Monday, August 22, 2011

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு எதிராக இயங்கும் காவி கும்பல் ?



காவி கும்பல், கூடங்குளம் அணுமின்னிலையத்துக்கெதிரான கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு மத சாயம் பூசும் விலை நடக்கிறது..... காவி கும்பலுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பணம் பட்டுவாடா செய்யும் கார்பரேட் முதலாளிகளும், அரைமண்டையங்களும் அந்த வேலையில் தீவிரமாக இருக்கானுங்க அவனுன்களோட எண்ணம் என்னன்னா கூடங்குளம் மின்நிலையம் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் அவர்களது தொழில்களை பாதிக்கலாம் என்பது தானாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடும் பாதுகாப்பும் கிடைக்க செய்வதில் அந்த கும்பலுக்கு எந்த அக்கறையும் கிடையாதாம்....... அந்த கும்பல், அதிமுக அரசு கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்படும்... அதனால் தமிழக மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று செயாவை சுற்றி இருந்து மணி அடித்து கொண்டிருக்கிறது

அதோடு கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளை விலை பேசும் படலம் சரூராக நடந்து கொண்டிருக்கிறதாம்....... அதனால் தான் இந்த விடயத்தில் செயா மத்திய அரசிடம் எந்த முரண்டும் பிடிக்கவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து செய்தி வருகிறது...... ஆகையால் போராட்டக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள் .. இந்த போராட்டத்தை கிருத்தவ ஆலயங்களில் இருந்தோ கிருத்துவ மத போதகர்களை முன்னிறுத்தியோ, இல்லை இதை மீனவ மக்களின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமே முன்னெடுக்க வேண்டாம்..... ஏன் என்றால் இதை மீனவர்களுடைய பிரச்சினையாக மட்டும் தங்கள் ஊடகங்களில் பரப்புரை செய்யும் பார்ப்பனிய கும்பல், மற்ற மக்களை இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் அன்னியபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது...

ஆகவே இந்த போராட்டத்தை எல்லா மக்களையும் இணைத்த போராட்டமாக முன்னெடுக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் தோழர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் நன்மை தீமைகளையும் , பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பும் இழப்பீடும் பெற வேண்டிய அவசியத்தையும் பற்றிய வீழிப்புணர்வை எல்லா தரப்பு மக்களிடையேயும் பரப்புவது முக்கியமான ஒன்றாகும்...... ஏனெனில் இது மீனவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை கிடையாது. ஒட்டு மொத்த தென் தமிழக மக்களையும் பாதிக்கும் விடயம். குறைந்த பட்சம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாமான இழப்பீட்டையும், எல்லா மக்களின் பாதுகாப்பு மற்றும் அந்த பகுதியை கட்டமைப்பது சம்பந்தப்பட்ட எழுத்து வடிவிலான உறுதி மொழியையும் பெற வேண்டும் . அதே நேரத்தில் இந்த போராட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் பார்ப்பனிய காவி கும்பல்களை சாதி மத, கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும் ஒரே களத்தில் நின்று விரட்டி அடிக்க வேண்டும்.

உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்யவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் . இது கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களுக்கு நான் மறுபடியும் விடும் தாழ்மையான வேண்டுகோள்.

No comments:

Post a Comment