Tuesday, October 25, 2011

உள்ளாட்சி தேர்தல் தோல்வியால் விசுக்கி காந்தம் கவலையா ?

யாராவது இப்படி மேல் உள்ள தலைப்பில் உள்ளபடி விசுக்கி காந்தத்திற்க்காக கவலைபட்டால் உங்கள் கவலைகளையெல்லாம் மூட்டை கட்டி குப்பை தொட்டியில் எரிந்து விடுங்கள். உங்கள் கவலைகளை தெருக்களில் சுற்றி வரும் சொறி நாய்கள் பிய்த்து ஆய்வு செய்யட்டும்.


விடயத்திற்கு வருவோம் கருப்பு எமுசியாருக்கு தேர்தல் தோல்விகளை பற்றிய கவலையை விட உள்ளாட்சி தேர்தலில் விசுக்கி அவரோட கட்சியின் சார்பாக போட்டியிடுவதற்காக விலைக்கு விற்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஏலத்திற்கு விடப்பட்ட வேட்பாளர் இருக்கைகளின் மூலமாகவும் மூட்டை கட்டப்பட்ட பணத்தை எப்படி பதுக்குவது என்ற கவலை தான் ஆட்டி படைக்கிறதாம். ஆத்தாவுடைய அடுத்த அம்பு கருப்பு எமுசியாருடைய உடைய கருப்பு பணத்தை நோக்கி தான் பாயுமாம். பின்ன கோடிக்கணக்கில் கணக்குக்கு வராத பணத்தை விசுக்கி உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வுகள் மூலமும் அவரோட சாதி சங்க வள்ளல்களிடம் இருந்து வந்த அன்பளிப்புகள் மூலமும் மூட்டை கட்டியதை மோப்பம் பிடித்து விட்ட ஆட்டையை போடுவதில் ராணியான ஆத்தா சும்மா விடுவாங்காளா என்ன.


இதுல வேற மற்றொரு குடைச்சல் அவரோட சாதியை சேர்ந்த கட்சி வேட்பாளர்களாலே அண்ணனை நோக்கி அனுப்பபடுகிறது. விசுக்கி தேர்தல் செலவுக்கு வசூலித்த காசை வேட்பாளர்களிடம் கொடுக்காமல் பதுக்கி விட்டதை கட்சியில் உள்ள வேற சாதி வேட்பாளர்கள் வேண்டுமென்றால் எம்.எல்.ஏ, மற்றும் அமைச்சர் கனவுகளுக்காக பொறுத்து கொள்வார்கள் , ஆனால் விசுக்கியோட சாதிகாரங்களால முடியாதே. ஏற்கனவே தோற்ற விரக்தியில் இருக்கும் அவர்கள் அண்ணன் இப்படி காசை அமுக்கி விட்டார் என்று தெரிந்ததும் குமுறி கொண்டு இருக்கிறார்கள். அண்ணன் போட்ட ஆட்டையை அண்ணனுக்கு பெருமளவில் பணப்பட்டுவாடா செய்த, கிடைக்க உதவிய அந்த சாதி சங்க பிரமுகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் செய்தியாக தட்டி விட்டு கொண்டே இருக்கிறார்களாம்.

From 26 October 2011


பின்ன விசுக்கிக்கு உள்ளாட்சி தேர்தல் நிதியாகவே ரூபாய் 200 கோடிகளுக்கும் மேல் ( இது குறைந்த பட்ச அளவிலான மதிப்பீடு தான். அதிகபட்சமாக இதற்கு மேலும் செல்லலாமாம் ) கிடைத்து இருக்கிறது. கிடைத்த வசூலில் தேர்தல் தோல்வி பற்றிய கவலையை எல்லாம் கழிவறையில் ஊற்றி கடாசி விட்டவருடைய ஆனந்த குத்தட்டத்திற்கு தடையாக இருப்பதே கிடைத்த கணக்கில் வராத கருப்பு பணத்தை எப்படி வெள்ளை பணமாக மாற்றுவது என்று அவ்வபோது ஆட்கொள்ளும் கவலை தானாம். கருப்பு எமுசியாராக தனக்கு தானே பட்டம் சூட்டி கொண்ட விசுக்கிக்கு இப்போது கருப்பை வெள்ளையாக மாற்றுவது தான் பெரும்பாடாக இருக்கிறது. தங்களோடு உள்ளாட்சி தேர்தலில் கூட்டு வைக்காத கடுப்பினால் காங்கிரசாரும் கருப்பு எமுசியாருக்கு எதிராக டெல்லிக்கு செய்திகளை அனுப்பி குவித்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு அண்ணன் மீது வருமான வரி சோதனையை முடுக்கி விட்டாலும் இப்போது ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


அதிலேயும் அம்மாவும் சின்னம்மாவும் கருப்பு எமுசியாறு சமீபத்தில் பண்ணிய அலப்பரையை பார்த்து விட்டு விசுக்கியோட கட்சியை பிரித்து மேய்ந்து தரைமட்டமாக்கும் வெறியில் இருக்கிறார்களாம் அநேகமாக அது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்றவுடன் அந்த ஆட்டம் ஆரம்பிக்கப்படுமாம். பெரியதாயியை விட சின்னத்தாயி தான் ரொம்ப அவசரப்படுகிறாராம். அவங்க கணக்கு என்னன்னா அகில இந்திய அளவில் வலுவான அரசியல் பின்னணி கொண்ட சாதியை சேர்ந்த விசுக்கியை தமிழகத்தில் வளரவிட்டால் அது தமிழக அரசியலில் அவிங்க சாதியோட ஆதிக்கத்தை மட்டுபடுத்தி விடும் என்ற பயம் தானாம். உரலுக்கு ஒருபக்கம் இடின்னா விசுக்கிக்கு எல்லா பக்கமும் இடி.


இப்படி இதுவரை சினிமாவில் வரிகட்டாமல் கருப்பு பணத்தை பதுக்கிய வித்தையை கட்சி துவக்கி அரசியலிலும் வந்து காட்ட ஆரம்பித்திருக்கிற இவருடைய பிறந்த நாளை அவருடைய தூண்டுதலில் அவருடைய அல்லக்கைகள் வறுமை ஒழிப்பு நாளாக கொண்டாடுவது தான் மகா கொடுமை. வேட்டிக்கு வழி இல்லாமல் கோவணம் கட்டி கொண்டு அலைபவன் முன்னாடி அவுத்து போட்டு ஆடுகிற இவனுங்களுக்கு அதை அறுத்து கடாசினால் தான் அடங்குவானுங்க போல.

No comments:

Post a Comment