யாரு யாரோட டவுசரை கழட்ட போறாங்க என்று இப்படி ஊளையிடுறீங்க என்று யாராவது கேட்கலாம். அப்படின்னா நீங்க அதற்கு தலைப்பையும் இந்த பத்தியையும் தாண்டி படிக்கணும்
சின்ன எமுசியார், சினிமாவில் போசு கொடுத்த ஆத்தாளின் தோட்டத்தில், ஆத்தா தமிழகத்தை ஆட்டய போட்டு சேர்த்து வைத்ததில் இருந்து சுருட்டி கொண்டு ஓடிய பணத்தை போட்டு வைத்த கிட்டங்கியின் ஒரு பகுதியில் ஓட்டையை போட்டு சுட்டவர் தான் நம்ம தல
ராமநாதபுரத்தில் கருப்பு சிவப்பு கட்சியை சேர்ந்த சுபமான வேலனின் பேரன் என்ற உரிமையோடு திடீரென்று வலம் வர ஆரம்பித்த நம்ம தல ஒரு கட்டத்தில் தாத்தாவிற்கே சிம்ம சொப்பனமாக மாறி இருந்தார். ஆட்டையை போட்ட பணத்தை கொண்டு திரைப்பட உலகையும் ரசிகர்களையும் தன்னுடைய நவரசத்தால் காட்டி போட்டது மட்டுமல்லாமல் பாராளுமன்ற உறுப்பினராக உயர்ந்தார். சென்னையை சுற்றி அண்ணாத்தே வைத்த கட்டவுட்டுகளால் கட்சி பெரியவரின் குடும்பமே நாம சென்னையில் இருக்கிறோமோ இல்லை அயல் கிரகத்தில் இருக்கிறோமா என்று மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு சென்றது. பின்ன அண்ணன் கட்டவுட்டில் ஒரு வித மிரட்டலான போசில் பயங்கரமாக நின்னா யாருக்கு தான் அப்படி சந்தேகம் எழாது ?....... ஒரு கட்டத்தில் அஞ்சா நெஞ்சரோடு நெருக்கமாகி அப்படியே ஒரு பாராளுமன்ற தொகுதியை கேட்டு பேரும் அளவிற்கு சென்றவர். சுபமாக வாழ்ந்த தாத்தாவிற்க்கே பேரனின் வளர்ச்சி ஒரு வித திகிலை ஊட்டி இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தமிழக ரசிகர்களின் உழைப்பை சக்கையாக பிழிந்து எடுத்து அவர்களின் வியர்வையில் தன்னை சூப்பிய நட்சத்திரமாக மாற்றி கொண்டதோடு மட்டுமல்லாமல் பஞ்சு டயலாக்களால் ரசிகர்களை பயித்தியம் பிடிக்க வைத்த பக்கிரி சாமியின் படத்தையே மிஞ்சக்கூடிய அளவிற்கு ஒரு படத்தையும் எடுத்து நம்ம தல பட்டையை கிளப்பினார்.... பின்ன சின்ன எமுசியாருக்கே பட்டை போட்டவருக்கு திரையுலகில் பட்டையை கெளப்ப தெரியாதா என்ன ?
இப்ப விடயம் என்னன்னா, நம்ம வீட்டு பையனிடம் நம்பிக்கைக்கு உரியவனாக நெருங்கி பழகி நம்ப வைத்து கழுத்தறுத்த அவனை கோவணத்தோடு அலைய விடாமல் தூங்க மாட்டோம் என்ற உறுதியோடு நம்ம மன்னாரன் கம்பெனியினர் ஓன்று சேர்ந்து இருக்கிறார்களாம்.
நம்ம தல மட்டும் என்ன சும்மாவா இருப்பாரு, முக்கிய குளத்தில் நம்மை மீறி காலை வைக்க பயப்படும் பயலுக அவனுங்க ... நம்மளையே எதிர்க்க துணிந்து விட்டானுங்க என்ற ரீதியில் அவர் சார்ந்த உட்சாதி பிரமுகர்களுக்கு தந்தி அடிக்க ஆரம்பித்து விட்டாராம். அவிங்களும் அது தானே ...... குல பெருமைகளில் இருந்து குரு பூசை வரை நம்மை எல்லாரையும் ஓரங்கட்டும் அவனுகளை வளரவிட்டால் நம்முடைய குல பெருமை என்னாவது என்ற ரீதியில் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார்களாம். கூடிய சீக்கிரத்தில் அது உட்சாதிகளுக்கிடையேயான மோதலாக கூட வெடிக்கலாம் என்று பட்சி பாட்டு பாடி விட்டு சென்றது.
.
1 comment:
சரியா போச்சு.. நமக்கு நேரா சொன்னாலே சுத்தமா புரியாது, இப்படி வேற சுத்த விட்டு சொல்வீங்களா?
Post a Comment