Sunday, October 2, 2011

சீமானும் பரமக்குடி படுகொலையும்

இப்படி ஒரு தலைப்பை பார்த்தவுடன் பலபேர், என்ன சார் சீமானுக்கும் பரமக்குடி படுகொலைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பலாம். பின்ன உலக தமிழர்களின் விடுதலைக்காகவும் , ஈழ தமிழர்களின் படுகொலைகளையும் எதிர்த்து போரட்டங்கள் நடத்த காப்புரிமை பெற்ற ஒரே இயக்கம் எங்கள் சாதி தமிழர் இயக்கம் என்று அர்னால்டு சுவாசினேகரை விட ஒரு படி மேல் சென்று நெஞ்சை விரித்து காட்டும் அண்ணன் சீமானுக்கு பரமக்குடியில் நடந்த படுகொலைகளை கண்டிப்பதில் முதல் பங்கு இருக்காதா என்ன ?, அப்படி யாம் எண்ணுவதினாலேயே இந்த தலைப்பு.


தமிழ்நாடே பரமக்குடி படுகொலைகளை பற்றி பேசி கொன்டிருந்தபோது, எங்கே, ஈழத்தில் நடந்த படுகொலைகளை பற்றி பேசி கல்லா கட்டி கொண்டிருந்த அண்ணனை காணுமே என்று பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போய் தான் இருந்தார்கள். அவர்கள் அண்ணன் சீமான் பரமக்குடி படுகொலைகளை பற்றி கண்டித்து பேசுவதால் கல்லா கட்ட வாய்ப்பு கிட்டாது என்ற உண்மையையும், அரசை கண்டித்து இருந்தால் அவருடைய கடந்த கால லட்சுமி வீட்டு விசயம் தோண்டி துருவப்பட்டு அண்ணனின் கோவணம் கழட்டப்படும் அசிங்கத்தையும் அறியாமல் இருக்கலாம். பரமக்குடியில் காவாலி துறையால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு வேளை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்திருந்தால் அண்ணன் ஒப்பாரி வைத்திருப்பார். பைசா கிடைத்தால் கோவணம் போனாலென்ன என்ற மனநிலையாவது அண்ணனுக்கு இருந்திருக்கும். ஆனால் இறந்தவர்களின் குடும்பங்கள் அன்றாடம் காய்ச்சிகள் அல்லவே. எப்படி ஒப்பாரி வைக்க முடியம்.

காவல் துறையினர் தடை தடை என்று சொன்னால் எமக்கு அது உடை உடை என்று தான் கேட்கிறது
என்று அய்யாவின் ஆட்சி காலத்தில் வீராவேசத்துடன் கவிதை பாடிய அண்ணன், சின்னம்மாவின் வழிநடத்துதலில், அம்மாவின் ஆட்சிகாலத்தில் அவரது கட்டுப்பாட்டில் செயல்படும் காவாலி துறை இயந்திரத்தால் நடாத்தப்பட்ட பரமக்குடி படுகொலைகளை, படுகொலை என்று ஒப்பு கொள்ள கூட மனம் வராமல் அதை கலவரத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என்று அவருடைய இணையதளத்தில் ஈன சுவரத்தில் முனகி இருக்கிறார்கள். அதில் இருந்தே நாம் சாதி தமிழர்களின் சோரம் போன வீரமும் மண்டி போட்டதில் அவிழ்ந்து போன கோவணமும் நன்றாகவே நாறுகிறது.

கீழே உள்ள படத்தில் சீமானின் நம்ம சாதி தமிழர்களின் இணையத்தில் வெளியிடப்பட்ட பரமக்குடி படுகொலையை பற்றிய செய்தியில் அதை காணலாம்.

From 3 October 2011


அவங்களோட கூற்றின்படி பரமக்குடியில் சாலை மறியல் நடக்கலையாம். கலவரத்தை தடுக்க தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாம். கலவரத்தை காவாலி துறை அரங்கேற்றவில்லையாம். அங்கே நடந்தது படுகொலையும் இல்லையாம். கலவரத்தை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தான் மக்கள் உயிரிழந்தார்களாம். என்னவொரு முடிச்சவிக்கி தனம்.

சின்னம்மாவின் தலைமையிலான சாதி வெறியர்களின் வழி நடத்துதலில், சுயமரியாதைக்காக போராடி படுகொலை செய்யப்பட்ட தலைவனின் நினைவு தினத்தை குலைப்பதற்கு வேண்டி திட்டமிட்டு நடத்தப்பட்ட ஓன்று தான் பரமக்குடி படுகொலை என்பது உலகிற்கே தெரிந்த விடயம் என்கிற போது அந்த சம்பவத்தை நடத்தியவர்களை கண்டும் காணாமல் சென்று விடுவதில் இருந்தே தெரியவில்லையா அண்ணன் எந்த வகையான தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார் என்று, அண்ணனுடைய கவனத்தையும் அனுதாபத்தையும் பெற வேண்டுமென்றால் ராசபக்சேவின் கையால் தன் சாக வேண்டுமோ என்னவோ.

அதை விட கொடுமை என்னன்னா ... செப்டம்பர் 11 ஆம் தேதி சாதி வெறி பிடித்த செயலலிதாவின் காவாலி துறையால் நடாத்தப்பட்ட படுகொலைகளால் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் சொல்ல 14 நாட்கள் கழித்து செப்டம்பர் 25 ஆம் தேதி செல்கிறார்........ அதிலும் அவரோட அடியோட பொடிகள் பண்ணும் ராவடிதனம் தான் அதற்கு மேல்..... பரமக்குடி கலவரத்தை பற்றி அண்ணன் என்ன சொல்லுறாருன்னு கேட்டா அவங்க கேட்ட கேள்விக்கே சம்பந்தமில்லாமல் “தலித்தியம் பேசி அரசியல் பண்ணி கொண்டிருந்தவங்க எல்லாம் பரமக்குடி கலவரத்தை பற்றி எதுவும் பேசாமல் ஓட ஒளிந்து விட்ட நிலைமையில் எங்க அண்ணன் இன்று .. (அதாவது செப்டம்பர் 25 அன்று) .... பரமக்குடியில் அடிபட்டவங்களோடு மூணு நாள் தங்கி இருந்தார்” என்று கூச்சமே இல்லாமல் சுய தம்பட்டம் அடிக்கிறதை பார்க்கும் போது, இவனுங்க கடந்த கொஞ்ச நாட்களாகவே தோட்டத்தில் கிடைக்கிற கஞ்சாவை அடித்து விட்டு அப்பப்ப குப்புற படுத்து தூங்கி விடுகிறானுங்க என்று யாம் நினைத்தது சரியென்று தான் தோன்றுகிறது. பரமக்குடி படுகொலைகளை கண்டித்து ஏறக்குறைய மனிதநேயமுள்ள அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி முடித்த பிறகு, இந்த தறுதலைகள் இப்ப வந்து இப்படி சீனை போட்டால், பின்ன எப்படி தான் எண்ணுவதற்காம்.


ஆண்ட பரம்பரையினர் என்று ஊளையிட்டு கொண்டு, கோவண கயிறோடு அலையும் அம்பிகளின் மலத்தை வாழை இழையில் அள்ள போட்டி போடும், அவங்க உறவுக்காரன்களா இருந்து இருந்தால் துப்பாக்கி சூடு நடந்த அன்றைக்கே போய் கத்தி சண்டை போட்டு இருப்பாங்களோ.


அது சரி......... நடிகைகளின் கோவணத்தை துவைத்து கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறவருக்கு பரமக்குடிக்கு செல்ல எப்படி நேரம் கிடைத்தது என்றும் எமது மனதில் கேள்வி எழும்பாமல் இல்லை. ஒரு வேளை அடிபட்டவங்க எப்படி எல்லாம் வேதனைகளை அனுபவிக்கிறாங்க என்பதை பற்றிய லைவ் கமென்ட்ரியை அவங்க அண்ணன் நடன ராசனுக்கு கொடுக்க போயிருப்பானோ.


மண்டலம் மாணிக்கம் புதூரில் சிறுவனை கொலை செய்து தங்களது ஆதிக்க சாதி வெறித்தனத்தை காட்டிய கவாலிகளை கண்டிக்க துப்பில்லை, சாலை மறியல் செய்து தங்களது எதிர்ப்பை அரசிற்கு காட்டிய அப்பாவிகளை துப்பாக்கியால் சுட்டும், கட்டைகளால் அடித்தும் கொன்று தங்களது சாதி வெறியை காட்டிய சாதி வெறி படித்த காவல் துறையினரையும் அவர்களை ஏவி விட்ட அயோக்கியர்களையும் எச்சரிக்க வக்கில்லை. ஆனால் இப்ப வந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்ல வந்திட்டானுங்களாம்.


ஐயோ..... இவனுங்க தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம் என்று கூவுவது தான் பயங்கரமாயிருக்கிறது. இவனுங்களை பார்க்கும் போதெல்லாம், புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கனவு கண்ட சாதி ஒழிந்த தமிழ் தேசியத்தை இவனுங்க கழுத்தை நெரித்து கொன்று விடுவான்களோ என்ற பயம் தான் மேலிடுகிறது.


இவனையெல்லாம் அந்த ஊருக்குள்ளேயே வர அனுமதித்து இருக்க கூடாது என்று தான் எண்ண தோன்றுகிறது

No comments:

Post a Comment