இந்த மானம் கெட்ட ஈத்தரைகளை.
நீ பெற்றெடுத்த உன் பெண் பிள்ளைகளை
மார்பு சட்டை அணிய கூடாது என்றும்
மாராப்பை விலக்கி காட்ட வேண்டும் என்றும்
தங்களது காம பசியை தீர்த்து கொண்ட
வழி போக்கர்களுக்கு உறைவிடம் கொடுத்து
அவர்களிடம் தன்னை அடிமையாகக்கி கொண்ட
அற்ப பதர்களை உன் மடியில் மறுபடியும் சுமக்க
ரொம்ப நாளாக எனக்கொரு சந்தேகம் இருந்து வருவதுண்டு
கடல்கோள் உன்னிடம் இருந்து பிரித்த
ஈழ குழந்தைகளின் கதறல்கள்
இறுகி போன மனங்களையும்
உருக்கி எடுத்து விட
உன் காதுகள் மட்டும்
ஏன் இவ்வளவு மந்தமாக மாறி போனது
உலகமே அவர்களுக்காக கூக்குரலிட்ட போதும்
உன்னுடைய குரல் மட்டும்
மயான மவுனமாய் இருந்தது ஏனோ
உன்னிலிருந்து அவர்களை கடல் பிரித்தாலும்
நீ அவர்களுக்கு ஊட்டி விட்ட
மொழியில் தானே அவர்களும் கதறுகிறார்கள் .
அவர்களது கதறல்களின் ஓசை நயம் கூட
உனது ஓசையை போல் தானே உள்ளது .
உன்னால் மறுக்க முடியுமா
உன் மடியில் இன்று தவழும் குழந்தைகளை விட
அவர்கள் வேறு பட்டவர்கள் என்று
மண்டைகாட்டு கலவரத்தில்
உனது குழந்தைகளை எரித்த
காட்டுமிராண்டி கூட்டத்திற்கு
புகலிடமாக உன்னால் எப்படி முடிந்தது
அன்று காவி கொடி ஏந்தி
குடிசைகளை எரித்தவர்களின் கைகளில்
இன்று உனது நகர சபைகள்
கொஞ்சம் கொஞ்சமாக உனது மடி
நரகமாகி கொண்டிருப்பதை அறியாமல்
நீ இன்னும் அயர்ந்த நித்திரையில்
எப்போது விழிக்க போகிறாய்
கல்வி ஞானத்தில் கரை கண்டு விட்டதாக
நீ பிதற்றி கொண்டாலும்
உன் மடி அஞ்ஞான மூடர்களால்
கறை பட்டு கொண்டிருப்பதை
எப்போது உணர போகிராய்
உன் கண் முன்னால் அரங்கேற்றப்பட்ட
அனைத்து கொடுமைகளையும்
கண்டும் காணாமல் இருந்ததினாலோ என்னவோ
நீ இறந்து விட்டாய் என்றெண்ணி
இன்று உன் மடிக்கு உலை வைக்க
வந்திருக்கிறது ஒரு கூட்டம்
இனியும் நீ அமைதி காத்தால்
அணுத்துகள்களில் கூட உன்னை பார்க்க முடியா
அவல நிலைக்கு சென்று விடுவாய்
பின்குறிப்பு : எனது எண்ணத்தின் உளறல்களை கவிதை என்றெண்ணி திட்டி தொலைப்பவர்களுக்கு, நான் பொறுப்பாளி ஆகா முடியாது
6 comments:
தன்னை கொடுமைப்படுத்தியவர்களை தலையில் வைத்துக் கூத்தாடும் ஒரு முட்டாள் கூட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது. இனிமேல் இவர்கள் திருந்துவது கடினம்தான்.
தோழரே, இப்பொழுது தான் உறக்கம் கலைகிறது, விடியல் எங்கே என்ற தேடல் நுழைகிறது, காத்திருப்போம்... அது வரை பறை அடித்து எழுப்ப முயற்ச்சிப்போம்..
தமிழனுக்கு அழிவு தமிழனாலேயே!!!!!!!!!!!!!!!!!
///தோழரே, இப்பொழுது தான் உறக்கம் கலைகிறது, விடியல் எங்கே என்ற தேடல் நுழைகிறது, காத்திருப்போம்... அது வரை பறை அடித்து எழுப்ப முயற்ச்சிப்போம்.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ,
விடியலை பற்றிய தேடலில் தானே மானுடம் ஒவ்வொரு தடவையும் தன்னை புதுப்பித்து கொள்கிறது
////தன்னை கொடுமைப்படுத்தியவர்களை தலையில் வைத்துக் கூத்தாடும் ஒரு முட்டாள் கூட்டம் உருவாக்கப்பட்டுவிட்டது. இனிமேல் இவர்கள் திருந்துவது கடினம்தான்///
நீங்கள் சொல்லுவதும் சரிதான். திரைப்படங்களில் வரலாறை தேடி கொண்டு இருக்கிறவனுக்கு மத்தியில் மாற்றங்கள் நிகழும் என்ற கனவுகளோடு போராடி தோற்று போய் கொண்டிருக்கிறேனோ என்று எண்ண தோன்றினாலும், நம்பிக்கையின் ஒரு மிச்சம் அவ்வபோது தான் தலையை காட்டி கொண்டு இருப்பதையும் மறுக்க முடியாது தோழர். அங்கிருந்து தானே விடுதலையின் பயணம் தனது வெளிச்சத்தை தேடி பயணிக்கிறது
///Vijay said...
தமிழனுக்கு அழிவு தமிழனாலேயே!!!!!!!!!!!!!!!!!
////
நீங்கள் சொல்வது போன்று தான் நடக்கிறது தோழர்
Post a Comment