இப்படி நான் ஒரு தலைப்பை போட்டவுடனே .....அதெப்படிங்க திராவிடத்தை காக்க வந்த தேவி ஆரியர்களின் தலைமையில் இயங்கும் காவி கும்பல்களுக்கு முகவராக முடியும் என்று அப்பாவி தனமாக கேட்பது புரிகிறது .... அதை விளக்க தான் இந்த பதிவு.
செல்வி. செயாவோட செயல்களை காவி கும்பல்களின் செயல்களோடு ஒப்பிட்டு பார்த்தால் காவி கும்பலில் உள்ளவர்களை விட செயாவின் பார்ப்பனிய இந்துத்துவ பற்று கொஞ்சம் தூக்கலாகவே தெரியும்..... அதை திராவிட இயக்க போர்வையில் மறைந்து கொண்டு செயல்படுத்துவதால் நம்மில் பல பேருக்கு புரிவதில்லை...... நாம தான் பெரியார் என்றைக்கு மறைந்தாரோ அன்றைக்கே சுயமரியாதையும், பகுத்தறிவையும் கழட்டி ஆணி அடித்தல்லவா மாட்டி வைத்திருக்கிறோம்.......
தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் எழுந்த சமூக புரட்சியின் விளைவாக பக்கத்து மாநிலங்கள் வரை வந்து கால் நனைத்த காவி கும்பல், தமிழகத்தில் தடம் பதிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்த காலங்களில் காவி பார்ப்பனிய கும்பலுக்கு வராது வந்த மாமணியாய் வந்து வாய்த்தவர் தான் நம்ம செல்வி...... எப்படி பகுத்தறிவை போதித்த புத்தரின் கொள்கைகளை பரப்பிய பௌத்தம், இடை நூற்றாண்டுகளில் பௌத்தத்திற்குள் தந்திரமாய் நுழைந்த பார்ப்பனிய வெறியர்களால் அலங்கோலப்படுத்தப்பட்டு கடைசியில் தென்னிந்தியாவில் இருந்து எவ்வாறு ஒழித்து கட்டப்பட்டதோ, அதே போல் தான் சாதிய ஏற்ற தாழ்வுகளால் பின்னோக்கி சென்று கொண்டிருந்த தமிழகத்தை பகுத்தறிவு கருத்துக்களால் பண்படுத்தி முன்னோக்கி இழுக்க எழுப்பட்ட இயக்கங்களில் ஒன்றான திராவிட இயக்கத்தின் வழிமாறி போன கிளைகளில் ஒன்றை கைப்பற்றி அங்கு காவி துணியை விரித்து வியாபாரம் செய்ய அனுப்பப்பட்ட முகவர்களில் ஒருவர் தான் செயா. திராவிட இயக்கத்தின் கிளைகளில் ஒன்றான அதிமுகவை (அப்படி அவங்க சொல்லிகீறாங்க) பார்ப்பனிய இந்துத்துவ மயப்படுத்தியதில் செயாவிற்கு மிகுந்த பங்கு உண்டு...... அதன் முத்திரை தான் அரசு இயந்திரத்தை ராகு காலத்திற்கு ஏற்றவாறு இயக்குவதில் கொண்டு வந்து விட்டிருக்கிறது......
அதெப்படிங்க திமுகவில் இருந்த நடிகர் சிவாசி கணேசன் திருப்பதிக்கு சென்று வந்ததற்காக “திருப்பதி கணேசா, திரும்பி போ” என்ற கோசங்களை எழுப்பி கடைசியில் அவரை காங்கிரசில் கொண்டு போய் சேர்க்க வைத்த வீரியம் கொண்ட தொண்டர்களையுடைய திராவிட இயக்கம் இப்போது கோவில்களில் கூழ் காய்த்து கொண்டிருக்கிறது என்று கேட்கலாம்...... அதுதான் பார்ப்பனிய தந்திரம். பார்ப்பனியம் எதிரியுடன் நேருக்கு நேர் மோதி செயிக்க முடியவில்லையென்றால், எதிரியின் கூடாரத்திற்குள் தந்திரமாக நுழைந்து அதனை வலுவிழக்க செய்யும் வேலைகளை ஆரம்பித்து விடும். பார்ப்பனிய தந்திரத்தில் முதன்மையானது...... நீதிகட்சி, பெரியாரின் திராவிடர் கழகம், போன்ற இயக்கங்களால் நடத்தப்பட்ட சமூக நீதி போராட்டத்தின் விளைவாகவும், வெள்ளையின கிருத்துவ மத போதகர்களின் (இன்றைய உள்நாட்டு நவீன கிருத்துவ மதவியாபாரிகளை இங்கு கருத்தில் கொள்ள வேண்டாம்) முயற்சியாலும் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேறிய சமூகத்தினரை பார்ப்பனியமயப்படுத்துவது தான்.. சாதிய ஏற்ற தாழ்வுகளால் சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் தற்காலத்தில், எதிரியை மன்னித்து விடுவோம் என்ற போக்கில் எதிரி கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளை பற்றிய வரலாற்றை மறந்து விடுகிறோம்... அந்த வரலாற்றை வருங்கால சமுதாயத்திற்கு எடுத்துரைக்க தவறியதால் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளையோர்கள் பார்ப்பனிய சூழ்ச்சிக்கு அடிமையாகி விடுகிறார்கள். எதிரியை மன்னித்தல் நல்ல விடயம் தான்., ஆனால் நமக்கெதிரான வன்மத்தை மனத்தில் தூக்கி கொண்டு அலையும் எதிரியை மன்னித்து விடுவதும், அவர்களின் கடந்த காலத்தைய அடக்குமுறைகளை மறந்து விடுவதும், நல்ல கூர்மையான ஆப்பை செய்து அதன் மேல் உட்கார்வது போன்ற செயலுக்கு ஈடானது....
இன்றைய சமூக சூழலில் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படுகிறவர்களை ஒடுக்கிறவர்களின் முந்தய தலைமுறையினர் பார்ப்பனிய வெறியர்களால் அத்துணை ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டவர்களே. சிறந்த எடுத்துக்காட்டென்றால் மார்புசட்டை போட கூடாது என்றும், பார்ப்பனிய வெறியர்கள் வரும்போது மார்பு சீலையை விலக்கி பெண்கள் தங்களுடைய மார்பகங்களை காண்பிக்க வேண்டும் என்றும் கொடுமைப்படுத்தப்பட்ட சமூகத்தை துணையாக கொண்டு தான் கன்னியாகுமரியில் பார்ப்பனிய வெறியர்கள் மண்டைகாட்டு மதகலவரத்தை தூண்டி விட்டார்கள்...... அது மதகலவரம் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும், அது உண்மையான காரணம் கிடையாது. அதை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் வெள்ளையின கிருத்துவ மதபோதகர்களின் போராட்டத்தால் சமூக பொருளாதார நிலையில் முன்னேறி கொண்டு இருந்த இரு சமூகத்தினரை மோதவிட்டு அவர்களின் பொருளாதாரத்தை உருக்குலைக்க வேண்டும் என்ற பார்ப்பனிய சூழ்ச்சியே...
மண்டைகாட்டு கலவரத்திற்கு பின்பு அரசு இயந்திரத்தால் செய்யப்பட்ட சில நகர்வுகள் தான் பகுத்தறிவு பாசறையாக நம்பப்பட்ட அதிமுக எவ்வாறு பார்ப்பனிய எலும்புகளை பாதுகாக்கும் சுண்ணாம்பு அடிக்கப்பட்ட கல்லறையாக பார்ப்பனிய வெறியர்களால் மாற்றப்பட்டது நன்கு துலங்கும்....... அந்த கலவரத்தை காரணமாக வைத்து பார்ப்பனிய வெறியர்கள் அப்போதிருந்த அரசின் மூலம் குமரி மாவட்டத்தில் அரசின் அனுமதி இல்லாமல் புதியதாக எந்த கிருத்துவ தேவாலயங்களும் கட்டப்பட கூடாது என்றும் புதுப்பிக்கப்படவேண்டிய கிருத்துவ ஆலயங்கள் அரசின் முன்னனுமதியை பெற்ற பின்பே புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற கட்டுபாடுகளை ஏற்படுத்தினர். அதே நேரத்தில் புதிதாக எழுப்பப்படும் இந்துமத கோவில்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது......(ஆனால் இன்றைய கிருத்துவ மதவியாபாரிகள் சட்டத்தில் இருக்கிற ஓட்டையை வைத்து அந்த கட்டுப்பாடுகளை ஓன்றுமில்லாமல் செய்து விட்டார்கள் என்பது வேறு விடயம்)..... அதன் தொடர்ச்சி தான் பாபர் மசூதி இடிப்பின் போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரசேவை இயக்கம் மும்முரமாக இயங்கியதும், அன்றைய முதலமைச்சராக இருந்த செயா கரசேவையை ஆதரித்து பேசியதும்......
பார்ப்பனிய வெறியர்கள் தங்களுக்கு சொந்தமான ஊடகங்களின் வாயிலாக செயாவை சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவராக காண்பிப்பது., அவர் செய்த ஊழல் பற்றிய வழக்குகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்வது, அவரின் இந்துத்துவ வெறியை மறைத்து சிறுபான்மையினத்தவரின் பாதுகாவலராக காண்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஒட்டு மொத்த மக்களின் அங்கீகாரத்தை செயாவிற்கு பெற்று தருவதன் மூலம் அதிகாரத்தை தங்கள் பிடியில் வைத்து கொள்வதற்கான செயல் திட்டங்கள்.
இந்தியாவின் சமய சார்பிண்மையை பற்றி பெருமையாக பேசும் பார்ப்பனிய ஊடகங்கள் ஏன் செயலலிதா ராகுகாலம் பார்ப்பது, சுதந்திர தினத்தன்று அரசு இயந்திரத்தை ஒரு குறுப்பிட்ட மதகோவில்களில் மட்டும் சேவகம் செய்ய பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுத்துவதை பற்றி வாய் திறப்பதில்லை..... .அதெல்லாம் ஒரு மதச்சார்பு செயல்கள் கிடையாதா. அவர்கள் அதை செய்ய மாட்டார்கள்...... அதற்கு நிறைய காரணங்கள் உண்டு ...... வட இந்தியாவில் பார்ப்பனிய வெறியர்களின் ஆதிக்கம் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது கிட்ட தட்ட எல்லா பெரிய கட்சிகளின் தலைமைகளும் அவர்களது பிடியில் தான்....... ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலைமை வேறு. தமிழகத்தில் பல்வேறு தளங்களில் செயல்பட்ட சமூக புரட்சியாளர்களின் போராட்டத்தால் அரசியலில் பார்பனிய வெறியர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது.
சாதிய ஏற்ற தாழ்வுகளால் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இனக் குழுக்கள் கல்வி, பொருளாதார துறைகளில் பெற்ற வளர்ச்சிகளால் பார்பனிய வெறியர்கள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்க முடியாத நிலை ஏற்பட்டது. பார்பனியத்திற்கு தமிழகத்தில் மீண்டும் துண்டு போட்டு இடம் பிடித்து கொடுக்கவே, சமூக விடுதலை போராட்டங்களின் விளைவாக முன்னேறிய சாதிகளை இந்துத்துவ பார்பனியமயப்படுத்தும் செயல்களில் பார்ப்பனிய வெறியர்கள் சுற்றி திரிகிறார்கள். தமிழ் சமூகத்தில் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் மீண்டும் அதிகாரத்தை தங்கள் பிடியில் வைத்து கொள்ள பார்ப்பனிய ஊடகங்கள் தங்களுடைய சக்தி முழுவதையும் திரட்டி செயல்படுகின்றன. சமூக விடுதலை தளங்களில் ஒன்றிணைந்து செயல்பட்ட பல்வேறு சமூகங்களையும் பிரித்து தரப்படுத்தி மறுபடியும் பார்ப்பனிய அடுக்குமுறையை கொண்டு வர துடிக்கின்றனர். இதை எல்லாம் செயல் படுத்த அவர்கள் பயன்படுத்தும் கருவி தான் செயலலிதா.
தமிழர்களுக்கு வெள்ளை தோல் மீதான மோகமும் ( பாதி எம்ஜியார் ரசிகனுக மெய்மறந்து சொல்வது இது தான், என்னமா சிகப்பா இருக்காரு...), எதிரிகளை மன்னிக்கிறோம் என்ற போக்கில் கடந்த காலத்தில் அவர்கள் கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறைகளை மறந்து விடுவதும், அவர்கள் எல்லாம் இப்போ பழைய மாதிரி கிடையாது என்று குப்புற படுத்து கொண்டே சான்றிதழ் கொடுப்பதும், பார்ப்பனிய வெறியர்கள் உள் அர்த்தத்தோடு கொடுக்கும் புதிய சரக்கான உயர் சாதி அங்கீகார சாராயத்தை குடித்து விட்டு பார்ப்பனிய வெறிபிடித்து திரிவதும், தற்காலத்திய ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் அவர்களை ஒடுக்குவதற்கு பார்ப்பனிய வெறியர்களால் தூண்டி விடப்பட்டவர்களே நவீன இடைச்சாதி பார்பனிய வெறியர்கள் என்று உண்மையை அறிந்து கொள்ள முயலாமல் ஏவி விட்டவனிடமே சென்று சரணடைவதும், சினிமாவின் மீதான மோகமும், இந்திய வேசியம் மீதான காமமும் பார்ப்பனிய வெறியர்களின் பழுவை குறைத்து விட்டது என்றே சொல்லலாம். ஆனாலும் பார்ப்பனிய வெறியர்கள் தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சாதாரணமாக எண்ணி விடாமல், எவ்வளவு சீக்கிரம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் இந்துத்துவமயப்படுத்தி பார்ப்பனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரமுடியுமா அவ்வளவு சீக்கிரம் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் தூக்கத்தை மறந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் ..அவர்களுக்கு தெரியும்...... இன்னொரு முறை தமிழகத்து மக்கள் உணர்வடைந்துவிட்டால் தங்களது தூக்கம் நிரந்தரமாக கெட்டு போய்விடும் என்பது....... ஆக தமிழர்களின் சுயமரியாதையை அடித்து நொறுக்க பார்ப்பனிய வெறியர்களின் கையில் கிடைத்திட்ட ஆயுதம் தான் செயா...... ஈழத்துக்கு எதிராக கூக்குரலிட்ட பார்ப்பனிய வெறியர்கள் தற்போது ஈழத்திற்காக பரிந்து பேசுவது போன்று நடிப்பது என்பதெல்லாம் தமிழர்களை உணர்விழக்க வைத்து அவர்களின் சுயமரியாதையை அடித்து நொறுக்குவதற்காக கொடுக்கப்படும் போதை.
பார்ப்பனிய ஆதிக்கம் அதன் உச்சத்தில் இருந்தபோது எவரையும் சார்ந்திராமல் தாங்களே கட்டமைத்த சமூகநீதி போராட்டங்களால் தங்கள் உரிமைகளையும், சுயமரியாதையையும் வென்றெடுத்த தமிழர்கள் ஈழ உரிமையை மீட்டெடுப்பதற்கு பார்ப்பனிய வெறியர்களின் காலில் வீழ்ந்து கிடப்பது தான், பார்ப்பனியம் செயாவை முகவராக பயன்படுத்தி பெற்ற வெற்றியின் ஆரம்பம்..... அது இப்போது சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடிய வீரர்களை சாதீய அடையாளப்படுத்தி அவர்களுக்கு நினைவு சின்னங்களை அமைப்பது, சாதீய வெறியர்களை தேசியவாதிகளாக சாயமடிப்பது என தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கும் சுயமரியாதையை தொலைத்த கேனபயலுங்க கூட்டம் போட்டு பாராட்டி கொண்டு அலையுறானுங்க. முன்பு தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், கர்ம வீரர் காமராஜரையும் சாதிய தலைவர்களாக அடையாளபடுத்த மெனக்கெட்டு அலைந்த பார்ப்பனிய கும்பல்..... இப்போது ஒட்டு மொத்த தமிழகத்தையும் சாதிவெறி பிடிக்க வைத்து தன்னுடைய பார்ப்பனிய வலைக்குள் வீழ்த்த கங்கணம் கட்டி கொண்டு அலைகிறது.
என்னய்யா காவிகும்பலின் முகவரா செயா என்று கேட்டு இப்போ பார்ப்பன வெறியர்களின் முகவர் செயா என்பது போல் முடித்திருக்கிறீரே... இது முரண்பாடாக இல்லையா என்று கேட்கும் தோழர்கள், காவிகும்பல்கள் தூங்குவதே பார்ப்பனிய வெறியின் நிழலில் தானே என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பார்ப்பனிய வெறியர்களுக்கு காவி மட்டுமே அடையாளம் கிடையாது. அவர்கள் இருக்கிற இடத்திற்கேற்ப சட்டையையும் சட்டையின் நிறத்தையும் மாற்றி கொள்வார்கள்...... கம்மூனிச போர்வையை போர்த்தி கொள்வார்கள், முற்போக்கானவர்கள் என்ற முகமூடியை அணிந்து கொள்வார்கள், தேசியத்தை எங்கள் தந்தை என்பார்கள், உரையாட பயன்படும் மொழியை தங்கள் அன்னை என்பார்கள், சிறுபான்மையினத்தவரை காக்கும் சிறகுகள் என்பார்கள், குடிசைகள் எரியும்போது நீலி கண்ணீர் வடிப்பார்கள் ..... சாதி மத வெறியை வேரறுக்க வந்த சமதர்ம சிற்பிகள் என்று சிலிர்த்து கொள்வார்கள் ஆனால் சட்டைக்குள் ஓடும் பார்ப்பனிய வெறியின் மூல வேரை துறக்க மாட்டார்கள் . அதற்கு மிகச்சிறந்த எடுத்து காட்டு செல்வி செயலலிதா......
No comments:
Post a Comment