Thursday, August 25, 2011

பாய்சங் பூட்டியா – இந்திய கால்பந்திற்கு கிடைத்த அரிய முத்து - ஓய்வு




இந்த பெயர் கால்பந்தை ரசிக்கும் இந்திய ரசிகர்களிடையே நன்கு அறிமுகமான பெயர் தான். இந்தியாவில் கால்பந்து காணமல் போய் கொண்டிருந்த தருணத்தில் வாராது வந்த மாமணியாய் இந்திய கால்பந்துலகிற்கு கிடைத்த அரிய முத்து. திசம்பர் 15, 1976 ஆம் ஆண்டு சிக்கிமில் ஒரு விவசாயியின் மகனாய் பிறந்து இந்திய கால்பந்தை தனது கால்களால் பண்படுத்தியவர். பெற்றோருக்கு இவர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லாவிட்டாலும் இவரது மாமாவான கர்மபா பூட்டியா இவரை ஊக்குவித்தார்.


கேரளாவை சேர்ந்த மற்றுமொரு கால்பந்து ஜாம்பவானான ஐ.எம். விசயனால் “இந்திய கால்பந்திற்கு கடவுளால் (இருக்கிறாரா இல்லையா என்பது பகுத்தறியப்படவேண்டிய விடயம்) அனுப்பி வைக்கப்பட்ட அரும் பரிசு” என்று புகழாரம் சூட்டப்பட்ட்வர். சக வீரர்களாலும் கால்பந்து ரசிகர்களாலும் சின்ன சகோதரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட ஒருவர். அவருடைய பதினாறாவது வயதில் 1992 ஆம் ஆண்டில் நடந்த சுப்ரதோ கோப்பைக்கான போட்டியில் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டதே அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. இந்திய அணியின் முன்னால் கால்பந்து வலை தடுப்பாளர் பாசுகர் கங்குலியால் அடையாளம் காணப்பட்டு இந்தியாவின் முன்னணி கால்பந்து குழுவான கிழக்கு வங்காளத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். மிகவும் சிறிய வயதில் தொழில் முறை கால்பந்து விளையாட்டு வீரராக மாறிய இந்தியர் என்பது குறுப்பிடதக்கது.


கிட்டத்தட்ட பதினாறு வருடங்களாக இந்திய கால்பந்தின் முன்கள வீரராக சிறப்பாக செயல்பட்டவர். இந்திய கால்பந்தை களங்களில் தன்னுடைய தலையிலும், தோள்களிலும் கால்களிலும் தூக்கி சுமந்தவர் என்று சொன்னால் மிகையாகாது..... உடனே யாரவது ஏன் அவரால கால்பந்தை கையில தூக்கி சுமக்க முடியலையா என்று கேட்கலாம், களத்தில் கால்பந்தை கையில எல்லாம் தூக்கி கொண்டு ஓட முடியாதுங்கோ. இவரோட பலமே நேர்த்தியாக பந்தை வேகமாக கடத்தி செல்வதும், குறி தவறாமல் மொத்த பலத்தையும் கால்களில் திரட்டி பந்தை வலையை நோக்கி உதைப்பதும் தான். களத்தில் துரு துருவென பயமறியா இளங்கன்றை போல் அங்குமிங்கும் ஓடியாடி அவரை கட்டுபடுத்த முயலும் எதிரணியினருக்கு தண்ணி காட்டுவதில் பாய்ச்சங்குக்கு நிகர் பாய்சங் தான். இவரை தங்களது வழி காட்டியாக எடுத்து கொண்டு வடகிழக்கு பகுதிகளில் இருந்தும் கால்பந்து பிரபலமாகவுள்ள வங்காளம், கேரளா, கோவா , பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்தும் மிக சிறந்த இளம் வீரர்கள் இன்று இந்திய கால்பந்தை உலக அளவில் இட்டு செல்ல அணி வகுத்து நிற்கின்றனர். கிட்டத்தட்ட சுணங்கி போய் கிடந்த இந்திய கால்பந்துக்கு புத்துயிரூட்டியவர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.


109 சர்வதேச போட்டிகளில் ஆடியதன் மூலம் இந்தியாவுக்காக அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர்...... ஒரு போட்டியில் ஒரு கால்பந்து வீரர் சராசரியாக பதினோரு மைல் கற்கள் ஓடி இருக்க வேண்டும் என்பது குறுப்பிட தக்கது, அப்படி பார்த்தால் பூட்டிய சராசரியாக சர்வதேச அளவிலான கால்பந்து போட்டிகளில் மட்டும் கிட்டதட்ட 11,000 மைல் கற்கள் ஓடி இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் ஆடும் நம்ம இந்திய கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடைய வாழ்நாள் முழுமைக்குமே அவ்வளவு தூரம் கடந்திருப்பார்களா என்பது சந்தேகமே...... என்ற பெருமையையும், 43 கோல்களை அடித்ததன் மூலம் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் அதிக கோல்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் தனதுடையதாக்கி இருக்கிறார். அதோடு கூட 1995 ஆம் ஆண்டில் நேரு கோப்பையில் உசுபெக்கிசுதானுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய பதினொன்பதாம் வயதில் அடித்த கோலின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவுக்காக கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையும் இவருடையதே. ஐரோப்பிய கால்பந்து குழு ஒன்றிற்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை இங்கிலாந்தின் பர்ரி(Fury FC) கால்பந்து குழுவிற்காக விளையாட அழைக்கப்பட்டதின் மூலம் பெற்றார். 2002 ஆம் ஆண்டில் மறுபடியும் இந்தியாவின் மோகன் பகான் குழுமத்திற்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்பு மலேசியாவின் கால்பந்து குழுவிற்காக விளையாட சென்றார். பின்பு 2006 ஆம் ஆண்டில் மறுபடியும் மோகன் பகான் கால்பந்து அணிக்காக் விளையாட ஒப்பந்தமானார். அந்த கால் கட்டத்தில் ரெண்டு முறைக்கும் மேல் சிறந்த இந்திய கால்பந்து வீரராக தெரிவு செய்யபட்ட இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனார், மற்றுமொருவரான கேரளாவின் மந்திர கால் ஐ.எம். விசயன் இந்த விருதை மூன்று முறை பெற்றவர்.


2009 ஆம் ஆண்டு பூட்டியாவுக்கும் மோகன் பகான் கால்பந்து குழும நிர்வாகிகளுக்கும், பூட்டியாவின் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பை விமர்சித்ததாக எழுந்த பிரச்சினையில், பூட்டியா தான் இனிமேல் மோகன் பகான் அணிக்காக விளயாடமாட்டேன் என்று அறிவித்ததோடல்லாமல் தான் எங்கிருந்து கால்பந்து விளையாட்டை அரம்பித்தாரோ அந்த அணியான கிழக்கு வங்காளத்திற்காக விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அதோடு அந்த அணிக்கு விளையாடுவதுடன் தன்னுடைய கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தோ, பின்பு ஒருங்கிணைந்த சிக்கிம் கால்பந்து அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார். இவர் அந்த அணியின் உரிமையாளர் என்பது குறுப்பிடத்தக்கது. தற்போது சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய ஓய்வு அறிவிப்பை அறிவித்ததுடன் இந்திய கால்பந்தின் ஒரு சகாப்தம் தன்னுடைய பக்கத்தை மூடி கொண்டது.


கடந்த ஐந்து வருடங்களாக காலில் அடிக்கடி ஏற்படும் காயம் காரணமாக அவரால் முழு பங்களிப்பையும் இந்திய கால்பந்து அணிக்கு தரமுடியாமல் அவதிப்பட்டார். அதே நேரத்தில் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று இருக்க வேண்டும் என்றும், அவர் அவ்வாறு செய்ய தவறியதால் இந்தியாவுக்காக விளையாட காத்திருக்கும் இளம் வீரர்களுடைய வாய்ப்பை பறித்து விட்டார் என்றும் சில முன்னாள் இந்திய கால்பந்து வீரர்களும், பயிற்சியாளர்களுடைய கூற்று..


திபெத் மக்களுக்கு எதிரான அடக்குமுறையை காரணம் காட்டி தன்னுடைய எதிர்ப்பை உலக மக்களுக்கு தெரியப்படுத்த ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதியை இந்தியாவில் சுமந்து ஓட கிடைத்த வாய்ப்பை மறுத்தார். அப்போது அவர் “திபெத்தியர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன், தான் வன்முறையை எதிர்ப்பவன் அத்துடன் திபெத்திய மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் அவர்களோடு நிற்க வேண்டும் என்றும் எண்ணுகிறேன்” என்று துணிச்சலாக பேசியவர். ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டிய விடயம். நாம என்னடான்னா ஈழத்தில் தமிழர்கள் அடக்கு முறைகளுக்கு சிங்க இன வெறி பிடித்த அரசினால் உள்ளாக்கப்படும் போது, இலங்கைக்கு விளையாட சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துதல்களை சொல்லி கொண்டும், அந்த விளையாட்டினை தொலைகாட்சியில் பார்த்து ரசித்து கொண்டும் இருந்தோம்.


கடந்த 2010 ஆண்டில் “பாய்சங் கால்பந்து பள்ளி” என்ற அமைப்பை ச்பானிய ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான கார்லோசு குயிரோசுடன் இணைத்து தொடங்கி இருக்கிறார். நைக் என்ற விளையாட்டு உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற் குழுமம் இதனை பொருளாதார ரீதியாக ஆதரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இவரோடு கையெழுத்திட்டுள்ளது. அவருடைய இமுயற்சி இந்தியாவிலுள்ள கால்பந்து ஆர்வலர்களாலும் பல்வேறு முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களாலும் பாராட்ட பெற்றது.


ம்ம்ம்ம்ம்ம் கால்பந்து மட்டும் கோவண கயிறு போடுறவங்க விளையாடுகிற விளையாட்டாக இருந்திருந்தால் இந்திய கால்பந்தோட நிலைமை கொஞ்சம் வேறு மாதிரியாக தான் இருந்திருக்கும். என்ன பண்ண அவங்க தான் கோவண கயிறை உடம்பில சுற்றி கொண்டு அலைந்தாலும்... அடுத்தவனை தொட்டால் தீட்டாயிடும் என்று சொல்லுரவா அல்லவா . அப்படி இருக்கும்போது எப்படி அவர்களுடைய குழந்தைகளை, ஒருவரோடு ஒருவர் உருண்டு புரண்டு அடித்து கொண்டு விளையாடும் கால்பந்தை விளையாட அனுமதிப்பாங்க. அது கூட ஒருவகையில் இந்திய கால்பந்தின் தூரதிருச்டமே. அவங்க மட்டும் அதிக அளவில் கால்பந்து விளையாடி இருந்தால் இந்நேரம் கால்பந்து இந்திய தொழிலதிபர்களின் செல்ல குழந்தையாக இருந்திருக்கும். பூட்டியாவும் கோவண கயிறு கட்டுகிறவங்க குடும்பத்தில் பிறந்து இருந்தால் பூட்டியாவுக்கும் பாரத ரத்னா விருது தர வேண்டும் என்ற ஊளைகள் விண்ணை தொட்டு இருக்கும். அவரோட பிறப்பில் ஏற்பட்ட சதி, அவரால கோவண கயிறோடு பிறக்க முடியலை.


எது எப்படி இருந்தாலும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஓய்வு பெறுவதன் மூலம் தனது மனைவி திப்னிசு மற்றும் அவர்களுக்கு பிறந்த ரெட்டை குழந்தைகளுடன் தமது சமயத்தை கழிக்க செல்லும் அவரை வாழ்த்தி வழி அனுப்பி வைப்போம்.

No comments:

Post a Comment