Sunday, August 14, 2011

இடஒதுக்கீட்டிற்கு எதிராக எழும்பும் ஒப்பாரிகள்

ரெண்டு நாளைக்கு முன்பு ஆராக்சன் என்ற இந்தி படத்தை பீகார், உத்தரபிரதேசு போன்ற மாநிலங்கள் தடை செய்து விட்டதாக செய்திதாள்களில் படித்த போது இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஏன் இத்தனை போராட்டங்கள் ஆதிக்க வெறி பிடித்த சமூகத்தினரால் பல தளங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது என்ற கேள்வி அதை படிக்கும் சமூக நீதியில் அக்கறை உள்ள எவருக்கும் எழவே செய்யும்..... அப்படி எனக்குள்ளே நான் எழுப்பிய கேள்விகளுக்கும் அதற்கான பதில்களையும் உள்ளடக்கியது தான் இந்த கட்டுரை ...

பல நூற்றாண்டுகளாக சாதியின் பெயரால் கல்வியும் , சமூக உரிமைகளும் மறுக்கப்பட்ட மக்களுக்கு அவர் தாம் முன்னோர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு அவர்களையும் எல்லாரையும் போல் கல்வி பொருளாதார நிலைமைகளில் முன்னேற வழி செய்வதற்காக உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சமூக அநீதி என்று ஊளையிடும் பார்ப்பனிய ஓநாய்கள்..... சாதியின் பெயரால் தெருவில் நடமாடுவதில் தொடங்கி கோவிலில் நுழைவது வரை பல விதமான இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் அடக்கி ஒடுக்கி வைத்திருகின்றனரே..... அதற்கு எதிராக ஏன் இவர்கள் தங்களுடைய வாயை திறப்பதில்லை.... இட ஒதுக்கீட்டால் திறமையான மற்றொருவரின் வாய்ப்பு பறிபோகிறது என்று ஊளையிடும் ஓநாய்கள், தங்களுடைய கடின உழைப்பால் அதிக மதிப்பெண்களுடன் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், போன்ற இந்திய அரசாங்க கல்வி நிறுவனங்களுக்குள் பொதுப்பிரிவில் தேர்வுபெற்ற ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சாதியின் பெயரால் மாணவர்கள் என்ற போர்வையில் கூட பயிலும் சாதி வெறியர்களால் அவமானபடுத்தப்படுவது அந்த மாணவனின் கடின உழைப்பை கொச்சை படுத்துவது ஆகாதா.....

டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு என தனி அறைகளும் ஆதிக்க சமூகதிற்கென தனி அறைகளும் எந்த திறமையை அடிப்படையாக வைத்து ஒதுக்கப்படுகின்றன. கடந்த பத்து வருடங்களில் இந்தியா முழுக்க நூற்றிற்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள்... இவ்வளவற்றிற்கும் அவர்களில் பலரும் பொது பிரிவினரோடு போட்டியிட்டு தேர்வு பெற்றவர்கள்......தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனரே, அதற்கு இந்த பார்ப்பனிய வெறியர்கள் என்ன சொல்ல போகிறார்கள்..... அவர்கள் எல்லாம் தகுதியானவர்கள் கிடையாதா......

உலகத்திலேயே சிறப்பாக வாந்தி பண்ணி கக்குவதற்கு கொடுக்கப்படும் மதிப்பெண்களால் மாணவர்களின் திறமையை மதிப்பிடுவதில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது என்றே நினைக்கிறேன்..... அதுவும் ஒன்றிரெண்டு மதிப்பெண்களை வைத்து மாணவர்களில் திறமையானவர்களை வகைப்படுத்துவது என்பது தான் மிக கேவலமான விடயம்.... முன்னேறிய நாடுகளில் மதிப்பெண்கள் மாணவர்களை ஏ, பி, சி என்று தரப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படும் ..மற்றபடி ஒரு மாணவரின் மதிப்பெண்கள் மற்ற மாணவர்களுக்கு கூட தெரியாது..... மாணவனின் மதிப்பெண் என்பது அந்தந்த பேராசிரியருக்கும் சம்பந்தப்பட்ட மாணவருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் ..மாணவர்களின் திறமைகளை மதிப்பிடுவதற்கு அவர்கள் வேறு பல அளவீடுகளை வைத்துள்ளார்கள் ...அதுவும் வாந்தி பண்ணி கக்குவது (plagiarism) முன்னேறிய நாடுகளின் பல்கலைகழகங்களில் மிகப் பெரிய குற்றம் .... ஆனால் இந்தியாவில் உள்ள பார்ப்பனிய வெறியர்களுக்கு அது தான் தேசிய சின்னம்.... அதுவும் இவனுங்க ரொம்ப பாடுபட்டு படித்து அதை கக்குவது கிடையாது தேர்வு கேள்விதாள்களையும் தேர்வுக்கு வரும் என கூறப்படும் கேள்விகளையும் தங்களுக்குள்ள அதிகார பின்புலத்தின் மூலமும், பண பலத்தின் மூலமும் அடைந்து பின்பு அந்த கேள்விகளுக்கான விடைகளை தேர்வுகளில் வாந்தி பண்ணி கக்குவது தான்.

சமீபத்தில் இந்திய ரயில்வேயில் வேலையாட்களை தேர்வு செய்வதற்கான தேர்வின் வினாதாள்கள் சந்தையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ரூபாய்க்கு விற்கப்பட்டது..... அதை செய்தது எசு.எம்.சர்மா என்ற பார்பனனும் அவனது மகனும், அதேபோல் கேத்தன் தேசாய் என்னும் பார்ப்பனியன் தான் இந்தியா முழுக்க மருத்துவ கல்விக்கான இடங்களை கூறு போட்டு விற்றான் ....... அவனுடைய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனிய வெறியர்கள் தான் .... பார்ப்பனிய வெறியர்கள் கல்விக்கான இடங்களை பணத்தை கொண்டு வாங்குவது மட்டும் திறமையான மற்றொரு திறமையான மாணவனின் கனவுகளை அழித்து விடாதா...... இட ஒதுக்கீடு தான் அழிக்குமா...... என்னவொரு திருட்டு தனம்.....

அதற்கப்புறம் அமிதாப் என்றதொரு அரை வேக்காடு இட ஒதுக்கீட்டால் திறமையான மாணவர்களின் வாய்ப்பு பறிபோகிறது என்றளவில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்து இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தில் தன்னுடைய பங்களிப்பையும் காட்டி இருக்கிறான். இவனுடைய லட்சணம் என்னவென்றால் உத்திரபிரதேசத்திலும் மகராட்டிராவிலும் விவசாயிகளுடைய நிலத்தை முறைகேடாக வாங்கி மாட்டி கொண்டவன். அது சரி...... இட ஒதுக்கீடு திறமைக்கு எதிரானது என்று படத்தில் சொல்லும் இவன் திருப்பதி கோவிலுக்கு போகும்போது மட்டும் சிறப்பு விருந்தினர் என்ற அயோக்கியத்தனத்தின் பெயரில் புறவாசல் வழியாக தரிசனம் செய்து விட்டு வருகிறானே.... அங்கே அது தங்களுடைய திறமையால் (நாசமா போவதற்கு) .... இவனை போன்ற புறம்போக்குகள் வருவதற்கு பலமணி நேரங்களுக்கு முன்பே காத்திருந்து வரிசையில் இடம் பிடித்தாலும் கூட...... இவனுக தரிசனம் செய்து விட்டு போன பின்பும் அந்த சாமனியர்கள் வரிசையில் காத்து கொண்டிருப்பது அவர்களுடைய இடம் பிடிக்கும் திறமையை அவமதிப்பது என்று இந்த அரைவேக்காட்டுக்கு தெரியாதா.

கோவிலில் மணியாட்டும் உரிமையை ஒரு கும்பலுக்கு மட்டும் பட்டா போட்டு கொடுத்திருப்பது... அந்த மணியாட்டும் தொழிலுக்காக எல்லாவற்றையும் கற்று தேர்ந்த பிறகும் சாதியின் பெயரால் ஒருவனுக்கு அந்த உரிமை மறுக்கபடுகிறதே அது அவனின் திறமையை அவமதிப்பதாகாதா..... கடந்த காலங்களில் இட ஒதுக்கீட்டின் பலன் பாதிக்கப்பட்டவர்களை சரியாக சென்றடையாத காலத்தில் திருட்டு தனமாக back logs என்ற போர்வையில் அந்த இடங்களை அனுபவிக்கும்போது இந்த பார்ப்பனிய வெறியர்கள் சும்மா இருந்து விட்டு இப்போது இட ஒதுக்கீட்டின் பலன்களை சாதி ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகம் நுகர ஆரம்பிக்கும் நேரத்தில் ஐயோ திறமை வீணாய் போகிறதே என்றும் அலறும் ஓநாய்களின் செயல்களில் சில உள் அர்த்தங்கள் இருக்கவே செய்கிறது.....

ஐம்பது வருடங்களின் இட ஒதுக்கீட்டின் பயனால் தங்களையே எதிர்க்க துணிந்தவர்களை இப்படியே விட்டு வைத்தால் நமக்கு இணையாக எல்லா மட்டங்களிலும் வளர்ந்து விடுவார்களா என்று எண்ணும் ஆதிக்க வெறியர்களின் பயம் தான் அது. தங்களுக்கு ஏற்ப அரசு இயந்திரங்களும் அதிகாரமும் வளைந்து நெளிந்து இயங்கியது வரை அதை குறுக்கு வழியில் அனுபவித்த இந்த குள்ள நரிகள் இப்போது திறமையை பற்றி பேசுகின்றன..... இட ஒதுக்கீட்டை பற்றிய தெளிவை சாதிய ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட சமூகம் தெரியாது இருந்த வரை மருத்துவ, பொறியியல் மற்றும் இன்னபிற கல்விக்கான எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது கல்வியின் தரத்தை குறைக்கும் என்று குதித்த பார்ப்பனிய வெறியர்கள்..... அந்த சமூகங்கள் இட ஒதுக்கீட்டால் தாங்கள் பெற போகும் முன்னேற்றங்களையும் சம உரிமைகளையும் அறிய ஆரம்பித்த பின்பு, பார்ப்பனிய சாதி வெறியர்கள் தங்களுடைய அதிகார பின்புலத்தால் உயர்கல்வியை தனியார் மயமாக்கி தங்களுடைய இருப்பு பாதிக்கபடாதவாறு பார்த்து கொண்டார்கள்... இப்போது அரசு கல்வி நிறுவனங்களை தனியார் கல்வி நிறுவன முதலாளிகளோடு கூட்டு சேர்ந்து சின்னாபின்னபடுத்தி கொண்டிருப்பதும் இந்த பார்ப்பனிய கும்பல் தான்..... இப்போது அவர்களுடைய ஒரே கவலை இவ்வளவு நாளும் தாங்கள் ஏகபோக உரிமை கொண்டாடிய ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் நிறுவனங்களிலும் தங்களுக்கு அடிமையாக இருந்தவர்கள் இட ஒதுக்கீட்டின் துணையோடு பங்கு கேட்க வந்து விட்டார்களே என்ற கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த இட ஒதுக்கீட்டிற்கெதிரான ஊளைகளுக்கு காரணம்

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி கொண்டிருக்கும்போதே அந்தந்த கல்வி நிறுவனங்களில் அவனுகளுடைய இருப்பு பாதிக்கப்படாதவாறு இருக்க உயர்கல்விக்கான இடங்களையும் அதிகரிப்பதும்..... புதிய ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களை தொடங்குவது என்பது போன்ற வேலைகளை தங்களுடைய அதிகார பலத்தோடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.. இதே பார்ப்பனிய வெறியர்கள் தான் முன்பு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களில் படிப்பிற்க்கான இருக்கைகளை உயர்த்துவதை..... அது கல்வியின் தரத்தை பாதிக்கும் என்று கடுமையாக எதிர்த்தவர்கள்.... இன்று அதே உயர் படிப்புகளில் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று போராடுவதும் அதே பார்ப்பனிய வெறியர்கள் தான். இட ஒதுக்கீட்டை இவ்வளவு பலமாக எதிர்க்கும் வெறியர்கள் தான் கடந்த காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பல தில்லு முல்லுகளை பண்ணி அண்ணா பல்கலைகழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் புறவழியாக நுழைந்தவர்கள்..... அதுவும் கொடுமை என்னன்னா வளைமட்டை (Hockey), கபாடி, தடகளம் போன்ற விளையாட்டுகளில் தங்களுடைய கடின உழைப்பால் தேசிய அளவில் விளையாடிய ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த வீரர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, போலி விளையாட்டு சான்றிதழ்களையோ, இல்லை யாருக்குமே தெரியாத விளையாட்டுகளின் சான்றிதழ்களையோ காட்டி இடம்பிடித்த பார்ப்பனிய புறம்போக்குகள் ஏராளம் உண்டு. அவனுங்களுக்கு தோதுபடுகிற சமயமெல்லாம் திறமையை தூக்கி குப்பை தொட்டியில் வீசுவதும், தோதுபடலைன்னா திறமை கேவலப்படுத்தப்படுகிறது என்று முனகுவதிலும் பார்ப்பனிய வெறியர்களுக்கு இணை அவர்களே தான்.

அதே போல இந்தியாவுக்கு பிறநாடுகளுக்கும் இடையிலான மனிதவள ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைகழகங்களிலும், மனிதவள மேம்பாட்டு துறைகளிலும் இந்தியாவுக்கு என்று ஒதுக்கப்படும் இருக்கைகளையும் இந்த பார்ப்பனிய கும்பல் திட்டமிட்டு அபகரித்து விடுவது நாம் யாருக்கும் தெரியாத அவர்களுடைய மிகப்பெரிய மோசடிதனம்.... அப்போதெல்லாம் அங்கு திறமை குப்பை தொட்டியில் வீசப்படும்.... நம்மவர்களுக்கு உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிய பிரதிநித்துவத்தை பற்றிய அறிவே சரிவர இல்லாமல் இருக்குபோது, அதை பற்றி கவலைபடுவதற்கு எங்கே நேரம் இருக்கும்.

ரெண்டாம் உலகப்போரில் யூத மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளுக்கு விலையாக இன்றைய செருமானிய சமூகம் அவர்களுக்கு எதிராக யூதர்களால் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கும் பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளதோடு அதற்கு விலையாக யூதர்களுக்கு இன்றளவும் இழப்பீட்டை அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்... ஆனால் சாதியின் பெயரால் பல நூற்றாண்டுகளாக சக மனிதர்களுக்கு எதிராக வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்ட பார்ப்பனிய வெறியர்களுக்கு எதிராக ஏன் அவ்வாறு எந்த வழக்குகளும் தொடுக்கப்படவில்லை என்பது உலகப் பெரும் புதிர்களில் ஓன்று தான். தங்களுடைய முன்னோர்கள் செய்த தவறுக்கு இன்றைய தலைமுறைய சேர்ந்த செருமானியர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள்.

இந்தியாவில் முந்தைய தலைமுறையை சேர்ந்த பார்ப்பனிய வெறியர்கள் சாதியின் பெயரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு இன்றைய தலைமுறையினர் சிறு வருத்தத்தை கூட தெரிவிக்காமல்..... ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தடை செய்ய துடிக்கும் அவர்களது ஓலங்களில் இருந்து எந்த அளவிற்கு அவர்கள் நவீன சாதி வெறியர்களாக வார்த்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அறியலாம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு இவ்வளவு காலம் அவர்கள் அனுபவித்த கொடுமைகளில் இருந்து மீள இட ஒதுக்கீடு ஒரு கருவியாக இருக்கும் போது அதையும் கொடுக்க கூடாது என்று சொல்லும் இளைய தலைமுறையை சேர்ந்த பார்பனிய வெறியர்களின் வன்மம் அவர்களது முந்தைய தலைமுறையினரை விட எந்த அளவிலும் குறையவில்லை என்பதற்கு இந்த இட ஒதுக்கீட்டிற்கு ஏதிரான திரைப்படங்களும், போராட்டங்களும் சாட்சியாக நிற்கின்றன.......

இவ்வளவு நாட்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை எந்தெந்த வழிகளில் எல்லாம் தடுக்க முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் தடுத்து விட்டு ..இப்போது இட ஒதுக்கீட்டின் மூலம் தாங்கள் இழந்த உரிமைகளை சட்ட ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் அடைகிற போது, தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதாக குரலெழுப்பும் இந்த சாதி வெறி பிடித்த குள்ள நரிகளின் ஆதிக்கம் பேசும் குரல் வளைகள் நெறிக்கப்படவேண்டும்




No comments:

Post a Comment