Tuesday, October 11, 2011

கூடங்குள அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டத்தை சாதிய மத ரீதியாக முடக்க முண்டி கொண்டு நிற்கும் அரசு எந்திரம் .

அது என்னவோ தெரியலைங்க மக்கள் எங்கெல்லாம் ஒண்ணா மண்ணா நின்னு போராடுறாங்களோ அங்கெல்லாம் போய் ஊரை ரெண்டா பிளவு படுத்துற கூத்தாடி வேலையை அரசு எந்திரங்கள் சரியாக செய்து வருகின்றன என்பதற்கு கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு இடையே தொடங்கி இருக்கும் முரண்பாடுகள் சரியான எடுத்துகாட்டாகும். ஆரம்பத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்புகள் ஒரு குறுப்பிட்ட சமுதாயத்தினரிடம் வேலை மற்றும் தொழிற் வாய்ப்புகள் அணுமின் நிலையம் வந்தால் அதிகரிக்கும் என்று ஆசை கட்டி தான், வலுவிழக்க செய்யப்பட்டன. தமிழனுக்கு தான் அடுத்தவன் பாதிக்கபட்டால் என்ன, நாம சம்பாதித்தா நல்லது என்ற உயரிய எண்ணம் தான் கொஞ்சம் அதிகமாகவே உண்டே அதனால் தான் என்னவோ , அவர்களுடைய மூளையும் அணு மின் நிலையம் என்னும் அரக்கனால் எல்லா மக்களுமே எதிர் கொள்ள போகும் பயங்கரங்களை பற்றிய அறிவு அதிகார வர்க்கத்தால் திறமையாக மழுங்கடிக்கப்பட இடம் கொடுத்தது.


புக்குசிமா ஏற்படுத்திய தாக்கமோ என்னவோ திடீரென உறக்க நிலையில் இருந்த மக்கள் துள்ளி எழுந்து, சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்த ஆரம்பித்தனர். பார்ப்பனிய அதிகார வர்க்கத்திற்கு தான் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓன்று கூடினால் பிடிக்காதே. ஆக எப்படியாவது இந்த போராட்டத்தை நசுக்க வேண்டும் அல்லது வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதிலேயே மும்முரமாக இருந்தது. அனுமின் நிலைய திட்டத்தை ஆரம்பிக்கும் போது சாதி அடிப்படையில் மக்களை பிளவு படுத்தி வெற்றி கண்ட அந்த கூட்டம், இப்போது மக்கள் சாதி வேறுபாடுகளை துறந்து விட்டு போராட்டத்தில் குதிப்பதை கண்ட போது கொஞ்சம் திக்கு முக்காடி தான் போனது. அப்போது அவர்கள் மனதில் உதித்த திட்டம் தான் சாதியோடு கூடுதலாக சேர்த்து மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்துவது. ஏற்கனவே மண்டைக்காடு கலவரத்தை திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்திய கும்பல் தானே அது.


அந்த திட்டத்தின் ஒரு பகுதி தான் நாராயணசாமியை போராட்ட குழுவினரோடும் மாநில அரசோடும் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பியது . அதென்னவோ தெரியலை நாரத வேலைய பார்க்க வருகிறவனுங்க எல்லாருமே நாராயணா என்கிற பெயரோடு தான் வருகிறானுங்க. இந்த நாராயணசாமியோட பின்னணியையும் கொஞ்சம் பார்க்கணும் . ஆளு பார்க்க தான் பிள்ளை பூச்சி மாதிரி இருப்பாப்புல. ஆனா சாதி அடிப்படையில் அரசியல் செய்வதில் ஆள் பலே கில்லாடி. அவரு இங்க வந்தது ஏதோ போராட்ட குழுவினரோடு பேச்சு நடாத்த தான் என்று இதை படிப்பவர்களில் யாரவது நினைத்து கொண்டு இருந்தால் உங்க நினைப்பில் இப்பவே மண்ணை அள்ளி போடுங்க. அண்ணன் இங்க வந்ததே சாதி ரீதியில் சந்திக்க வேண்டிய ஆட்களை சந்தித்து போராட்டத்தை பிளவுபடுத்தி நசுக்க தான். அப்படி அவருடைய எண்ணங்களுக்கு தூணாக நின்றவர் தான் வைகுண்டத்திற்கு ராசாவாக இருந்து கொண்டு மினரல் வியாபாரம் செய்பவர். அவருக்கும் அவருடைய கதிரியக்க மண் கடத்தல் தொழிலில் மீனவர்களினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு கணக்கு தீர்க்க வேண்டிய ஆத்திரமும் இருந்ததால் நாரதரோடு சாதி அடிப்படையில் சேர்ந்து கொண்டு அவர்களுடைய சாதி சார்ந்த பிரமுகர்களை பார்த்து அணுமின் நிலைய போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தனர். அப்படி சமீபத்தில் மாட்டியவர்களில் ஒருவர் தான் நம்ம பால பிரசாபதி அடிகளார்.


இப்ப அந்த பார்ப்பனிய கும்பல் பால பிரசாபதி அடிகளை கொண்டு அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரிடையே பிளவு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். பார்ப்பனிய ஊடகங்கள் என்னன்னா ஏதோ இந்த எதிர்ப்பு போராட்டம் கிருத்துவ மத சாமியார்களால் தான் தூண்டி விடப்படுகிறது என்ற அளவில் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறது . அதுமட்டுமல்லாமல் ஊடகங்களிலும் இணையதளங்களிலும் போலி பெயர்களில் ஆட்களை உலவ விட்டு அணுமின் நிலையத்திற்கு ஆதரவான கருத்துக்களை உண்மைகளை மறைத்து பரப்புவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் அணுமின் நிலையத்திற்கு அமோக வரவேற்பு இருக்கிறது போன்று காட்டுதல் என பலவிதமான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்ற கும்பலுக்கு, பால பிரசாபதி அடிகள் வரப்பிரசாதம் போன்று கிடைத்து இருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் பார்ப்பனிய கும்பல் கடத்தல் குண்டரான ராசனோடு சேர்ந்து கொண்டு காய்களை வேகமாக நகர்த்தி வருகிறது. ஏற்கனவே மற்றொரு கார்பரேட் ரவுடி கும்பலான டாடாவுக்கு எதிராக வெற்றிகரமாக மக்களை திசை திருப்பி விட்டு கதிரியக்க மணல் கடத்தலில் தனிக்காட்டு ராசாவாக திகழும் வைகுண்டத்தோட குடி கெடுக்கும் நுணுக்கங்களும் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பார்ப்பனிய கும்பல் கருதுகிறது.

இந்த கொடுமையெல்லாம் போதாதென்று டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் என்ற வெண்ணெய் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படுவது தொடங்கினால் அந்த பகுதி வளர்ச்சி ஏற்பட்டு மீன்களின் தேவை அதிகரிக்கும் அது மீனவர்களின் வாழ்வை மேம்படுத்தும் என்று டுபாகூர் விட்டது. அப்படின்னா அப்ப சென்னையில் மீன் பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏன் இன்னும் மோசமான சூழலில் வசிக்கின்றனர் ?, ஏன் அவர்கள் மல்டி பில்லியனர்களாக முடியவில்லை ? ஏன் அவர்களுக்கெல்லாம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்களோ ? என்றெல்லாம் நீங்கள் அந்த சூனியம் பிடித்தவனிடம் தான் கேட்க வேண்டும்.


சரி இந்திய அரசாங்கம் ஏன் இந்த அணுமின் உலையை இயக்குவதில் அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது. மக்களுடைய விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டியது தானே என்று நமக்கு கேள்வி எழும்பலாம். அங்க தான் அரசின் அதிகார மட்டத்தில் கோலேச்சி கொண்டிருக்கும் பார்ப்பனிய கும்பல்களின் லாப கணக்குகள் இருக்கிறது. இந்த அணுமின்நிலைய ஒப்பந்தத்தை அமுல்படுத்தத் வேண்டி பல்வேறு காலகட்டங்களிலும் ருசிய மாபியாக்களின் மூலம் பெருமளவு பணம் பார்ப்பனிய கும்பல்களின் கைகளுக்கு கைமாறி இருக்கிறது. இந்த நிலையில் அணுமின் நிலையம் இயக்கப்பட தடைகள் ஏற்படும் பட்சத்தில் அது ருசிய மாபியாக்களின் பகையை சந்திக்க நேரிடும் என்ற பயம் பார்ப்பனிய கும்பல்களிடம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. தற்போது உலகத்தில் காணப்படும் மாபியா கும்பல்களில் ருசிய மாபியா கும்பல்கள் உலகின் எந்த பகுதியிலும் எந்த மட்டத்திலும் ஊடுருவ கூடிய வல்லமை படைத்த ஓன்று. அதுமட்டுமல்லாமல் உலகின் பெரும் தொழில் நிறுவனங்களில் கணிசமான அளவில் முதலீடுகளை ருசிய மாபியா கும்பல்கள் கொண்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தத்தின் மூலம் சம்பாதித்த பார்ப்பனிய கும்பல் ஆரம்பத்தில் எழுந்த எதிர்ப்புகளை பற்றி அவ்வளவாக அலட்டி கொள்ளவில்லை . விடயத்தை ஆற போட்டால் எல்லாம் சரியாக போய் விடும் என தப்பு கணக்கு போட்டு விட்டார்கள். ஆனால் அணு மின் நிலையத்திற்கு எதிராக மக்களிடையே எழுந்த எதிர்ப்பை கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் . இப்ப அவர்களுடைய நிலைமை ஆப்பசைத்த குரங்கு கதையை போல் ஆகி விட்டது. சேது சமுத்திர திட்டத்தை போல் இதை இனி ஒத்தி வைக்கவோ இல்லை ரத்து செய்யவோ நினைத்தால் அது ருசிய மாபியா கும்பல்களுடைய கோபத்தை தூண்டி விட்டது போலாகி விடும். அதனால் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்ததாலோ என்னவோ எப்படியேனும் இந்த போராட்டத்தை நசுக்கி விட வேண்டும் என்று ஒட்டு மொத்த பார்ப்பனிய கும்பல்களும் வரிந்து கட்டி கொண்டு களத்தில் நிற்கிறது. அந்த கும்பல்களுக்கு சால்ரா தட்டவென்று நம்மிலேயும் ஒரு கும்பல் கிளம்பி விட்டதை நினைத்தால் தான் கொடுமையாக இருக்கிறது.


இந்த கட்டுரைய படித்து முடிக்கும் போது அது என்னய்யா அணுமின் நிலைய போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் அரசு இயந்திரம் என்று ஆரம்பித்து பார்ப்பனிய கும்பலில் கொண்டு போய் விட்டு இருக்கிறாய் என்று தோழர்கள் கேட்கலாம். இந்தியாவில் அரசாங்கம் என்பதே மாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பார்ப்பனியர்களுக்காக பார்ப்பனியர்களால் நடாத்தப்படுவது தானே . இந்தியாவில் அரசாங்கத்தையும் பார்ப்பனிய கும்பலையும் பிரித்து பார்ப்பது என்பது உடலிலிருந்து உயிரை பிரிப்பதை போன்றது.

2 comments:

koodal bala said...

அரசும் அணு உலையால் பெரும் ஆதாயமடைந்து வரும் சில தனி நபர்களும் இது போன்ற சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் ... சூழ்ச்சிகள் விரைவில் தவிடு பொடியாகிவிடும் .....மக்கள் ஒற்றுமை வெல்லும் .

இருதயம் said...

ஐயா நீங்கள் எல்லாம் நன்றாக கட்டுரை எழுதுகிறீர்கள். ஆனால் மக்களை வதைக்கும் திட்டமாய் இருந்தால் எப்படி மக்களாட்சி முறையில் அரசாங்கம் செயல் பட முடியும். யோசித்து பாருங்கள். அரசு சாதிய ரீதியில் பிரிக்கிறது என்று சொல்லி , நீங்களே சாதியை பற்றி பேசுகிறீர்கள். உங்கள் கட்டுரை ஒரு குறிப்பிட்ட சாதியை சாடுவதை சொன்னேன். டாக்டர் சீனிவாசன் அவர்களை " வெண்ணை " என்று அருமையாக வர்ணித்துள்ள உங்களுக்கு பதிவுலகின் சிறிய நாகரீகம் கூட இல்லை என்றால் நீங்கள் கோபப்பட மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஆதாரம் இல்லாத சாதி வெறியை தூண்டுவது போன்ற தங்களின் பதிவுக்கு எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்ளுகிறேன்

Post a Comment