Saturday, April 2, 2011

அண்ணன் சீமான் எங்கே போகிறார்

முன்குறிப்பு: இது ஏப்ரல் மாதம் எழுதப்பட்ட பதிவு சீமானின் சமீபத்திய நடவடிக்கைகளை ஒட்டி இதை மீள் ஆக்கம் செய்து உள்ளேன்
ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும் வர வர கழுதை கெட்டு குட்டி சுவரான கதை மாதிரி தான் அண்ணனது அரசியல் வாழ்வும் சென்று கொண்டிருக்கிறது. ஈழம் சென்று எமது அருமை தலைவன் பிரபாகரனை சந்தித்து விட்டு வந்தபிறகு அண்ணன் சீமானின் பேச்சில் மூச்சில் எல்லாம் ஈழம் தான். திருமா ராமதாசு போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகள் ஈழமா அல்லது தங்கள் அரசியல் வாழ்க்கையா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்ட சமயத்தில் அவர்களது அரசியல் வாழ்க்கையே முக்கியம் என்று ஈழத்தை பின்னுக்கு தள்ளியபோதுஅண்ணன் சீமான் மட்டும் ஈழம் ஈழம் என்று முழங்கி கொண்டிருந்ததை பார்த்த எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்கள் எல்லாம் அண்ணனை தமிழர்களின் அடிமை தளையை அறுக்க வந்த மீட்பனாக பார்க்க ஆரம்பித்தோம் .


அண்ணனும் நாம் தமிழர் என்ற அடிப்படையில் கூட்டத்தை கூட்ட ஆரம்பித்தார். தம்பிகளாகிய நாங்களும் திராவிடர், திராவிட நாடு கோசங்களை எல்லாம் மூட்டை கட்டி பரணில் வைத்து விட்டு நாம் தமிழர் என்ற முழக்கத்தோடு அண்ணனின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தோம். அண்ணனும் ஆரம்பத்தில் நம்ம வைகோவை போல் தான் செயல்பட்டார், வைகோ திமுகவில் இருந்து தூக்கி வீசப்பட்ட சமயத்தில் அதை தாங்காமல் தங்களுடைய உயிரையே பலியாக கொடுத்த இளைஞர்களின் சாம்பலில் மதிமுகவை ஆரம்பித்த போது எப்படி உணர்ச்சி பிழம்பாக இருந்தாரோ அதேபோல தான் அண்ணன் சீமானும் இருந்தார். ஈழத்தில் போராளிகள் துவக்குகளை கையில் ஏந்தி போராடி கொண்டிருந்தார்கள் என்றால் அண்ணன் சீமான் தனது வாயையே பீரங்கியாக மாற்றி முழங்கி கொண்டிருந்தார்அண்ணனின் பேச்சில் அரசை ஆள்பவர்களும் கதி கலங்கி தான் கிடந்தார்கள் . நாங்களும் இதோ அண்ணன் சீமானின் பேச்சில் ஈழத்தின் விடுதலையை தமிழினத்தின் விடியலை காண போகிறோம் என்று முற்றிலுமாக நம்ப ஆரம்பித்தோம். பெண்களுடைய உள்ளாடையை விற்கும் கடைக்கு சொந்தக்காரரின் சம்பந்தியான காங்கிரசை சேர்ந்த ஈரோடு தெரு பொறுக்கி அண்ணன் சீமானை பெரியாரின் பேரனா அவர் யார் என்று எள்ளி நகையாடியபோது… கண்கள் சிவக்க, நரம்புகள் புடைக்க எங்கே அவன் என்று அந்த தெரு பொறுக்கியை கொலை வெறியோடு கையில் கிடைத்தால் கூறு போட்டுவிடும் வேகத்தில் புலிகளாய் உறுமினோம். அவ்வாறு இருக்கையில் தான் அண்ணன் சீமானின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படஆரம்பித்தன. சமூக விடுதலை போராளியான பெரியாரின் பேரன் என்று தன்னை அழைத்து கொண்ட அண்ணன் சீமான் திடீரென்று ஒரு நாள் தென் தமிழகத்தை சாதி கலவரங்களால் கூறு போட்டு விட்டு மறைந்த முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து நாமெல்லாம் தமிழர் என்றார் . தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெரியார் எந்த இந்திய வேசியத்தை தோலுரித்தாரோ அந்த வேசியத்துக்கு முத்து ராமலிங்கம் தனது வேட்டியை கழட்டி கட்டியவர். எந்த சாதிவெறியை பெரியார் ஒழித்து கட்ட விரும்பினாரோ அந்த சாதி வெறியை 1950 துகளில் முத்துராமலிங்கம் அவரை பின்பற்றியவர்களுக்கு ஊட்டி விட்டு தென்தமிழகத்தை ரத்த பூமியாக மாற்றியவன். எங்களை போன்றவர்களால் அண்ணன் செய்ததை சீரணிக்க முடியவில்லை, அதெப்படி சிங்களனின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிறோம், ஈழ தமிழனுக்கு குரல் கொடுக்கிறோம் என்று கூறி கொண்டு, தமிழ் நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட சக தமிழர்களுக்கு எதிராக சாதீய அடக்கு முறைகளை ஏவி விட்டவனுக்கு மரியாதை செய்யமுடியும்...... இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான விடயமல்லவா. அண்ணன் இப்படி முரண்பாடுகளின் மறு உருவமாக மாற ஆரம்பித்தபோது கூட ஈழமக்களின் விடுதலைக்கான அண்ணனின் முழக்கங்களை கேட்டு அதற்கு கட்டுப்பட்டவர்களாக அவரிடமுள்ள குறைகளை எங்களின் முதுகுக்கு பின்னால் தள்ளி விட்டு அண்ணன் சீமானின் முதுகுக்கு பின்னால் அணிவகுக்க ஆரம்பித்தோம். அண்ணன் சிறைக்கு சென்ற போது நாங்கள் எங்கள் தூக்கத்தை மறந்தோம்.
இப்படியாக அண்ணனுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு அண்ணன் தொடர்ந்து தன்னை சுற்றி ஏற்படுத்தி கொண்டிருக்கும் சிக்கல்களுக்கு மத்தியிலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில்அண்ணன் இன்னொரு அணுகுண்டை தூக்கி வீசினார் .... அதுதான் புரட்சி தலைவி மூலமாக ஈழத்தை வென்றெடுப்போம் என்ற புது முழக்கம் . எங்களுக்கோ தலைசுற்ற ஆரம்பித்தது. என்னய்யா இது புது பிரச்சினை. கொஞ்ச நாளைக்கு முன்னதான் நாங்க ஈழ தமிழர்களின் விடி வெள்ளி என்று கொண்டாடிய திருமா திடீரென்று சோனியாவின் கால்களில் விழுந்ததை கண்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன் அண்ணன் இப்படி ஒரு பாறாங்கல்லை தலையில் தூக்கி போட்டு விட்டாரே என்று வாந்தி பேதி வராத குறை தான். இதே செயலலிதா ஈழத்தில் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களை பார்த்து போர் என்றால் உயிர் இழப்பு இருக்க தானே செய்யும் என்று கெக்களித்தவள் அல்லவா, அந்த சினிமாகாரி ஆட்சியில் இருந்த போதும் சரி இல்லாத போதும் சரி எதற்கெடுத்தாலும் புலிகள் தீவிரவாதிகள் என்று முழங்கியவள் அல்லவா. எம் தலைவன் பிரபாகரனை கொன்றொழிக்க கங்கணம் கட்டி கொண்டு அலைந்த, அலைந்து கொண்டிருக்கின்ற இந்திய வேசியத்தின் முதலாளிகளான பிராமண பனியாக்களின் செல்ல பிள்ளையல்லவா ...... அவளை கொண்டா ஈழத்தை வென்றெடுக்க முடியும் என்று நம்புகிறார், என்று அண்ணன் மீதான நம்பிக்கை சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தது.


எப்படி இனியும் அண்ணனை நம்ப முடியும், இந்திய வேசியம் மூட்டி விட்ட தீயில் கொழுந்து விட்டு எறிந்த சிங்கள இனவாதம் தமிழர்களை இரையாக்கி கொண்டிருந்த போது பெரியாரின் அரவணைப்பில் பெரியவர் செல்வாவின் தலைமையில் வளர்ந்து சிங்கள வெறிக்கு எதிராக நின்று தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய தமிழ் தேசியத்தை உடைப்பதே குறிக்கோளாக கொண்டு செயல்படும் பிராமணிய பனியா குள்ள நரி கூட்டத்தின் கைபாவையாக செயல்படும் முன்னாள் நடிகையின் அரவணைப்புக்குள் சென்று அண்ணன் சீமான் முடங்கிய பிறகு .... எந்த முகத்தை (ம்ம்ம் அவரும் இப்போது பல அரிதாரங்கள்பூசி கொண்டு அலையும் நாடக நடிகராகி விட்டாரே) வைத்து கொண்டு தமிழ்தேசியம் பேசுகிறாரோ என்று தெரியவில்லை.

சரி ஏதோ காங்கிரசை வீழ்த்த வீராப்போடு அலைகிறாரே என்று நாமும் அவரது குரலை ரசித்து கொண்டிருக்கும் வேளையில் நடிகர் விசயை போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னாரே பார்க்கலாம் . கொடுமை என்னன்னா ஈழத்தில் சிங்கள பேரினவாதம் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற காங்கிரசின் துணையோடு முள்ளிவாய்க்காலில்ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை ஒரே நாளில் காவு வாங்கியபோது, இதே விசய் தான் டெல்லிக்கு சென்று காங்கிரசில் இணைய ராகுல் காந்தியோடு பேரம் பேசியவன். அண்ணன் என்னடான்னா காங்கிரசு என்னும் செத்த பாம்புக்கு தமிழகத்தில் உயிர் கொடுக்க முனைந்த விசய் புகழ் பாடி கொண்டிருக்கிறார் (ம்ம்ம்ம் விசயிடம் அடுத்த படத்துக்கு கால்சீட் வாங்க முக்குவது போல் தெரிகிறது எது எப்படியோ நல்லா இருந்தால் சரி). இப்ப அண்ணன் காங்கிரசை வீழ்த்த போகிறோம் என்று சொல்வதும் அத்தைக்கு மீசை முளைக்கிற கதையாக தான் ஆகி கொண்டிருக்கிறது. காங்கிரசு தமிழகத்தில் ஏற்கனவே முடிந்து விட கூடிய கட்டத்தில் தான் இருக்கிறது . இவரு காங்கிரசு என்ற செத்த பாம்பை அடிக்கபோகிறாராம். என்ன கொடுமையா இது . காக்கா உட்கார பனம்பழம் விழ போகிறகதை தான் அண்ணன் வரும் தேர்தலில் காங்கிரசை ஒழிப்பதாக சவடால் விட்டுகொண்டு அலைவதும் .

முன்பெல்லாம் ஈழ தமிழர்களுக்காக உரக்க குரல் கொடுத்த அய்யா ராமதாசு இப்போது வன்னியர்களிடையே ஈழ தமிழர்களை தேடி கொண்டு இருக்கிறார். திருமாவோ ஈழ மக்களின் வாழ்வை விட தன்னுடைய அரசியல் வாழ்க்கை முக்கியம் என்று சென்று விட்டார். பெரியவர் நெடுமாறனோ யாராவது மேடை போட்டு அதில் அவருக்கு குந்திக்க ஒரு இருக்கை குடுத்தால் போதும் என்ற நிலைக்கு சென்று விட்டார். ஆரம்ப காலத்தில் தாய் தமிழகத்து இளைஞர்களிடையே ஈழத்து மக்களின் அவலங்களை பற்றி சிந்திக்க வைத்த அண்ணன் வைகோவோ சகோதரி கைச்செலவுக்கு காசு குடுத்து கொண்டிருந்ததால் தோட்டத்திலேயே அடக்கமாகி விட்டிருந்தார் ( சகோதரி.செயலலிதா வைகோ என்ற கடாவிற்க்கு சும்மா ஒன்றும் தீனி போடவில்லை, தேர்தல் திருவிழா வரும் போது பொலி போடுவதற்காக என்று இப்ப தான் புரிகிறது, எப்படியோ புரட்சி சகோதரி, அடிக்கடி கண்ணீர் விடும் கடாவை 1000 கோடி ரூபாய்க்கு விற்று போட்டதன் மூலம் விட்டதை பிடித்து விட்டார்). ஆனால் நம்ம அண்ணன் சீமான் ஓடுற ஓட்டத்தை பார்த்தால் மேலே கூறிய எல்லாரையும் பின்னுக்கு தள்ளி விடுவார் என்றே தோன்றுகிறது.

போகிற போக்கை பார்த்தா அண்ணன் சீமானை நம்புகிறதை விட குடிகாரன் விசுக்கிகாந்தை நம்பலாம் என்று தோணுகிறது.