Friday, August 26, 2011

மூன்று அப்பாவிகளும் - இரக்கமற்ற இந்திய வல்லாதிக்கமும் – பின்னணியில் செயல்படும் வல்லூறுகளும்
போலியாக முனையப்பெற்ற குற்ற சாட்டுகளால் தூக்கு கயிற்றின் முன்னால் கட்டி இழுத்து சென்று நிறுத்தப்படுவதற்கு இந்திய வல்லாதிக்கத்தினாலும் அதன் பார்ப்பனிய ஏவலாளிகளினாலும் எந்நேரமும் தயாராக வைத்திருக்கப்பட்டிருக்கும் அந்த மூன்று உயிர்களையும் நினைக்கும் போதே குலை நடுங்குகிறது. அதுவும் எல்லா இளைஞர்களையும் போல் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்திருக்க வேண்டிய மூன்று உயிர்கள் பத்தொன்பது வருடங்களாக காலத்தை பகுத்தறிய முடியாத நிலையில் இருட்டு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நினைத்தால் மனம் பதறுகிறது. ஏன்..... இவ்வளவு நாளாக அந்த மூன்று உயிர்களை பற்றிய கவலை இன்றி நம்முடைய வாழ்வு நம்முடைய அரசியல் என்று அலைந்திருந்தையும் பற்றி எண்ணினால் கண்ணாடியின் முன்பு நம்முடைய முகத்தை பார்ப்பதற்கே அருவருப்பாயிருக்கிறது.


காலம் கடந்த விழிப்புணர்வாக இருந்தாலும் கடைசி தருணத்திலாவது எப்பாடு பட்டேனும் இந்த அநீதியை நிறுத்தியாக வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனது உணர்வும் இப்போவாவது தட்டி எழுப்பப்பட வேண்டும். ஏன் இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த இந்திய வல்லாதிக்கமும் அதன் ஏவலாட்களும் தற்போது மட்டும் இவ்வளவு முனைப்பாக செயல்படுகிறார்கள் என்று எனக்கு நெருங்கிய வட்டாரங்களோடு பேசிய போது நான் அறிந்த விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


நம்மில் பலர் இதை ஏதோ சோனியா இட்ட உத்தரவு என்றே நம்புகிறோம். அதையும் தாண்டி இந்திய வல்லாதிக்கத்தில் உள்ள கார்பரேட் முதலாளிகளும், பார்ப்பனிய கும்பல்களுக்கும் இதில் உள்ள தொடர்புகளை பற்றி நாம் எண்ணி பார்ப்பதில்லை. ஆனால் உண்மை என்னன்னா இலங்கை அரசின் நிர்பந்தத்தின் பேரில் தான் இந்த தூக்கு தண்டனையை பற்றிய கோப்பு தூசி தட்டப்பட்டு இருக்கிறது என்பது தான். அதை செயல்படுத்த இலங்கை அரசுக்கு உதவியாக இந்தியாவில் களம் இறங்கியிருப்பது இந்தியாவின் தரகு முதலாளிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளடங்கிய பார்ப்பனிய கும்பல். இலங்கை அரசுக்கு அதற்கெதிராக சர்வதேச அளவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அதிகமாகவே உள்ளது.. இந்த நிலையில் என்ன செய்வது என்று இலங்கை அரசு கையை பிசைந்து கொண்டிருந்த வேளையில் அதற்கு இந்தியாவில் உள்ள பார்ப்பனிய அதிகார வர்க்கத்தினால் கொடுக்கப்பட்ட ஆலோசனையும், அதை செயற்படுத்துவதற்காக அவர்கள் எடுத்து கொள்ளுகிற முயற்சிகளின் ஒரு பகுதி தான், மூன்று அப்பாவிகளின் மரண தண்டனைக்கு நாள் குறிப்பதில் இந்திய வல்லாதிக்கம் காட்டுகிற அவசரம். ..... குறிப்பாக “சந்து” போன்ற பார்ப்பனிய ஊடகங்களும், ஒரு தொலை தொடர்பு துறையை சார்ந்த நிறுவனமும் கச்சை கட்டி கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறது.


இதனால் இலங்கை அரசுக்கு என்ன கிடைத்து விட போகிறது என்று நீங்கள் கேட்காலாம்..... அதனுடைய நோக்கமே அதற்கெதிராக தமிழர்களால் எடுக்கப்படும் போராட்ட முனைப்பை எப்படியாவது திசை திருப்ப வேண்டும், அதே போன்று தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் திசை திருப்பி வலுவிழக்க செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள பார்ப்பனிய கும்பல்களின் திட்டமோ, இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதின் மூலம் தமிழகத்தில் மக்களிடையே சமீபகாலமாக எழும்பி இருக்கும் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என்பது தான். இந்தியாவின் தரகு முதலாளிகளுக்கோ இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசின் அரசு இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம், இலங்கையில் அவர்கள் தொழில் தொடங்க அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்தி தரும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில். இந்திய வல்லாதிக்கத்தை கட்டுபடுத்தும் ஆதிக்க வர்க்கங்களும் இலங்கையில் இந்திய தொழில் நிறுவனங்கள் கால் வைக்க வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் அங்கு தளம் அமைத்து கொண்டிருக்கும் சீனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம் என்ற நோக்கோடு செயல்படுகிறது.


இந்த தூக்கு தண்டனையை நிறை வேற்றுவதின் மூலம் போராட்ட களத்தில் இருக்கும் தமிழர்களின் தன்னனம்பிக்கையை உடைத்து விடலாம் என்றே இந்திய அளவிலும் , தமிழக அளவிலும் உள்ள பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. சோனியாவை சுற்றி நின்று இயக்குவதும் இந்த பார்ப்பனிய கும்பல் என்பது நாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நம்மில் பல தோழர்கள் செயாவிடம் சென்று கோரிக்கை விடுத்தால் அந்த மூன்று உயிர்களையும் மீட்டு விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர். உண்மை என்னன்னா..... இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் செயலாலிதா வேறு கணக்கு போட்டு கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஈழ தமிழர்களுடைய பிரச்சினையில் கலைஞருடைய செயற்பாடுகளால் அவர் மீது வெறுப்பில் இருக்கும் தமிழர்களிடம் இந்த தூக்கு தண்டனைக்கும் கலைஞர் தான் காரணம். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அவர் நினைத்திருந்தால் சோனியாவிடமும் , மன்மோகனிடமும் பேசி இந்த தூக்கு தண்டனையை ரத்து பண்ண வைத்திருக்கு முடியும், ஆனால் துரோகி கருணாநிதி அதை செய்ய தவறி விட்டார் என்று தமிழர்களிடையே கலைஞரை பற்றி பரப்புரை செய்யலாம் என்பதும், அதன் மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதனையே ஒரு பெரிய ஆயுதமாக திமுகவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்பதும், செயாவின் சுற்றி இருந்து அவருக்கு அறிவுரை கொடுத்து கொண்டிருக்கும் பார்ப்பனிய கும்பலின் திட்டம்.


இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு உதவுவதன் மூலம் செயாவிற்கும் சோனியாவிற்கும் இடையே ஒரு பாலத்தை ஏற்படுத்தி விடாலாம் என்றே அந்த பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. அவ்வாறு நடப்பதின் மூலம் திமுகவை மத்தியில் கூட்டணியில் இருந்து தூக்கி எரிந்து விட்டு, திமுகவிற்கு எதிரான செயல்பாடுகளை தமிழகத்தில் இன்னும் தீவிரபடுத்தலாம் என்றும் அந்த கூட்டம் நம்புகிறது.


இப்படி பட்ட சூழல் தான் இங்கே தற்போது நிலவி கொண்டிருக்கிறது . ஆகவே இந்த மரண தண்டனையை எதிர்த்து போராட்டத்தில் குதித்து இருக்கும் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களுக்கு எதிராக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மிக பெரிய கன்னி விரித்து வைக்க பட்டு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இங்கு இருக்கிறவர்களின் காலில் விழுந்து காலத்தை வீணாக்குவதை விட இந்த போராட்டத்தை அணைத்து தமிழ் ஆர்வலர்களையும், கடந்த கால மன கசப்புகளை மறந்து விட்டு ஒன்றிணைத்து ஒரே அணியில் இருந்து மிக பெரிய அளவில் கொண்டு செல்வதோடு , சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்கள் ஈழ தமிழர் பிரச்சினையோடு இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற கொடுமைக்காகவும் அந்தந்த நாடுகளில் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம். அதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்த வழியில் செல்வதே இப்போதைக்கு ஒரு நல்ல முடிவை தர கூடிய சூழ்நிலையை உருவாக்கும். என்பதே நான் கேள்விப்பட்ட விடயங்களில் இருந்து அறிந்து கொண்டது.


அதேபோன்று திமுக தலைமையும் இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி களத்தில் இப்போதாவது இறங்குவது நல்லது. அது கடந்த காலத்தில் திமுக செய்த ஒரு சில வரலாற்று பிழைகளுக்கு , நிவாரணமாக அமையும்.


இப்போதைய நிலவரப்படி அந்த கும்பல் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அது தான் எமக்கு ஆழ்ந்த கவலையை தருகிறது.. என்னுடைய சொந்த ரத்தங்கள் அல்லவா அவர்கள் . உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தமிழனுக்கு எல்லா பக்கமும் இருந்து இடி. வந்தாரை எல்லாம் வாழ வைத்த தமிழன் கடைசியில் அவனுடைய சுதந்திரத்திற்காகவும், எதிராக இழைக்கப்படுகிற அநீதிகளுக்காவும் சொந்த மண்ணிலேயே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான் என்பது வேதனையான உண்மை


கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் ..... ஒரு வேளை கடவுள் என்பவர் எங்கேயாவது இருந்து அவரிடம் சென்று விண்ணப்பித்தால் இந்த தூக்கு தண்டனையை நிறுத்தி விட முடியாதா என்ற பரிதவிப்புடன் தான் அலைகிறேன். ம்ம்ம்ம் தற்போதைய நிலைமையில் பகுத்தறிவை விட அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற அநீதியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே பெரிய விடயமாக எனக்கு தோன்றுகிறது

Thursday, August 25, 2011

பாய்சங் பூட்டியா – இந்திய கால்பந்திற்கு கிடைத்த அரிய முத்து - ஓய்வு
இந்த பெயர் கால்பந்தை ரசிக்கும் இந்திய ரசிகர்களிடையே நன்கு அறிமுகமான பெயர் தான். இந்தியாவில் கால்பந்து காணமல் போய் கொண்டிருந்த தருணத்தில் வாராது வந்த மாமணியாய் இந்திய கால்பந்துலகிற்கு கிடைத்த அரிய முத்து. திசம்பர் 15, 1976 ஆம் ஆண்டு சிக்கிமில் ஒரு விவசாயியின் மகனாய் பிறந்து இந்திய கால்பந்தை தனது கால்களால் பண்படுத்தியவர். பெற்றோருக்கு இவர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லாவிட்டாலும் இவரது மாமாவான கர்மபா பூட்டியா இவரை ஊக்குவித்தார்.


கேரளாவை சேர்ந்த மற்றுமொரு கால்பந்து ஜாம்பவானான ஐ.எம். விசயனால் “இந்திய கால்பந்திற்கு கடவுளால் (இருக்கிறாரா இல்லையா என்பது பகுத்தறியப்படவேண்டிய விடயம்) அனுப்பி வைக்கப்பட்ட அரும் பரிசு” என்று புகழாரம் சூட்டப்பட்ட்வர். சக வீரர்களாலும் கால்பந்து ரசிகர்களாலும் சின்ன சகோதரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட ஒருவர். அவருடைய பதினாறாவது வயதில் 1992 ஆம் ஆண்டில் நடந்த சுப்ரதோ கோப்பைக்கான போட்டியில் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டதே அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. இந்திய அணியின் முன்னால் கால்பந்து வலை தடுப்பாளர் பாசுகர் கங்குலியால் அடையாளம் காணப்பட்டு இந்தியாவின் முன்னணி கால்பந்து குழுவான கிழக்கு வங்காளத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். மிகவும் சிறிய வயதில் தொழில் முறை கால்பந்து விளையாட்டு வீரராக மாறிய இந்தியர் என்பது குறுப்பிடதக்கது.


கிட்டத்தட்ட பதினாறு வருடங்களாக இந்திய கால்பந்தின் முன்கள வீரராக சிறப்பாக செயல்பட்டவர். இந்திய கால்பந்தை களங்களில் தன்னுடைய தலையிலும், தோள்களிலும் கால்களிலும் தூக்கி சுமந்தவர் என்று சொன்னால் மிகையாகாது..... உடனே யாரவது ஏன் அவரால கால்பந்தை கையில தூக்கி சுமக்க முடியலையா என்று கேட்கலாம், களத்தில் கால்பந்தை கையில எல்லாம் தூக்கி கொண்டு ஓட முடியாதுங்கோ. இவரோட பலமே நேர்த்தியாக பந்தை வேகமாக கடத்தி செல்வதும், குறி தவறாமல் மொத்த பலத்தையும் கால்களில் திரட்டி பந்தை வலையை நோக்கி உதைப்பதும் தான். களத்தில் துரு துருவென பயமறியா இளங்கன்றை போல் அங்குமிங்கும் ஓடியாடி அவரை கட்டுபடுத்த முயலும் எதிரணியினருக்கு தண்ணி காட்டுவதில் பாய்ச்சங்குக்கு நிகர் பாய்சங் தான். இவரை தங்களது வழி காட்டியாக எடுத்து கொண்டு வடகிழக்கு பகுதிகளில் இருந்தும் கால்பந்து பிரபலமாகவுள்ள வங்காளம், கேரளா, கோவா , பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்தும் மிக சிறந்த இளம் வீரர்கள் இன்று இந்திய கால்பந்தை உலக அளவில் இட்டு செல்ல அணி வகுத்து நிற்கின்றனர். கிட்டத்தட்ட சுணங்கி போய் கிடந்த இந்திய கால்பந்துக்கு புத்துயிரூட்டியவர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.


109 சர்வதேச போட்டிகளில் ஆடியதன் மூலம் இந்தியாவுக்காக அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர்...... ஒரு போட்டியில் ஒரு கால்பந்து வீரர் சராசரியாக பதினோரு மைல் கற்கள் ஓடி இருக்க வேண்டும் என்பது குறுப்பிட தக்கது, அப்படி பார்த்தால் பூட்டிய சராசரியாக சர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகளில் மட்டும் கிட்டதட்ட 11,000 மைல் கற்கள் ஓடி இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் ஆடும் நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடைய வாழ்நாள் முழுமைக்குமே அவ்வளவு தூரம் கடந்திருப்பார்களா என்பது சந்தேகமே...... என்ற பெருமையையும், 43 கோல்களை அடித்ததன் மூலம் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் தனதுடையதாக்கி இருக்கிறார். அதோடு கூட 1995 ஆம் ஆண்டில் நேரு கோப்பையில் உசுபெக்கிசுதானுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய பதினொன்பதாம் வயதில் அடித்த கோலின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் இவருடையதே. ஐரோப்பிய கால்பந்து குழு ஒன்றிற்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இங்கிலாந்தின் பர்ரி(Fury FC) கால்பந்து குழுவிற்காக விளையாட அழைக்கப்பட்டதின் மூலம் பெற்றார். 2002 ஆம் ஆண்டில் மறுபடியும் இந்தியாவின் மோகன் பகான் குழுமத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்பு மலேசியாவின் கால்பந்து குழுவிற்காக விளையாட சென்றார். பின்பு 2006 ஆம் ஆண்டில் மறுபடியும் மோகன் பகான் கால்பந்து அணிக்காக் விளையாட ஒப்பந்தமானார். அந்த கால் கட்டத்தில் ரெண்டு முறைக்கும் மேல் சிறந்த இந்திய கால்பந்து வீரராக தெரிவு செய்யபட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனார், மற்றுமொருவரான கேரளாவின் மந்திர கால் ஐ.எம். விசயன் இந்த விருதை மூன்று முறை பெற்றவர்.


2009 ஆம் ஆண்டு பூட்டியாவுக்கும் மோகன் பகான் கால்பந்து குழும நிர்வாகிகளுக்கும், பூட்டியாவின் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பை விமர்சித்ததாக எழுந்த பிரச்சினையில், பூட்டியா தான் இனிமேல் மோகன் பகான் அணிக்காக விளயாடமாட்டேன் என்று அறிவித்ததோடல்லாமல் தான் எங்கிருந்து கால்பந்து விளையாட்டை அரம்பித்தாரோ அந்த அணியான கிழக்கு வங்காளத்திற்காக விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அதோடு அந்த அணிக்கு விளையாடுவதுடன் தன்னுடைய கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தோ, பின்பு ஒருங்கிணைந்த சிக்கிம் கால்பந்து அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார். இவர் அந்த அணியின் உரிமையாளர் என்பது குறுப்பிடத்தக்கது. தற்போது சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை அறிவித்ததுடன் இந்திய கால்பந்தின் ஒரு சகாப்தம் தன்னுடைய பக்கத்தை மூடி கொண்டது.


கடந்த ஐந்து வருடங்களாக காலில் அடிக்கடி ஏற்படும் காயம் காரணமாக அவரால் முழு பங்களிப்பையும் இந்திய கால்பந்து அணிக்கு தரமுடியாமல் அவதிப்பட்டார். அதே நேரத்தில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று இருக்க வேண்டும் என்றும், அவர் அவ்வாறு செய்ய தவறியதால் இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கும் இளம் வீரர்களுடைய வாய்ப்பை பறித்து விட்டார் என்றும் சில முன்னாள் இந்திய கால்பந்து வீரர்களும், பயிற்சியாளர்களுடைய கூற்று..


திபெத் மக்களுக்கு எதிரான அடக்குமுறையை காரணம் காட்டி தன்னுடைய எதிர்ப்பை உலக மக்களுக்கு தெரியப்படுத்த ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதியை இந்தியாவில் சுமந்து ஓட கிடைத்த வாய்ப்பை மறுத்தார். அப்போது அவர் “திபெத்தியர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன், தான் வன்முறையை எதிர்ப்பவன் அத்துடன் திபெத்திய மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவர்களோடு நிற்க வேண்டும் என்றும் எண்ணுகிறேன்” என்று துணிச்சலாக பேசியவர். ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய விடயம். நாம என்னடான்னா ஈழத்தில் தமிழர்கள் அடக்கு முறைகளுக்கு சிங்க இன வெறி பிடித்த அரசினால் உள்ளாக்கப்படும் போது, இலங்கைக்கு விளையாட சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துதல்களை சொல்லி கொண்டும், அந்த விளையாட்டினை தொலைகாட்சியில் பார்த்து ரசித்து கொண்டும் இருந்தோம்.


கடந்த 2010 ஆண்டில் “பாய்சங் கால்பந்து பள்ளி” என்ற அமைப்பை ச்பானிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கார்லோசு குயிரோசுடன் இணைத்து தொடங்கி இருக்கிறார். நைக் என்ற விளையாட்டு உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற் குழுமம் இதனை பொருளாதார ரீதியாக ஆதரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இவரோடு கையெழுத்திட்டுள்ளது. அவருடைய இமுயற்சி இந்தியாவிலுள்ள கால்பந்து ஆர்வலர்களாலும் பல்வேறு முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களாலும் பாராட்ட பெற்றது.


ம்ம்ம்ம்ம்ம் கால்பந்து மட்டும் கோவண கயிறு போடுறவங்க விளையாடுகிற விளையாட்டாக இருந்திருந்தால் இந்திய கால்பந்தோட நிலைமை கொஞ்சம் வேறு மாதிரியாக தான் இருந்திருக்கும். என்ன பண்ண அவங்க தான் கோவண கயிறை உடம்பில சுற்றி கொண்டு அலைந்தாலும்... அடுத்தவனை தொட்டால் தீட்டாயிடும் என்று சொல்லுரவா அல்லவா . அப்படி இருக்கும்போது எப்படி அவர்களுடைய குழந்தைகளை, ஒருவரோடு ஒருவர் உருண்டு புரண்டு அடித்து கொண்டு விளையாடும் கால்பந்தை விளையாட அனுமதிப்பாங்க. அது கூட ஒருவகையில் இந்திய கால்பந்தின் தூரதிருச்டமே. அவங்க மட்டும் அதிக அளவில் கால்பந்து விளையாடி இருந்தால் இந்நேரம் கால்பந்து இந்திய தொழிலதிபர்களின் செல்ல குழந்தையாக இருந்திருக்கும். பூட்டியாவும் கோவண கயிறு கட்டுகிறவங்க குடும்பத்தில் பிறந்து இருந்தால் பூட்டியாவுக்கும் பாரத ரத்னா விருது தர வேண்டும் என்ற ஊளைகள் விண்ணை தொட்டு இருக்கும். அவரோட பிறப்பில் ஏற்பட்ட சதி, அவரால கோவண கயிறோடு பிறக்க முடியலை.


எது எப்படி இருந்தாலும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் தனது மனைவி திப்னிசு மற்றும் அவர்களுக்கு பிறந்த ரெட்டை குழந்தைகளுடன் தமது சமயத்தை கழிக்க செல்லும் அவரை வாழ்த்தி வழி அனுப்பி வைப்போம்.

Tuesday, August 23, 2011

திமுகவினருக்கு ஓர் எச்சரிக்கை


கடந்த திமுக ஆட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்ற சாட்டுகள் இருந்தாலும், குறுப்பிட தக்க அளவில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதில் கடந்த திமுக அரசின் செயல்பாடு அதற்கு முந்திய காலங்களை விட பல மடங்கு அதிகம். குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 அவசர சிகிட்சை ஊர்தி அறிமுகம், குடிசைகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், சுய உதவி மகளிர் குழு போன்ற திட்டங்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றவை என்பதை எதிர்கட்சியினர் கூட மறுக்க முடியாது. கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்று தெரிந்த உடன் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனிய ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்டவை தான் 2G ஸ்பெக்ட்ரமும், ஈழத்துக்கு கலைஞர் எதிரி போன்ற விடயங்கள். ஸ்பெக்ட்ரம் விடயத்தை ஊதி பெரிதாக்க அவர்கள் ரெட்டை சகோதர்களில் இளையவரை பயன்படுத்தி கொண்டார்கள்.


சகோதரர்களின் அம்மா மற்றும் இளையவரின் மனைவி பார்ப்பனர் என்பதால் இளையவரை தங்களுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பார்ப்பனிய கும்பலுக்கு எளிதாக போய் விட்டது . ரெட்டை சகோதர்களை பார்பனிய கும்பல் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர எடுத்த ஆயுதம் தான் பார்ப்பனிய கும்பலின் ஆஸ்தான ஊடகமான “சந்து” வின் பங்குகள் சகோதர்களுக்கு வழங்கப்படும் என்ற போலியான உறுதிமொழிகள். இங்கு இளைய சகோதரரின் மனைவி “சந்து” ஊடக குழுமத்தை சேர்ந்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல் “சந்து” குழுமத்தில் குடும்ப பூசல் கட்டுக்கடங்காமல் போய் விட்டது என்றும் அந்த குழுமம் கைமாற போகிறது என்ற பொய்யான தகவல்களை வெளி உலகில் உலவ விட்டதன் மூலம் ரெட்டை சகோதர்களை எளிதில் நம்ப வைத்து விட்டனர். சந்தடி சாக்கில் பார்ப்பனிய கும்பல் ரெட்டை சகோதரர்களை பெரியவரின் குடும்பத்தை நோக்கியே திருப்பி விட்டார்கள். அதன் தொடர்ச்சி தான் பெரியவர் குடும்பத்தை ரெட்டை சகோதரர்கள் பிளவு படுத்த எடுத்த முயற்சிகள். ஆனால் ரொம்ப முக்கியமான விடயம் என்னன்னா பார்ப்பனிய கும்பல் அவர்கள் நோக்கத்தை அடைந்த பிறகு ஏற உதவிய ஏணியை எட்டி உதைத்து விட்டார்கள் என்பது தான். ரெட்டை சகோதரர்கள் யாருடன் சேர்ந்து கொண்டு வளர்த்து விட்டவரின் மீதே பாய்ந்தார்களோ அவர்கள் தான் இப்போது இளைய சகோதரருடைய கோவணத்தையும் கழட்ட வேலை செய்தவர்கள்


இப்போது அதே பார்ப்பனிய கும்பல் மற்றுமொரு வேலையில் இறங்கி உள்ளது கடந்த திமுக ஆட்சியை மட்டம் தட்டுவதற்கென்றே பல்வேறு கட்சி, மதம் மற்றும் சாதிகளின் போலி அடையாளங்களோடு ஆட்கள் உள்ளிறக்கப்பட்டுள்ளர்களாம்....... அந்த மாதிரி வேலைகளை ஊடங்கங்கள், இணையதளங்கள் என பல்வேறு தளங்களிலும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறதாம் அந்த பார்ப்பனிய கும்பல்.. அதவாது ஊடங்கங்களிலும் இணையதளங்களிலும் போலி அடையாளங்களோடு வந்து திமுக ஆட்சியில் நடந்த சில தவறுகளை பெரிது படுத்துவதும், அதே அரசு செய்த நல்ல திட்டங்களில் குறை கண்டுபிடிப்பதும், இல்லையென்றால் அத்திட்டங்களை பற்றிய மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் தானாம். அப்படி பரப்புரை செய்வதன் மூலம் கலைஞர் மீது கட்சி, சாதி, மத வேறுபாடில்லாமல் பொதுமக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்பது போன்ற சூழலை செயற்கையாக உருவாக்குவதே அவர்களது திட்டம். திரும்பவும் திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களது முதுகெலும்புகளை ஸ்டாலின் முறித்து விடுவார் என்ற பயம் அவர்களிடம் இப்போதெல்லாம் மிக அதிகமாகவே இருக்கிறதாம். ஆகவே அந்த பார்ப்பனிய கும்பல் இந்திய அளவில் அவங்களோட கூட்டங்களை கட்சி வேறுபாடில்லாமல் சேர்த்து கொண்டு திமுக வை ஒழித்து கட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெரும் வட இந்தியாவை சேர்ந்த பார்ப்பனியர்கள் தமிழக கேடரில் சேர வேண்டுமென்று அறிவுறுத்தபடுகிறார்களாம். அதை செவ்வனே செய்து முடிப்பதற்கென திட்டங்கள் டெல்லியில் தீட்டபடுகிறது என்று ஒரு தகவல் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து வந்து சேர்ந்தது ......


திமுகவிற்கு வெளியே உள்ள எதிரிகளை கூட சமாளித்து விடலாம் ஆனால் புல்லுருவிகளும், கருப்பு ஆடுகளும் இருப்பது தான் மோசமான விடயம். கடந்த ஆட்சியில் திமுக தவறுகள் இழைத்திருக்கலாம்.... ஆனால் அந்த தவறுகள் கட்டு கோப்பானது என்று கருதப்பட்ட ஒரு அமைப்பு அழிவதற்கு காரணமாக இருந்து விட கூடாது. ஏனென்றால் இப்போது வருங்கால முதலமைச்சர் என்று சொல்லி கொள்ளுகிறவன்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு எழவும் கிடையாது. அப்படி பட்டவன்களிடம் எதிர்கால தமிழகம் போய் சிக்கி விட கூடாது. அது மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையாகி விட கூடாது. திமுகவினரும் கழகத்தில் உள்ள மூட்டை பூச்சிகளை அங்கேயே வைத்து நசுக்குவதை விட தூர எடுத்து போட்டு எரித்து விடுவது நலம். அது திமுக என்ற வீடு கொளுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட எடுத்து கொள்ளும் செயலாகவே இருக்கும். தமிழக மக்களும் எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உலவி கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் எதிர்கால முதல்வர்கள் என்ற தோரணையில் உலவும் நச்சுக்கள் அகப்பட்டு அதை அவர்கள் விழுங்கி விடாமல் பார்ப்பது ரொம்ப முக்கியம்.

Monday, August 22, 2011

யார் இந்த அண்ணாவின் காதலர்கள் ?கொஞ்ச நாளா ஊழலுக்கு எதிரான போர் என்று பத்திரிக்கை ஊடங்கங்களால் விளம்பரப்படுத்தப்படும் அண்ணா கசாரே என்ற காந்தியவாதியின் ... அவரு திரைமறைவில் என்னவென்ன சத்திய பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறாரோ அது அவரை சுற்றி இருக்கும் காற்றுக்கே வெளிச்சம்...... உண்ணாவிரத போராட்டமும் அதற்கு பின்னால் நிற்கும் வருங்கால இளைய பாரதத்தின் ஊற்று கண் எது என்றும் பார்க்க வேண்டியது அவசியம்.

அண்ணாவின் காதலர்கள் வேறு யாருமல்ல சாதீய வெறியும், வர்க்க வெறியும் சிறுவயதிலேயே ஊட்டி வளர்க்கப்படும் உயர்தட்டு வர்க்கத்தினர் தான் ... இந்தியா டைம்ச் போன்ற பத்திரிகைகள் சந்தடி சாக்கில் கசாரேவை தமிழ்நாட்டை காக்க வந்த ரெண்டாவது அண்ணா என்றும் இந்திக்கு எதிரான போர் தமிழகத்தில் செத்து விட்டது என்றும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிரான போரே ஒட்டு மொத்த தமிழகத்தின் இதய துடிப்பு என்றும் பக்கம் பக்கமாக வர்ணித்து தள்ளின. கூடவே தமிழர்கள் இப்போது இந்தியாவின் காவலர்களாக மாறி கொண்டிருக்கிறார்கள் என்றும், சந்தடி சாக்கில் தமிழர்களிடையே மொழிபற்று, இன உணர்வு எல்லாம் செத்து விட்டது என்றும் செய்தி வெளியிட்டு சுய இன்பம் கண்டு கொண்டது.


தமிழகத்தில் இந்த அண்ணாதேக்கு சொம்பு அடித்து கொண்டிருக்கிறவர்களை கவனித்தால் தெரியும்...... அண்ணாவிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வரும் மகேந்திர சௌத்தரி (அடையாளத்தோடு தான் அலைகிறானுங்க) என்ற இளைஞர் வேறு யாருமல்ல மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அண்ணா கசாரேவின் கிராமத்தை சேர்ந்தவராம்... அதே மகாராட்டிர மாநிலத்தில் கையிர்லாஞ்சி என்ற ஊரில் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பமே சாதி வெறியர்களின் ஆதிக்க வெறிக்கு பலிகடாவானது..... அதில் உச்ச கட்ட கொடுமை என்னன்னா காவல் துறையில் சேர்ந்து சேர்ந்து நாட்டை காக்க வேண்டும் என்ற கனவுகளோடு படித்து கொண்டிருந்த இருந்த பெண்ணின் கற்பு ஆதிக்க வெறி பிடித்த ஒரு கிராமத்தின் ஒட்டு மொத்த ஆண்களால் சூறையாடப்படும் போது இந்த நவீன அண்ணாவின் காதலர்கள் பப்களில் உட்கார்ந்து கொண்டு காலாமின் 2020 இந்தியாவை பற்றி கனவு கொண்டு இருந்தவர்களின் நீட்சி......

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது பெற்றோர் குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய உயர் ரக கைபேசியும், மடிக்கணினியும் தான் அவர்களது ஆயுதங்கள்...... திறமையை பற்றி பக்கம் பக்கமாக பேசும் இவர்கள் அடுத்தவர்களின் உரிமையை பறிப்பதை பற்றியோ இல்லை முதுகில் கிடக்கும் கோவண கயிறை தடவி பார்த்து வேலை கொடுக்கும் சாதி வெறியர்களை பற்றி கவலை படுவதில்லை...... ஊழலின் ஊற்று கண்களாக இருக்கும் ரிலையன்சு, வேதாந்தா , டாட்டா போன்ற நிறுவனங்களில் தங்களை இணைத்து கொள்வதை வாழ்க்கையின் லட்சியமாக கொண்டவர்கள்... ஊழல் என்பதே இந்த அரைவேக்காட்டுகளுக்கு சுவிஸ் பாங்கில் உள்ள பணத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது....... பூர்வீக குடிமக்களின் நிலங்கள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதராங்கள் கொள்ளை போவதும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாதியின் பெயரால் சமூகத்தில் மறுக்கப்படும் உரிமைகளும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும்.. இவர்களுக்கு சமூகத்தில் புரையோடிப்போன ஊழலாக தெரிவதில்லை..... அதை ஊழல் என்று சொன்னால் போராட்டத்தை அவர்களுடைய வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்...... அவனுங்களின் பெற்றோர்கள் தானே அந்த சமூக ஊழல்களின் தூண்கள்..... பூர்வீக குடிமக்களுக்காக போராடுபவர்களை மாவோயிச்ட் , தேசத்துரோகி என்றும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை திறமையின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறும் இந்த எதிர்கால கொள்ளையர்கள் கல்வியை விலை பேசும் நிறுவனங்களையோ அவர்களுக்கு தரகர்களாக செயல்படும் மமாக்களையோ என்றுமெ எதிர்ப்பதில்லை...அவர்களுடைய தயவில் தானே இந்த எதிர்கால கொள்ளையர்கள் வருங்கால இந்தியாவை பற்றி கனவு காண்கிறார்கள்


ஊழலை பொருத்தவரை அது இவர்களுக்கு 2010-ல் இருந்து தான் ஆரம்பிக்கிறது........ அதற்கு முன்பு சதுர்வேதிகளும், சர்மாக்களும், மேத்தாக்களும், குப்தாக்களும், மகேசுவரிகளும் (நம்ம ஊரு பொம்பளை பேருன்னு நினைச்சுகிடாதீங்க சாமியோவ் அதுவும்.... ஒரு சாதி பெயர் தான்), மேனன்களும், நாயர்களும், கோயங்காக்களும், செய்த ஊழல்கள் எல்லாம் கண்களுக்கு தெரிவதில்லை..... .நவீன கொள்ளையர்களான அம்பானி, அகர்வால், மிட்டல்கள் தான் இவர்களது ஆதர்ச நாயகர்கள். 2G ஊழல்னா இவர்களுக்கு ராசாக்களும் மாறன்களும் தான் தெரிவார்கள். அவர்களை உருவாக்கி கொள்ளையடித்த டாடா குழும தாதாக்கள், அம்பானி குழும அயோக்கியன்கள் எல்லாம் இவர்களது .கடவுள்கள்...... பின்ன அவர்களது கொள்ளை கூடங்களில் அடியாள் வேலை கிடைக்க, அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டைய போட்ட புராண புருசர்களின் கோவில்களில் வேண்டி கொண்டிருக்கும் கும்பலை சேர்ந்தது தான் இந்த நவீன அண்ணாவின் காதலர்கள் ...... அவங்க ரோல் மாடல்களை போலவே இவர்கள் ஊழல், ஊழல் என்று ஊளையிடுவார்களே தவிர ஊழல் செய்தவர்கள், அதில் ஈடுபடுபவர்கள் என்று அனைத்து மட்டங்களிலும் உள்ள காவாலி பயலுங்களோட பேரை வரிசைபடுத்தி சொல்லுங்கடான்னா சொல்ல மாட்டானுங்க..... அப்படி வெளியிட்டால் அவனுங்களோட பெற்றோர்கள் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.


ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்று சொல்லும் அம்பி பயலுங்க ஊழல் செய்து கட்டிய தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து இனி சேர மாட்டோம் என்று சொல்லுவான்களா...... எல்லா மாணவர்களும் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக வீதியில் இறங்கியபோது கல்லூரி கழிவறைகளில் பதுங்கி கொண்டவனுங்க தானே.... எப்படி அதை எதிர்ப்பானுங்க. திறமை திறமை என்று கூப்பாடு போடும் இவனுன்களோட முந்தைய தலை முறையினர் வெள்ளைக்காரன் மெக்காலே கல்வி முறையில் நிர்ணயித்த பாஸ் மார்க்கான 60 விழுக்காட்டை பெற முடியாமல் வெள்ளைகாரனுங்க காலில் விழுந்து அதை 35 விழுக்காடாக மாற்றின மொள்ளமாறி தனத்தை என்னவென்று சொல்ல போறாங்க ...... சாதிய ஏற்ற தாழ்வுகளால் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள் 35 விழுக்காட்டை 16 விழுக்காடாக குறைக்க சொல்லவில்லயே....... கல்வியிலும் வேலையிலும் அவர்களுக்கு வேண்டிய பிரதிநித்துவத்தை தானே கேட்கிறார்கள். அதை தரும் இட ஒதுக்கீட்டை எவ்வளவு கேவலமாக பேசுவான்களோ அவ்வளவு கேவலமாக பேசுவானுங்க. அதுல பெரிய கொடுமை என்னன்னா இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறிய கயவாளி பசங்களும் இந்த கும்பலோடு சேர்ந்து இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வன்மத்திற்கு சால்ரா அடிப்பது தான்.

இந்த ஊழல் எதிர்ப்பாளிகள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் இந்த கும்பல் எந்த அளவுக்கு ஒரு கச்சடா பாலிட்டன் கும்பல் என்பதற்கு அந்த கும்பலில் சங்கமித்திருக்கும் கோமான்களை உற்று கவனித்தாலே புரியும்...... அலுவலகத்தில் வேலை இல்லை என்றால் கூட வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு ஆபாச படங்களையும் காணொளிகளையும் அனுப்பும் நவீன கண்ணன்கள் இந்த கூட்டத்தில் அதிகமே உண்டு..... போராட்டத்திற்கு போகிறோமோ இல்லையோ தங்களுடைய அழகை அகில இந்திய தொலைகாட்சிகளில் காண்பிக்கும் தருணங்களை தவற விடாத இளம் பெண்டிர்களும் உண்டு. இதில் அவுட் சோர்சிங் என்ற நவீன சுரண்டல் துறையில் வேலை பார்க்கும் அடிமைகளும் உண்டு. அங்க அவனுங்க பண்ணுகிற பிராடு தனத்தை பற்றி வாயையே திறக்க மாட்டானுங்க. வாயை தொறந்தால் வேலை போய் விடும் என்கிற பயம் தான். தங்களுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களை எந்த அளவிற்கு சுரண்ட முடியுமோ அந்த அளவிற்கு சுரண்டி விட்டு ஊழலை பற்றி மணிக்கணக்காக பேசும் நீதி அரசர்கள் உண்டு......


ஊழலில் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும் காவியுடை சாமியார்களிடம் மதி மயங்கி கிடக்கும் முழு கிறுக்குகளும்உண்டு, தமிழக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை அடைய வேண்டி பள்ளி கூட சான்றிதழில் பிறந்த தேதியை பிளேடால் கீறி மாற்றி அமைத்த கிருஷ்ணையர் போன்ற பக்கிரி பிளேடையர்களின் பேரன்களும், வட்டிக்கு விட்டு அடுத்தவனை சுரண்டுவதையே தொழிலாக கொண்ட மார்வாடிகளும் (விதி விலக்குகள் உண்டு) நாங்க ஆண்ட பரம்பரையாக்கும் (கோவணம் மட்டுமே கட்ட அனுமதிக்கப்பட்ட முன்னோர்களின் வாரிசுகள் தான்) என்று சொல்லி கொண்டு தனக்கு கீழ எவனை போட்டு அவன் மேல உட்கார்ந்து சவாரி செய்யலாம் என்று அலையும் அர்த்தநாரிகளும் இந்த ஊளைகளின் முதுகெலும்புகள். அதோடு ஆண் பாலியல் தொழிலாளர்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் உயர்தட்டு மங்கைகளும் உண்டு(பின்ன எல்லாரும் இருக்கும் போது இவங்க இல்லாமல் போகலாமா).


இந்த ப்ராடுகளின் முதல் நோக்கமே ஊழலுக்கு எதிர்ப்பான போர் என்று ஆரம்பித்து சந்தடி சாக்கில் இட ஒதுக்கீட்டால் தான் இந்தியாவில் ஊழல் ஆரம்பித்தது என்று ஒடுக்கப்பட்டவர்களின் அடிமடியான இட ஒதுக்கீட்டில் கைவைப்பது தான்... பின்ன இருக்காதா .... வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டு போகும் போது சொந்த மனைவிமார்களையே கூட்டி கொடுத்து காபி எச்டேட்டுகளையும், தொழிற்சாலைகளையும் வளைத்து போட்ட கூட்டத்தின் வழிதோன்றல்களுக்கு அடிமடியில் கைவைப்பது பழக்கமான விடயமாக தானே இருக்கும். ரெண்டாவது பெரிய மனத்தாங்கல் என்னடான்னா இவ்வளவு நாளும் எந்த தங்குதடையில்லாமல் பங்கு போட எவனும் போட்டிக்கு வராமல பண்ணி கொண்டிருந்த ஊழல்களில், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விட்டால் அவர்களும் பங்கு கேட்க ஆரம்பித்து விடுவார்களோ, விட்டார்களே என்பது தான்.


ஊழலை ஒழிப்பது தவிர்க்க முடியாத முக்கியமான ஓன்று தான். ஆனால் இவர்கள் பேசும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் சமூக ஊழலை ஒழிக்க போராடினாலே இந்த ஊழலையும் கட்டுப்படுத்தி விடலாம். அடுத்தவனை எப்படி சொரண்டுவது என்று பால பாடம் எடுக்கும் சமூகத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளும், ஆதிக்க வெறியோடு எழும்பும் வன்முறைகளும் தானே ஊழலின் ஆதி பெற்றோர்கள். நான் ஆள பிறந்தவன் என்கிற எண்ணமே நான் சுரண்ட பிறந்தவன் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. எவன் எவனெல்லாம் ஆள பிறந்தவன், எங்களுக்கு மட்டும் தான் மணி அடிக்க உரிமை உண்டு என்று ஊளையிடுகிறான்களோ அவனுக தான் சுரண்டலில் முனைவர் பட்டம் பெறுகிற அளவுக்கு இருக்கிறானுங்க என்பதே கசப்பான உண்மை.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு எதிராக இயங்கும் காவி கும்பல் ?காவி கும்பல், கூடங்குளம் அணுமின்னிலையத்துக்கெதிரான கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதார போராட்டத்திற்கு மத சாயம் பூசும் விலை நடக்கிறது..... காவி கும்பலுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பணம் பட்டுவாடா செய்யும் கார்பரேட் முதலாளிகளும், அரைமண்டையங்களும் அந்த வேலையில் தீவிரமாக இருக்கானுங்க அவனுன்களோட எண்ணம் என்னன்னா கூடங்குளம் மின்நிலையம் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் அவர்களது தொழில்களை பாதிக்கலாம் என்பது தானாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடும் பாதுகாப்பும் கிடைக்க செய்வதில் அந்த கும்பலுக்கு எந்த அக்கறையும் கிடையாதாம்....... அந்த கும்பல், அதிமுக அரசு கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்படும்... அதனால் தமிழக மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று செயாவை சுற்றி இருந்து மணி அடித்து கொண்டிருக்கிறது

அதோடு கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் பிரதிநிதிகளை விலை பேசும் படலம் சரூராக நடந்து கொண்டிருக்கிறதாம்....... அதனால் தான் இந்த விடயத்தில் செயா மத்திய அரசிடம் எந்த முரண்டும் பிடிக்கவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து செய்தி வருகிறது...... ஆகையால் போராட்டக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள் .. இந்த போராட்டத்தை கிருத்தவ ஆலயங்களில் இருந்தோ கிருத்துவ மத போதகர்களை முன்னிறுத்தியோ, இல்லை இதை மீனவ மக்களின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமே முன்னெடுக்க வேண்டாம்..... ஏன் என்றால் இதை மீனவர்களுடைய பிரச்சினையாக மட்டும் தங்கள் ஊடகங்களில் பரப்புரை செய்யும் பார்ப்பனிய கும்பல், மற்ற மக்களை இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் அன்னியபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது...

ஆகவே இந்த போராட்டத்தை எல்லா மக்களையும் இணைத்த போராட்டமாக முன்னெடுக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் தோழர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஏற்படும் நன்மை தீமைகளையும் , பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பும் இழப்பீடும் பெற வேண்டிய அவசியத்தையும் பற்றிய வீழிப்புணர்வை எல்லா தரப்பு மக்களிடையேயும் பரப்புவது முக்கியமான ஒன்றாகும்...... ஏனெனில் இது மீனவர்களை மட்டும் பாதிக்கும் பிரச்சினை கிடையாது. ஒட்டு மொத்த தென் தமிழக மக்களையும் பாதிக்கும் விடயம். குறைந்த பட்சம் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நியாமான இழப்பீட்டையும், எல்லா மக்களின் பாதுகாப்பு மற்றும் அந்த பகுதியை கட்டமைப்பது சம்பந்தப்பட்ட எழுத்து வடிவிலான உறுதி மொழியையும் பெற வேண்டும் . அதே நேரத்தில் இந்த போராட்டத்தை சீர்குலைக்க நினைக்கும் பார்ப்பனிய காவி கும்பல்களை சாதி மத, கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும் ஒரே களத்தில் நின்று விரட்டி அடிக்க வேண்டும்.

உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்யவும் வேண்டாம் பேசவும் வேண்டாம் . இது கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களுக்கு நான் மறுபடியும் விடும் தாழ்மையான வேண்டுகோள்.

துறைக்கு முருக்கானவர் பற்றிய கிசு கிசு
துறைக்கு முருக்கானவர் திமுக ஆளும்கட்சியாக இருந்தபோது அவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு சில மனவருத்தத்துடன் இருந்தார் என்பது எல்லாரும் அறிந்ததே.... ஒரு கட்டத்தில் தலைமைக்கு அவருக்கும் உள்ள புரிந்துணர்வில் ஏற்பட்ட குழப்பத்தால் உருவாகிய மனக்கசப்பினால் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். ஒரு சில நேரங்களில் அவருக்கு உண்டான உச்சகட்ட வெறுப்பில் திமுகவை விட்டே வெளியேறி விடலாமா என்று கூட யோசனை செய்தவர். என்ன இப்போது இப்படி மாறி விட்டார் என்று கேட்கலாம், அது அவர் கடந்த காலத்தில் செய்த அவருடைய தவறுகளையும் எண்ணி பார்த்தாரோ என்னவோ இப்போ ஆள் ரொம்ப உற்சாகமாகி விட்டார்.... அதற்கு மற்றுமொரு காரணம் என்னன்னா கலைஞர் மீது அவருக்குள்ள பாசமும் பிடிப்பும் தானாம், கண்டவருக்கு அடிமையாக இருப்பதை விட கலைஞர் காலை சுற்றி வரும் நன்றியுள்ள நாயாக இருந்து விடுவதே மேல் என்பது தான் அவரது எண்ணமாம்..... கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை அவரோட சாதிகாரங்களை முன்னிறுத்தி வேலை செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. ஆனால் ஆள் இப்போது அப்படி கிடையாதாம், அடியோடு மாற்றம் தென்படுகிறதாம். எல்லாரையும் அரவணைத்து போகவேண்டும். பதவிக்காக உழைப்பதை விட கட்சிக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடம் மேலோங்கி நிற்கிறதாம். சாகும் போது கூட திமுக கொடியுடன் தான் சாக வேண்டும் என்பதே அவருடைய உள்ளகிடக்கையாம், அதோடு ஸ்டாலினை மனதளவில் கலைஞருக்கு அடுத்த திமுக தலைவராக ஏற்று கொண்டு விட்டாராம். அதனால் தான் என்னவோ, தளபதியை மறுபடியும் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்ற வேட்கையும் , வெறியும் அதிகரித்து விட்டதாம்..... ஆக ஆள் இப்ப பழைய முறுக்கை ஏற்றி கொண்டு வேட்டியை மடித்து கட்டி விட்டு களத்தில் பழைய பாணியில் புகுந்து ஒரு கை பார்த்து விடுவோம் என்ற மனநிலையில் இருக்கிறாராம்...... ம்ம்ம்ம் சில பேருக்கு ஆட்சியில் இருக்கும் போது தான் கழகத்தின் மீது பாசம் வருகிறது, ஆனால் சில பேர் என்னன்னா திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது தான் பொலி காளைகளாக வளம் வருகிறார்கள்...... தான் ஆசைப்பட்ட பதவி கிடைக்காததால் கழகத்தில் இருந்து கொண்டே எதிர்முகாமுக்கு தலைமையை பற்றிய செய்திகளை கடத்துவதும், தொழிலில் எதிர்முகாமில் உள்ளவர்களோடு கூட்டு போட்டு கொண்டு கொள்ளையடிப்பதும் என்று சென்று கொண்டிருக்கும் கருப்பு ஆடுகள் ஒருபுறம் இருக்கும் போது, மனதில் இருப்பதை சூழ்நிலையை பற்றி கவலைப்படமால் உள்ளதை உள்ளபடியே பேசிவிடும் வெள்ளந்தியான மனதை படைத்த சில பேர் மறுபுறம்...... சில நேரத்தில் சில மனிதர்கள் ......

காதில் விழுந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ...... நமக்கு தான் ரகசியத்தை பாதுகாக்க தெரியாதே

Saturday, August 20, 2011

யார் இந்த அண்ணாவின் பெயரை வைத்திருக்கிற அன்னகாவடி ?

கொஞ்ச நாளா எல்லா பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த ஆளோட முகமும் அவரை பற்றிய செய்திகளும் தான்..... எங்க பார்த்தாலும் வர்ற போற...... குறிப்பா கோவண கயிறை கொஞ்சம் வித்தியாசமாக உடம்புக்கு குறுக்கே போட்டு கொண்டு அலையுற கும்பலுங்க இவரை ஒரு ரெண்டாவது காந்தி, அப்பழுக்கற்ற உத்தமர், ஊழல் நாய்களுக்கு இவர் ஒரு டெர்ரியர் நாய் (இங்கிலாந்து அயர்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் வேட்டை நாய்கள்) , இந்தியாவை மீட்க வந்த ரட்சகர், பசுமை புரட்சியாளர், என்றெல்லாம் சொல்லுதுங்க. அந்த கும்பலுங்க யாரையாவது புகழனும்னா அதற்கு பின்னால் ஏதாவது காரியம் இருக்கணுமே.. அதை என்னன்னானு தெரிஞ்சுக்கிறதின் நோக்கமே இந்த பதிவை எழுத காரணம்.....வாங்க அப்படியே ஒரு சுற்று சுற்றலாம்....


இந்த கலியுக அவதாரம் பிறந்தது மகராட்டிராவில்.......... ம்ம்ம்ம்ம்ம் மகராட்டிராவை மறக்க முடியுமா சொந்த நிலத்தில் விவசாயம் செய்து சுயமரியாதையோடு வாழ்ந்தற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை ஒரு ஊரே ஓன்று கூடி அடித்தும், காவல் துறையில் சேர்ந்து ஊரை பாதுகாக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த அந்த குடும்பத்து இளம்பெண்ணை கற்பழித்தும் கொன்ற ஆதிக்க வெறியர்கள் நிறைந்த கையிர்லஞ்சி என்ற ஊரடங்கிய மாநிலம்லா எப்படி மறக்க முடியும்...... புனே அருகில் உள்ள ரலேகான் சிட்டி என்ற ஊர் தான் ...... அங்க இவரு தரிசாக வனாந்திரமாக சவூதி அரபியா மாதிரி கிடந்த பூமியை..... உடனே அப்படின்னா அங்க நிறைய எண்ணெய் கிணறுகளை தோண்டி இருக்கலாமே என்றெல்லாம் கேட்க கூடாது ....... அவருடைய அபாரமான திட்டங்களால் பசுமை சோலையாக மாற்றி புரட்சி பண்ணிட்டார்னு சொல்லுறாங்க... அதில் இருந்து இந்தியா முழுக்கா எல்லா ஊர்களிலும் இருந்து அவருக்கு அவங்க ஊரையும் வந்து பசுமை சோலையாக மாத்தணும்னு கூப்பிட்டு தொல்லை குடுக்க அரம்பிச்சுட்டாங்க...... உடனே அப்படின்னா அவரு மாநிலத்தில் உள்ள விதர்பா என்ற பிரதேசத்தில் தான் இந்தியாவிலேயே .அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்களே அது ஏன் ? ...... இவரு அங்கெல்லாம் பசுமை புரட்சியை செய்யமாட்டாரா என்று குதர்க்கமாக கேட்க கூடாது..... அதெல்லாம் சிதம்பரம் ரகசியம்........ அவரோட சொந்த ஊரை இந்தியாவிற்கே ஒரு எடுத்துகட்டான மாநிலமாக மாற்றியததற்காக..... நம்ம அரசியல்வாதி பய புள்ளைங்க அவருக்கு விருதா குடுத்து தள்ளிபுட்டாங்க..... ஆனா இப்ப கடா நல்ல வளர்ந்தவுடன் தீனி வேற இடத்தில் கிடைக்கும்ன்னு தெரிஞ்சவுடன் வளர்த்த ஆள் மேலேயே பாய ஆரம்பிச்சுட்டுது.


இந்தியாவை மீட்க வந்த பரமாத்மா என்றெல்லாம் ஒரு உயர் சாதி ரகத்தை சேர்ந்த நாய்கள் எழுப்பும் ஊளைகளால் கொஞ்ச நாளா ஊர்ல கிடக்கிற திருட்டு நாய்ங்களோட தூக்கம் கேட்டு போச்சு. என்னடா இவ்வளவு நாளும் நம்ம கூட சேர்ந்து திருடுன எச்ச கறிக்கு சண்டை போட்ட நாய்ங்க இன்னைக்கு நம்மளை பிடிச்சு குடுக்க மாநகராட்சி வண்டியில் சுத்துதுங்க என்று குழம்பி போய் இருக்கின்றனவாம்..... நாய்களை பற்றி பேசுவதை அப்பாலிக்கா வச்சிக்கலாம்... இப்ப எப்பவாது கிடைக்கிற பழைய சோறை திருடி திங்கிற சொறிநாய்களை பிடிக்க அலைகிற குப்பை வண்டிகாரன், அவங்க வூட்டை எப்படியெல்லாம் பண்படுத்தி வைத்து இருக்கிறான்னு பார்ப்போம்........


ஊர்ல அவரை எல்லாரும் கடவுள் என்கிற ரேஞ்சுக்கு உயர்த்திட்டதாலோ என்னவோ இந்த அவதார புருசன் உறைவிடமா பயன்படுத்துகிறது காவி கோவில் தானாம்..... இவரு வறட்சியாக கிடந்த இவரோட ஊருல மக்களை திரட்டி குளம் கண்மாய் போன்றவைகளை தூர்வாரியும் புதிதாக வெட்டியும் தண்ணீரை சேமித்து அவரோட ஊர்ல விளைச்சலை பெருக்கி விட்டாராம்.... இப்ப இங்க யாராவது வந்து கேட்கலாம், இதெல்லாம் அந்த பகுதிகளில் வாழ்ந்த மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூக விடுதலை போராளிகளும் பண்ணிய விடயம் தானே, இவரு என்ன பெருசா பண்ணிட்டார்.... அவங்களுக்கெல்லாம் குடுக்காத ......... இந்த ஆளுக்கு மட்டும் நம்ம ஊடகங்கள் குடுக்கிறதே ...... அங்க தான் இருக்கிறது சூட்சுமம் ...அந்த சமூக விடுதலை போராளிகள் எல்லாம் கூடவே சமூகத்தில் கிளை விட்டு பரவி கிடந்த பார்ப்பனிய நச்சு செடியின் வேரையும் அல்லவா புடுங்க எத்தனிச்சாங்க ...அவங்களுக்கெல்லாம் இலவச விளம்பரம் கொடுத்தால் அதற்கப்புறம் நம்ம நெலமை என்னாவது என்று ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பொய்யை கயிறாக திரித்து உடம்பில குறுக்கா மாட்டி கொண்டு அலையும் அம்பி பசங்க யோசித்திருப்பாங்காளா இருக்கும் ...... ஆனால் நம்ம குப்பை வண்டி காரன் அப்படி கிடையாதுல்லா காவி கலர்ல கிடக்கிற குப்பைகள் சேதாரமாகாம அவற்றை அள்ளி சுமக்கிறதில் வல்லவராச்சே அதுனால தான் இந்த அன்ன காவடிக்கு இந்தளவுக்கு மரியாதை.


இவரோட ஊர்ல இவரு பண்ணிய மற்றுமொரு புரட்சி குடிகாரர்கள் அதிகம் வாழ்ந்த ஊராக இருந்த இந்த ஊரை மாற்றி காட்டியது தான் .... எப்படின்னா மரம் வெட்டி போட சொன்ன அய்யா ராமதாசு ஊழல் செய்தால் சாட்டையால் அடிப்பேன் சொன்னாரோ அதே தண்டனையை இவரு குடிகாரர்களுக்கு குடுத்தார்... அதாவது யாரவது குடிச்சிருக்காங்க என்று தெரிந்தால் இவரு அவர்களை மரத்தில் கட்டி வைத்து சவுக்கால் பின்னி எடுத்து விடுவாராம்....... உடனே யாராவது இந்த குப்ப அள்ளுரவரு அதே தண்டனையை, 25 வயதிற்கு உட்பட்டவர்கள் குடிக்க கூடாது என்று மகாராட்டிர அரசு ஏற்படுத்திய சட்டத்திற்கு எதிராக போராடும், இவரை ஆதரிக்கும் ஆங்கில ஊடகங்களை நடுத்தெருவில் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பாரா என்றெல்லாம் குசும்பு தனமா கேள்வி கேட்க கூடாது........ அப்படி பண்ணுனா எப்படி காவி குப்பையை பாதுகாக்கும் வேலையை தங்கு தடையில்லாமல் செய்ய முடியும்...... ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு நல்லது..... ஆனா கூத்தாடிகளே ரெண்டு பட்டால் ஊரை ஆட்டைய போடுற தொழில் வெளங்காம அல்லவா போய் விடும்... இந்த குப்பை வண்டிகாரன்... அதானுங்க அந்த பசுமை புரட்சி நாயகன் சொந்த ஊர்ல கிட்டத்தட்ட சர்வதிகாரி மாதிரி தானாம்....


இந்த ஆளு பண்ணிய செயல்கள் அனைத்திலும் காவி கும்பலை கவர்ந்த செயல்னு ஒன்றை சொல்லனும்னா இவருடைய கிராமத்தில் ஊருக்கு வெளியே இருந்த ஒடுக்கப்பட்ட மக்களை சமூக தளத்தில் அவங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து அவர்களை பெயர்த்து எடுக்காமல் அவங்க இருக்கிற இடத்தில் வைத்து அவங்க எல்லாருக்கும் காவி போர்வையை போட்டு இவரு மூட முயற்சி எடுத்து கிட்ட விதம் தான் அது. அதவாது அவரு காந்தியத்தை அமுல்படுத்திய விதம் தானுங்கோ...... ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு கும்பலோடு சென்று இந்த ஆள் அம்மக்களிடம் நீங்க எல்லாம் செத்த மிருகத்தை தூக்குறீங்க, குளிக்க மாட்டேன்குறீங்க (அடப்பாவிங்களா நீங்க தானே அவங்களை அதை வற்புறுத்தி செய்ய சொல்லுறீங்க, பொதுகுளத்தில் குளிக்க விட மாட்டேங்குறீங்க என்று அதிகபிரசங்கிதனாமா கேள்வி கேட்க கூடாது), அசிங்கமா பேசுரீங்க, , சாராயம், மாமிசம் சாப்பிடுறீங்க (வேதத்தில் அம்பிங்களே செத்த குதிரை கறி, பட்டசாராயம் சாப்பிட்டதாக சொல்லப்பட்டிருக்கே... இவங்க சாப்பிட்டா தப்பா என்றெல்லாம் கேட்கப்புடாது)...... நீங்க அதையெல்லாம் செய்யுறதினால் தான் சமூகம் உங்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்றெல்லாம் இந்த அரைலூசு கதை அளப்பாராம்... பிறப்பை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட சாதியின் பெயரால் தானே ஒடுக்கப்பட்ட மக்கள் பொது நீர் நிலைகளை பயன்படுத்தக்கூடாது, மேற்சட்டை அணிய கூடாது, செருப்பு போட கூடாது, என்று அவர்கள் கொடுமைபடுத்தப்படுவது இந்த ஆளோட கண்களுக்கு தெரியவில்லை. அம்மக்கள் அசுத்தமாக இருப்பதால் தான் சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது தான் இந்த அரை வேக்காட்டின் பார்வை..... இவனைத்தான் சமூக சேவகர் என்று ஒரு கூட்டம் கொண்டாடுது.....பார்ப்பனிய ஊடங்கங்களின் ஒளியில் பல்லை காட்டி கொண்டிருக்கும் இந்த ஓநாய் அவனோட சொந்த ஊரில் .ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் டிஷ் ஆன்டெனா வைத்திருந்தற்காக கடுமையாக கண்டித்தானாம். கொடுமை என்னனா இந்த ஆளை பிரபலபடுத்தும் பார்ப்பனிய தொலைக்காட்சி ஊடகங்களின் அலைவரிசை அனைத்தையும் டிஷ் ஆன்டெனா மூலம் பெற்று தானே பார்க்க முடியும்.....அதை விடுங்க இந்த ஆளை தூக்கி சுமக்கிற அம்பி பயலுங்க 99 விழுக்காடு ருசியன் அலைவரிசை, பேசன் தொலைக்காட்சி போன்ற அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் கிளுகிளு படங்களை பார்த்த பின்பு தானே தூங்க போகிற பயலுங்க...... அப்பன்னா இந்த குப்பைகாரன் ஏன் இப்படி என்று நீங்க கேட்கலாம்...... நம்ம கிட்ட கைகட்டி வேலை பார்ப்பவன் வெளி உலகத்தை பற்றி அறிய ஆரம்பித்து, சிந்திக்கவும் தொடங்கி விட்டால் நமக்கு கிட்டிய அடிமை நம்மை எதிர்க்க ஆரம்பித்து விடுவானோ என்ற அந்த ஆளின் காந்திய பயமாக இருக்கலாம்


இந்த ஊழலை ஒழிக்க புறப்பட்ட உத்தமனின் ஊரில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதீய ஏற்ற தாழ்வுகள் என்னும் சமூக ஊழலால் இன்றளவும் சுரண்டப்படுகிறார்கள்...... உச்ச கட்ட கொடுமை என்னன்னா இவரோட ஊரை மாதிரி பிற ஊர்களை மாற்றுவதற்காக மகராட்டிர அரசாங்கத்திடம் 55 லட்சம் ரூபாயை நன்கொடையா வாங்கிய இந்த ஆள் அவங்க ஊரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் 75,000 கடனை அடைத்தற்காக விளம்பரம் தேடி கொண்ட உத்தமன்.


உலகத்தின் கண்களுக்கு முன்னால் இவரோட சொந்த ஊரை ஒரு முன்மாதிரி ஊராக மாற்றி இருக்கின்றதாக காட்சிய படுத்தினாலும்... ஊர் என்பது இவரை பொறுத்த அளவில் இவரோட சாதிகாரங்க இருக்குமிடம் மட்டும் தான்..... இந்த ஆளோட பார்வையில் ஒரு கிராமம் எப்படி இருக்கணும்னா...... காந்தி சொன்னது போல் ஒவ்வொரு கிராமமும் ஒரு மகர், ஒரு கும்கார், ஒரு சாமர், ஒரு சுனாரை உள்ளடக்கியதாக இருப்பதோடு ஒவ்வொருவரும் அவரவருக்கு சமூகத்தில் கொடுக்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் அவரவருக்கு இடப்பட்ட வேலைகளை செய்ய வேண்டுமாம், அதுவே சுய சார்புடன் கூடிய கிராமத்திற்கு நல்ல எடுத்துகாட்டாம். இப்படி காந்தி அவருடைய வாழ்நாள் முழுக்க பாதுகாத்த பார்ப்பனிய குப்பைகளை சுமந்து கொண்டு திரிகிறார், இந்த ஊழலை எதிர்க்கிறேன் பேர் வழி என்ற போர்வையில் திரியும் பார்ப்பனியத்துக்கு விளக்கு பிடிக்கும் அன்னகாவடி...... அது போதாதா காவி கும்பல் மற்றும் பார்பனிய ஊடக விபச்சாரிகள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க...... என்னவெல்லாமோ சாதனை செய்து விட்டார் என்று இந்த ஆளை புகழ்த்து தள்ளும் பார்பனிய ஊடகங்கள் இவருடைய கிராமத்தில் கடந்த 24 வருடங்களாக கூட்டுறவு சங்க தேர்தலோ, கிராம பஞ்சாயத்து தேர்தலோ நடைபெற அனுமதிக்கபடாதது பற்றி வாயே திறப்பது கிடையாது..... தேர்தல் நடந்தால் கட்சிகள் ஊருக்குள் நுழைந்து விடும் அது ஊரை பிளவுபடுத்தி விடும் என்பது தான் இவர் சொல்லும் காரணம்..... பின்ன சொந்த சாதிகாரங்க பிளவுபட்டா ஊருக்கு வெளியே இருக்கிறவனை எப்பிடி காலம் காலமா அடிமையாக வைத்திருக்க முடியும் இது தான் இந்த நடிகன் சனநாயகத்தை பேணி காக்கிற முறை..... அதனால் தான் பெரியார் சொன்னார் பேசாம வெள்ளைகாரன் கிட்டேயே அடிமையா இருந்து விடலாம் என்று ..... ஆனால் தனது தேவைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவை நாடுவதை இந்த காரிய கிறுக்கன் தவற விட்டதே கிடையாது.


எல்லாத்தையும் விடுங்க இந்திய உணவுத்துறையை கையில் வைத்திருக்கும் இந்த ஆளோட மாநிலத்துகாரனான பவாரோட உணவுத்துறை அமைச்சகத்தில் நடந்த ஊழலை பற்றியோ, சரத் பவாரின் பொண்ணு சுப்பிரியா சுலே செய்த ஊழல்கள் பற்றியோ, இல்லை...... 60 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஒரு வேளை சாப்பாட்டை கூட சரிவர உண்ண முடியாமல் உறங்க (?) போகிற இந்த நாட்டில் இந்திய உணவு சேமிப்பு கிட்டங்கிகளில் அரிசியும் கோதுமையும் பாழ்படுத்தப்பட்டதை பற்றியோ...... வாயை என்ன சூத்த கூட இந்த கோமாளி திறந்தது கிடையாது..... பின்ன அவங்க சாதிகாரனை கையும் களவுமா பிடிச்சு கொடுக்க முடியுமா ...... பட்டினி கிடக்கிறவங்களை விட சுய சாதிகாரனோட மானம் முக்கியமில்லையா.


இவனோட ஊருல இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களோட நிலைமை முன்பை விட மாறி இருக்கிறதா என்று கேட்டால்...... ஊர் ரொம்ப மாறி இருக்கு... ஆனால் எங்களோட நிலைமை இருந்த இடத்திலேயே தான் இருக்கு..... ஊரை அண்டி வாழ்வதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை என்பது தான் ஊருக்கு வெளியே தங்கியிருக்கும் அம்மக்களின் பதிலாக இருக்கிறது..... இவனை மாதிரி ஆளுங்க எப்படி ஏழைங்க சுரண்டப்படுவதற்கு எதிரா குரல் கொடுப்பனுங்க..... “மனு” எழுதி வச்ச நீதியை(?) மீறி விடும் செயலல்லாவா அது.


இந்த அன்னகாவடிக்கு பத்மசிரியில் இருந்து பத்மபூசன் என ஏகப்பட்ட விருதுகளை அள்ளி தெளிச்சிருக்கானுங்க...... இப்படி பட்ட முடிச்சவிக்கிக்கு எப்படியய்யா இவ்வளவு விருதுகள் என்று கேட்கலாம்...... இந்தியாவில் விருதுகள் அம்பிகளுக்கும் அம்பிகளை நக்கி பிழைக்கிறவன்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது தானே.... தவிர்க்க முடியாத சூழலில் தானே கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைத்திருக்கு


இப்படி பட்டவன் தான் ஊழலை எதிர்த்து போராடுகிறேன் என்று சொல்லி கொண்டு அலையுறான்.... நம்ம ஊருல அம்பி பசங்களோடு சில கேண பசங்களும் சேர்ந்து மெழுகுவர்த்தியை தூக்கி கொண்டு அலையுதுங்க.... யாரவது நம்ம ராம கோவாலனிடம் சொல்லுங்க..... கிருத்துவனுங்களோட புனித சின்னமான (ராம கோவாலனின் புது கண்டுபிடிப்பு தானுங்கோ) மெழுகுவர்த்தியை தூக்கி கொண்டு சுத்தறது கலாசார கேடாகி போயிடுமே...... இப்படியே விட்டா பாரத தாயின் புனிதம் என்னாவது....... நம்ம கோவாலன் தான் இவனுங்களுக்கு லாயக்கு

Tuesday, August 16, 2011

செல்வி காவி கும்பல்களின் தமிழகத்து முகவரா ?

இப்படி நான் ஒரு தலைப்பை போட்டவுடனே .....அதெப்படிங்க திராவிடத்தை காக்க வந்த தேவி ஆரியர்களின் தலைமையில் இயங்கும் காவி கும்பல்களுக்கு முகவராக முடியும் என்று அப்பாவி தனமாக கேட்பது புரிகிறது .... அதை விளக்க தான் இந்த பதிவு.
செல்வி. செயாவோட செயல்களை காவி கும்பல்களின் செயல்களோடு ஒப்பிட்டு பார்த்தால் காவி கும்பலில் உள்ளவர்களை விட செயாவின் பார்ப்பனிய இந்துத்துவ பற்று கொஞ்சம் தூக்கலாகவே தெரியும்..... அதை திராவிட இயக்க போர்வையில் மறைந்து கொண்டு செயல்படுத்துவதால் நம்மில் பல பேருக்கு புரிவதில்லை...... நாம தான் பெரியார் என்றைக்கு மறைந்தாரோ அன்றைக்கே சுயமரியாதையும், பகுத்தறிவையும் கழட்டி ஆணி அடித்தல்லவா மாட்டி வைத்திருக்கிறோம்.......

தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் எழுந்த சமூக புரட்சியின் விளைவாக பக்கத்து மாநிலங்கள் வரை வந்து கால் நனைத்த காவி கும்பல், தமிழகத்தில் தடம் பதிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்த காலங்களில் காவி பார்ப்பனிய கும்பலுக்கு வராது வந்த மாமணியாய் வந்து வாய்த்தவர் தான் நம்ம செல்வி...... எப்படி பகுத்தறிவை போதித்த புத்தரின் கொள்கைகளை பரப்பிய பௌத்தம், இடை நூற்றாண்டுகளில் பௌத்தத்திற்குள் தந்திரமாய் நுழைந்த பார்ப்பனிய வெறியர்களால் அலங்கோலப்படுத்தப்பட்டு கடைசியில் தென்னிந்தியாவில் இருந்து எவ்வாறு ஒழித்து கட்டப்பட்டதோ, அதே போல் தான் சாதிய ஏற்ற தாழ்வுகளால் பின்னோக்கி சென்று கொண்டிருந்த தமிழகத்தை பகுத்தறிவு கருத்துக்களால் பண்படுத்தி முன்னோக்கி இழுக்க எழுப்பட்ட இயக்கங்களில் ஒன்றான திராவிட இயக்கத்தின் வழிமாறி போன கிளைகளில் ஒன்றை கைப்பற்றி அங்கு காவி துணியை விரித்து வியாபாரம் செய்ய அனுப்பப்பட்ட முகவர்களில் ஒருவர் தான் செயா. திராவிட இயக்கத்தின் கிளைகளில் ஒன்றான அதிமுகவை (அப்படி அவங்க சொல்லிகீறாங்க) பார்ப்பனிய இந்துத்துவ மயப்படுத்தியதில் செயாவிற்கு மிகுந்த பங்கு உண்டு...... அதன் முத்திரை தான் அரசு இயந்திரத்தை ராகு காலத்திற்கு ஏற்றவாறு இயக்குவதில் கொண்டு வந்து விட்டிருக்கிறது......

அதெப்படிங்க திமுகவில் இருந்த நடிகர் சிவாசி கணேசன் திருப்பதிக்கு சென்று வந்ததற்காக “திருப்பதி கணேசா, திரும்பி போ” என்ற கோசங்களை எழுப்பி கடைசியில் அவரை காங்கிரசில் கொண்டு போய் சேர்க்க வைத்த வீரியம் கொண்ட தொண்டர்களையுடைய திராவிட இயக்கம் இப்போது கோவில்களில் கூழ் காய்த்து கொண்டிருக்கிறது என்று கேட்கலாம்...... அதுதான் பார்ப்பனிய தந்திரம். பார்ப்பனியம் எதிரியுடன் நேருக்கு நேர் மோதி செயிக்க முடியவில்லையென்றால், எதிரியின் கூடாரத்திற்குள் தந்திரமாக நுழைந்து அதனை வலுவிழக்க செய்யும் வேலைகளை ஆரம்பித்து விடும். பார்ப்பனிய தந்திரத்தில் முதன்மையானது...... நீதிகட்சி, பெரியாரின் திராவிடர் கழகம், போன்ற இயக்கங்களால் நடத்தப்பட்ட சமூக நீதி போராட்டத்தின் விளைவாகவும், வெள்ளையின கிருத்துவ மத போதகர்களின் (இன்றைய உள்நாட்டு நவீன கிருத்துவ மதவியாபாரிகளை இங்கு கருத்தில் கொள்ள வேண்டாம்) முயற்சியாலும் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேறிய சமூகத்தினரை பார்ப்பனியமயப்படுத்துவது தான்.. சாதிய ஏற்ற தாழ்வுகளால் சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் தற்காலத்தில், எதிரியை மன்னித்து விடுவோம் என்ற போக்கில் எதிரி கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளை பற்றிய வரலாற்றை மறந்து விடுகிறோம்... அந்த வரலாற்றை வருங்கால சமுதாயத்திற்கு எடுத்துரைக்க தவறியதால் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளையோர்கள் பார்ப்பனிய சூழ்ச்சிக்கு அடிமையாகி விடுகிறார்கள். எதிரியை மன்னித்தல் நல்ல விடயம் தான்., ஆனால் நமக்கெதிரான வன்மத்தை மனத்தில் தூக்கி கொண்டு அலையும் எதிரியை மன்னித்து விடுவதும், அவர்களின் கடந்த காலத்தைய அடக்குமுறைகளை மறந்து விடுவதும், நல்ல கூர்மையான ஆப்பை செய்து அதன் மேல் உட்கார்வது போன்ற செயலுக்கு ஈடானது....

இன்றைய சமூக சூழலில் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படுகிறவர்களை ஒடுக்கிறவர்களின் முந்தய தலைமுறையினர் பார்ப்பனிய வெறியர்களால் அத்துணை ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டவர்களே. சிறந்த எடுத்துக்காட்டென்றால் மார்புசட்டை போட கூடாது என்றும், பார்ப்பனிய வெறியர்கள் வரும்போது மார்பு சீலையை விலக்கி பெண்கள் தங்களுடைய மார்பகங்களை காண்பிக்க வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்பட்ட சமூகத்தை துணையாக கொண்டு தான் கன்னியாகுமரியில் பார்ப்பனிய வெறியர்கள் மண்டைகாட்டு மதகலவரத்தை தூண்டி விட்டார்கள்...... அது மதகலவரம் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும், அது உண்மையான காரணம் கிடையாது. அதை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் வெள்ளையின கிருத்துவ மதபோதகர்களின் போராட்டத்தால் சமூக பொருளாதார நிலையில் முன்னேறி கொண்டு இருந்த இரு சமூகத்தினரை மோதவிட்டு அவர்களின் பொருளாதாரத்தை உருக்குலைக்க வேண்டும் என்ற பார்ப்பனிய சூழ்ச்சியே...

மண்டைகாட்டு கலவரத்திற்கு பின்பு அரசு இயந்திரத்தால் செய்யப்பட்ட சில நகர்வுகள் தான் பகுத்தறிவு பாசறையாக நம்பப்பட்ட அதிமுக எவ்வாறு பார்ப்பனிய எலும்புகளை பாதுகாக்கும் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட கல்லறையாக பார்ப்பனிய வெறியர்களால் மாற்றப்பட்டது நன்கு துலங்கும்....... அந்த கலவரத்தை காரணமாக வைத்து பார்ப்பனிய வெறியர்கள் அப்போதிருந்த அரசின் மூலம் குமரி மாவட்டத்தில் அரசின் அனுமதி இல்லாமல் புதியதாக எந்த கிருத்துவ தேவாலயங்களும் கட்டப்பட கூடாது என்றும் புதுப்பிக்கப்படவேண்டிய கிருத்துவ ஆலயங்கள் அரசின் முன்னனுமதியை பெற்ற பின்பே புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கட்டுபாடுகளை ஏற்படுத்தினர். அதே நேரத்தில் புதிதாக எழுப்பப்படும் இந்துமத கோவில்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது......(ஆனால் இன்றைய கிருத்துவ மதவியாபாரிகள் சட்டத்தில் இருக்கிற ஓட்டையை வைத்து அந்த கட்டுப்பாடுகளை ஓன்றுமில்லாமல் செய்து விட்டார்கள் என்பது வேறு விடயம்)..... அதன் தொடர்ச்சி தான் பாபர் மசூதி இடிப்பின் போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரசேவை இயக்கம் மும்முரமாக இயங்கியதும், அன்றைய முதலமைச்சராக இருந்த செயா கரசேவையை ஆதரித்து பேசியதும்......

பார்ப்பனிய வெறியர்கள் தங்களுக்கு சொந்தமான ஊடகங்களின் வாயிலாக செயாவை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவராக காண்பிப்பது., அவர் செய்த ஊழல் பற்றிய வழக்குகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, அவரின் இந்துத்துவ வெறியை மறைத்து சிறுபான்மையினத்தவரின் பாதுகாவலராக காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஒட்டு மொத்த மக்களின் அங்கீகாரத்தை செயாவிற்கு பெற்று தருவதன் மூலம் அதிகாரத்தை தங்கள் பிடியில் வைத்து கொள்வதற்கான செயல் திட்டங்கள்.

இந்தியாவின் சமய சார்பிண்மையை பற்றி பெருமையாக பேசும் பார்ப்பனிய ஊடகங்கள் ஏன் செயலலிதா ராகுகாலம் பார்ப்பது, சுதந்திர தினத்தன்று அரசு இயந்திரத்தை ஒரு குறுப்பிட்ட மதகோவில்களில் மட்டும் சேவகம் செய்ய பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுத்துவதை பற்றி வாய் திறப்பதில்லை..... .அதெல்லாம் ஒரு மதச்சார்பு செயல்கள் கிடையாதா. அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்...... அதற்கு நிறைய காரணங்கள் உண்டு ...... வட இந்தியாவில் பார்ப்பனிய வெறியர்களின் ஆதிக்கம் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது கிட்ட தட்ட எல்லா பெரிய கட்சிகளின் தலைமைகளும் அவர்களது பிடியில் தான்....... ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலைமை வேறு. தமிழகத்தில் பல்வேறு தளங்களில் செயல்பட்ட சமூக புரட்சியாளர்களின் போராட்டத்தால் அரசியலில் பார்பனிய வெறியர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது.

சாதிய ஏற்ற தாழ்வுகளால் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இனக் குழுக்கள் கல்வி, பொருளாதார துறைகளில் பெற்ற வளர்ச்சிகளால் பார்பனிய வெறியர்கள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்க முடியாத நிலை ஏற்பட்டது. பார்பனியத்திற்கு தமிழகத்தில் மீண்டும் துண்டு போட்டு இடம் பிடித்து கொடுக்கவே, சமூக விடுதலை போராட்டங்களின் விளைவாக முன்னேறிய சாதிகளை இந்துத்துவ பார்பனியமயப்படுத்தும் செயல்களில் பார்ப்பனிய வெறியர்கள் சுற்றி திரிகிறார்கள். தமிழ் சமூகத்தில் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் அதிகாரத்தை தங்கள் பிடியில் வைத்து கொள்ள பார்ப்பனிய ஊடகங்கள் தங்களுடைய சக்தி முழுவதையும் திரட்டி செயல்படுகின்றன. சமூக விடுதலை தளங்களில் ஒன்றிணைந்து செயல்பட்ட பல்வேறு சமூகங்களையும் பிரித்து தரப்படுத்தி மறுபடியும் பார்ப்பனிய அடுக்குமுறையை கொண்டு வர துடிக்கின்றனர். இதை எல்லாம் செயல் படுத்த அவர்கள் பயன்படுத்தும் கருவி தான் செயலலிதா.தமிழர்களுக்கு வெள்ளை தோல் மீதான மோகமும் ( பாதி எம்ஜியார் ரசிகனுக மெய்மறந்து சொல்வது இது தான், என்னமா சிகப்பா இருக்காரு...), எதிரிகளை மன்னிக்கிறோம் என்ற போக்கில் கடந்த காலத்தில் அவர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை மறந்து விடுவதும், அவர்கள் எல்லாம் இப்போ பழைய மாதிரி கிடையாது என்று குப்புற படுத்து கொண்டே சான்றிதழ் கொடுப்பதும், பார்ப்பனிய வெறியர்கள் உள் அர்த்தத்தோடு கொடுக்கும் புதிய சரக்கான உயர் சாதி அங்கீகார சாராயத்தை குடித்து விட்டு பார்ப்பனிய வெறிபிடித்து திரிவதும், தற்காலத்திய ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அவர்களை ஒடுக்குவதற்கு பார்ப்பனிய வெறியர்களால் தூண்டி விடப்பட்டவர்களே நவீன இடைச்சாதி பார்பனிய வெறியர்கள் என்று உண்மையை அறிந்து கொள்ள முயலாமல் ஏவி விட்டவனிடமே சென்று சரணடைவதும், சினிமாவின் மீதான மோகமும், இந்திய வேசியம் மீதான காமமும் பார்ப்பனிய வெறியர்களின் பழுவை குறைத்து விட்டது என்றே சொல்லலாம். ஆனாலும் பார்ப்பனிய வெறியர்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சாதாரணமாக எண்ணி விடாமல், எவ்வளவு சீக்கிரம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் இந்துத்துவமயப்படுத்தி பார்ப்பனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரமுடியுமா அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் தூக்கத்தை மறந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் ..அவர்களுக்கு தெரியும்...... இன்னொரு முறை தமிழகத்து மக்கள் உணர்வடைந்துவிட்டால் தங்களது தூக்கம் நிரந்தரமாக கெட்டு போய்விடும் என்பது....... ஆக தமிழர்களின் சுயமரியாதையை அடித்து நொறுக்க பார்ப்பனிய வெறியர்களின் கையில் கிடைத்திட்ட ஆயுதம் தான் செயா...... ஈழத்துக்கு எதிராக கூக்குரலிட்ட பார்ப்பனிய வெறியர்கள் தற்போது ஈழத்திற்காக பரிந்து பேசுவது போன்று நடிப்பது என்பதெல்லாம் தமிழர்களை உணர்விழக்க வைத்து அவர்களின் சுயமரியாதையை அடித்து நொறுக்குவதற்காக கொடுக்கப்படும் போதை.

பார்ப்பனிய ஆதிக்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது எவரையும் சார்ந்திராமல் தாங்களே கட்டமைத்த சமூகநீதி போராட்டங்களால் தங்கள் உரிமைகளையும், சுயமரியாதையையும் வென்றெடுத்த தமிழர்கள் ஈழ உரிமையை மீட்டெடுப்பதற்கு பார்ப்பனிய வெறியர்களின் காலில் வீழ்ந்து கிடப்பது தான், பார்ப்பனியம் செயாவை முகவராக பயன்படுத்தி பெற்ற வெற்றியின் ஆரம்பம்..... அது இப்போது சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடிய வீரர்களை சாதீய அடையாளப்படுத்தி அவர்களுக்கு நினைவு சின்னங்களை அமைப்பது, சாதீய வெறியர்களை தேசியவாதிகளாக சாயமடிப்பது என தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கும் சுயமரியாதையை தொலைத்த கேனபயலுங்க கூட்டம் போட்டு பாராட்டி கொண்டு அலையுறானுங்க. முன்பு தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், கர்ம வீரர் காமராஜரையும் சாதிய தலைவர்களாக அடையாளபடுத்த மெனக்கெட்டு அலைந்த பார்ப்பனிய கும்பல்..... இப்போது ஒட்டு மொத்த தமிழகத்தையும் சாதிவெறி பிடிக்க வைத்து தன்னுடைய பார்ப்பனிய வலைக்குள் வீழ்த்த கங்கணம் கட்டி கொண்டு அலைகிறது.

என்னய்யா காவிகும்பலின் முகவரா செயா என்று கேட்டு இப்போ பார்ப்பன வெறியர்களின் முகவர் செயா என்பது போல் முடித்திருக்கிறீரே... இது முரண்பாடாக இல்லையா என்று கேட்கும் தோழர்கள், காவிகும்பல்கள் தூங்குவதே பார்ப்பனிய வெறியின் நிழலில் தானே என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பார்ப்பனிய வெறியர்களுக்கு காவி மட்டுமே அடையாளம் கிடையாது. அவர்கள் இருக்கிற இடத்திற்கேற்ப சட்டையையும் சட்டையின் நிறத்தையும் மாற்றி கொள்வார்கள்...... கம்மூனிச போர்வையை போர்த்தி கொள்வார்கள், முற்போக்கானவர்கள் என்ற முகமூடியை அணிந்து கொள்வார்கள், தேசியத்தை எங்கள் தந்தை என்பார்கள், உரையாட பயன்படும் மொழியை தங்கள் அன்னை என்பார்கள், சிறுபான்மையினத்தவரை காக்கும் சிறகுகள் என்பார்கள், குடிசைகள் எரியும்போது நீலி கண்ணீர் வடிப்பார்கள் ..... சாதி மத வெறியை வேரறுக்க வந்த சமதர்ம சிற்பிகள் என்று சிலிர்த்து கொள்வார்கள் ஆனால் சட்டைக்குள் ஓடும் பார்ப்பனிய வெறியின் மூல வேரை துறக்க மாட்டார்கள் . அதற்கு மிகச்சிறந்த எடுத்து காட்டு செல்வி செயலலிதா......

Sunday, August 14, 2011

இடஒதுக்கீட்டிற்கு எதிராக எழும்பும் ஒப்பாரிகள்

ரெண்டு நாளைக்கு முன்பு ஆராக்சன் என்ற இந்தி படத்தை பீகார், உத்தரபிரதேசு போன்ற மாநிலங்கள் தடை செய்து விட்டதாக செய்திதாள்களில் படித்த போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஏன் இத்தனை போராட்டங்கள் ஆதிக்க வெறி பிடித்த சமூகத்தினரால் பல தளங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது என்ற கேள்வி அதை படிக்கும் சமூக நீதியில் அக்கறை உள்ள எவருக்கும் எழவே செய்யும்..... அப்படி எனக்குள்ளே நான் எழுப்பிய கேள்விகளுக்கும் அதற்கான பதில்களையும் உள்ளடக்கியது தான் இந்த கட்டுரை ...

பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் கல்வியும் , சமூக உரிமைகளும் மறுக்கப்பட்ட மக்களுக்கு அவர் தாம் முன்னோர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு அவர்களையும் எல்லாரையும் போல் கல்வி பொருளாதார நிலைமைகளில் முன்னேற வழி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சமூக அநீதி என்று ஊளையிடும் பார்ப்பனிய ஓநாய்கள்..... சாதியின் பெயரால் தெருவில் நடமாடுவதில் தொடங்கி கோவிலில் நுழைவது வரை பல விதமான இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் அடக்கி ஒடுக்கி வைத்திருகின்றனரே..... அதற்கு எதிராக ஏன் இவர்கள் தங்களுடைய வாயை திறப்பதில்லை.... இட ஒதுக்கீட்டால் திறமையான மற்றொருவரின் வாய்ப்பு பறிபோகிறது என்று ஊளையிடும் ஓநாய்கள், தங்களுடைய கடின உழைப்பால் அதிக மதிப்பெண்களுடன் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், போன்ற இந்திய அரசாங்க கல்வி நிறுவனங்களுக்குள் பொதுப்பிரிவில் தேர்வுபெற்ற ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சாதியின் பெயரால் மாணவர்கள் என்ற போர்வையில் கூட பயிலும் சாதி வெறியர்களால் அவமானபடுத்தப்படுவது அந்த மாணவனின் கடின உழைப்பை கொச்சை படுத்துவது ஆகாதா.....

டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு என தனி அறைகளும் ஆதிக்க சமூகதிற்கென தனி அறைகளும் எந்த திறமையை அடிப்படையாக வைத்து ஒதுக்கப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களில் இந்தியா முழுக்க நூற்றிற்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள்... இவ்வளவற்றிற்கும் அவர்களில் பலரும் பொது பிரிவினரோடு போட்டியிட்டு தேர்வு பெற்றவர்கள்......தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனரே, அதற்கு இந்த பார்ப்பனிய வெறியர்கள் என்ன சொல்ல போகிறார்கள்..... அவர்கள் எல்லாம் தகுதியானவர்கள் கிடையாதா......

உலகத்திலேயே சிறப்பாக வாந்தி பண்ணி கக்குவதற்கு கொடுக்கப்படும் மதிப்பெண்களால் மாணவர்களின் திறமையை மதிப்பிடுவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..... அதுவும் ஒன்றிரெண்டு மதிப்பெண்களை வைத்து மாணவர்களில் திறமையானவர்களை வகைப்படுத்துவது என்பது தான் மிக கேவலமான விடயம்.... முன்னேறிய நாடுகளில் மதிப்பெண்கள் மாணவர்களை ஏ, பி, சி என்று தரப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படும் ..மற்றபடி ஒரு மாணவரின் மதிப்பெண்கள் மற்ற மாணவர்களுக்கு கூட தெரியாது..... மாணவனின் மதிப்பெண் என்பது அந்தந்த பேராசிரியருக்கும் சம்பந்தப்பட்ட மாணவருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் ..மாணவர்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு அவர்கள் வேறு பல அளவீடுகளை வைத்துள்ளார்கள் ...அதுவும் வாந்தி பண்ணி கக்குவது (plagiarism) முன்னேறிய நாடுகளின் பல்கலைகழகங்களில் மிகப் பெரிய குற்றம் .... ஆனால் இந்தியாவில் உள்ள பார்ப்பனிய வெறியர்களுக்கு அது தான் தேசிய சின்னம்.... அதுவும் இவனுங்க ரொம்ப பாடுபட்டு படித்து அதை கக்குவது கிடையாது தேர்வு கேள்விதாள்களையும் தேர்வுக்கு வரும் என கூறப்படும் கேள்விகளையும் தங்களுக்குள்ள அதிகார பின்புலத்தின் மூலமும், பண பலத்தின் மூலமும் அடைந்து பின்பு அந்த கேள்விகளுக்கான விடைகளை தேர்வுகளில் வாந்தி பண்ணி கக்குவது தான்.

சமீபத்தில் இந்திய ரயில்வேயில் வேலையாட்களை தேர்வு செய்வதற்கான தேர்வின் வினாதாள்கள் சந்தையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்க்கு விற்கப்பட்டது..... அதை செய்தது எசு.எம்.சர்மா என்ற பார்பனனும் அவனது மகனும், அதேபோல் கேத்தன் தேசாய் என்னும் பார்ப்பனியன் தான் இந்தியா முழுக்க மருத்துவ கல்விக்கான இடங்களை கூறு போட்டு விற்றான் ....... அவனுடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனிய வெறியர்கள் தான் .... பார்ப்பனிய வெறியர்கள் கல்விக்கான இடங்களை பணத்தை கொண்டு வாங்குவது மட்டும் திறமையான மற்றொரு திறமையான மாணவனின் கனவுகளை அழித்து விடாதா...... இட ஒதுக்கீடு தான் அழிக்குமா...... என்னவொரு திருட்டு தனம்.....

அதற்கப்புறம் அமிதாப் என்றதொரு அரை வேக்காடு இட ஒதுக்கீட்டால் திறமையான மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்றளவில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்து இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தில் தன்னுடைய பங்களிப்பையும் காட்டி இருக்கிறான். இவனுடைய லட்சணம் என்னவென்றால் உத்திரபிரதேசத்திலும் மகராட்டிராவிலும் விவசாயிகளுடைய நிலத்தை முறைகேடாக வாங்கி மாட்டி கொண்டவன். அது சரி...... இட ஒதுக்கீடு திறமைக்கு எதிரானது என்று படத்தில் சொல்லும் இவன் திருப்பதி கோவிலுக்கு போகும்போது மட்டும் சிறப்பு விருந்தினர் என்ற அயோக்கியத்தனத்தின் பெயரில் புறவாசல் வழியாக தரிசனம் செய்து விட்டு வருகிறானே.... அங்கே அது தங்களுடைய திறமையால் (நாசமா போவதற்கு) .... இவனை போன்ற புறம்போக்குகள் வருவதற்கு பலமணி நேரங்களுக்கு முன்பே காத்திருந்து வரிசையில் இடம் பிடித்தாலும் கூட...... இவனுக தரிசனம் செய்து விட்டு போன பின்பும் அந்த சாமனியர்கள் வரிசையில் காத்து கொண்டிருப்பது அவர்களுடைய இடம் பிடிக்கும் திறமையை அவமதிப்பது என்று இந்த அரைவேக்காட்டுக்கு தெரியாதா.

கோவிலில் மணியாட்டும் உரிமையை ஒரு கும்பலுக்கு மட்டும் பட்டா போட்டு கொடுத்திருப்பது... அந்த மணியாட்டும் தொழிலுக்காக எல்லாவற்றையும் கற்று தேர்ந்த பிறகும் சாதியின் பெயரால் ஒருவனுக்கு அந்த உரிமை மறுக்கபடுகிறதே அது அவனின் திறமையை அவமதிப்பதாகாதா..... கடந்த காலங்களில் இட ஒதுக்கீட்டின் பலன் பாதிக்கப்பட்டவர்களை சரியாக சென்றடையாத காலத்தில் திருட்டு தனமாக back logs என்ற போர்வையில் அந்த இடங்களை அனுபவிக்கும்போது இந்த பார்ப்பனிய வெறியர்கள் சும்மா இருந்து விட்டு இப்போது இட ஒதுக்கீட்டின் பலன்களை சாதி ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகம் நுகர ஆரம்பிக்கும் நேரத்தில் ஐயோ திறமை வீணாய் போகிறதே என்றும் அலறும் ஓநாய்களின் செயல்களில் சில உள் அர்த்தங்கள் இருக்கவே செய்கிறது.....

ஐம்பது வருடங்களின் இட ஒதுக்கீட்டின் பயனால் தங்களையே எதிர்க்க துணிந்தவர்களை இப்படியே விட்டு வைத்தால் நமக்கு இணையாக எல்லா மட்டங்களிலும் வளர்ந்து விடுவார்களா என்று எண்ணும் ஆதிக்க வெறியர்களின் பயம் தான் அது. தங்களுக்கு ஏற்ப அரசு இயந்திரங்களும் அதிகாரமும் வளைந்து நெளிந்து இயங்கியது வரை அதை குறுக்கு வழியில் அனுபவித்த இந்த குள்ள நரிகள் இப்போது திறமையை பற்றி பேசுகின்றன..... இட ஒதுக்கீட்டை பற்றிய தெளிவை சாதிய ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகம் தெரியாது இருந்த வரை மருத்துவ, பொறியியல் மற்றும் இன்னபிற கல்விக்கான எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது கல்வியின் தரத்தை குறைக்கும் என்று குதித்த பார்ப்பனிய வெறியர்கள்..... அந்த சமூகங்கள் இட ஒதுக்கீட்டால் தாங்கள் பெற போகும் முன்னேற்றங்களையும் சம உரிமைகளையும் அறிய ஆரம்பித்த பின்பு, பார்ப்பனிய சாதி வெறியர்கள் தங்களுடைய அதிகார பின்புலத்தால் உயர்கல்வியை தனியார் மயமாக்கி தங்களுடைய இருப்பு பாதிக்கபடாதவாறு பார்த்து கொண்டார்கள்... இப்போது அரசு கல்வி நிறுவனங்களை தனியார் கல்வி நிறுவன முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து சின்னாபின்னபடுத்தி கொண்டிருப்பதும் இந்த பார்ப்பனிய கும்பல் தான்..... இப்போது அவர்களுடைய ஒரே கவலை இவ்வளவு நாளும் தாங்கள் ஏகபோக உரிமை கொண்டாடிய ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் நிறுவனங்களிலும் தங்களுக்கு அடிமையாக இருந்தவர்கள் இட ஒதுக்கீட்டின் துணையோடு பங்கு கேட்க வந்து விட்டார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த இட ஒதுக்கீட்டிற்கெதிரான ஊளைகளுக்கு காரணம்

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி கொண்டிருக்கும்போதே அந்தந்த கல்வி நிறுவனங்களில் அவனுகளுடைய இருப்பு பாதிக்கப்படாதவாறு இருக்க உயர்கல்விக்கான இடங்களையும் அதிகரிப்பதும்..... புதிய ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களை தொடங்குவது என்பது போன்ற வேலைகளை தங்களுடைய அதிகார பலத்தோடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. இதே பார்ப்பனிய வெறியர்கள் தான் முன்பு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களில் படிப்பிற்க்கான இருக்கைகளை உயர்த்துவதை..... அது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்று கடுமையாக எதிர்த்தவர்கள்.... இன்று அதே உயர் படிப்புகளில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று போராடுவதும் அதே பார்ப்பனிய வெறியர்கள் தான். இட ஒதுக்கீட்டை இவ்வளவு பலமாக எதிர்க்கும் வெறியர்கள் தான் கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பல தில்லு முல்லுகளை பண்ணி அண்ணா பல்கலைகழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் புறவழியாக நுழைந்தவர்கள்..... அதுவும் கொடுமை என்னன்னா வளைமட்டை (Hockey), கபாடி, தடகளம் போன்ற விளையாட்டுகளில் தங்களுடைய கடின உழைப்பால் தேசிய அளவில் விளையாடிய ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வீரர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, போலி விளையாட்டு சான்றிதழ்களையோ, இல்லை யாருக்குமே தெரியாத விளையாட்டுகளின் சான்றிதழ்களையோ காட்டி இடம்பிடித்த பார்ப்பனிய புறம்போக்குகள் ஏராளம் உண்டு. அவனுங்களுக்கு தோதுபடுகிற சமயமெல்லாம் திறமையை தூக்கி குப்பை தொட்டியில் வீசுவதும், தோதுபடலைன்னா திறமை கேவலப்படுத்தப்படுகிறது என்று முனகுவதிலும் பார்ப்பனிய வெறியர்களுக்கு இணை அவர்களே தான்.

அதே போல இந்தியாவுக்கு பிறநாடுகளுக்கும் இடையிலான மனிதவள ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைகழகங்களிலும், மனிதவள மேம்பாட்டு துறைகளிலும் இந்தியாவுக்கு என்று ஒதுக்கப்படும் இருக்கைகளையும் இந்த பார்ப்பனிய கும்பல் திட்டமிட்டு அபகரித்து விடுவது நாம் யாருக்கும் தெரியாத அவர்களுடைய மிகப்பெரிய மோசடிதனம்.... அப்போதெல்லாம் அங்கு திறமை குப்பை தொட்டியில் வீசப்படும்.... நம்மவர்களுக்கு உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிய பிரதிநித்துவத்தை பற்றிய அறிவே சரிவர இல்லாமல் இருக்குபோது, அதை பற்றி கவலைபடுவதற்கு எங்கே நேரம் இருக்கும்.

ரெண்டாம் உலகப்போரில் யூத மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு விலையாக இன்றைய செருமானிய சமூகம் அவர்களுக்கு எதிராக யூதர்களால் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கும் பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளதோடு அதற்கு விலையாக யூதர்களுக்கு இன்றளவும் இழப்பீட்டை அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்... ஆனால் சாதியின் பெயரால் பல நூற்றாண்டுகளாக சக மனிதர்களுக்கு எதிராக வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட பார்ப்பனிய வெறியர்களுக்கு எதிராக ஏன் அவ்வாறு எந்த வழக்குகளும் தொடுக்கப்படவில்லை என்பது உலகப் பெரும் புதிர்களில் ஓன்று தான். தங்களுடைய முன்னோர்கள் செய்த தவறுக்கு இன்றைய தலைமுறைய சேர்ந்த செருமானியர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள்.

இந்தியாவில் முந்தைய தலைமுறையை சேர்ந்த பார்ப்பனிய வெறியர்கள் சாதியின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு இன்றைய தலைமுறையினர் சிறு வருத்தத்தை கூட தெரிவிக்காமல்..... ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தடை செய்ய துடிக்கும் அவர்களது ஓலங்களில் இருந்து எந்த அளவிற்கு அவர்கள் நவீன சாதி வெறியர்களாக வார்த்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அறியலாம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு இவ்வளவு காலம் அவர்கள் அனுபவித்த கொடுமைகளில் இருந்து மீள இட ஒதுக்கீடு ஒரு கருவியாக இருக்கும் போது அதையும் கொடுக்க கூடாது என்று சொல்லும் இளைய தலைமுறையை சேர்ந்த பார்பனிய வெறியர்களின் வன்மம் அவர்களது முந்தைய தலைமுறையினரை விட எந்த அளவிலும் குறையவில்லை என்பதற்கு இந்த இட ஒதுக்கீட்டிற்கு ஏதிரான திரைப்படங்களும், போராட்டங்களும் சாட்சியாக நிற்கின்றன.......

இவ்வளவு நாட்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை எந்தெந்த வழிகளில் எல்லாம் தடுக்க முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் தடுத்து விட்டு ..இப்போது இட ஒதுக்கீட்டின் மூலம் தாங்கள் இழந்த உரிமைகளை சட்ட ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அடைகிற போது, தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதாக குரலெழுப்பும் இந்த சாதி வெறி பிடித்த குள்ள நரிகளின் ஆதிக்கம் பேசும் குரல் வளைகள் நெறிக்கப்படவேண்டும்
Saturday, August 13, 2011

சாதி வெறியை தூண்டி விடுவது யார் ?

சமீபகாலமாக என்னவோ தெரியலை பார்ப்பனிய வெறியர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் செயல்படுகிறார்கள் என்று விளக்க ஆரம்பித்தால் ...... ஒரு கூட்டம் ரவுண்டு கட்டி கொண்டு வந்து.... பார்ப்பன்களா தலையை வெட்டினார்கள், காலை வெட்டினார்கள் ...அவங்க எல்லாம் அடங்கி ரொம்ப காலமாச்சி அவிங்க எல்லாம் பிள்ளை பூச்சிங்க ....கரப்பான் பூச்சியை பார்த்தால் கூட பயந்து ஓடி விடுபவர்கள் அவர்களா..... சாதிய வன்முறைகளுக்கு காரணம் என்று மூச்சு விடாமல் பேசி கொண்டிருப்பார்கள் ...... அப்பாவி பார்பான்களை இவ்வாறு பேசுகிறீர்களே. அவிங்களை உங்களால் இப்படி பேசமுடியுமா... இவிங்களை உங்களால் நொட்ட முடியுமா என்று சவால் விடுவதும் கூட நடக்கும் ...ஆனால் அந்த அவிங்களையும் இவிங்களையும் தங்களுக்கு ஏவலாட்களாக தங்களது பிடியில் வைத்து கொண்டு தூண்டி விடுவதே பார்ப்பனிய வெறியர்கள் தான் என்று கூறினால் உடனே அவிங்க பீயை தின்ன சொன்னா இவிங்களும் அவிங்களும் தின்று விடுவார்களா என்றதொரு கேள்வியையும் எழுப்ப கூடவே வைத்திருப்பார்கள்
.....யப்பா ராசா... மடத்திற்கு வரும் பெண்களை மடக்கி காம கூத்தாடும் குருக்களின் பீயை வாழை இலையில் அள்ளுவதற்கு போட்டி போடுபவன்கள் பீயை திங்க சொன்னால் திங்காமலா இருப்பார்கள்....என்று பதிலளித்தால் உடனே பெரியார் அம்மணமா நின்னார், பெரியார் ஒரு சின்ன பொண்ணை திருமணம் செய்து கொண்டார் , முசுலிம்களுக்கு எதிரி, ஒடுக்கப்பட்டவர்களின் துரோகி , இந்துக்களை விமர்சிப்பது போல் கிருத்துவர்களையும், முசுலிம்களையும் விமர்சிக்கும் தைரியம் உண்டா, என்று நாம எதை பற்றி பேச ஆரம்பித்தாமோ அதை பற்றி பேசாமல் அப்படியே பாதையை திருப்பி விடுவார்கள்.....

சமீபகாலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களிடம் நீங்க ஆள பிறந்தவங்க, தாழ்ந்த சாதிகாரனுங்க உங்களுக்கு அடிமையாக சேவகம் செய்ய பிறந்தவனுங்க..அவனுங்களை நீங்க அடக்கி வைத்திருந்தால் தான் அது உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்லது என்று ஆதிக்க வெறிக்கு எண்ணெய் விட்டு கொண்டே அப்படியே ஒடுக்கப்பட்டவர்களிடம் போய் உங்களுக்கு அவன் தான் எதிரி என்று வன்மத்தை வளர்க்கும் பார்ப்பனிய சாதி வெறியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலை நீடிக்குமானால் தமிழ்நாடு மற்றுமொரு மத்திய ஆப்பிரிக்காவாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளது
பார்ப்பனியா வெறியர்கள் எவ்வாறு சாதி வெறியர்களை உருவாக்குகிறார்கள் என்பதை பற்றி நான் எதையும் பேசுவதை விட சாதி வெறியர்களை எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு பார்ப்பான் மற்றும் சாதி வெறியனிடையே நடக்கும் உரையாடல்களின் படங்களை தருகிறேன்.படத்தை பார்க்க படத்தின் மீது வைத்து சொடுக்கவும் ...அதை பார்த்து உங்கள் தீர்ப்பை சொல்லுங்கள்

From 15 September 2011


From 15 September 2011


உரையாடலின் முடிவில் அந்த சாதி வெறியன் “அப்பாடி எப்படியோ பாப்பான் வாயால நாங்க தான் ராசா ராசா சோழனின் நேரடி வாரிசுன்னு பிரகடனபடித்தியாச்சு இனி எவிங்களாவது அந்த பட்டத்துக்கு போட்டி போட்டா அவ்வளவு தான்”....... (அவனவன் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி , மரபணு ஆராய்ச்சி என பல பல ஆராய்ச்சி பண்ணியும் கண்டுபிடிக்க முடியாத விடயங்களை இவிங்க G-Talk மூலம் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிட்டாங்க பாருங்க . அடேங்கப்பா என்ன வொரு திறமை .இவிங்க எல்லாம் நாசாவுக்காக வேலை செய்ய வேண்டியவிங்க .ஆனா என்ன பண்ண நாசமா போன இணையத்துல இவிங்க அறிவு விரயமாக்கபடுகிறது )..... என்கிற அளவில் சுய இன்பத்தில் லயித்து போக ... சாதி வெறி என்னும் போதையை அந்த கோமாளிகளுக்கு ஏற்றி விட்டு கொண்டு அலைகிறார்கள் இந்த பார்ப்பனிய வெறியர்கள் ....
பார்ப்பனிய சூழ்ச்சியால் பல்வேறு சாதிகளாக பிளவுபட்டு கிடக்கும் சகோதரர்கள் சிந்திப்பார்களா.. சாதியின் பெயரால் சக மனிதனை அடக்க நினைக்கும் மிருகங்கள் ஒடுக்கப்பட்டவர்களும் நம்முடைய சகோதர்கள் தான் என்று உணருவார்களா .... தாங்கள் ஆள பிறந்தவர்கள் என ஊளையிட்டு கொண்டு அலைபவர்கள், “ஒடுக்கப்பட்ட சகோதர்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை அளிக்கும் ஆதிக்க சமூகத்தில் பிறந்தற்க்காக வெட்கப்படுகிறேன்” என்று சொன்ன சமூக போராளி அய்யா தினகரன் போல் ஒரு நாளாவது தங்களுடைய செயல்களை எண்ணி நாணுவார்களா ..... இல்லை குடுமிகள் வெளி தள்ளும் மலத்தை சுமப்பதே வாழ்வின் பாக்கியம் என்று இருந்து விடுவார்காளா........
ஆனால் ஓன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. சாதி மறந்து மனிதர்களாக ஓன்று பட ஆரம்பித்து விட்டால் எங்கே தங்களுடைய பொழைப்பு கெட்டு விடுமோ என்ற தாக்கத்தை, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் போன்ற சமூக போராளிகளின் போராட்டம் , பார்ப்பனிய வெறியர்களின் மனதில் ஏற்படுத்தி விட்டது

Wednesday, August 10, 2011

பெரியார் ஒரு குறுப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானவரா ????????

இரண்டொரு நாட்களுக்கு முன்பு தோழர் ஒருவர் முன்பொரு முறை ஈ.வே.ரா. “துணி விலை ஏறிவிட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான்” என்று கூறினார் என்றொரு பதிவு ஒன்றை போட்டு பெரியாரை ஒரு குறுப்பிட்ட மக்களிடம் இருந்து அன்னியபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அவர் சொல்வது படியே அப்படியே பெரியார் சொன்னாரென்றே வைத்து கொள்வோம் ....அதை கூட உங்களோட கூற்றின் படி ஒருமுறை தானே சொன்னார்...ஒரே வார்த்தையை மறுபடியும் மறுபடியும் கூறினால் அதில் உள் அர்த்தம் இருக்கிறது என்று எடுத்து கொள்ளலாம்.. அவர் அப்படி திரும்ப திரும்ப அந்த வார்த்தைகளை கூறியதாக வரலாற்று பதிவுகளில் உள்ளதா என்ன? .... அப்படி இல்லையே... அவர் அப்படி கூறிய போது என்ன சூழ்நிலையில் அவ்வாறு கூறினார் என்றும் தெரிந்து கொள்வது உண்மையை என்ன என்று அறியும் வாய்ப்பை எல்லாருக்கும் ஏற்படுத்துமல்லவா... பெரியாரை மடக்குவதற்காக பார்ப்பனிய வெறியர்கள் கேட்ட கேள்விக்கு நக்கலாக கூறிய பதிலா என்று யோசிக்க வேண்டியதும் நமது கடமை.... அதை தான் பெரியார் மக்களிடம் ஒவ்வொரு முறையும் பேசும் போது வலியுறுத்துவார். அதாவது அவருடைய கருத்துகளை அப்படியே கண்மூடி தனமாக பின்பற்றாமல் அவற்றை ஒவ்வொருவரும் அவரவருடைய சுய புத்தியை கொண்டு ஆய்ந்து நடக்க வேண்டும் என்று தான் அறிவுறுத்துவார் .

எந்த மனிதனையும், அவர்களுடைய கருத்துகளையும் கொள்கைகளையும் அவை மனித சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பவையா இல்லை கெடு விளைவிப்பவையா என்று பகுத்தாய்ந்து அதை பின்பற்றுவதையும் அவரவருடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்தவதையும் செய்ய வேண்டும். எதையும் கண்மூடி தனமாக பின்பற்றும் மனிதர்களை தன் வாழ்நாளில் கடினமாக சாடியவர். அவ்வாறு இருக்க பெரியார் எந்த சூழ்நிலையில் அதை கூறினார், அதை காழ்புனர்ச்சியோடு கூறினாரா இல்லை அவருடைய சமூக விடுதலை போராட்டத்தில் குற்றம் கண்டு பிடிக்க முயன்ற அரைமண்டையங்களுக்கு நக்கலாக அளித்த பதிலா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் பல நேரங்களில் நாம் கூட நம்மிடம் யாரவது நாம் செய்யாத விடயத்தை "நீ பண்ணினாயா?" என்று திரும்ப திரும்ப கேட்டால் ஒரு கட்டத்தில் எரிச்சலில் நாமே "ஆமாம்யா நான் தான் அதை பண்ணினேன் அதற்கு இப்ப என்ன பண்ண போற?" என்று திரும்ப கேட்பது உண்டு. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அப்போது பத்திரிகை துறையில் தங்களோட ஆதிக்கத்தை வைத்திருந்த குடுமிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த பல வகைகளிலும் முயன்றனர். அம்பேத்கருக்கு எதிராகவே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பல தலைவர்களையும் கொம்பு சீவி விட்டவர்கள் தான் பார்ப்பன வெறியர்கள்

அவனுங்க திருமணமாகாத இளம்பெண்களோடும், அடுத்தவர்களுடைய மனைவியரோடும் பாலியல் பரிசோதனை செய்து கொண்ட ஒருத்தனையே நாட்டின் மகாத்மாவாக்கியவர்கள் அல்லவா .....இன்றைக்கு கூட இடைப்பட்ட சாதியினரின் சாதி பெயர்களை அவர்கள் மறந்து கொண்டிருக்கும் காலத்திலும் தேவர்வால், நாடார்வால், முதலியார்வால் என்று அழைத்து நீ இன்னான் என்று ஞாபகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சாதி வெறியை ஊட்டி விடுவதே பார்ப்பனிய வெறியர்கள் தான் .. பெரியார் அப்படி காழ்ப்புனர்ச்சியுடன் கூடிய உள் அர்த்தத்தோடு கூறியிருந்தால் கட்டாயம் அண்ணல் அம்பேத்கர் பெரியாரை கடுமையாக சாடி இருப்பார் . இன்னொன்றும் கூறுகிறேன் பெரியார் அதை கூறினார் இதை கூறினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒன்றை கூறி கொல்ல முனைகிறேன் ... அப்போதிருந்த கால கட்டத்தில் தங்களை பறையர் இன தலைவர்களாக காட்டி கொண்டவர்கள்......தங்களது சுயநலத்துக்காக கொள்கையையும், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும் அடகு வைத்த அவர்கள் காலபோக்கில் காணாமல் போய்விட்டார்கள் என்பது வேறு விடயம் ..... அவர்களுக்கு கீழ் என்று கருதப்படும் சாதிகளை எவ்வாறெல்லாம் கேவலமாக பேசினார்கள் என்றும் வரலாற்று பதிவுகளில் இருக்கிறது ......பதிலுக்கு பதில் என்று அணைந்து போன முரண்பாடுகளை தூண்டி விடுவது ஓன்று கூடி உரிமையை மீட்டெடுக்க துடிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கிடையே பிளவை ஏற்படுத்த வழி வகுத்து விடும் ...ஏனென்றால் இந்துத்துவ பார்பனிய சாதி வெறியர்கள் அதை தான் எதிர் பார்க்கிறார்கள்..... அதனால் தான் இணையங்களிலும் ஊடகங்களிலும் பெரியார் ஒரு குறுப்பிட்ட சாதியினருக்கு எதிரானவர் என்ற பரப்புரையை மும்முரமாக செய்கின்றனர் ....

அந்த பார்ப்பனவெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும் அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மார்பு சட்டை அணிய கூடாது என்றும் பிராமண , நாயர், வெள்ளாள சாதியை சேர்ந்த ஆண்கள் வரும் போது அவர்களுக்கு சேலையை விலக்கி தங்களுடைய மார்பகங்களை காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் கொடுமையை அரங்கேற்றினார்கள் . ஒரு முறை மார்புசட்டையை அணிந்ததற்காக சாணார்கள் என்றழைக்கப்பட்டு சமூகத்தில் மோசமாக நடத்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த கொடுமைகளை பற்றிய செய்திகளை தங்களுக்கு வசதியாக இருட்டடிப்பு செய்து விடுவார்கள். இப்போதெல்லாம் பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களோடு நேரடியாக மோதுவதை விட்டு விட்டு ஒடுக்கப்பட்ட மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி விட்டு அவர்களுக்கிடையே அடித்து கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே செயல் படுகிறார்கள்.....

அதன் எதிரொலி தான் அரை மண்டையனுங்க பார்ப்பனியத்தின் கொடுமைகளை பற்றி பேசினால் “பார்ப்பான் தான் இழிச்சயவாயனா” ..”எந்த பார்ப்பான் ஒடுக்கப்பட்டவர்கள் அடிக்கிறான் அவன் தான் அடிக்கிறான் இவண் தான் அடிக்கிறான் உங்க பலத்தை அவனிடம் காட்டுங்க” என்று கொம்பு சீவி விட்டு விட்டு...... அந்த பக்கம் ஒடுக்குகிற சாதி வெறியர்களிடம் போய் நீங்க தான் சத்திரியர்கள், நீங்க தான் சூரர்கள், நீங்க தான் இந்து மதத்தின் தூண்கள், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று போற்றிய நம்ம அய்யா தான் இந்தியாவின் ஒரே தெய்வ திருமகன் என்று சால்ரா அடித்து அவனுங்களையும் கொம்பு சீவி விடுவானுங்க....... பின்பு ரெண்டு பெரும் அடிபோட ஆரம்பிச்சிட்டானுங்கன்னா அதை சுட்டி காட்டி நாங்களா ஒடுக்கப்பட்டவர்களை அடிக்கிறோம் பாருங்க அவனுங்க தான் அடிக்கிறாங்க என்று பரப்புரை பண்ண ஆரம்பிப்பது...... ஒடுக்கப்பட்டவர்கள் திருப்பி அடிக்க ஆரம்பிச்சா அவர்களை வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்துவது என்று அவனுன்களோட வழக்கமான வேலையை செய்தது கொண்டு தான் இருக்கிறார்கள்..... ஆனால் ஒரு சில ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தோழர்கள் குடுமிகளோட சூழ்ச்சிக்கு இரையாகி போய் விடுவது தான் வேதனைக்குரிய விடயம். அப்படி வெகு லெகுவாக இரையாகி போய்விடுவதானால் தானோ என்னவோ “சோ“ போன்ற பார்ப்பன வெறியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்கும்போது வெளிப்படையாகவே தங்களுக்கிடையே கிண்டலடித்து மகிழ்ந்தார்கள் ......