Saturday, October 29, 2011

கருஞ்சிவப்பு போர்வைக்குள் பதுங்கி இருக்கும் கருப்பு ஆடுகளும் ஒற்றர்களும்

கருஞ்சிவப்பு போர்வையில் பதுங்கி கொண்டிருக்கும் கருப்பு ஆடுகளும் ஆளும் முகாமிற்கு தகவல்களை கடத்தும் ஒற்றர்களும் நடன ராசனின் இயக்கத்தில் சுறு சுறுப்பாக செயல் பட ஆரம்பித்து விட்டார்களாம். தீவிரவாதிகள் தூங்கும் குழுக்களை (sleeping cells) ஏற்படுத்துவது போல் பச்சை இலை சேலை, கருஞ்சிவப்பு போர்வையை வேவு பார்க்க சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்னே நடன ராசனின் மூலமும், துக்ளக் தர்பார் நடத்துபவர் மூலமும் ஏற்படுத்தி விட்டிருந்தார்களாம். கருஞ்சிவப்பு போர்வைக்குள் நடக்கும் ரகசிய காய் நகர்த்தல்களை அந்த கருப்பு ஆடுகளும் ஒற்றர்களும் தந்தி அடித்து கொண்டிருந்ததன் விளைவு தான் கடந்த தேர்தலில் கருஞ்சிவப்பு போர்வைக்குள் திட்டங்களை முறியடிக்கும் வியூகங்கள் பச்சை சேலை கட்டிய குழுவினரால் பக்காவாக செய்யப்பட்டதாம். கொடுமை என்னன்னா அந்த பச்சை சேலைக்கு அவ்வப்போது பார்டர் தைத்து கொடுக்கும் ஒருவரான உலக ரட்சகர் மத்திய அமைச்சர் கூட ஆகி இருந்தார்.

மற்றுமொரு முக்கியமான ஆள் அம்மாவின் ஆட்சி காலத்தில் இன்று வளர்ந்த மதிகளுக்கெல்லாம் முன்னோடியாக வேப்பிலை கட்டி ஆடி அம்மாவை அசத்திய இந்திரனோட குமாரியாம். குமாரி கடந்த காலங்களில் கருஞ்சிவப்பு போர்வையின் உரிமையாளரை எந்த அளவிற்கு கேவலமாக திட்டி தீர்க்க முடியுமோ அந்த அளவிற்கு திட்டி தீர்த்தவர். பெரிய கொடுமை என்னவென்றால் தன்னோட கணவரை ஆபாசமாக திட்டிய ஒருவர் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் நடு வீடு வரை உலவ விட்டதன் பலன், இந்திரனோட குமாரி பழ மொழி மற்றும் அவரது தாயார் சம்பந்தமான பல தகவல்களையும் சேகரித்து தற்போதைய ஆளும் தரப்பிற்கு அனுப்பி கொண்டு இருக்கிறாராம்.

இன்னொரு பக்கம் நடனமாடும் ராசா சாதி பாசத்தோடு கருஞ்சிவப்பு போர்வைக்குள் இருக்கும் நபர்களோடு தொடர்பில் இருந்து விடயங்களை அரங்கேற்றி வருகிறாராம். தென் தமிழகத்தில் அழகரின் பெயரை சொல்லி கடந்த ஆட்சி காலத்தில் ரவுடித்தனம் பண்ணிய பலரையும் சாதி பாசத்தோடு அரவணைத்து இருக்கிறாராம் அவர்களிடம் இருந்து தகவல்கள் கறக்கப்படுகிறதாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கைதான கருப்பண்ண சாமிக்கும் அப்ரூவராக மாற உடுக்கை அடித்து வருகிறாராம். கருப்பண்ண சாமியும் அதே மூடில் இருப்பதாகவும் ஒரு செய்தி கசிகிறது. நடராசனுக்கு இந்த செயல்களில் உறுதுணையாக இருப்பது கருப்பு துண்டால் வாய் பொத்தி அழும் நாணயமானவரின் கட்சியை உடைத்த “முருகனின் அண்ணன் பெயரை” கொண்டவராம். கால்வாய் வெட்டியவர் கல்வி வியாபாரம் செய்கிற அவரோட சம்பந்தி மூலம் ஆத்தா கட்சியின் தொடர்பில் இருக்கிறாராம்.


From Profile Photos

கடந்த ஆட்சியில் தென் தமிழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த மாலைக்கு ராசாவான ஒரு எம்.எல்.ஏ ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த துணை வேந்தரை அடித்ததாக ஆத்தா கட்சி குரல் எழுப்பியது எல்லோருக்கும் ஞாபகமிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியும் அதை ஒட்டி பரபரபாக்கப்பட்ட அந்த விடயமும் கரும்சிவப்பு கட்சிக்கு எதிராக தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுக்களை திசை திருப்ப நடன ராசனின் இயக்கத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகமாம். இவங்க அரங்கேற்றிய நாடகத்தில் பலிகடாவானவர் இந்த நாடகங்களை பற்றிய அறிவில்லாத துணை வேந்தர்.

இது இப்படின்னா திரு.அண்ணாமலைக்கு வேலாக இருக்கும் மற்றுமொருவர் தனது சம்பாத்தியத்தை பாதுகாக்க ஆளும் தரப்போடு ரகசியமாக சமரச பேச்சில் ஈடுபட்டு வருகிறாராம்.

கருஞ்சிவப்பு போர்வையை பராமரிப்பவர், இதை தான் சாடை மாடையாக “கூடா நட்பு” என்று விளித்தாரோ என்னவோ. தனது பேச்சாலும் எழுத்தாலும் கட்டி எழுப்பிய ஒரு சாம்ராசியம் அவரது பிள்ளைகளின் கூடா நட்பால் நிலை குலைந்து நிற்கிறது என்றால் கொடுமையாக தான் தெரிகிறது. பிள்ளைகள் உணருவார்களா.

இப்போதைக்கு அந்த கருப்பு ஆடுகளையும் ஒற்றர்களையும் ஓரம் கட்டி விட்டு இதுவரை கட்சி பொறுப்பை வகிக்காத ஆளுமை திறமையுடைய இளைஞர்களையும், திராவிட கொள்கையின் மீது உள்ள பிடிப்பால் பலனை எதிர்பாராது உழைக்கும் அடிமட்ட தொண்டர்களையும் கண்டறிந்து அவர்களை பொறுப்புகளில் அமர்த்துவது கருஞ்சிவப்பு போர்வையை சேதாரப்படுத்தும் கருப்பு ஆடுகளிடம் இருந்தும் ஒற்றர்களிடம் இருந்தும் போர்வையை பாதுகாக்கும்.

இல்லையென்றால் தமிழகம் தட்டி கேட்க முடியாத ஒரு பாசிச குழுவின் கரங்களில் சென்று விடும் . மூட்டை பூச்சியை கொல்ல வீட்டை கொழுத்துன கதையாக மாறிவிட கூடாது

இன்னும் நிறைய கசமூசாக்கள் இருக்கிறது. இருக்கிறதை சரி பண்ணாலே போர்வையை ஓரளவுக்காகவது சுத்தப்படுத்தி விடலாம் . இல்லையென்றால் முதலுக்கே மோசமாக போய்விடும்

3 comments:

சண்முகம் said...

என்ன சொல்ல வரிங்க.....

anthony said...

///என்ன சொல்ல வரிங்க.///

படித்து விட்டீர்களா. படிக்க வில்லையென்றால் படிங்க . படித்தும் புரியவில்லை என்றால் கொஞ்சம் விவரமானவங்களிடம் படித்து காட்டி தெரிஞ்சுக்கோங்க

எப்படியேனும் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

suryajeeva said...

கருப்பு சிவப்பு போர்வை, கருப்பு வெள்ளை சிவப்பு போர்வை, இன்னும் என்னென்ன நிறத்தில் போர்வை இருந்தாலும் எல்லாமே அழுக்கா இருக்காது, வா மக்கா நம்ம எல்லோரும் சேர்ந்து அதை வெளு வெளுன்னு வெளுத்தி கட்டி புழிஞ்சு காய போடுவோம்

Post a Comment