Wednesday, September 4, 2013

ஞானம் பிறந்த அரச மரத்தின் அடியில் புதைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டு

புத்தர் தான் பார்ப்பனியத்தால் விநாயகனாக மறு உருவாக்கம் செய்யப்பட்டார் .... அப்படியா எப்படி ...

புத்தர்களிடையே புத்தரின் ஆன்மா யானையின் உருவத்தில் மறைந்தது என்ற நம்பிக்கை உண்டென்று படித்து இருக்கிறேன் .....
கலிங்கம் என்பது புத்தரின் வார்த்தைகளால் மனம் மாறிய அசோகன் ஞானத்தை பெற்ற இடம்  என்பது குறிப்பிடத்தக்கது .... கலிங்கத்தில் இருந்து தான் புத்த மதம் தன வேர்களையும் கிளைகளையும் உலகமெங்கும் பரப்பியது  
கலிங்கத்தில் இருந்து விநாயகர் வாதாபிக்கு இறக்குமதி செய்யப்பட்டார் என்பது கலிங்கத்தில் இறந்து வாதாபியை அடைந்த புத்தத்தின் வரலாற்றை மறைத்து அதற்கு பதிலாக வேறொன்றை நிறுவ பார்ப்பனியம் பரப்பி விட்ட கட்டுக்கதைகளில் ஓன்று
புத்த மதத்ததையும் புத்தரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களையும் வேட்டையாடிய பார்ப்பனியம் புத்த மதம் விட்டு சென்ற காலி இடத்தை நிரப்ப யானை உருவத்தில் கடவுளை உருவாக்கி பார்ப்பனியத்தில் ஐக்கியமாக்கியது ..... அப்படியாக எஞ்சி இருந்த புத்த மதத்தினரும் பார்ப்பனியத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்
இன்றளவிலும் விநாயகன் அரச மரத்தடியில் தான் இருப்பார் ..... புத்தர் ஞானம் பெற்ற இடமாக  கருதப்படும் அரசமரத்தடி என்பதையும் இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும் .....

புத்தர் ஞானம் பெற்றதிலும் ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது .... அரச மரம் மற்ற எல்லா மரங்களை விட அதிக அளவு ஆக்சிசனை அதிக அளவில் உற்பத்தி செய்யும் ஓன்று.... மூளைக்கு ஆக்சன் அதிகம் சென்றால் மூளை சுறு சுறுப்பு அடையும் .... அப்படி சுறு சுறுப்பு அடைந்தால் தெளிவாக சிந்திக்க இயலும் ... அப்படி தான் புத்தர் ஞானத்தை அடைந்து இருப்பார் .....

தனிமையில் அதிக அளவு அக்சினை அவரது மூளை பயன்படுத்தியதால் அவர் பெற்ற ஞானம் ஏனையவர்களை விட பன்மடங்காயிருந்தது.... ஒருவேளை புத்தரும் கும்பலோடு கும்பலாக கலந்து இருந்தால் புத்தர் ஞானம் பெற்று இருப்பாரா என்பது சந்தேகத்திற்கு இடமானது தான் ......
கேள்விகளுக்கான விடைதேடி அரசமரத்திற்கு அமைதியாக சென்றவன்   ஞானம் பெற்று புத்தனானான்..... கும்பலாய் சென்றவர்கள் வன்மத்தை எடுத்து கொண்டு நடமாடும் வெடிகுண்டுகளாய்.............

புத்தன் பிறந்த இடம் இப்படித்தான் கன்னி வெடிகுண்டுகள் புதைக்கப்பட்ட இடமாகி போனது

No comments:

Post a Comment