Tuesday, November 15, 2011

அரசியல், சமூக தளத்தில் சூடாக வலம் வரும் முணு முணுப்புகள்

கொஞ்ச நாளைக்கு முன்பு நம்ம தமிழகத்தை புதியதாக நடத்த துடிக்கும் அண்ணன் “கிறுட்டு சாமி” கூடங்குள அணு உலை எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து பன்ம வாங்கி கொண்டு அதை முன்னெடுப்பதாக குறி சொல்லி இருந்தார். அது வேற ஒன்றுமில்லையாம். தற்போது கிட்டு அண்ணாத்தே சிக்க வைக்கப்பட்டு இருக்கிற வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள தான் இந்த டகால்டி பேச்சாம். கூடங்குளத்திற்கு ஆதரவாக மக்களை திருப்பி விட்டால் மத்திய மற்றும் மாநில அதிகார வர்க்கங்களிடம் இருந்து உதவிக்கரம் நீட்டப்படும் என்று அவருக்கு வாக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். பரமக்குடி படுகொலைகளை பற்றி ஆரம்பத்தில் வாயை திறந்த அண்ணன், பின்னர் தன்னோட வாயை அடைத்து கொண்டதற்கும் அண்ணனுக்கு விடுக்கப்பட்ட இது போன்ற மிரட்டல் தான் காரணமாம்

மேற்கூறிய அதே விடயத்தை சொன்ன “நாரத சாமி” யும் கூட வாங்கிய காசுக்கு விசுவாசமாக கூவுகிறாராம். கூடங்குளம் மேட்டரை வெற்றிகரமாக முடித்து கொடுத்து எப்படியாவது நல்ல பணம் காய்க்கும் துறையில் காபினட் மந்திரியாக உட்கார்ந்து விட வேண்டும் என்று காய் நகர்த்துகிறாராம். அவரு தற்போது குறிவைக்கிற துறை அப்பப்ப ஏற்படும் விலை உயர்வால் மக்களின் மனதை தீ பற்ற வைக்கிற துறையாம். ஏற்கனவே அந்த துறையில் முன்பு காபினட் மந்திரியாக இஐந்த தமிழ்நாட்டை சேர்ந்த “வாழைப்பழ மூர்த்தி“ இந்தியாவில் பெட்ரோல் தோண்டி எடுக்கும் மற்றும் விற்கும் உரிமையை, எழுபதுகளில் போலி கம்பெனிகள் ஆரம்பித்து இந்தியாவின் அரசு வங்கிகளை ஆட்டையை போட்ட “திருதிரு திருட்டு பையன்” அம்புனிக்கு தரை வார்த்ததில்ஒரு மிக பெரிய தொகையை சன்மானமாக பெற்று பிள்ளைகளை செட்டில் செய்தார்.


அந்த தொகையில் பங்காளி உரிமையில் நம்ம “மாம்பழ தாசர்” பங்கு கேட்க போன விவகாரத்தில் குண்டக்க மண்டக்க ஏற்பட்டுவிட, அது தேர்தலில் சீட்டு பிரச்சினையாக மாறி, மேலும் மஞ்சள் துண்டு பெரியவரால் வழங்கப்பட்ட “ஒன்பது” சீட்டுகளை எப்படி பிரிப்பது என்பதில் ஏற்பட்ட சண்டையாக வலுத்து கடைசியில் இருவரும் அரசியலில் ஒருத்தர் மாறி ஒருத்தரை வெட்டி கொண்டு சாவும் அளவிற்கு கொண்டு விட்டது என்பதெல்லாம் பழைய கதை.


இப்ப நம்ம “நாரத சாமி” யும் அப்படி வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டும் என்று துடிக்கிறாராம். ம்ம்ம்ம் அவனவனுக்கு எரியுற வீட்டில் கிடைக்கிறது லாபம் என்று அடுத்த வீட்டுக்காரனோட வீட்டில் ஆட்டையை போடுவதில் மும்முரமா தான் இருக்கானுங்க.

-----------------------------------------------xxxxxx---------------------------------------------------------------

சிலநாட்களுக்கு முன்பு “மலை மலர்” பத்திரிகையின் இணையதளம் சிலரால் “HACK” செய்யப்பட்டது என்பதை பற்றி எல்லாருக்கும் நினைவில் இருக்குமோ இருக்காதோ என்று தெரியவில்லை. இப்போது அதன் பின்னணியில் உள்ள விவகாரம் பற்றிய செய்திகள் சிறிது சிறிதாக கசிகிறது.

அந்த வேலையை செய்தது தினமல கூட்டத்தை சேர்ந்தவனுன்களாம் ஏற்கனவே மாலை மலரின் தாய் பத்திரிக்கையான தந்திக்கும் , “மலத்திற்க்கும்” தொழிற்போட்டி இருப்பது எல்லாரும் அறிந்தது தான். முன்பொரு முறை தந்தி சிறுவர்மலர் தங்கமலர் என இலவச இணைப்பை துவங்கிய போது ஏற்பட்ட பிரச்சினை இன்னும் பல வடிவங்களில் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது இதற்கிடையில் தற்போது தினமலத்தை புறக்கணியுங்கள் என்று பல்வேறு தளங்களில் எழுப்பப்படும் குரல்களின் பின்னணியில் தந்தி இருக்கிறது என்ற சந்தேகம் தினமலத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது . அதன் விளைவு தான் மாலை மலர் இணைய தளம் “HACK” செய்யப்பட்டதன் பின்னணியாம். ஆரம்பத்தில் அவங்க குறிவைத்தது தந்தியின் இணைய தளத்தை தானாம் . ”HACKERS” செயல்படுவது அமெரிக்காவில் இருந்து என்றும் செய்தி கசிகிறது . அதே நேரத்தில் இந்த சவாலை சமாளிக்க தந்தி இந்தியாவின் பிரபலமான கணினி நிறுவனத்தை நாடி இருக்கிறது என்றும் தகவல் கசிகிறது. கூடிய விரைவில் இணைய தள சண்டையின் வேகம் இன்னும் அதிகரிக்கலாமாம்.

No comments:

Post a Comment