைப்படும் சிரியன் கிருத்துவர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்
2. வி.கே.தாஸ் -ஜனாதிபதியின் தனிச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழ்த்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
3. டி.கே.ஏ. நாயர் -பிரதமரின் முதன்மைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழ்த்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
4. என்.நாராயணன்-பிரதமரின் பிரதான ஆலோசகர் - கேரளத்து பாலக்காடு பிராமணர்
5. பி.ஸ்ரீதரன்-நாடாளுமன்ற சபாநாயகரின் தனிச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழ்த்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
6. கே.எம். சந்திரசேகர் -அமைச்சரவைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
7. ருத்ர கங்காதரன்- விவசாயத் துறைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
8. மாதவன் நம்பியார் - விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
9. நிருபமா ராவ் -வெளியுறவுத் துறைச் செயலாளர்- ஆந்திர பிராமணரை மணந்திருப்பவர் . நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
10. சத்தியநாராயணன் தாஸ் - கனரகத் தொழில்துறைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
11. ஜி.கே.பிள்ளை -உள்துறைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழ்த்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் சாதியை சேந்தவர்
12. சுந்தரேசன் -பெட்ரோலியத் துறைச் செயலாளர் - ???????
13. கே.மோகன்தாஸ் -கப்பல் துறைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
.
14. பி.ஜே.தாமஸ் -மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் - இவர் தங்களுடைய மூதாதையர் நம்பூதிரிகள் என்று பெருமைப்படும் சிரியன் கிருத்துவர்கள்.
.
15. சிவசங்கர் மேனன் -தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
16. சுதா பிள்ளை -திட்டக் கமிஷன் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
17. வி.கே.சங்கம்மா -வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சில் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
18. ஆர். கோபாலன் - நிதிப் பணிகள்துறை இயக்குநர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
19. கே.பி.வி.நாயர் -செலவீனங்கள் துறைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
20. . கே.ஜோஸ் சிரியாக் - வருவாய்த் துறைச் செயலாளர் - இவர் தங்களுடைய மூதாதையர் நம்பூதிரிகள் என்று பெருமைப்படும் சிரியன் கிருத்துவர்கள்
21. ஆர்.தாமஸ் -வருமான வரித்துறைச் செயலாளர் - இவர் கேரளாவில் தங்களை மாப்பிளை என்று அழைத்து கொள்ளும் சாதியை சேர்ந்தவர் .ஏ.கே அந்தோணியும் இந்த வகையறாவை சேர்ந்தவர் தான். இந்த மாப்பிள்ளைகள் தமிழகத்தில் இருந்து சென்று கேரளத்தில் குடியேறிய வெள்ளாளர்கள் என்று கருதப்படுபவர்கள் . பெரும்பாலும் அனைவரும் கிருத்துவர்களே
22. வி.ஸ்ரீதர்- சுங்கத் துறைச் செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
23. பி.கே.தாஸ் -அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர்- நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
.
24. ஏ.சி.ஜோஸ்-கதர் வாரியம் ------ ?????????
25.சி.வி.வேணுகோபால் -பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
.
26. ஸ்ரீகுமார் -இயக்குநர், மத்திய கண்காணிப்பு ஆணையகம் - நம்பூதிரிகளின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படும் நாயர் வகையறா சாதியை சேந்தவர்
இப்படி தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மொத்த கூட்டமும் பார்ப்பனிய மற்றும் அதன் கோவணங்களுமாக தான் இருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க , மலையாள அடையாளத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் பார்ப்பனிய மற்றும் அதன் கோவணங்களை பெயர் குறுப்பிட்டு சாட வேண்டிய நாம், ஒட்டு மொத்த உழைக்கும் மலையாளிகளையும் கட்டம் கட்ட நினைத்தால் எப்படி.
இங்கு மற்றொரு விடயத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதாவது நாயர் வீட்டுக்கு வெளியில ஒரு சொம்பு வைக்கப்படும் பாரம்பரியம் பற்றிய செய்தி தான் அது. என்னங்க ஒரு வீட்டின் முன்னாடி சோம்பு இருக்க கூடாதா என்று யாராவது அப்பாவியாக கேட்கலாம். அங்க தான் நம்பூதிரிகள் ஆடிய களியாட்டத்தின் மொத்த ரகசியமும் இருக்கிறது. நாயர் வீட்டு திண்ணையில் சோம்பு இருந்தால் அது வீட்டின் உள்ளே நாயரோட மனைவியோடு நம்பூதிரி இருக்கிறார் என்று அர்த்தம். அதை பார்த்தால் நாயர் புருசன் வீட்டுக்குள் செல்ல மாட்டார் . கொஞ்ச நேரம் வெளிய எங்கையாவது சுற்றி கொண்டு, நம்பூதிரி அங்கு வேட்டையை முடித்து விட்டு வெளியே போன பிறகு தான் வீட்டுக்கு செல்லுவார் நாயர் புருசன்.
இந்த வழக்கம் எப்படி ஆரம்பித்தது என்றால் , பொதுவாக நம்பூதிரிகளின் குடுமத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சகோதர்கள் இருந்தால் ஒருவர் மட்டுமே அதிகார பூர்வமாக நம்பூதிரி பெண்ணை மணமுடிக்க அனுமதிக்கபடுவர். ஏனைய சகோதர்கள் அதிகாரபூர்வமாக மனம் செய்ய இயலாது. ஆனால் அதே நேரத்தில் அவர்கள் பூர்வ குடிகளை சேர்ந்த பெண்களையோ இல்லையென்றால் நம்பூதிரிகளின் வீட்டில் வேலை செய்யும் பெண்களையோ தாங்கள் உடல் இச்சைக்காக பயன்படுத்தி கொள்ளாலாம். அவ்வாறான உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகள் நம்பூதிரிகளாக கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு நம்பூதிரிகளின் பூர்வீக சொத்தில் சொத்தில் எந்த பங்கும் கொடுக்கபடமாட்டது. அதே நேரத்தில் அந்த குழந்தைகளுக்கும் அதன் தாயர்களுக்கும் சிறிய அளவில் உதவிகள் செய்யப்படும். அப்படி உருவான ஒரு சமூகம் தான் நாயர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகங்கள். ஒரு கட்டத்தில் காமுக முதலாளிகளின் எண்ணிக்கை குறைந்து அவனுங்க உடுத்தி கொண்ட கோவணங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. கோவணங்களின் எண்ணிக்கையை வைத்து நம்பூதிரி காமவெறியர்கள் ஆடின களியாட்டத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்
Subscribe to:
Posts (Atom)