Monday, August 22, 2011

துறைக்கு முருக்கானவர் பற்றிய கிசு கிசு




துறைக்கு முருக்கானவர் திமுக ஆளும்கட்சியாக இருந்தபோது அவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு சில மனவருத்தத்துடன் இருந்தார் என்பது எல்லாரும் அறிந்ததே.... ஒரு கட்டத்தில் தலைமைக்கு அவருக்கும் உள்ள புரிந்துணர்வில் ஏற்பட்ட குழப்பத்தால் உருவாகிய மனக்கசப்பினால் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். ஒரு சில நேரங்களில் அவருக்கு உண்டான உச்சகட்ட வெறுப்பில் திமுகவை விட்டே வெளியேறி விடலாமா என்று கூட யோசனை செய்தவர். என்ன இப்போது இப்படி மாறி விட்டார் என்று கேட்கலாம், அது அவர் கடந்த காலத்தில் செய்த அவருடைய தவறுகளையும் எண்ணி பார்த்தாரோ என்னவோ இப்போ ஆள் ரொம்ப உற்சாகமாகி விட்டார்.... அதற்கு மற்றுமொரு காரணம் என்னன்னா கலைஞர் மீது அவருக்குள்ள பாசமும் பிடிப்பும் தானாம், கண்டவருக்கு அடிமையாக இருப்பதை விட கலைஞர் காலை சுற்றி வரும் நன்றியுள்ள நாயாக இருந்து விடுவதே மேல் என்பது தான் அவரது எண்ணமாம்..... கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை அவரோட சாதிகாரங்களை முன்னிறுத்தி வேலை செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. ஆனால் ஆள் இப்போது அப்படி கிடையாதாம், அடியோடு மாற்றம் தென்படுகிறதாம். எல்லாரையும் அரவணைத்து போகவேண்டும். பதவிக்காக உழைப்பதை விட கட்சிக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடம் மேலோங்கி நிற்கிறதாம். சாகும் போது கூட திமுக கொடியுடன் தான் சாக வேண்டும் என்பதே அவருடைய உள்ளகிடக்கையாம், அதோடு ஸ்டாலினை மனதளவில் கலைஞருக்கு அடுத்த திமுக தலைவராக ஏற்று கொண்டு விட்டாராம். அதனால் தான் என்னவோ, தளபதியை மறுபடியும் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்ற வேட்கையும் , வெறியும் அதிகரித்து விட்டதாம்..... ஆக ஆள் இப்ப பழைய முறுக்கை ஏற்றி கொண்டு வேட்டியை மடித்து கட்டி விட்டு களத்தில் பழைய பாணியில் புகுந்து ஒரு கை பார்த்து விடுவோம் என்ற மனநிலையில் இருக்கிறாராம்...... ம்ம்ம்ம் சில பேருக்கு ஆட்சியில் இருக்கும் போது தான் கழகத்தின் மீது பாசம் வருகிறது, ஆனால் சில பேர் என்னன்னா திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது தான் பொலி காளைகளாக வளம் வருகிறார்கள்...... தான் ஆசைப்பட்ட பதவி கிடைக்காததால் கழகத்தில் இருந்து கொண்டே எதிர்முகாமுக்கு தலைமையை பற்றிய செய்திகளை கடத்துவதும், தொழிலில் எதிர்முகாமில் உள்ளவர்களோடு கூட்டு போட்டு கொண்டு கொள்ளையடிப்பதும் என்று சென்று கொண்டிருக்கும் கருப்பு ஆடுகள் ஒருபுறம் இருக்கும் போது, மனதில் இருப்பதை சூழ்நிலையை பற்றி கவலைப்படமால் உள்ளதை உள்ளபடியே பேசிவிடும் வெள்ளந்தியான மனதை படைத்த சில பேர் மறுபுறம்...... சில நேரத்தில் சில மனிதர்கள் ......

காதில் விழுந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் ...... நமக்கு தான் ரகசியத்தை பாதுகாக்க தெரியாதே

No comments:

Post a Comment