Saturday, October 29, 2011

கருஞ்சிவப்பு போர்வைக்குள் பதுங்கி இருக்கும் கருப்பு ஆடுகளும் ஒற்றர்களும்

கருஞ்சிவப்பு போர்வையில் பதுங்கி கொண்டிருக்கும் கருப்பு ஆடுகளும் ஆளும் முகாமிற்கு தகவல்களை கடத்தும் ஒற்றர்களும் நடன ராசனின் இயக்கத்தில் சுறு சுறுப்பாக செயல் பட ஆரம்பித்து விட்டார்களாம். தீவிரவாதிகள் தூங்கும் குழுக்களை (sleeping cells) ஏற்படுத்துவது போல் பச்சை இலை சேலை, கருஞ்சிவப்பு போர்வையை வேவு பார்க்க சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்னே நடன ராசனின் மூலமும், துக்ளக் தர்பார் நடத்துபவர் மூலமும் ஏற்படுத்தி விட்டிருந்தார்களாம். கருஞ்சிவப்பு போர்வைக்குள் நடக்கும் ரகசிய காய் நகர்த்தல்களை அந்த கருப்பு ஆடுகளும் ஒற்றர்களும் தந்தி அடித்து கொண்டிருந்ததன் விளைவு தான் கடந்த தேர்தலில் கருஞ்சிவப்பு போர்வைக்குள் திட்டங்களை முறியடிக்கும் வியூகங்கள் பச்சை சேலை கட்டிய குழுவினரால் பக்காவாக செய்யப்பட்டதாம். கொடுமை என்னன்னா அந்த பச்சை சேலைக்கு அவ்வப்போது பார்டர் தைத்து கொடுக்கும் ஒருவரான உலக ரட்சகர் மத்திய அமைச்சர் கூட ஆகி இருந்தார்.

மற்றுமொரு முக்கியமான ஆள் அம்மாவின் ஆட்சி காலத்தில் இன்று வளர்ந்த மதிகளுக்கெல்லாம் முன்னோடியாக வேப்பிலை கட்டி ஆடி அம்மாவை அசத்திய இந்திரனோட குமாரியாம். குமாரி கடந்த காலங்களில் கருஞ்சிவப்பு போர்வையின் உரிமையாளரை எந்த அளவிற்கு கேவலமாக திட்டி தீர்க்க முடியுமோ அந்த அளவிற்கு திட்டி தீர்த்தவர். பெரிய கொடுமை என்னவென்றால் தன்னோட கணவரை ஆபாசமாக திட்டிய ஒருவர் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் நடு வீடு வரை உலவ விட்டதன் பலன், இந்திரனோட குமாரி பழ மொழி மற்றும் அவரது தாயார் சம்பந்தமான பல தகவல்களையும் சேகரித்து தற்போதைய ஆளும் தரப்பிற்கு அனுப்பி கொண்டு இருக்கிறாராம்.

இன்னொரு பக்கம் நடனமாடும் ராசா சாதி பாசத்தோடு கருஞ்சிவப்பு போர்வைக்குள் இருக்கும் நபர்களோடு தொடர்பில் இருந்து விடயங்களை அரங்கேற்றி வருகிறாராம். தென் தமிழகத்தில் அழகரின் பெயரை சொல்லி கடந்த ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் பண்ணிய பலரையும் சாதி பாசத்தோடு அரவணைத்து இருக்கிறாராம் அவர்களிடம் இருந்து தகவல்கள் கறக்கப்படுகிறதாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கைதான கருப்பண்ண சாமிக்கும் அப்ரூவராக மாற உடுக்கை அடித்து வருகிறாராம். கருப்பண்ண சாமியும் அதே மூடில் இருப்பதாகவும் ஒரு செய்தி கசிகிறது. நடராசனுக்கு இந்த செயல்களில் உறுதுணையாக இருப்பது கருப்பு துண்டால் வாய் பொத்தி அழும் நாணயமானவரின் கட்சியை உடைத்த “முருகனின் அண்ணன் பெயரை” கொண்டவராம். கால்வாய் வெட்டியவர் கல்வி வியாபாரம் செய்கிற அவரோட சம்பந்தி மூலம் ஆத்தா கட்சியின் தொடர்பில் இருக்கிறாராம்.


From Profile Photos

கடந்த ஆட்சியில் தென் தமிழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த மாலைக்கு ராசாவான ஒரு எம்.எல்.ஏ ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த துணை வேந்தரை அடித்ததாக ஆத்தா கட்சி குரல் எழுப்பியது எல்லோருக்கும் ஞாபகமிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியும் அதை ஒட்டி பரபரபாக்கப்பட்ட அந்த விடயமும் கரும்சிவப்பு கட்சிக்கு எதிராக தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுக்களை திசை திருப்ப நடன ராசனின் இயக்கத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகமாம். இவங்க அரங்கேற்றிய நாடகத்தில் பலிகடாவானவர் இந்த நாடகங்களை பற்றிய அறிவில்லாத துணை வேந்தர்.

இது இப்படின்னா திரு.அண்ணாமலைக்கு வேலாக இருக்கும் மற்றுமொருவர் தனது சம்பாத்தியத்தை பாதுகாக்க ஆளும் தரப்போடு ரகசியமாக சமரச பேச்சில் ஈடுபட்டு வருகிறாராம்.

கருஞ்சிவப்பு போர்வையை பராமரிப்பவர், இதை தான் சாடை மாடையாக “கூடா நட்பு” என்று விளித்தாரோ என்னவோ. தனது பேச்சாலும் எழுத்தாலும் கட்டி எழுப்பிய ஒரு சாம்ராசியம் அவரது பிள்ளைகளின் கூடா நட்பால் நிலை குலைந்து நிற்கிறது என்றால் கொடுமையாக தான் தெரிகிறது. பிள்ளைகள் உணருவார்களா.

இப்போதைக்கு அந்த கருப்பு ஆடுகளையும் ஒற்றர்களையும் ஓரம் கட்டி விட்டு இதுவரை கட்சி பொறுப்பை வகிக்காத ஆளுமை திறமையுடைய இளைஞர்களையும், திராவிட கொள்கையின் மீது உள்ள பிடிப்பால் பலனை எதிர்பாராது உழைக்கும் அடிமட்ட தொண்டர்களையும் கண்டறிந்து அவர்களை பொறுப்புகளில் அமர்த்துவது கருஞ்சிவப்பு போர்வையை சேதாரப்படுத்தும் கருப்பு ஆடுகளிடம் இருந்தும் ஒற்றர்களிடம் இருந்தும் போர்வையை பாதுகாக்கும்.

இல்லையென்றால் தமிழகம் தட்டி கேட்க முடியாத ஒரு பாசிச குழுவின் கரங்களில் சென்று விடும் . மூட்டை பூச்சியை கொல்ல வீட்டை கொழுத்துன கதையாக மாறிவிட கூடாது

இன்னும் நிறைய கசமூசாக்கள் இருக்கிறது. இருக்கிறதை சரி பண்ணாலே போர்வையை ஓரளவுக்காகவது சுத்தப்படுத்தி விடலாம் . இல்லையென்றால் முதலுக்கே மோசமாக போய்விடும்

Friday, October 28, 2011

இணையத்தில் அவுத்து போட்டு ஆடும் சாதி வெறி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதே போல சாதி வெறி இணையத்தில் எந்த அளவிற்கு முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு கீழே உள்ள படம் சாட்சி. "என்னுடைய சாதி வெறியை தூண்டி விடுவது யார் " என்ற பதிவிற்கு தியாகு என்ற பெயரில் ஒரு சாதி வெறியர் பதிந்த பதிவின் வலைப்படம் தான் அது .

From Profile Photos


இணையத்தை பயன்படுத்துபவர்கள் குறைந்த அளவிற்கு பன்னிரெண்டாம் வகுப்பாவது தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நினைக்கிறேன் . அப்படி இருக்கும்கால் தேர்ச்சி பெற்ற எவரும் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பட்ட படிப்போ இல்லை பட்டயப்படிப்போ முடித்து இருப்பார்கள் . அப்படி கல்வி நிலையங்களுக்கு சென்று கல்வி பெற்ற..... பல்வேறு சாதி, மத, மொழி, இனங்களை சேர்ந்த மாணவர்களோடு பழகும் வாய்ப்பை பெற்ற இவனுன்களே இணையத்தில் இந்த அளவிற்கு சாதி வெறியோடு சுற்றி கொண்டிருக்கும் போது . கிராமத்தில் சரியான கல்வி அறிவு இல்லாமல் மூட நம்பிக்கைகளால் முடமாகி கிடக்கும் மக்களுக்கு எந்த அளவிற்கு சாதி வெறி ஏற்றப்பட்டு இருக்கும்.


இந்த மாதிரி அரை கிறுக்கன்களை பார்க்கும்போது பெரியார், அம்பேத்கர், கமாராசர் போன்ற போராளிகள் போராடி பெற்று கொடுத்த சமூக நீதி விழலுக்கு இறைத்த நீராகி போய் கொண்டிருக்கிறதோ என்ற வேதனை தான் எழுகிறது.

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு போதித்த போதி தர்மரும் தமிழர்களும்

ஏழாம் அறிவு..... இங்க ஐந்தறிவே பலருக்கு இருக்குதா என்பது வேறு விடயம்..... படத்திற்கு தமிழர்களிடையே போதிதர்மரை மையப்படுத்தி செய்யப்படும் விளம்பரங்களை பார்க்கும்போது நல்லாத்தான்யா வியாபாரம் பண்ணுறாய்ங்க என்று தான் தோணியது. தமிழனோட அறியாமையையும், அடிக்கடி தனக்கு தானே ஏற்படுத்தி கொள்கிற உணர்ச்சியின் உச்சகட்டத்தையும் வைத்து தமிழ் திரைப்பட துறையினர் நல்லாவே கல்லா கட்டுறாங்க என்பது தான் சமீப காலமாக அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து தெரிகிறது.

அதுவும் ஏழாம் அறிவு, போதி தருமர் தமிழர் (அவர் காஞ்சி புறத்தை சேர்ந்த புத்த துறவி என்பதை தவிர அவரது பிறப்பு பற்றிய முழு உண்மைகளும் அறியப்படவில்லை என்பது வேறு விடயம்) என்றும், அவரது பெருமை பேசுகிற படம் என்பதால் ஒவ்வொரு தமிழனும் காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் என்றும் விளம்பரம் வேற. முக்கால்வாசி தமிழனுங்க முதுகெலும்பில்லாத புழுக்களை போல் தான் பார்ப்பனிய குட்டையில் நெழிகிறானுங்க என்பது வேறு விடயம். சரி போதி தர்மரை பற்றி ஒழுங்கா சொல்லி இருக்கிறானுங்கன்னா அதுவும் அரைகுறையாக தான். அவரு ஏதோ போகிற வழியில் புத்த மதத்தை ஏற்று கொண்டவர் போல காட்டி இருக்கிறானுங்க. அனால் அவர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து புத்த கொள்கைகளை பரப்பியவர் என்பதையோ, புத்த கொள்கையாளர்கள் ஏற்படுத்திய உலகின் முதல் பல்கலைக்கழகமான நாளந்தாவில் போதித்தவர் என்பதையோ, தமிழகத்தில் புத்த மதம் தளைத்தோங்கி இருந்ததையோ இல்லை காஞ்சிபுரம் தான் தென்னிந்தியாவில் புத்த மதத்தின் தலைமை பீடமாகவும் இருந்தது என்பதை பற்றியோ மூச்சு விடாமல் அப்படியே மூடி மறைத்து விட்டானுங்க. பின்னே புத்த விகாரத்தை இடித்துத்தான் காமகேடிகளின் மடம் கட்டப்பட்டது என்பது போன்ற விவகாரமான செய்திகள் தமிழன் தெரிந்து சுய உணர்வு பெற்று விடக்கூடாதே.

From Profile Photos

இந்த படம் உண்மையிலேயே போதி தர்மர் பற்றிய பெருமைகளை பேசும் படம் என்றால் அப்படத்தில் போதி தருமரை கொண்டாடுகிற சீனர்களை வில்லனாக காட்டுவதற்கு பதில் ஏதாவது நல்ல பாத்திரத்தில் காட்டி இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சீனாக்காரர்களை ஏதோ தமிழர் விரோதி போல் காட்டி இந்திய தேசியத்திற்கு விளக்கு பிடித்து கொண்டே தமிழனின் உணர்ச்சிக்களை முதலீடாக வைத்து காசு பார்க்க முனைந்து இருக்கிறார்கள்.

இடைக்காலத்தில் எத்தனையோ போதி தருமர்களாக திரிந்த தமிழர்களை அவர்கள் புத்த சமண மதத்தை சேர்ந்தவர்களாக இருந்த ஒற்றை காரணத்தினால் கழுவிலேற்றி கொன்ற வெறியர்கள் கொண்ட மண் தான் இது என்பதை பற்றி எத்தனை பேர் பேசுவார்கள், அதை எண்ணி வெட்கி நாணுவார்கள். ஒரு போதி தர்மனை ஆதரித்த சீனர்கள் உலக வல்லரசாய், கணக்கிலடங்கா போதி தர்மர்களை கொன்றழித்த இம்மண் வல்லரசுகளின் நிரந்தற அடிமையாய். இதை தான் ஊழி வினை பயன் என்று சொல்வார்களோ.

இப்ப கொஞ்சா நாளா இந்திய தேசியத்துக்கு விளக்கு பிடிக்கிற புண்ணாக்குகள் சீனாகரனையும் தமிழர் விரோதியாக வர்ணம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள். தமிழனுக்கும் சீனனுக்கும் ஏதோ பரம்பரை பரம்பரையாக வாய்க்கா வரப்பு தகராறு இருக்கிறது போல். ரெண்டு பேருக்கும் பொதுவான எல்லை கூட கிடையாது. சீனாகாரனிடம் இருந்து காத தூரத்தில் இருக்கிறோம். உடனே சில அல்லக்கைகள் ஈழ தமிழனை அழிப்பதற்கு சிங்களனுக்கு சீனாகாரன் தானே ஆயுதம் கொடுத்தான் என்று துரப்பை தூக்கி கொண்டு வரும்ங்கள். அட பதருகளா இந்தியாவிடம் சரணடைந்து கிடந்ததால் தானே சீனாகாரன் சிங்களனுக்கு உதவி செய்தான். தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு போதி தர்மரை கொண்டாடுகிறவர்களிடம் தமிழன் நேரில் சென்று உதவி கேட்டு இருந்தால் மறுத்திருப்பார்களா என்ன ? . இப்போது தமிழ்நாட்டுக்கும் சேர்த்து அல்லவா விடுதலை வாங்கி தந்து இருப்பார்கள்

.

பள்ளிக்குள் விளையாடி கொண்டிருந்த புத்த சமண பிள்ளைகளை கிள்ளி ..... மன்னிக்க கழுவில் ஏற்றியவனுங்களை பள்ளியை இடித்து கோவிலாக மாற்றி உள்ளே அனுப்பி வைத்து விட்டு வெளியில நின்று பிள்ளைக்காக அழுகிற பொறம்போக்காக தான் தமிழன் திரியுறான். போகி பண்டிகை கூட தமிழர்களின் இலக்கிய ஏடுகளை கொளுத்தி போடும் விழாவாக பார்ப்பனிய வெறியர்களால் ஏற்படுத்தப்பட்ட ஓன்று என்றும் படித்து இருக்கிறேன். பெரும்பான்மையான அந்த நல்வழி கூறும் தமிழ் இலக்கியங்கள் புத்த சமண கொள்கையாளர்களால் இயற்றப்பட்டவை என்பது குறுப்பிடத்தக்க ஓன்று. இப்படி இவனுங்க துரத்தி விட்ட புத்தத்தையும் சமணத்தையும் கொண்டாடாடுகிறவனுங்க (உபயம் சீனரும், குசராத்தி அடகுக்கடை சைனரும்) வைக்கிற ஆப்பிற்கு வசதியாக குனிந்து கொடுத்து கொண்டு நிற்கிறான் ஈன தமிழன்.

தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்தாமல் இருந்து விட்டு செத்ததற்கு அப்புறம் நல்லா தண்ணிய போட்டுட்டு செத்தவனுக்கு வாயில பாலூத்தி அழுகிறவன் பெயர் தான் தமிழனா . அது புத்தனா இருந்த தமிழனை துரத்தி துரத்தி கழுவில் ஏற்றி கொல்லப்படும் போதும் சரி, ஈழத்தில் கொத்து கொத்தா அறுத்து எறியப்படும் போதும் சரி தமிழன் ஒரே மாதிரியாக தான் இருக்கிறான். இப்ப புதுசா போதி தர்மருக்காக கண்ணீர் வடிக்கிறானுங்க.

பார்ப்பனியத்திற்கு அடி வருடுவதையே பிறவி பயனாக நினைக்கிற பயலுக படம் எடுத்தால் நவக்கிரகத்தோட புனிதம், துளசியின் மகிமை, இடஒதுக்கீடு செய்யும் அட்டூழியம் என்பது போன்ற கருத்துக்களை தான் திணிப்பானுங்க. அதிலேயும் பெரிய கொடுமை என்னவென்றால் அம்பேத்கர், பெரியார், காமராசர் போன்ற போராளிகளின் போராட்டத்தால் விளைந்த பயன்களை அனுபவித்தவனுங்க தான் கருத்து சொல்கிறோம் என்று அவர்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறானுங்க. இவற்றையெல்லாம் பார்க்கும் நேரத்தில் ஐயோ இந்த மொள்ள மாறிகளுக்காகவா அந்த போராளிகள் தங்களுடைய வாழ்வை தியாகம் செய்து கொண்டார்கள் என்று நெஞ்சம் கொஞ்சம் அதிகமாகவே கனக்கிறது. ஒருவேளை அவர்கள் போராடாமலிருந்தால் இவனுங்க மூதாதையர்களை போல் இவனுங்களும் இப்ப கோவணம் கட்டி கொண்டு தான் அலைந்து இருப்பானுங்க.

இதுல மற்றுமொரு கூட்டம் போதி தர்மரை தமிழனுக்கு அறிமுகப்படுத்திய முருகதாசிற்கு நாம் எல்லாரும் நன்றி கடமைப்பட்டவர்கள் என்ற அளவிற்கு மூளை உருகி கதறுகிறார்கள். அட பாவிங்களா போதி தர்மரை பற்றி படம் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. அவரை ஏதோ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தபடும் புது கதாநாயகனை போல அல்லவா பாவிக்கிறாங்க. தமிழர்கள் எந்த அளவிற்கு ஞான சூனியமாக போய் கொண்டு இருக்கிறார்கள் என்பதை தான் இது போன்ற நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. புனையப்பட்ட புராண கட்டுக்கதைகளை வரலாறென்று நம்பி கொண்டு அலையும் கூட்டங்களுக்கு மத்தியில் உண்மையான வரலாறு படுகின்ற பாடு ஈழத்தமிழன் படும்பாட்டை விட கொடுமையாக இருக்கிறது.

அதிலும் முகநூலில் முருகதாசின் புகழ் பாடும் நண்பர் ஒருவரிடம் போதிதர்மரை பற்றி படம் எடுத்து தமிழரை பெருமை படுத்தி இருக்கிறோம் என்று விளம்பரம் செய்யும் முருகதாசு அந்த வரலாறையே திரித்து சொல்லி இருக்கிறாரே என்று கேட்டால், அட போங்க நீங்க அவரு என்ன டாக்குமென்ட்ரியா எடுத்தார், வரலாற்றை பற்றி படம் எடுக்கும் போது அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணினா (கதை டிச்சு கிச்சனின் போது நடிகைங்களிடம் வேண்டி கொள்வது போலவோ என்னவோ) தான் காசு பார்க்க முடியும் . காளிவுட்காரன் கூட சமுராயிகளின் வாழ்வை திரித்து தான் படம் எடுக்கிறான் என்று விளக்கம் கொடுக்கிறார். யோவ்.... காளிவுட்காரன் தானே சாமுராய்களோட வரலாற்றை திரித்து படம் எடுக்கிறான், சாப்பான்காரனா எடுக்கிறான் என்று அறிவு பூர்வமாக கேள்வி கேட்க கூடாது. அப்படி கேள்வி கேட்பது தமிழனுக்கு இழுக்கு என்பது இங்கு எழுதப்படாத சட்டம். காசு பார்ப்பதற்காக நாங்கெல்லாம் பெத்த ஆத்தாளுக்கே புது புருசனையும் புது வரலாற்றையும் கொடுத்து பெருமைபடுவோம் என்று சொல்லி கொள்கிறவனுங்க படம் எடுக்கிற போதும் அதை ஆதரிக்கிறவங்க இருக்கிற போதும் நாம என்ன கத்தினாலும் எடுபடாது

பேசாமா பிள்ளைங்களை (உடனே அந்த சாதிகாரனை மட்டும் தான் பள்ளி கூடத்திற்கு... சீ.. சீ..... திரைப்பட கூடத்திற்கு அனுப்ப வேண்டுமா என்று கேட்க கூடாது) பள்ளி கூடத்திற்கு அனுப்புவதற்கு பதிலாக தினமும் எதாவது ஒரு படத்திற்கு நுழைவு சீட்டு எடுத்து திரைப்பட கூடத்திற்கு அனுப்பி விட்டு விடலாம் போல. இலவசமாக கல்வியை குடுத்த ஐயா காமராசர் எல்லா ஊர்களிலும் கட்டாயமாக ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றாமல் விட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. நிறைய எழுதலாம் என்று நினைக்கிறேன், ஆனால் இப்போதைக்கு இது போதும்.

மற்றுமொரு பரமக்குடியா.... தாங்காதுடா பூமீ....

அக்தோபர் 30 திகதியோ அதற்கு முன்போ ஏதாவது பிரச்சினையை உருவாக்கி மறுபடியும் ஒரு பரமக்குடியை உருவாக்க ஒரு சாதி சங்கம் திட்டமிட்டு வருகிறதாம். அந்த திட்டத்திற்கு பின்பிருந்து சுதி ஏற்றி ஆட்டுவிப்பது சாதீய வெறி கொண்டு நடனமாடும் ஒரு ராசனாம். அதை தொடர்ந்து வன்முறையை காரணம் காட்டி குறுப்பிட்ட மக்கள் மீது அதிகார வர்க்கத்தில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதலுக்கு தலைமை ஏற்க மற்றொரு ஆதிக்க சாதி காவாலிகளிடையே போட்டோ போட்டி நடக்கிறதாம். எல்லாம் பரமக்குடி கொடூரத்தை செயல்படுத்திய காவாலிகளுக்கு அரசை ஆட்டுவிப்பவர்கள் கொடுத்த மரியாதை தான் காரணமாம்.


சட்ட கல்லூரியில் பண்ணிய சண்டித்தனத்திற்கு வாங்கி கட்டி கொண்டதினால் ஏற்பட்ட அவமானத்தின் வடு அந்த அசிங்கங்களுக்கு இன்னும் மறையவில்லையாம். அதற்கு பதில் எதிர் தரப்பினருக்கு பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும் வரை தூங்க மாட்டோம் என்று வரிந்து கட்டி கொண்டு அலைகிறதாம் அந்த கேவலங்கள்.

சாதி வெறியர்களின் மனதில் கொழுந்து விட்டு எரிகிற வெறிக்கு எண்ணெய் ஊற்றுவது போல், சமீபத்தில் மணியை சூப்புற சாமி ஒருத்தன் சாதி வெறியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு ந்த வெறியை தன்னுடைய பேச்சுக்களால் மேலும் ஏற்றி விட்டு இருக்கிறானாம். அவனது திட்டத்தின் படி கிருட்டிணனின் வம்சாவழி என்று கூறி கொள்கிற சாதியினரையும் சேர்த்து கொண்டு வெறியாட்டத்தை நடாத்தினால் எதிர்த்தரப்பினரை திக்குமுக்காட செய்து விடலாம் என்றும், அந்த எதிர்த்தரப்பை சேர்ந்த சாதியினரின் மீது தமிழகத்தில் உள்ள ஏனைய சாதியினர் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்பது போன்ற எண்ணத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி விடலாம் என்றும் மணி அடித்து இருக்கிறானாம் அந்த சூப்பிகொண்டு அலையுற பயல்.

முப்பதாம் தேதி நடக்கும் அந்த விழாவிற்கு அகில இந்திய அளவில் இருந்து உயர்சாதியை சேர்ந்த அரசியல் தலைவர்களையும் சாதி சங்க தலைவர்களையும் அழைத்து வருவது தன்னோட பொறுப்பு என்றும் சாதி வெறியர்களின் காதில் சங்கூதி இருக்கிறானாம்.


விவரம் தெரிந்த பட்சி ஒன்று கசிய விட்ட தகவல். பாதிக்கபட போகிறவர்களுக்கு தகவலை சொல்லி எச்சரிக்கையாக இருக்க சொல்லுவது நலம் என்று எண்ணுகிறேன்


...... ம்ம்ம்ம்ம்ம் தமிழர்களை ஒருத்தனுக்கு எதிராக மற்றவனை ஏவி விட்டு ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் சங்கூதுவதில் பார்ப்பனிய வேசைகள் இடைக்காலத்தில் புத்த சமணர்களை கொலை செய்ய எப்படி தீவிரித்து அலைந்தானுன்களோ அதே போக்கில் தான் இப்போதும் இருக்கிறானுங்க