Tuesday, December 7, 2010

வீரத்தில் இறையாண்மையில் சிறந்தது எது புலியா? சிங்கமா?

சமீபத்தில் யூ குழாயில் (you tube) புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது என்ற பாடலை கேட்க நேர்ந்தது அதை கேட்ட பிறகு புலியை பற்றிய நிறைய கேள்விகள் எழுந்தது. நான் இதற்கு முன்பு புலிகளை பற்றி படித்த அறிவோடு சமீபத்தில் புலிகள் மற்றும் சிங்கங்களை பற்றிய என்னுடைய இணைய தேடலில் நான் தெரிந்து கொண்ட ஒரு சில விசயங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஏன் பொதுவாக பலம் பொருந்தியவர்களாக அதிகாரமிக்கவர்களாக தங்களை கருதி கொள்ளுபவர்கள் எப்போதும் அவர்களை சிங்கத்தோடு ஒப்புமை படுத்தி கொள்ளுகிறார்கள் ஏன் புலிகளோடு ஒப்புமை படுத்தி கொள்ளவில்லை.
மேற்கண்ட விடயத்தை பற்றி தெரிந்து கொள்ளுவதற்குள் பூனை கூட்டத்தை சேர்ந்த புலியையும் சிங்கத்தையும் பற்றிய உடல், இன, மற்றும் அவைகளின் சமூக ரீதியான தகவல்களை தெரிந்து கொள்ளுவது மிக அவசியம் என்று எண்ணுகிறேன். பூனை குழுமத்தில் உடலமைப்பில் உலகத்திலேயே மிகப்பெரியது புலி தான். ஆனால் பல பேர் சிங்கம் தான் உடலமைப்பில் பெரியது என்று தான் தவறாக நினைத்து கொள்ளுவார்கள். அப்படி தோன்ற காரணம் ஆண் சிங்கங்களின் பிடரி தான். ஆண் சிங்கங்களின் பிடரியை மழித்து எடுத்துவிட்டால் அது ஒரு எலி குஞ்சை போல தான் தோன்றும். ஆனால் உண்மையில் எடையிலும், உருவத்திலும், வலிமையிலும் புலி தான் பெரியது. அதனால் தான் என்னவோ புலி எப்போதும் தனியாக தான் வேட்டையாடும், அவை பெரும்பாலும் சிங்கங்களை போல் கூட்டமாக கும்மி அடிப்பதில்லை.


சிங்கங்களின் கூட்டத்தில் பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும். ஆண் சிங்கங்கள் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் தூங்கும் வழக்கமுடையது. பெண் சிங்கங்கள் வேட்டையாடிய இறைச்சியை முதல் ஆளாக வந்து விழுங்குவதற்கு மட்டுமே ஆண் சிங்கம் அதன் தூக்கத்தை விட்டு எழும்பும். கூட்டத்தின் தலைவனான ஆண் சிங்கம் எப்போதுமே ஒரு சாப்பாட்டு ராமன் , தனி திண்ணி ஆக தான் இருக்கும். கூட்ட தலைவன் பசியில் உணவாறி கொண்டு இருக்கும் போது தப்பி தவறியும் பெண் சிங்கங்களோ இல்லை அந்த கூட்டத்தில் உள்ள ஆண் சிங்கங்களோ அல்லது குட்டிகளோ அதன் பக்கத்தில் பங்கு கேட்டு நெருங்கும் பழக்கத்தை வைத்து கொள்ளுவது கிடையாது. கூட்ட தலைவன் குட்டி என்று கூட பார்ப்பது கிடையாது அவை பசியில் முழுங்கி கொண்டிருக்குபோது சிங்க குட்டிகள் நெருங்கினால் தூக்கி வீசி எறிந்து விடும். அதனுடைய சாப்பாட்டு வெறி அடங்குவது போல் தோன்றும் போது தான் ஏனைய சிங்கங்களோ அல்லது குட்டிகளோ அந்த இறைச்சியை நெருங்கும்.

ஒரு கூட்டத்திற்கு ஒரு ஆண் சிங்கம் தான் தலைவனாக இருக்க முடியும். அந்த கூட்டத்தில் உள்ள எல்லா பெண் சிங்கங்களும் அதனோடு மட்டுமே உடலுறவு கொள்ள முடியும். மற்ற ஆண் சிங்கங்கள் இருந்தாலும் அவைகள் கூட்டத்தின் தலைவன் அருகில் இருக்கும்போது பெண் சிங்கங்களின் பக்கத்தில் நெருங்குவது இல்லை . கிட்ட தட்ட கூட்டத்தின் தலைவன் மண்டையை போடுவது வரை மற்ற ஆண் சிங்கங்களும் அதனுடைய அடிமையாக பெட்டையாக அலைய வேண்டியது தான். அந்த பெட்டையாக அலையும் சிங்கங்களில் சில ஆண் தலைவன் வயதாகும் காலத்தை நோக்கியோ அல்லது அந்த தலைவன் தனது உடல் பலத்தை இழக்கும் சமயம் வரை காத்திருக்கும். ஆண் தலைவன் தனது கடைசி காலத்தை நெருங்கும் தருணத்தில் அதுவரை பொட்டையாக இருந்த ஆண் சிங்கம் கூட்டத்தின் தலைவனை போட்டு தள்ளி விட்டு அந்த கூட்டத்தில் உள்ள பெண் சிங்கங்களை தனக்கு சொந்தமாக்கி கொள்ளும் கிட்ட தட்ட அப்பனை கொன்று விட்டு அம்மாவையும் சித்தியையும் தனக்கு வைப்பாட்டியாக்கி கொள்ளுகிற கதை தான்.

புலிகள் கூட்டம் அப்படி கிடையாது. புலிகள் இனத்தில் ஆண் பெண் புலிகள் எல்லாம் ஒன்றுக்கு ஓன்று சரி சமமாக வேட்டையாடும். புலிகள் நிறைய கூச்ச பண்பு உடையவை . தேவை இல்லாமல் சிங்கங்களை போல் ஊளையிட்டோ அல்லது வேறு எந்த விதத்திலும் தனது பலத்தை மற்றவர்களிடம் காட்ட மெனக்கெடுவதில்லை. சிங்கங்களின் வீரத்திற்கு டிச்கவரி சேனலில் சிங்க கூட்டமானது ஒரு எருமை கூட்டத்தால் அதுவும் ஒரு ஒற்றை எருமையால் ஓட ஓட விரட்டப்பட்ட காட்சியே சிறந்த சான்று. கூட்டத்தில் உள்ள ஏனைய புலிகளின் உதவி இல்லாமல் தனியாக வேட்டையாடுவதில் புலிகளுக்கு இணை புலிகள் தான். தனது பாதுகாப்பை துச்சமென மதித்து தனியாகவே வேட்டையாடுவதினால் வரும் பாதிப்பினால் தான் என்னவோ புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கூட கணிசமான அளவில் குறைந்து விட்டன.

புலிகளுடைய கூட்டத்தில் எல்லா புலிகளுக்கும் கிட்டத்தட்ட ஒரே விதமான மரியாதை தான். புலிகள் கூட்டத்தின் ஆண் புலிகள்சக பூனை இனத்தை சேர்ந்த ஆண் சிங்கங்களை போல் பல பெண் சிங்கங்களோடு சுற்றி கொண்டு பலவெட்டறை போல் திரியாமல், பெரும்பாலும் ஒரு துணையோடு தான் வாழ்க்கையை அமைத்து கொள்ளும். புலிகள் இரவில் வேட்டையாடுவதிலும் சூரப்புலிகள் தான். சமீபத்தில் டிச்கவரியில் புலிகளை பற்றிய ஒரு ஒளிபரப்பில் புலிகள் கும்மிருட்டில் கூட ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள இரையை மனிதர்கள் பகலில் பொருட்களை பார்ப்பது போல பார்க்க கூடிய பார்வை திறனுடையது என்று விளம்பினார்கள். புலி குட்டிகளும் மிக குறுகிய காலத்திலேயே தாயின் துணையின்றி வளர ஆரம்பித்து விடுகின்றன. அனால் சிங்க குட்டிகளின் நிலைமையோ தலை கீழ். சிங்க குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு. பெண் சிங்கங்கள் இரவும் பகலாக மாறி மாறி சிங்க குட்டிகளை குறைந்தது ஒரு வருடம் வரை பராமரித்தால் மட்டுமே அவை பிழைப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம். ஆண் புலிகள் ஆண் சிங்கங்களை போல் அல்லாமல் இரையை தனது துணையோடும் குட்டியோடும் பகிர்ந்து உண்ணும் பண்பு உடையவை. ஆண் சிங்கங்களை போல் அல்லாமல் ஆண் புலிகள் கூட்டத்தில் உள்ள புலி குட்டிகளிடம் பாசம் காட்டுவதில் ஒரு உண்மையான தகப்பனை போலவே செயல்படும்.

இப்படி பட்ட பண்புடைய மிருகமானதால் தான் என்னவோ உலக தமிழர்களின் நவீன கால அடையாளமான அம்மை பிரபாகரன் பண்டைய தமிழனின் கொடியில் இடம் பெற்ற புலிகளை தனது இயக்கத்தின் அடையாளமாக, பெயராக ஆக்கி கொண்டார். வேசித்தனம் செய்வதையும் உடலால் உழைப்பு இல்லாமல் அடுத்தவன் உழைப்பில் அடுத்தவனை வருத்தி தின்பதை தொழிலாக ஆக்கி கொண்டதால் தான் என்னவோ சிங்களனும், இந்தியாவில் உள்ள வேசி கூட்டங்களும் தங்களை சிங்கத்தோடு ஒப்புமை படுத்தி கொள்ளுகிறார்கள். என்னவொரு பொருத்தம். சிங்கத்தை தன்னோடு ஒப்புமை படுத்தி கொண்டு இந்தியாவை ஆண்ட 100 விழுக்காடு இந்திய அரசர்கள் தாங்கள் கூத்தடிப்பததற்காக வேசிகள் குடியமர்த்தப்பட்ட அந்தபுரங்களில் தூங்கி பொழுதை கழித்து கால போக்கில் தங்களது அரசையும் தனது வாரிசுகளையும் இழந்து விட்டார்கள்.

இப்படி தான் புலி கொடி பிடித்து கிழக்காசியா வரை தங்களது ஆளுமையை பரப்பி தமிழகத்தை ஆண்ட சோழ குடியின் கடைசி மன்னர்கள் சிங்கத்தை போல வாழ விரும்பியதால் தான் என்னவோ கண்டவரோடெல்லாம் கூத்தடித்து தமிழர்களின் மரபு வழி சின்னங்களான கோவில்களில் கூத்தாடிகளும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காம பசியை போக்குவதற்காக வடக்கில் இருந்து கூட்டி வரப்பட்ட பெண்களும் வாழும் இடமாக்கி அங்கு செழிப்புற்று வாழ்ந்து கொண்டிருந்த தாய் தமிழை அங்கிருந்து அகற்றி தான் போகிற இடமெல்லாம் கண்டவரோடு உறவாடி மகிழ்ந்து தன்னை செழுமைபடுத்தி கொண்ட சமச்கிருதம் என்ற பார்பனிய நச்சு செடிகளின் மொழியை கோவில் மொழியாக்கினர். தமிழர்களின் கோவில்களில் இருந்து தமிழை என்று அகற்ற ஆரம்பித்தார்களோ அன்றோடு அவர்களது அழிவும் தொடங்கியது.

அந்த சமைஞ்ச கிருதத்தை தெய்வ மொழியாக கருதும் பார்பனிய நச்சு கொடிகளின் மூதாதையர்கள் நம்முடைய தாய் தமிழகத்தில் எப்படி தமிழர்களின் மதத்தை திரித்து காமத்தையே மூலாதாரமாக கொண்ட வடவ்ர்களின் வேத மதத்தை தமிழர்களிடையே பரப்பி வேசி பாசையான சமைஞ்ச கிருதத்தை கொண்டு தமிழ்நாட்டில் தமிழை அழிக்க முற்பட்டார்களோ... அதே போல் திராவிட வேந்தன் ஆண்ட இலங்கையில் மகான் புத்தரின் மார்க்கத்தை வேசி மைந்தர்கள் கைப்பற்றி அதன் மூலமாக சமைஞ்ச கிருதத்தின் துணையுமான மற்றுமொரு வேசி பாசையான சிங்களத்தை வளரவிட்டு அங்கு வாழ்ந்த புத்த மதத்தை பின்பற்றி கொண்டிருந்த புரதாண தமிழர்களை சிங்களமயமாக்கி விட்டார்கள். அப்படி சிங்களமயமாக்கப்பட்ட புத்த மதத்தை பின்பற்றிய தமிழர்களின் வழி தோன்றல்களில் ஒருவன் தான் இன்றைக்கு சக கொடூரனாலே சிறை கொட்டகைக்குள் அடைபட்டு இருக்கும் ரத்த வெறியன் சரத் பொன்சேகாவும்.

ஒரு காலத்தில் தன்னை பலசாலியாக கட்டி கொண்டு அலைந்த சிங்கம் எப்படி அதன் வலிமை குன்றும் போது கூடவே இருக்கும் சக ஆண் சிங்கத்தால் வேட்டையாடப்படுகிறதோ அதே போன்று தான் பொன்சேகாவும் இன்று மகிந்தாவால் வேட்டையாடப்படுகிறான். தற்போது கூட்ட தலைவனாக தன்னை காட்டி கொள்ளும் மகிந்தாவை வேட்டையாட இன்னொருவன் நிச்சயமாக காத்து இருக்கிறான். அவனுடைய நேரம் நெருங்கும் வரை இன்று பொட்டையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவனை எவரும் இனம் காண முடியாது. மகிந்தாவின் எழுச்சி எவ்வளவு வேகமாக இருந்ததோ அவனது வீழ்ச்சியும் சடிதியில் விழும்.




சொரணையற்ற மனிதர்களை பார்த்து பார்த்து வெறுத்து போய் தன்னை மறைத்து கொண்டு வாழும் புலி தமிழன் சமயம் நெருங்கும் போது தனது மறைவிடத்தில் இருந்து வெளி வந்து தனது தாக்குதலை நடத்துவான். அப்போது அவன் வைக்கும் குறி தப்பாது. புலிகளின் காடான ஈழத்தில் புலிகள் இருக்கும் தைரியத்தில் மரம் செடி கொடிகள் புல் பூண்டுகள் மறுபடியும் பூத்து குலுங்கும்.

தோலோடு வாழும் தமிழர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். சிங்கத்தின் குணாதிசயத்தை பற்றி தெரிந்து கொண்ட இதன் பிறகாவது நாங்கெல்லாம் சிங்கம்லா என்று தப்பி தவறியும் கூறி விடாதீர்கள். அப்படி கூறி பின்பு விடயம் தெரிந்தவன் உங்களை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கும் அவலத்திற்கு ஆளாகாதீர்கள். நெஞ்சை நிமிர்த்தி உரக்க நாங்கெல்லாம் புலிகள்டா என்று கூறுங்கள். நம்பி வந்தால் தலை வாழை இலைபோட்டு உபசரிக்கும், சதியோடு வந்தால் கூறு போட்டு அனுப்பும் புலிகள்டா நாங்கள் என்று உறுமுங்கள். சக தமிழனின் குடிநீர் கிணற்றிலும், வாயிலும் மலத்தை திணிக்கும் வேசி மகன்கள் வேண்டுமென்றால் தங்களை சிங்கம் என்று ஊளையிட்டு கொண்டு அலையட்டும். உணர்ச்சிகள் உள்ள தோலோடு தெரியும் தமிழன் அப்படி செய்ய வேண்டாம்

ஒரு காலத்தில் இந்தியாவின் காடுகளில் திரிந்து தற்போது எண்ணிக்கையில் குறைந்த புலிகளின் எண்ணிக்கையை மறுபடியும் கூட்ட இந்திய அரசு மிகுந்த அக்கறையோடு பிரச்சாரம் செய்து அதற்கான வழிகளில் இப்போது ஈடுபடுகிறதோ, அதேபோல் புலிகளின் அருமையை அவர்கள் தங்களை மறைத்து வாழும் இக்காலத்தில் உலகம் உணரும் . அப்போது உலக நாடுகள் எல்லாம் ஓன்று திரண்டு புலிகளை ஊட்டி வளர்க்கும் காலம் வரும். அப்போது தமிழன் பிற்கால சோழ மன்னர்களின் ஆட்சியில் கிழக்காசியாவில் இழந்து விட்ட சிறப்பை மறுபடியும் அடைவான். அதற்கான காலம் நெருங்குகிறது. எந்த ஒரு சமுதாயமும் அல்லது மனிதனும் ஒரு பாரிய இழப்பை அடைந்த பிறகு மறுபடியும் வீறு கொண்டு எழும்... எழுவார்கள் . அதற்கு வாழும் சாட்சி ஐரோப்பாவில் விரட்டி விரட்டி கொல்லப்பட்ட யூதர்கள். பின்பு அவர்கள் மத்திய கிழக்கில் ஓன்று திரண்டு தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கி இன்று உலக அரசியலையே தங்களை மையமாக வைத்து விளையாடுகிறார்களோ ..அது போன்ற காலம் தமிழனுக்கும் வரும் . உணர்வுள்ள தமிழன் தலையெடுக்கும்போது சமதர்மம் தலையெடுக்கும்

ஈழம் வெல்லும் காலம் சொல்லும்

2 comments:

காலப் பறவை said...

அருமையான கட்டுரை தோழர்....

Font சைஸை குறைத்துக்கொள்ளவும், ஒவ்வரு Para வுக்கு இடையில் சற்று இடைவெளி விடவும்.

anthony said...

தங்களது வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி தோழர் பெலிக்சு அவர்களே .
தாங்கள் கூறிய வண்ணமே மாற்றி அமைத்துள்ளேன்

Post a Comment