Tuesday, September 17, 2013

தமிழகத்து தலைவலி விசைக்கு எதிராக எழும் சாதி புழுதி - பகுதி ரெண்டுகொஞ்ச நாட்களாக நம்மா பச்சையம்மாவால் தலையெடுக்கப்பட்ட நம்ம தலிவாவிற்கு எதிராக திரைப்பட துறையில் சாதீய சதி வலைகள் திரைமறைவில் இருந்து பின்னப்படுகிறதாம். அந்த வேலையை முன்னின்று வழி நடத்துபவர் நம்ம நடிகர் திலகத்தின் மூத்த பிள்ளையாண்டானாம். அதென்னையா நம்ம திலகத்தை தன்னோட படத்தில் நடிக்க வைத்து அப்பா அப்பா என உருகி பெருமைபட்டுக் கொண்டவர் தானே நம்ம அணில் பாய் என்று யாராவது கேட்கலாம் . அங்கேதான் மொத்த விசயமும் அடங்கி இருக்கிறது . நம்ம நடிகர் திலகத்தின் மூத்தபிள்ளையாண்டான் முன்பொருமுறை அணிலோட தகப்பனை நெருங்கி தங்களுடைய குடும்ப நிறுவனத்திற்காக அணில் ஒரு படத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தாராம்... ஆனால் அணிலின் தந்தையோ இன்று போய் நாளை வா என்ற கணக்கில் நம்ம திலகத்தின் மூத்த பிள்ளையாண்டானை காயடித்து விட்டாராம். அந்த கோபத்துடன், பச்சையம்மாவின் உடன் பிறவா தோழி தோட்டத்தை விட்டு வெளியேறியபோது அந்த இடத்தை நிரப்ப  நம்ம அணிலின் குடும்பம் நடத்திய வேலைகளால் கடுப்பேறிய தோழியின் சொந்தக்காரங்களுடைய எரிச்சலும் சேர்ந்து கொண்டு  அணிலின் வாலில் நெருப்பை வைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறதாம்

அந்த திட்டத்தின் ஒரு கட்டமாக அணிலுக்கு எதிராக, திலகத்தின் சின்ன புள்ளையாண்டானின் சம்பந்தி மூலம் உருவான கொங்கு நாட்டு வழி தொடர்புகள் மூலம் குள்ள நடிகர் களமிறக்கப்பட்டு இருக்கிறாராம்.. ஏற்கனவே  ஆண்ட சாதி நெஞ்சோடு அலையும் குள்ள நடிகரின் தந்தையான மார்க்கண்டேய நடிகருக்கு  சட்டம் ஒரு இருட்டறையை தந்த அணிலின் தந்தையின் மீது உள்ள பழைய கோவம் அப்படியே இருக்க , மார்க்கண்டேயரும் அணிலை பழிவாங்குவதன் மூலம் அணிலின் தந்தையை காயடிக்கலாம் என்ற எண்ணத்தோடு திட்டத்திற்கு முழு ஆசியும் வழங்கி இருக்கிறாராம். அந்த திட்டத்தின்படி குள்ள நடிகருக்கு பின்பு திலகத்தின் பேரன் தான் திரையுலகில் முன்னணி நடிகராக முன்னிறுத்தப்படவேண்டும் என்பது தானாம் . அதை செயல்படுத்தும் விதமாக திலகத்தின் மூத்த பிள்ளையாண்டான் அணிலின் ரசிகர் மன்றத்தில் உள்ள தங்கள் சாதியை சேர்ந்த ரசிகர்களை அணிலின் ரசிகர் மன்றத்தில் இருந்து வெளியேறுமாறு நடராச தொடர்புகள் மூலம் வோலை அனுப்பி வருகிறாராம். இது மட்டுமல்லாமல் தென் தமிழகத்தில் நடந்த பல சாதி கலவரங்களை தந்து படத்தின் மூலம் தூண்டி விட்ட அந்த விசுவரூப அம்பியிடம் இருந்தும் அணிலை ஓரங்கட்டுவதற்கான திட்டங்களுக்கு முழு ஆசியும் உண்டாம்.  ஆக மொத்தத்தில் அணிலை திண்ணையில் இருந்தும் தூர தூக்கி எறியாமல்  விடமாட்டோம் என்று அந்த கும்பல் கங்கணம் கட்டி கொண்டு செயல்படுவதாக தெரிகிறது . திலகத்தோட புள்ளையாண்டான்கள் ஏற்கனவே அந்த விசுவரூப அம்பியால் வழித்து எடுக்கப்பட்ட பிறகு சாதிமாச்சரியங்களை தாண்டி திலகத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்து விடுவார்கள் போல் தான் தெரிகிறது

எது எப்படியோ அரசல் புரசலாக தமிழக திரைப்படத்துறையில் இருந்த சாதிவெறி இனி வரும் காலங்களில் வீரியமாக வெடிக்க கூடிய வாய்ப்புகள் ரொம்ப பிரகாசமாக இருக்கிறது  

Wednesday, September 4, 2013

ஞானம் பிறந்த அரச மரத்தின் அடியில் புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு

புத்தர் தான் பார்ப்பனியத்தால் விநாயகனாக மறு உருவாக்கம் செய்யப்பட்டார் .... அப்படியா எப்படி ...

புத்தர்களிடையே புத்தரின் ஆன்மா யானையின் உருவத்தில் மறைந்தது என்ற நம்பிக்கை உண்டென்று படித்து இருக்கிறேன் .....
கலிங்கம் என்பது புத்தரின் வார்த்தைகளால் மனம் மாறிய அசோகன் ஞானத்தை பெற்ற இடம்  என்பது குறிப்பிடத்தக்கது .... கலிங்கத்தில் இருந்து தான் புத்த மதம் தன வேர்களையும் கிளைகளையும் உலகமெங்கும் பரப்பியது  
கலிங்கத்தில் இருந்து விநாயகர் வாதாபிக்கு இறக்குமதி செய்யப்பட்டார் என்பது கலிங்கத்தில் இறந்து வாதாபியை அடைந்த புத்தத்தின் வரலாற்றை மறைத்து அதற்கு பதிலாக வேறொன்றை நிறுவ பார்ப்பனியம் பரப்பி விட்ட கட்டுக்கதைகளில் ஓன்று
புத்த மதத்ததையும் புத்தரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களையும் வேட்டையாடிய பார்ப்பனியம் புத்த மதம் விட்டு சென்ற காலி இடத்தை நிரப்ப யானை உருவத்தில் கடவுளை உருவாக்கி பார்ப்பனியத்தில் ஐக்கியமாக்கியது ..... அப்படியாக எஞ்சி இருந்த புத்த மதத்தினரும் பார்ப்பனியத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்
இன்றளவிலும் விநாயகன் அரச மரத்தடியில் தான் இருப்பார் ..... புத்தர் ஞானம் பெற்ற இடமாக  கருதப்படும் அரசமரத்தடி என்பதையும் இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும் .....

புத்தர் ஞானம் பெற்றதிலும் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது .... அரச மரம் மற்ற எல்லா மரங்களை விட அதிக அளவு ஆக்சிசனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஓன்று.... மூளைக்கு ஆக்சன் அதிகம் சென்றால் மூளை சுறு சுறுப்பு அடையும் .... அப்படி சுறு சுறுப்பு அடைந்தால் தெளிவாக சிந்திக்க இயலும் ... அப்படி தான் புத்தர் ஞானத்தை அடைந்து இருப்பார் .....

தனிமையில் அதிக அளவு அக்சினை அவரது மூளை பயன்படுத்தியதால் அவர் பெற்ற ஞானம் ஏனையவர்களை விட பன்மடங்காயிருந்தது.... ஒருவேளை புத்தரும் கும்பலோடு கும்பலாக கலந்து இருந்தால் புத்தர் ஞானம் பெற்று இருப்பாரா என்பது சந்தேகத்திற்கு இடமானது தான் ......
கேள்விகளுக்கான விடைதேடி அரசமரத்திற்கு அமைதியாக சென்றவன்   ஞானம் பெற்று புத்தனானான்..... கும்பலாய் சென்றவர்கள் வன்மத்தை எடுத்து கொண்டு நடமாடும் வெடிகுண்டுகளாய்.............

புத்தன் பிறந்த இடம் இப்படித்தான் கன்னி வெடிகுண்டுகள் புதைக்கப்பட்ட இடமாகி போனது

Friday, August 16, 2013

யாழ்ப்பாணத்தில் இருந்து புலம் பெயர்ந்த சாதி வெறி பிடித்த ஓநாய்களுக்கு ஒரு கடிதம்

தமிழ் இளைஞர்களும் இளைஞிகளும் இலங்கை ராணுவத்தில் சேர்ந்து விட்டதாக இணையத்திலும் பொது வெளியிலும் ஒப்பாரி வைக்கும் புலம் பெயர்ந்தும் சாதி வெறியோடு அலையும் ஓநாய்களும் அந்த ஓநாய்களின் வாயில் இழுந்து விழும் இறைச்சி துண்டுகளுக்காக அவிழ்ந்து விழுகிற கோவணத்தையும் தாங்கி பிடித்து கொண்டு ஓடும் தமிழ் வோசிய வியாவாரிகளும்... ஏனோ ராசபட்சேவோடு ரகசிய அறையில் சரசம் நடத்தும் அவர்களது சாதி குஞ்சிகளை கண்டித்து அறிக்கை விடுவதில்லை ..............

யுத்த காலத்தில் பிரபாகரன் ஆள் பற்றாக்குறையால் அவதிப்பட்டபோது தங்களுடைய உறவுகளை சிங்களவன் பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் பத்திரமாக இருக்க சொல்லி விட்டு எதிர்காலத்தில் ராசபட்சே வடிவமைக்கும் தேசத்தில் முதலீடு செய்ய புலிகளுக்காக என்று கூவி புலம் பெயர் நாடுகளில் துட்டு சேர்த்த கயவாளிகள் தான் இவர்கள்.

தலைவன் பிராபாகரனின் கோரிக்கையை தட்டாமல் ஏற்று தங்களது தனிப்பட்ட கவலைகளை குழி தோண்டி புதைத்து விட்டு தங்களுடைய தலைவன் பின்னாடியே சென்ற அவர்களுக்காக எதுவும் செய்யாமல் புலம் பெயர்ந்த நாடுகளில் குத்தாட்டம் கும்மாளம் என தங்களது பண்பாட்டு லீலைகளை அவிழ்த்து போட்டு ஆடி விட்டு இன்று எல்லாத்தையும் இழந்து நிற்கும் மக்களை பார்த்து ஐயோ துரோகிகள் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லை ....

உங்களோடு சேர்ந்து வாழ்வதை விட ராசபட்சேவின் படையில் சேர்வது எவ்வளவோ மேல் ......

சாதி வெறியோடு செயல்படும் புலம் பெயர் மற்றும் யாழ்ப்பாணத்து அன்னக்காவடிகளை போல் பிராபகரனும் இருந்து தன் சாதிக்காரன் என்று சரத் பென்சேகாவுடன் ரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருந்தால் இன்று பிரபாகரனும் அவரை பின்பற்றிய மக்களும் சுகபோகங்களோடு இருந்திருப்பார் ......

உங்களது சுயநலன்களுக்காக ஒரு போராட்டத்தையே காவு கொடுத்து விட்டு என்னடா பேச்சு உங்களுக்கு .......

உங்களை போன்ற சாதி மற்றும் காவி வெறி பிடித்த ஈத்தரைகளோடு சேர்ந்து வாழ்வதை விட புத்தர்களாக சிங்களவனோடு சேர்ந்து வாழ்வது எவ்வளவோ மேல் .....

பிரபாகரனும் நான் கூறியதை தான் நினைத்து இருப்பார்