Wednesday, October 12, 2011

இது உண்மையா காதில் வந்து விழுந்த பயமுறுத்தும் கிசு கிசு

கொஞ்ச வருடங்களுக்கு முன்னர் தமிழக தளபதியின் நெருங்கிய நண்பர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது. அப்போது எதிர்கட்சியாக இருந்த கட்சியும் அது தற்கொலை அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள் என்றும் , அதில் தளபதியின் பங்கு உண்டு என்றும் தளபதியின் மீது சிபிஐ விசாரணை நடாத்தவேண்டும் என்று பெரும் குரல் எழுப்பியது.


பல்வேறு பத்திரிகைகளும் அந்த நண்பர் தளபதியின் பினாமி என்றும், தளபதியிடமே ஆட்டையை போட்டதால் தளபதி கதையை முடித்து விட்டார் என்றும் ஜக்கம்மாகாரனை போல் கட்டியம் கூறியது. அந்த தற்கொலை சம்பவமும் எனது மனதில் பல கேள்விகளை எழுப்பி விட்டு இருந்தது. அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒருவரிடம் இன்னொருவர் ஆட்டை போட்டு விட்டால் தனது அதிகாரத்தை வைத்து மிரட்டி அந்த ஆட்டைய போட்ட பொருட்களை மீட்டு இருக்க முடியுமே. இதற்காக ஒரு குடும்பத்தையே அதுவும் இரண்டு பச்சிளம் குழந்தைகளையும் சேர்த்து முடித்து விடும் அளவுக்கு ஒருவருக்கு எப்படி கொலை வெறி வரும் ?, அதுவும் அந்த பச்சிளம் குழந்தைகளை கொல்வதால் யாருக்கு என்ன லாபம், ஏதோ அவர்கள் வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் கூட அவர்களுக்கு ரகசியங்கள் தெரிந்திருக்கலாம் அது எதிர்காலத்தில் தம்மை பாதிக்கும் என்று எண்ண இடம் இருக்கிறது.


சரி அப்போது எதிர்கட்சியாக இருந்தபோது, அது தற்கொலையல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்று கூறிய கட்சி அடுத்த ஐந்து வருடங்கள் ஆட்சி செய்தபோது முறையாக விசாரணை நடத்தி கொலை குற்றவாளிகளை கண்டு பிடித்து இருக்கலாமே ? அதை ஏன் அவர்கள் செய்யவில்லை ? ஒருவேளை விசாரணை நடத்தி தமிழக தளபதிக்கும் அந்த தற்கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிய வந்ததால் அதை அப்படியே விட்டு விட்டார்களா ? என்று கேள்விகளும் எழும்பியது. சமீபத்தில் எனக்கு தெரிந்து சில நெருங்கிய தொடர்புகளிடம் இருந்து எனது காதில் கிசு கிசுக்கப்பட்ட செய்தியை கேட்டபோது தலையே சுற்றும் போல் இருந்தது. சொன்னவர்களும் அதை உறுதி படுத்துகிற வகையில் சொல்லாமல் சந்தேகத்துக்கிடமான செய்தியாகவே சொன்னார்கள். அப்படி எண்ண தான் அந்த கிசு கிசு என்று பலரும் எண்ணலாம் . அந்த தற்கொலை அந்த நண்பருடைய வித்தியாசமான பாலியல் எண்ணங்களால் விளைந்த முடிவு தானாம். அப்படி என்ன வித்தியாசமான பாலியல் எண்ணம் என்று கேட்டபோது தான் காதில் இடி விழுந்தது போல் இருந்தது அந்த செய்தி.


அதாவது அந்த நண்பர் பாலியல் ரீதியாக இணையை பரிமாறி கொண்டு கூட்டுறவு செயல்களில் ஈடுபடுகிற விபரீதமான எண்ணம் கொண்டவராம். இது போன்று பாலியல் செயல்களுக்காக தம்பதிகளிடையே இணையை பரிமாறி கொண்டு கலவியில் ஈடுபடுவது மேலைநாடுகளில் ஏற்கனவே பரவி விட்ட ஓன்று . அது இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பே மேட்டு குடியினரால் இறக்குமதி செய்யப்பட்டு தற்போது அது நடுத்தர வர்க்கத்தினரிடமும் வேகமாக பரவி வருகிறது அதற்கான காரணங்களை மற்றொரு பதிவில் எழுதலாம் என்று நினைக்கிறேன் . அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் பரிமாற்றம் செய்து கொண்ட ஒரு இணை அவர்களிடம் உள்ள ஆதாரத்தை வைத்து கணிசமான தொகையை கேட்டு அதை கொடுக்க வில்லையென்றால் விடயத்தை வெளியில் விட்டு விடுவோம் என்று மிரட்ட ஆரம்பித்ததாம்.


நண்பரும் தன்னுடைய செல்வாக்கை வைத்து கொண்டு அந்த இணையை என்னவெல்லாமோ செய்து விட பார்த்தாராம், முடிந்த வரை அந்த ஆதாரங்களையாவது அழித்து விடலாம் என்று எண்ணினாராம். அதற்காக அந்த இணைக்கு கணிசமான பணத்தை தருகின்ற முடிவில் கூட இருந்தாராம். ஆனால் அந்த இணை தளபதியின் நண்பரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணியதோ என்னவோ கடைசி நேரத்தில் தலைமறைவாகி விட்டார்களாம். அந்த ஆதாரங்களை எங்கே வெளியில் விட்டு விடுவார்களோ. குடும்ப மானமே போய்விடுமே என்று அந்த நண்பரும் கடும் மன உளைச்சலில் இருந்தாராம். அந்த உளைச்சல் தான் நண்பரும் அவரது இணையும் சேர்ந்து அப்படி ஒரு பயங்கரமான முடிவை எடுக்க வித்திட்டு விட்டதாம். மற்றபடி தளபதியிடம் இருந்து ஆட்டையை போட்டதால் தான் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்பதெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதைகளாம்.பின்குறிப்பு : எமது காதில் விழுந்த அந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அதே நேரத்தில் யாரையும் இழிவு படுத்த வேண்டி இந்த செய்தியை பதியவுமில்லை. எமது காதில் விழுந்த செய்திகளை பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே. ஆனால் காதில் விழுந்த செய்திகளின் மூலம் அந்த தற்கொலையில் வெளி உலகுக்கு தெரியாத நிறைய சிக்கல்கள் உண்டு என்பது மட்டும் புரிகிறது

No comments:

Post a Comment