கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் மீனவர்களுக்கும் நாடார்களுக்கும் ஒன்றிணைந்து செயல்படுவதை தமிழ்நாட்டில் தற்போது அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஆடும் கூட்டம் விரும்பவில்லை என்றும், ஏற்கனவே பொருளாதார பலம் மிகுந்த நாடார்களோடு, மீனவர்கள் கைகோர்ப்பதை சில ஆதிக்க சாதிகள் தங்களுடைய அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக எண்ணுகிறார்கள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வருகிறது. அதன் பின்னணியில் உள்ள சாதி அரசியலை பற்றி கொஞ்சம் விளக்கி விடுகிறேன்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சாதி அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை என்றாலும் அதில் மீனவ, நாடார் சமூக மக்களின் பங்கேற்பு கணிசமான அளவில் உள்ளது. அதிலும் அப்பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பான்மையானோர் கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் எதிர்ப்பு போராட்டத்திலும் கிருத்துவ மக்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதை தவிர்த்து அந்த போராட்டம் மத அடிப்படையிலான போராட்டமும் கிடையாது. பின்பு ஏன் அவர்களது போராட்டத்தை உடைக்க மற்றொரு முனையில் ஒரு கூட்டம் செயல்படுகிறது என்பதை உற்று கவனித்தால் அங்கு தான் சாதி, மதத்தை பிடித்து கொண்டு அரசியல் பண்ணும் சில காவாலிகளின் அதிகார வெறி அப்பட்டமான அம்மணத்துடன் கூத்தாடுகிறது.
தென் மாவட்டங்களில் மீனவ மக்களும் நாடார் இன மக்களும் செறிவாக காணப்படுகின்ற சட்ட சபை பாராளுமன்ற தொகுதிகள் கணிசமான அளவில் உண்டு. குறிப்பாக தூத்துக்குடி திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்கள். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு சமூகங்களும் அரசியலில் ஒன்றிணைந்து செயல்பட்டால் கன்னியாகுமரி அரசியல் என்பது இவ்விரு சமூகங்களின் கையில் தான் இருக்கும். அதிலும் கன்னியாகுமரியை பொறுத்தவரை இவ்விரு சமூக மக்களும் பெருமளவில் கிருத்துவ சமூகத்தை சேர்ந்தவர்களே. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள தொகுதிகளில் மீனவர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் அரங்கேற்றப்பட்ட மண்டைக்காட்டு கலவரம் கன்னியாகுமரியில் கிருத்துவ மீனவர்களுக்கும் இந்து சமூகத்தை சேர்ந்த நாடார்களுக்கும் இடையே மத ரீதியில் மோதலை தூண்டி விட்டு பின்பு அதை கொண்டு அப்படியே இரு சமூகத்தையும் சாதி அடிப்படையில் பிரித்து மோதவிட்ட ஆதிக்க சாதி இந்துத்துவ வெறியர்களின் வெற்றி என்றே சொல்லலாம். அதை பகுத்தறிய மறந்த இரு சமூகத்தை சேர்ந்த மக்களும் அந்த சூழ்ச்சிக்கு இரையாகி விட்டிருந்தனர்.
இந்தியாவில் இந்துத்துவ வெறியர்கள் தாங்கள் சாதி பிரிவினைகளுக்கு எதிரானவர்கள் என்று காண்பித்து கொண்டாலும் அவர்கள் வசிக்கும் சங் பரிவார கூடாரங்களின் உள்கட்டமைப்பை உற்று பார்த்தால் அங்கு பின்னப்பட்டு இருக்கும் சாதி வலையை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்கூடாரத்தின் மேல் மாடியை அடையும் வழி நாசுக்காக தவிர்க்கப்பட்டு விடுவதால் சங் பரிவாரங்களின் கீழ்மட்டத்தில் இந்துத்துவ வெறியூட்டப்படும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு சங் பரிவார மேல்தளங்களில் நடக்கும் சாதிய சித்து வேலைகள் பற்றிய அடிப்படை உண்மைகள் தெரியாமலேயே தங்களை நரபலிக்கு ஒப்பு கொடுத்து விடுகின்றனர். அப்படிப்பட்ட சமூகங்களில் ஓன்று தான் நாடார் சமூகமும்.
ஒருகாலத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக நாடார் இன சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு சாதீய வெறி பிடித்த இந்துத்துவ வெறியர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் வேறு எந்த ஒடுக்கப்பட்ட சமூக இன பெண்களுக்கு நடந்திருக்குமா என்று கேள்வி எழுப்ப கூடிய அளவிற்கு அவ்வின மக்கள் மகா கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வின பெண்கள் மார்பு சாட்டை அணிவதற்கு கூட சாதி வெறியர்களால் அனுமதிக்கப்படவில்லை. சுசீந்திரம் பகுதியில் மார்பு சாட்டை அணிந்ததற்காக அச்சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் மார்பகங்கள் வெட்டி எறியப்பட்ட வரலாறும் உண்டு. இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்படும் அய்யாவழி எனப்படும் இயக்கம் கூட இம்மாதிரியான சாதிய கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஓன்று தான். அந்த “அய்யா வழி” இயக்கத்தை சேர்ந்த பாலபிரசாதிபதி அடிகள் என்பவர் கூட அணுமின் உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஆரம்பத்தில் தீவிரமாக செயல்பட்டதை ஊடகங்கள் வாயிலாக எல்லாரும் அறிந்திருப்பீர்கள்.
சரி அதெல்லாம் பழைய கதைங்க இப்ப பொருளாதர, அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்று விட்ட நாடார் சமூகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த மக்கள் தானே தமிழகத்தில் அந்த சங் பரிவாரங்களின் முக்கியமான பொறுப்புகளில் உள்ளனர். பின்பு எப்படி அச்சமூக மக்களுக்கு எதிராக செயல்படுவார்கள். இங்க தான் நாம் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும் . நாடார் சமூகத்தை பொருத்த வரை பாதிக்கு பாதி கிருத்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் , அதிலும் அவர்களில் பாதிக்கு பாதி பேர் தீவிரமாக செயல்படும் சீர்திருத்த கிருத்துவ மத பிரிவை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டின் பிரபலமான மத போதகர்கள் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. அதோடு கூட தமிழகத்தை சேர்ந்த பணக்கார கிருத்துவ சபை பிரிவுகளில் ஒன்றான தென்னிந்திய கிருத்துவ சபையில் நாடார்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதே போன்று வட இந்தியாவில் ஆதிவாசி மக்களிடையே கிருத்துவ மதத்தை பரப்பும் கிருத்துவ மத குருமார்களில் கணிசமானோர் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள்
என்னதான் மத அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும் சமூக அடிப்படையில் நாடார் இனமக்கள் ஒன்றிணைந்து செயல்படுபவர்கள்.. அதிலும் சமீப காலமாக கிருத்துவ மதத்திற்கு மாறும் இந்து மதத்தை சேர்ந்த நாடார் சமூக மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் அவர்களில் பெரும்பாலோர் தீவிரமாக செயல்படும் சீர்திருத்த சபைகளில் சேருவது அதிகரித்து வருவதும் சங் பரிவாரங்களை சேர்ந்த பார்ப்பனிய கும்பல்களின் கண்ணை ரொம்ப நாளாகவே உறுத்தி கொண்டிருக்கிறது. இதனால் சமீப காலமாக நாடார் சமூக மக்களின் நடவடிக்கைகளை சங் பரிவாரங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இப்படி பட்ட சூழ்நிலையில் கிருத்துவ மீனவர்கள் அதிக அளவில் பங்கேற்கும் கூடங்குளம் போராட்டத்திற்கு இந்து மதத்தை சேர்ந்த நாடார் சமூகத்தவர் ஒருவர் தலைமை தாங்கி நடத்தி வருவது இந்தியாவில் சங் பரிவாரின் தலைமை பீடத்தில் இருக்கும் பார்ப்பனிய சக்திகளை அதிர்ச்சி அலைக்குள்ளாக்கி இருக்கிறது. இதுல வேற கிருத்துவ மதத்தை சேர்ந்த மீனவர்களோடு நாடார் இனமக்கள் மட்டுமல்லாமல் பிற சமூக மக்களும் சாதி, மத வேறுபாடுகளை தூக்கி எரிந்து விட்டு ஒன்றிணைவது தமிழகத்தில் அதிகார கணக்குகளை மாற்றி அமைக்கும் என்று பார்ப்பனிய கும்பல் அஞ்சுகிறது.
அதனுடைய தொடர்ச்சியாக தான் பார்ப்பனிய வெறியர்கள் தங்களுடைய தொடர்பில் இருக்கும் சாதி சங்கங்களையும், தமிழ்நாட்டில் காமராசருக்கு எதிராக கொம்பு சீவி விடப்பட்ட “தேசியமும் தெய்வீகமும் “ என்று கூறி கொண்டு அலைந்தவரின் சாதியை சேர்ந்தவர்களையும் இப்போரட்டத்திற்கு எதிராக திருப்பும் வேலைகள் வேகமாக ஈடுபட்டு வருகிறது. உடனே அந்த குறுப்பிட்ட சமூகத்தை சேர்ந்த எல்லாருமே சாதி வெறியர்கள், சமூக விரோதிகள் என்று எண்ணி விட கூடாது. அங்கும் மிக சிறந்த மனிதர்கள் உண்டு. உடனே பொதுவுடைமை கட்சியை சேர்ந்த “பாண்டையரா” என்று கிண்டல் பண்ணும் விதத்தில் கேள்வி எழுப்ப கூடாது அய்யா தினகரன், அய்யா கல்விமணி போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மக்களுக்காக போராடும் மிகச்சிறந்த சிந்தனையாளர்களையும் போராளிகளையும் உற்பத்தி செய்த சமூகமும் கூட. ஆனால் வேதனை என்னன்னா சாதி வெறி பிடித்து அலையும் காவாலிகளுக்கு மத்தியில் அவர்களின் குரல்கள் அந்த சமூகத்தில் எதிரொலிப்பதில்லை என்பது தான். தற்போது பார்ப்பனியத்திற்கு காவடி தூக்கும், அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் அச்சமூகத்தை சேர்ந்த மன்னாரன் கம்பெனியின் நடன ராசாவின் அச்சம் என்னன்னா ஏற்கனவே அரசியலிலும் பொருளாதரத்திலும் தலை எடுத்து விட்ட நாடார் இனத்தை சேர்ந்த ஒருவரின் பின்னால் அணி திரள்வது தங்களது ஆதிக்கத்திற்கு வேட்டு வைத்து விடும் என்பது தானாம்
எனவே கூடங்குளம் அணுமின் உலை எதிர்ப்பு போராட்டத்தில் தோளோடு தோள் போராடும் தோழர்கள் அனைவரும் கடந்த காலங்களில் ஏதேனும் கசப்பனா சம்பவங்கள் நடந்து இருந்தால் அதை மனதில் இருந்து துடைத்து எடுத்து விட்டு சாதி மத ஏற்றத்தாழ்வுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்றிணைந்து உத்வேகத்துடன் போராடுங்கள். அதே நேரத்தில் இந்த போராட்டத்தை ஒரு குறுப்பிட்ட பிரதேச, சாதி, மதத்தை சேர்ந்தவர்களின் போராட்டமாக சித்தரிக்க முயலும் பார்ப்பனிய வெறியர்களின் சதியை புரிந்து கொண்டு இப்போராட்டத்தை தமிழர்களின் பாதுகாப்பு சார்ந்த போராட்டமாக தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கெங்குங்கும் கொண்டு செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமை. தமிழனின் வரலாற்றில் ஆதிக்க வெறியர்கள் எழுத நினைக்கும் முடிவுரையை மாற்றி அமைக்க வேண்டிய தருணம் இது.
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடேல் அனைவருக்கும் தாழ்வு .
மண்டியிட்டு வீழ்ந்து கிடந்தது போதும் தமிழா
பகுத்தறிவு பகலவன் பெரியார் போதித்த
சுயமரியாதை வாளெடுத்து வா- உனை
எட்டி உதைத்து
குட்டி தாழ்த்தும்
பார்ப்பனிய திமிரை வெட்டி வீழ்த்தும்
பாரிய போர் தொடுக்க
உனை கட்டி வைத்திருக்கும்
சாதி மத முடிச்சுகளை
அறுத்தெறிந்து விட்டு
உனக்காக மட்டுமல்ல
உன் கனவுகளுக்கு
உயிர் கொடுக்க போகும்
எதிர்கால சந்ததிக்காகவும்
சேர்த்து போராட வா
ஒரு முக்கிய குறிப்பு இங்கு நான் சாதிகளை பற்றி பேசுவதால் என்னை சாதி வெறியன் என்று எண்ணி விடாதீர்கள். சாதீய பெருமைகள் கழிந்து போகும் எனது மயிருக்கு சமம். சில நேரங்களில் சாதிவெறியர்களின் முகத்திரைகளை கிழிக்கணும்னா சாதியை பற்றி பேசி தான் ஆக வேண்டி இருக்கிறது . நோயை பற்றி தெரிந்து கொள்ளாமல் அறுவை சிகிச்சை பண்ண முடியாதல்லவா. அதனால் தான் ஆதிக்க சாதி வெறியை அதன் பெயரை சொல்லி சொல்லி அறுத்து எரிந்து கொண்டு இருக்கிறேன்.
4 comments:
//எண்பதுகளின் ஆரம்பத்தில் அரங்கேற்றப்பட்ட மண்டைக்காட்டு கலவரம் கன்னியாகுமரியில் கிருத்துவ மீனவர்களுக்கும் இந்து சமூகத்தை சேர்ந்த நாடார்களுக்கும் இடையே மத ரீதியில் மோதலை தூண்டி விட்டு பின்பு அதை கொண்டு அப்படியே இரு சமூகத்தையும் சாதி அடிப்படையில் பிரித்து மோதவிட்ட ஆதிக்க சாதி இந்துத்துவ வெறியர்களின் வெற்றி என்றே சொல்லலாம். அதை பகுத்தறிய மறந்த இரு சமூகத்தை சேர்ந்த மக்களும் அந்த சூழ்ச்சிக்கு இரையாகி விட்டிருந்தனர்.//
கசப்பான உண்மை.
**///அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள தொகுதிகளில் மீனவர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர்///**
அந்தோனியின் அழகிய கண்டுபிடிப்பு .... எல்லோரும் கையை தட்டலாம், அவ்வளவு அறிவு கூர்மை!!!! கடற்கரையோரங்களில் உள்ள தொகுதிகளில் மீனவர்கள் வாழாமல் பின்பு யார் வாழ்வார்கள் அந்தோனி..?????
**//நான் சாதிகளை பற்றி பேசுவதால் என்னை சாதி வெறியன் என்று எண்ணி விடாதீர்கள்//**
பெரியார் சாதியை பற்றிதான் பேசினார் அவர் என்ன சாதி வெறியரா...?? தன் சாதிக்காரர்கள் சங்கத்து கூட்டத்தில் பெரியார் பேசியதுக் கூட சாதிக்காக அல்ல. தனது தம்பி மகன்களுக்குக்கூட சரியாக தரம் பார்த்து தன் சாதியிலேயே திருமணம் செய்து வைத்த பெரியார்ப்போலதான் நீங்கள்.
//**நோயை பற்றி தெரிந்து கொள்ளாமல் அறுவை சிகிச்சை பண்ண முடியாதல்லவா**//
அண்ணல் அந்தோணி இங்கு நோயை தெரிந்துகொண்டு அறுவை சிகிச்சை செய்யாமல் நோயை அனுபவித்து பின் சிகிச்சை செய்ய அசை படுகிறார்.
அதாவது குஷ்டம் ஒரு நோய் அதை தெரிந்துக்கொள்ள அல்லது சிகிச்சை செய்ய குஷ்டரோகத்தை தனக்கு
தானே உண்டாக்கி உள்ளார்.நல்ல திறமைசாலி .... மருந்து கண்டு பிடித்து விடுவார்.
"**ஆதிக்க சாதி வெறியை அதன் பெயரை சொல்லி சொல்லி அறுத்து எரிந்து கொண்டு இருக்கிறேன்**//
உன்னை தவிர எவனும் அவன் சாதியை நினைத்துகொண்டிருக்க மாட்டான்...
உன் இதயத்திலிருந்த சாதி வெறி,. உன் மண்டைக்குள் புகுந்து மயிர்களாக நிற்கின்றன....
அதை நீ சரைத்தாலும் சரி ! வீதியில் நின்று குரைத்தாலும் சரி!
கத்துவதெல்லாம் கருத்தா.??? பத்திரம் எழுதுபவன் எல்லாம் எழுத்தாளனா..?
இந்த "ஓசி" இடத்தில் ஒழுங்கற்ற பதிவு தேவையா..?
பேருந்தில் பயணிக்கும் பொது ஒரு காம வெறியன் ஒரு விரக தாபத்தில் உள்ள சக விதவை பயணியை இடித்துகொண்டு வந்தால்... விதவை என்ன செய்வாள்..? அதுதான் தினகரன் செய்தது. முதல்வராக இருந்தபோது தன்னை வெறும் காமராஜர் என கூறிக்கொண்டவர் அரசியல் அநாதை ஆகிய பின்பு தன்னை காமராஜ் நாடார் என அழைத்துக்கொண்ட சாதி வெறியனின் கைக்கூலி இந்த தினகரன். எது சரி! எது தவறு! என ஆராய தெரியாத உன் பூசனம் பிடித்த காளான் முளைத்த கருத்து .... பன்றியின் மல குழாய் துடைக்க கூட பயன்படாது.
பொய் ஒழுகும் வாயும் ... சாதி காய்சச்ல் பிடித்த நோயும்
உன்னை விடாது... நல்ல புத்தி தொடாது..!
மனித மலத்தின் வாடை பிடித்தே சாதி சொல்லும் உன் மூக்கும்....
சாதி வெட்டி சுட்டு தின்ற உன் நாக்கும்.... இருந்தென்ன பயன்!
ஒரு தலித் ஒரு தலித்தை அதாரித்தால் அதன் பெயர் சமூக நீதி..!
ஒரு பார்பனன் ஒரு பார்பனனை ஆதரித்தால் அதன் பெயர் சாதி வெறி????
நீ பூசினால் அதன் பெயர் சந்தனமா..??? அதையே அடுத்தவன் பூசினால் அதன் பெயர் மலமா..????
துயரம் இது மீனவர் துயரமல்ல .... சமுக நீதி பேசும் சாதி வெறி துயரம் !
Post a Comment