Wednesday, August 10, 2011

பெரியார் ஒரு குறுப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானவரா ????????

இரண்டொரு நாட்களுக்கு முன்பு தோழர் ஒருவர் முன்பொரு முறை ஈ.வே.ரா. “துணி விலை ஏறிவிட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான்” என்று கூறினார் என்றொரு பதிவு ஒன்றை போட்டு பெரியாரை ஒரு குறுப்பிட்ட மக்களிடம் இருந்து அன்னியபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அவர் சொல்வது படியே அப்படியே பெரியார் சொன்னாரென்றே வைத்து கொள்வோம் ....அதை கூட உங்களோட கூற்றின் படி ஒருமுறை தானே சொன்னார்...ஒரே வார்த்தையை மறுபடியும் மறுபடியும் கூறினால் அதில் உள் அர்த்தம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளலாம்.. அவர் அப்படி திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை கூறியதாக வரலாற்று பதிவுகளில் உள்ளதா என்ன? .... அப்படி இல்லையே... அவர் அப்படி கூறிய போது என்ன சூழ்நிலையில் அவ்வாறு கூறினார் என்றும் தெரிந்து கொள்வது உண்மையை என்ன என்று அறியும் வாய்ப்பை எல்லாருக்கும் ஏற்படுத்துமல்லவா... பெரியாரை மடக்குவதற்காக பார்ப்பனிய வெறியர்கள் கேட்ட கேள்விக்கு நக்கலாக கூறிய பதிலா என்று யோசிக்க வேண்டியதும் நமது கடமை.... அதை தான் பெரியார் மக்களிடம் ஒவ்வொரு முறையும் பேசும் போது வலியுறுத்துவார். அதாவது அவருடைய கருத்துகளை அப்படியே கண்மூடி தனமாக பின்பற்றாமல் அவற்றை ஒவ்வொருவரும் அவரவருடைய சுய புத்தியை கொண்டு ஆய்ந்து நடக்க வேண்டும் என்று தான் அறிவுறுத்துவார் .

எந்த மனிதனையும், அவர்களுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் அவை மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பவையா இல்லை கெடு விளைவிப்பவையா என்று பகுத்தாய்ந்து அதை பின்பற்றுவதையும் அவரவருடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்தவதையும் செய்ய வேண்டும். எதையும் கண்மூடி தனமாக பின்பற்றும் மனிதர்களை தன் வாழ்நாளில் கடினமாக சாடியவர். அவ்வாறு இருக்க பெரியார் எந்த சூழ்நிலையில் அதை கூறினார், அதை காழ்புனர்ச்சியோடு கூறினாரா இல்லை அவருடைய சமூக விடுதலை போராட்டத்தில் குற்றம் கண்டு பிடிக்க முயன்ற அரைமண்டையங்களுக்கு நக்கலாக அளித்த பதிலா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் பல நேரங்களில் நாம் கூட நம்மிடம் யாரவது நாம் செய்யாத விடயத்தை "நீ பண்ணினாயா?" என்று திரும்ப திரும்ப கேட்டால் ஒரு கட்டத்தில் எரிச்சலில் நாமே "ஆமாம்யா நான் தான் அதை பண்ணினேன் அதற்கு இப்ப என்ன பண்ண போற?" என்று திரும்ப கேட்பது உண்டு. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அப்போது பத்திரிகை துறையில் தங்களோட ஆதிக்கத்தை வைத்திருந்த குடுமிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த பல வகைகளிலும் முயன்றனர். அம்பேத்கருக்கு எதிராகவே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பல தலைவர்களையும் கொம்பு சீவி விட்டவர்கள் தான் பார்ப்பன வெறியர்கள்

அவனுங்க திருமணமாகாத இளம்பெண்களோடும், அடுத்தவர்களுடைய மனைவியரோடும் பாலியல் பரிசோதனை செய்து கொண்ட ஒருத்தனையே நாட்டின் மகாத்மாவாக்கியவர்கள் அல்லவா .....இன்றைக்கு கூட இடைப்பட்ட சாதியினரின் சாதி பெயர்களை அவர்கள் மறந்து கொண்டிருக்கும் காலத்திலும் தேவர்வால், நாடார்வால், முதலியார்வால் என்று அழைத்து நீ இன்னான் என்று ஞாபகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சாதி வெறியை ஊட்டி விடுவதே பார்ப்பனிய வெறியர்கள் தான் .. பெரியார் அப்படி காழ்ப்புனர்ச்சியுடன் கூடிய உள் அர்த்தத்தோடு கூறியிருந்தால் கட்டாயம் அண்ணல் அம்பேத்கர் பெரியாரை கடுமையாக சாடி இருப்பார் . இன்னொன்றும் கூறுகிறேன் பெரியார் அதை கூறினார் இதை கூறினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒன்றை கூறி கொல்ல முனைகிறேன் ... அப்போதிருந்த கால கட்டத்தில் தங்களை பறையர் இன தலைவர்களாக காட்டி கொண்டவர்கள்......தங்களது சுயநலத்துக்காக கொள்கையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும் அடகு வைத்த அவர்கள் காலபோக்கில் காணாமல் போய்விட்டார்கள் என்பது வேறு விடயம் ..... அவர்களுக்கு கீழ் என்று கருதப்படும் சாதிகளை எவ்வாறெல்லாம் கேவலமாக பேசினார்கள் என்றும் வரலாற்று பதிவுகளில் இருக்கிறது ......பதிலுக்கு பதில் என்று அணைந்து போன முரண்பாடுகளை தூண்டி விடுவது ஓன்று கூடி உரிமையை மீட்டெடுக்க துடிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கிடையே பிளவை ஏற்படுத்த வழி வகுத்து விடும் ...ஏனென்றால் இந்துத்துவ பார்பனிய சாதி வெறியர்கள் அதை தான் எதிர் பார்க்கிறார்கள்..... அதனால் தான் இணையங்களிலும் ஊடகங்களிலும் பெரியார் ஒரு குறுப்பிட்ட சாதியினருக்கு எதிரானவர் என்ற பரப்புரையை மும்முரமாக செய்கின்றனர் ....

அந்த பார்ப்பனவெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும் அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மார்பு சட்டை அணிய கூடாது என்றும் பிராமண , நாயர், வெள்ளாள சாதியை சேர்ந்த ஆண்கள் வரும் போது அவர்களுக்கு சேலையை விலக்கி தங்களுடைய மார்பகங்களை காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் கொடுமையை அரங்கேற்றினார்கள் . ஒரு முறை மார்புசட்டையை அணிந்ததற்காக சாணார்கள் என்றழைக்கப்பட்டு சமூகத்தில் மோசமாக நடத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த கொடுமைகளை பற்றிய செய்திகளை தங்களுக்கு வசதியாக இருட்டடிப்பு செய்து விடுவார்கள். இப்போதெல்லாம் பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களோடு நேரடியாக மோதுவதை விட்டு விட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி விட்டு அவர்களுக்கிடையே அடித்து கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே செயல் படுகிறார்கள்.....

அதன் எதிரொலி தான் அரை மண்டையனுங்க பார்ப்பனியத்தின் கொடுமைகளை பற்றி பேசினால் “பார்ப்பான் தான் இழிச்சயவாயனா” ..”எந்த பார்ப்பான் ஒடுக்கப்பட்டவர்கள் அடிக்கிறான் அவன் தான் அடிக்கிறான் இவண் தான் அடிக்கிறான் உங்க பலத்தை அவனிடம் காட்டுங்க” என்று கொம்பு சீவி விட்டு விட்டு...... அந்த பக்கம் ஒடுக்குகிற சாதி வெறியர்களிடம் போய் நீங்க தான் சத்திரியர்கள், நீங்க தான் சூரர்கள், நீங்க தான் இந்து மதத்தின் தூண்கள், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று போற்றிய நம்ம அய்யா தான் இந்தியாவின் ஒரே தெய்வ திருமகன் என்று சால்ரா அடித்து அவனுங்களையும் கொம்பு சீவி விடுவானுங்க....... பின்பு ரெண்டு பெரும் அடிபோட ஆரம்பிச்சிட்டானுங்கன்னா அதை சுட்டி காட்டி நாங்களா ஒடுக்கப்பட்டவர்களை அடிக்கிறோம் பாருங்க அவனுங்க தான் அடிக்கிறாங்க என்று பரப்புரை பண்ண ஆரம்பிப்பது...... ஒடுக்கப்பட்டவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பிச்சா அவர்களை வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவது என்று அவனுன்களோட வழக்கமான வேலையை செய்தது கொண்டு தான் இருக்கிறார்கள்..... ஆனால் ஒரு சில ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தோழர்கள் குடுமிகளோட சூழ்ச்சிக்கு இரையாகி போய் விடுவது தான் வேதனைக்குரிய விடயம். அப்படி வெகு லெகுவாக இரையாகி போய்விடுவதானால் தானோ என்னவோ “சோ“ போன்ற பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கும்போது வெளிப்படையாகவே தங்களுக்கிடையே கிண்டலடித்து மகிழ்ந்தார்கள் ......

1 comment:

Anonymous said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....

குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

See this site :
http://www.vallalyaar.com/

Post a Comment