Saturday, November 26, 2011

எப்படி கூப்பிடுவேன் உன்னை ?


தலைவனாக வேண்டி

சொந்த தாயையும் பேரம் பேசும்

காலிகளுக்கு மத்தியில்

தலைவனாக வேண்டுமென்ற

கனவுகளுடன் வந்தவனில்லை நீ

அடித்து நொறுக்கப்பட்ட சமூகத்தின்

அவல மூட்டைகளை

உன் இளம் தோள்களில் சுமந்திட

உன்னையே அர்ப்பணித்தவன் நீ


26 November 2011


கட்டுவிரியன்களின் கூட்டத்திற்கு

நஞ்சின் கொடூரத்தை உணர வைக்க

நீ தொடுத்த சோதனைகளுக்கு கூட

தீவிரவாத முத்திரை குத்தப்பட்டது

பின்னே அடக்கபடுகிற சமூகம்

கத்தி கதறுவது கூட

தேசத்துரோகம் என்று கூறும்

தேசத்தின் அருகில் பிறந்த உனக்கு

அகிம்சாவாதி பட்டமா தரப்போகிறார்கள்

போலி மகாத்மாக்களுக்கு

குத்தகைக்கு விடப்பட்ட பட்டங்களை கொண்டு

உனை நாங்கள் கொண்டாட விரும்பவில்லை

போராளியாகவே பார்க்க விரும்புகிறோம்

அகிம்சாவாதிகளின் முகத்திரைகள்

முதலாளித்ததுவ சந்தைகளில்

ஏலம் விடப்படுகின்றனவாம்

கடந்த கால தவறுகளுக்கு

வருந்தியவன் நீ

உனை சர்வதிகாரி என்கிறார்கள்

கடந்த கால ஏமாற்றங்களுக்காக

நிகழ்காலத்தின் நிமிடங்களை

வேட்டைக்களமாக மாற்றுகிறவர்கள்

தேசத்தின் அன்னையாகி விடுகிறார்கள்

உன்னோடு நின்று படமெடுத்து

தமிழ் தேசிய வியாபாரம் செய்யும்

சந்தை சரக்குகள்

போர் என்றால்

சனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று

ஆரிய படமெடுத்தாடிய

அக்கிர(ம)கார பாம்பின் முன்பு

சவப்பெட்டியாய்

கொள்கைகளால் உயிரோடு வாழும்

உனக்கு சவப்பெட்டிகள் தேவையில்லை

தன் குடும்பம் தான் சாதியென்று வாழும்

இழிநிலையும் உனக்கில்லை

பெற்ற பிள்ளைகளையே

போர்களத்திற்க்கனுப்பி

பெருமிதத்தோடு அவர்கள் இழப்பை

ஏற்றுகொண்டவனல்லவா நீ

நீ மறுபடியும் வருவாய் என

கலங்கிய கண்களோடல்ல

உறுதி நிறைந்த

கூரிய பார்வையோடு

உன் ஒளியின்

வெளிச்சத்தை தேடி

எமது கண்கள் காத்திருக்கின்றன

உனை தலைவனென்று அழைப்பதை விட

அடர்ந்த இருட்டின்

அடக்குமுறைக்குள் பயணிக்கும்

எமக்கு வழிகாட்டியாய்

உனை கொள்வதே சிறப்பு

நீ வருவாய் என

வன்னியின் அடர்ந்த காடுகளின்

கொடிகள் காத்து கிடக்கின்றன

ஏமாற்றி விடாதே

No comments:

Post a Comment