ஆதிவாசி சகோதரர்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கனிமவளம் செறிந்த டும்க்கா மாவட்டத்தில் கடந்த இருபது வருடங்களாக தங்கி ஆதிவாசி சகோதர்களிடையே சேவை செய்து வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த சகோதரி வல்சா இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் நிலக்கரி மாபியாக்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
From Profile Photos |
சகோதரி வல்சா அன்னை தெரசாவால் துவங்கப்பட்ட “கருணை சகோதரிகளின்” (sisters of charity) அமைப்பில் சேர்ந்து அங்கீகாரம் பெற்றவர். சகோதரி கடந்த சில வருடங்களாக ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரங்களான நிலங்களை அதிகார வர்க்கத்துடன் கூடு சேர்ந்து கொண்டு அபகரிக்கும் நிலக்கரி ரவுடிகளுக்கு எதிராக போராடி கொண்டிருந்தார். ஆதிவாசி மக்களிடையே அவர் எழுப்பிய விழிப்புணர்வால் நிலக்கரி ரவுடிகளின் பலத்த கோபத்திற்கு உள்ளனார். நிலக்கரி மாபியாக்கள் பலதடவை சகோதரி வல்சாவை சரிக்கட்ட முயன்று இருக்கின்றனர். ஆனால் சகோதரி வல்சா நிலக்கரி சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் ஆதிவாசி சகோதர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய பங்கு விடயத்திலும் இன்ன பிற விடயங்களிலும் விடாபிடியாக இருந்தார்.
இப்படி சகோதரி வல்சா ஆதிவாசி மக்களை நிலக்கரி மாபியாக்கள் சுரண்டுவதற்கு ஒரு பெரும் தடையாக இருந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வல்சா அவ்விடத்தை விட்டு சென்று விட வேண்டும் என்று மிரட்டி சுவரொட்டிகளை சகோதரி வல்சா வாழ்ந்த கிராமத்தில் அந்த கும்பல் ஒட்டி இருந்தது. அதை பற்றி காவல் நிலையத்தில் சகோதரி வல்சா புகாராக அளித்ததோடு மட்டுமல்லாமல் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்து இருந்தார். ஊழலின் மற்றொரு ஊற்றுக்கண்ணாக இருக்கும் மதவெறி பிடித்த பாஜகா வின் ஆட்சி அந்த மாநிலத்தில் நடைபெறுகிறது என்பது குறுப்பிடத்தக்கது
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயற்கை தாது வளம் நிறைந்த அந்த பூமியை ஆளுவதில் பார்ப்பனிய வெறியர்கள் நிறைந்த பஜாகா, காங்கிரசு என்ற இரு கட்சிகளுக்கும் நடந்த அதிகார போட்டியில் சார்க்கண்ட் மாநிலத்தை கொள்ளையடிக்கும் ஒட்டு மொத்த குத்தகை மதவெறி பிடித்த பாஜகா-விற்கு கிடைத்தது.
ஏற்கனவே பாஜகா ஆட்சி நடக்கும் மற்றொரு மாநிலமான கர்நாடகாவில் இரும்பு தாது கடத்தல்காரர்களுக்கும் அந்த மதவாத கட்சிக்கும் உள்ள தொடர்பு உலகமறிந்த ஓன்று தான்.
மற்றொரு பின் தங்கிய மாநிலமான ஒடிசாவில் இயற்கை தாதுக்களை கொள்ளையடிக்கும் வேதாந்தா கூட மதேவ்ரி கட்சியான பாசகா- வின் சகோதர நிறுவனங்களான சங் பரிவாரங்களின் முதன்மை பணப்பட்டுவாடாதாரர். நமது மாநிலத்தில் கூட தூத்துக்குடியில் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை இந்த வேதாந்தா குழுமத்தினருடையது தான். இப்படி இந்தியாவின் இயற்கை தாதுவை சுரண்டி கொள்ளை அடித்து கொண்டிருக்கும் பார்ப்பனிய மாபியாக்கள் தான் சகோதரியின் கொலையின் பின்னணியில் செயல்பட்டு இருக்கிறது என்ற செய்தியும் வருகிறது.
கிட்டத்தட்ட நாற்பதிற்கும் மேற்பட்ட காட்டுமிராண்டிகள் சகோதரி வல்சாவை அவரது இருப்பிடத்தி விட்டு இழுத்து வந்து கொடூரமாக சித்திரவதை செய்து தலையை துண்டித்து கொன்றுள்ளனர்.
சகோதரி வல்சா நமது அண்டை மாநிலமான கேரளாவில், கொச்சியில் உள்ள எடபள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர். சகோதரி சட்டத்தில் இளங்கலை பயின்று வந்தார்.
அந்த அன்பு சகோதரிக்கு எமது வீர வணக்கங்கள்.
இறப்பு என்பது போராளிகளுடைய வாழ்வின் லட்சிய பயணத்தின் அடுத்த கட்டம்.
4 comments:
சிவப்புக் கலர் கண்ணைப் பறிக்குது, மாற்றி விடுங்கள். இல்லை என்றால் background கலரை மாற்றுங்கள்.
அறிவுரைக்கு நன்றி தோழர்
இறக்கவில்லை, தன்னை விதைத்து விட்டு சென்றுள்ளார்... அவரை போல் இன்னும் பலர் முளைக்கட்டும்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தோழர் சூர்யா
Post a Comment