சட்டமன்றத்தில் அம்மா , மகிந்தரின் இலங்கைக்கெதிரான சர்வேதச பொருளாதார தடைக்கு ஆதரவாக ஹிந்திய அரசாங்கத்தை நிர்பந்திக்க செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானபோது ஏதோ ஈழமே கிடைத்து விட்டதென்றெண்ணி அகமகிழ்ந்து கொண்டிருக்கையில் , அம்மா அப்படி என்ன தான் தீர்மானத்தை பற்றி பேசி இருக்கிறார் என்ற ஆவலும் மனதில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. செயலலிதா என்றாலே ஈழத்திற்க்கு எதிரானவர் என்ற எண்ணம் என் மனதில் ஆழ வேர் ஊன்றி பல காலங்களாகி விட்டது என்பது வேறு விடயம். இந்நிலையில் செயலலிதாவின் தீர்மானத்தை ஒட்டிய உரையை படிக்க தொடங்கியபோது தான் அம்மாவின் ஈழத்திர்க்கெதிரான உட்குத்து அரசியலின் வீரியத்தை உணர ஆரம்பித்தேன். ஆக அம்மா இன்னும் மாறவில்லை ...மாறிவிட்டார் என்று சொல்வதெல்லாம் சும்மா. அப்படி என்ன தான் கூறி விட்டார் என்று நண்பர்கள் கேட்கலாம் ....அங்க தான் வருகிறேன் ஈழ விடுதலைக்கான போராட்டத்தையே தீவிரவாதம் என்று தானே தனது பேச்சை ஆரம்பித்து இருக்கிறார் நம்ம அம்மா.
அதோடு நின்று விடாமல் அப்போராட்டம் இந்திய இறையாண்மைக்கும் (இந்திய இறையாண்மைன்னா என்னவென்று எனக்கு தெரியாது யாராவது விளக்கவும்), பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் போராட்டம் என்றல்லவா சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி இருக்கிறார். அம்மையாருக்கு நன்றாகவே தெரியும்..சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மதித்து ஹிந்திய அரசாங்கம் ஒன்னும் புடுங்க போவதில்லை என்று. பின்பு எதற்க்காக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று உற்று பார்த்தால் அது ஈழப் பிரச்சினையில் கருணாநிதியை குற்றவாளியாக்கிவிட்டு அம்மையார் தன்னை ஈழமக்களின் தாயாக சித்தரிக்க முயலும் நாடகத்தின் அடுத்த கட்டமே இது.
ஒருபக்கம் சோனியாவின் பக்கத்தில் இருந்து கருணாநிதியை விரட்டிவிட்டு அவருடைய இடத்தில் சோனியாவின் சகோதரியாக தனது இருப்பை நிலை நிறுத்தி கொள்ள முயலும் அதே வேளையில் தமிழகத்தில் ஈழ தமிழர் தாய் வேடத்தையும் ஏற்று தன்னை ஆஸ்கர் விருதுக்கு தகுதிவாய்ந்த நடிகையாக தயார் படுத்தி கொள்ள முயலுகிறார் . இது தெரியாமல் இங்க ஒரு கோஷ்டியினர் அம்மையார் ஏப்பம் விட்டால் கூட அது ஈழ தமிழர்களின் ஆதரவு குரல் என்று கூத்தாடுகிறது. வேற என்ன பண்ண முடியும் அவங்களால் ... ஏற்கனவே சிங்களத்தியை வைத்து படமெடுத்த அவங்க சிங்க தமிழ் தலைவனின் மீது பாலியல் வழக்கு அல்லவா பதிய பெற்று இருக்கிறது, இந்த நேரத்தில் அம்மையாரை பகைப்பது என்பது முட்ட குடித்து விட்டு சாக்கடையில் சென்று குப்புற படுத்து கொள்வது போன்றது என்பது அவங்களுக்கு தெரியாதா. இதை விட கொடுமை என்னன்னா கருணாநிதி போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதால் அதை நம்பி அப்பாவி ஈழ தமிழர்கள் பதுங்கு குழியை விட்டு வெளியேறி இலங்கை ராணுவத்திடம் சிக்கி பலியானார்கள் என்று வேறு மத்தளம் வாசித்திருக்கிறார். ஏதோ ஈழத்தமிழர்கள் செயற்கை கோள் இணைப்பு கொண்ட போனோடு உலவியது மாதிரி அல்லவா பேசி இருக்கிறார் . இதற்கும் ஒரு கூட்டம் ஆமாம் சாமி போட்டு கொண்டுகொண்டு இருக்கிறது தான் கொடுமை . விடுதலை புலிகள் அமைப்பின் உயர்மட்ட தலைவர்களே வெளியுலகு தொடர்பு சரியாக கிடைக்காமல் இக்கட்டான நிலையில் இருந்த காலம் அது. அம்மையார் என்னடான்னா போர் முனையில் இருந்த அப்பாவி ஈழ தமிழர்கள் கருணாநிதி பேச்சை கேட்டு தான் பதுங்கு குழியைவிட்டு வெளியே வந்ததாக உளறி கொட்டி கொண்டு இருக்கிறார். என்னதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினாலும் வரிக்கு வரி ஈழ தமிழர் போராட்டத்தை தீவிரவாதம் என்றும் விடுதலை புலிகள் அமைப்பு இந்திய விரையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரானது என்று சந்தடி சாக்கில் தன்னுடைய ஹிந்திய தேசிய பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக மொத்தம் இந்த தீர்மானத்தின் மூலம் சோனியாவிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது புரியாமல் ஒரு கூட்டம் தண்ணி அடித்த மப்பில் கூவுவது போல் அம்மாவுக்கு அதரவாக பஜனை மடத்தில் ஊளை இட்டு கொண்டு இருக்கிறது.
சோனியாவை திருப்தி படுத்த விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் கைது, போதை மருந்து கடத்திய ஈழ தமிழர் கைது போன்ற செய்திகளை ஊடகங்களில் இனிமேல் அடிக்கடி காணலாம் .
இங்கே என்னடான்னா ஈழ ஆதரவு சக்திகள் ஒரு முனையில் திரளுவதை பற்றி எண்ணாமல் அவனவன் தனி ஆவர்த்தனம் நடத்தி கொண்டு இருக்கிறான்கள் . இப்படி ஆரம்ப காலங்களில் ஈழத்தமிழர்களிடையே நடந்த சகோதர யுத்தத்தின் விளைவு தான் இன்றைய அவர்களின் நிலைமைக்கு காரணம் .
ஆக மொத்தத்தில் பாப்பான்கள் அவனுங்க வேலையை திட்டமிட்டு அழகாக செய்து கொண்டு இருக்கானுங்க. பாப்பானுங்களுடைய திட்டங்களுக்கு கருணாநிதி போன்ற சுயநலமிகளின் செயல்கள் காரண காரியங்களாகி போய்விட்டது .
பெரிய கொடுமை என்னன்னா நாம் தமிழர் என்று கூறி கொண்டு அலையும் ஒரு கூட்டம் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று உளறி கொட்டி கொண்டு இருக்கிறது .அவனுங்களுக்கு எங்கே தெரிய போகிறது திராவிடத்தால் நாம் வீழவில்லை... மாறாக அய்யா பெரியாரின் சமூக விடுதலை போராட்டங்களின் விளைவாக நன்மைகளை பெற்ற பிறகு ஆரியங்களுடைய காலை நக்கி பிழைக்க துடிக்கும் திராவிடர்களால் வீழ்ந்தோம் என்று . அவங்களுக்கு தான் நடிகைகளின் பஞ்சாயத்தை தீர்ப்பதிலேயே பாதி நாள் கழிந்து விடுகிறது . கேட்டால் மலையாளி எதிரி, கன்னடன் துரோகி, தெலுங்கன் பகையாளி என்கிறான் . ஆனா இவனுங்களுக்கு மேல கூறிய மாநிலங்களின் அரசியல் அதிகார குடுமி பார்ப்பனியத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது என்பதை புரிந்து கொள்ள தெரியவில்லையா இல்லையென்றால் புரிந்தும் புரியாதது மாதிரி நடிக்கிறான்களா. நம்பியார், நாயர் நம்பூதிரிகளின் தமிழர்களுக்கு எதிரான குரோதத்தை ஏதோ எல்லா மலையாளிகளும் தமிழ் இன விரோதிகள் என்று கூவுவது. ஆனா தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறி கொண்டு சக தமிழனின் மீது சாதியின் பெயரால் வன்முறையை திணித்த, பாப்பான்களுக்கு காவடி எடுத்தவனின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை என அமர்க்களப்படுத்தி கொண்டு இருக்கிறது. மலையாளிகளிடம் காணப்படும் தமிழர்களுக்கு எதிரான மனப்போக்கு கேரளா பார்ப்பனியவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட பரப்புரையின் விளைவு என்பது என்று தான் புரிய போகிறதோ.
அம்மையாரின் ஹிந்திய தேசிய அரசியல் ஆட்டங்களுக்கும், விடுதலை புலிகளின் எதிர்ப்பு அரசியலுக்கும் உதவிகரமாக இருப்பது திரிவேதி, சதுர்வேதி, நாயர், நம்பியார், போன்ற பார்ப்பனிய வெறியங்கள் என்பது அம்மாவுக்காக காவடி தூக்கும் நடிகைகளின் காவலன் சீமானின் சில்லறை குஞ்சுகளுக்கு என்று தான் புரிய போகிறதோ. இதை எல்லாம் புரிந்து கொண்டதால் தான் எம் தலைவன் பிரபாகரன் தன்னை மறைத்து கொண்டு வாழ்கிறானோ என்னவோ.... அதற்கான பதிலை காலம் தான் சொல்ல வேண்டும்
No comments:
Post a Comment