கொஞ்ச நாட்களாக நம்மா
பச்சையம்மாவால் தலையெடுக்கப்பட்ட நம்ம தலிவாவிற்கு எதிராக திரைப்பட துறையில் சாதீய
சதி வலைகள் திரைமறைவில் இருந்து பின்னப்படுகிறதாம். அந்த வேலையை முன்னின்று வழி
நடத்துபவர் நம்ம நடிகர் திலகத்தின் மூத்த பிள்ளையாண்டானாம். அதென்னையா நம்ம
திலகத்தை தன்னோட படத்தில் நடிக்க வைத்து அப்பா அப்பா என உருகி பெருமைபட்டுக் கொண்டவர்
தானே நம்ம அணில் பாய் என்று யாராவது கேட்கலாம் . அங்கேதான் மொத்த விசயமும் அடங்கி
இருக்கிறது . நம்ம நடிகர் திலகத்தின் மூத்தபிள்ளையாண்டான் முன்பொருமுறை அணிலோட
தகப்பனை நெருங்கி தங்களுடைய குடும்ப நிறுவனத்திற்காக அணில் ஒரு படத்தில் நடித்து
கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தாராம்... ஆனால் அணிலின் தந்தையோ இன்று
போய் நாளை வா என்ற கணக்கில் நம்ம திலகத்தின் மூத்த பிள்ளையாண்டானை காயடித்து
விட்டாராம். அந்த கோபத்துடன், பச்சையம்மாவின் உடன் பிறவா தோழி தோட்டத்தை விட்டு
வெளியேறியபோது அந்த இடத்தை நிரப்ப நம்ம
அணிலின் குடும்பம் நடத்திய வேலைகளால் கடுப்பேறிய தோழியின் சொந்தக்காரங்களுடைய
எரிச்சலும் சேர்ந்து கொண்டு அணிலின் வாலில்
நெருப்பை வைக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறதாம்
அந்த திட்டத்தின் ஒரு
கட்டமாக அணிலுக்கு எதிராக, திலகத்தின் சின்ன புள்ளையாண்டானின் சம்பந்தி மூலம்
உருவான கொங்கு நாட்டு வழி தொடர்புகள் மூலம் குள்ள நடிகர் களமிறக்கப்பட்டு இருக்கிறாராம்..
ஏற்கனவே ஆண்ட சாதி நெஞ்சோடு அலையும் குள்ள
நடிகரின் தந்தையான மார்க்கண்டேய நடிகருக்கு சட்டம் ஒரு இருட்டறையை தந்த அணிலின் தந்தையின் மீது
உள்ள பழைய கோவம் அப்படியே இருக்க , மார்க்கண்டேயரும் அணிலை பழிவாங்குவதன் மூலம்
அணிலின் தந்தையை காயடிக்கலாம் என்ற எண்ணத்தோடு திட்டத்திற்கு முழு ஆசியும் வழங்கி
இருக்கிறாராம். அந்த திட்டத்தின்படி குள்ள நடிகருக்கு பின்பு திலகத்தின் பேரன்
தான் திரையுலகில் முன்னணி நடிகராக முன்னிறுத்தப்படவேண்டும் என்பது தானாம் . அதை
செயல்படுத்தும் விதமாக திலகத்தின் மூத்த பிள்ளையாண்டான் அணிலின் ரசிகர் மன்றத்தில்
உள்ள தங்கள் சாதியை சேர்ந்த ரசிகர்களை அணிலின் ரசிகர் மன்றத்தில் இருந்து
வெளியேறுமாறு நடராச தொடர்புகள் மூலம் வோலை அனுப்பி வருகிறாராம். இது மட்டுமல்லாமல்
தென் தமிழகத்தில் நடந்த பல சாதி கலவரங்களை தந்து படத்தின் மூலம் தூண்டி விட்ட அந்த
விசுவரூப அம்பியிடம் இருந்தும் அணிலை ஓரங்கட்டுவதற்கான திட்டங்களுக்கு முழு
ஆசியும் உண்டாம். ஆக மொத்தத்தில் அணிலை
திண்ணையில் இருந்தும் தூர தூக்கி எறியாமல் விடமாட்டோம் என்று அந்த கும்பல் கங்கணம் கட்டி
கொண்டு செயல்படுவதாக தெரிகிறது . திலகத்தோட புள்ளையாண்டான்கள் ஏற்கனவே அந்த விசுவரூப அம்பியால் வழித்து எடுக்கப்பட்ட பிறகு சாதிமாச்சரியங்களை தாண்டி திலகத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்து விடுவார்கள் போல் தான் தெரிகிறது
எது எப்படியோ அரசல்
புரசலாக தமிழக திரைப்படத்துறையில் இருந்த சாதிவெறி இனி வரும் காலங்களில் வீரியமாக
வெடிக்க கூடிய வாய்ப்புகள் ரொம்ப பிரகாசமாக இருக்கிறது
No comments:
Post a Comment