Saturday, October 22, 2011

அப்துல் கலாம் என்ற ஒரு விளம்பர பிரியர்

சமீபத்தில் தோழர் அருள் எழில் தன்னுடைய முக நூலில் அப்துல் கலாமை கோமாளி என்று விமர்சித்ததற்காக அவர் மீது இந்திய காதலர்கள் பாய்ந்து பிராண்டி இருந்தார்கள், அதை ஒட்டி என்னுள் எழுந்த ... அப்படி என்ன அப்துல் கலாம் சாதித்து விட்டார் என்ற கேள்வியும், அவருடைய முகமூடியையும் கழட்டி உள்ள என்ன தான் இருக்கு என்று மற்றவர்களுக்கு காட்டி விட வேண்டும் என்ற எண்ண ஓட்டமுமே நான் இந்த கட்டுரைய எழுதுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

பெரும்பாலான இந்திய அடிமைகளுக்கும், பொது புத்திகளுக்கும் அப்துல் கலாம் என்ற பெயரை உச்சரித்த உடனே கும்பி கும்மி அடிக்க ஆரம்பித்து விடுகிறது . அப்துல் கலாம் என்ற ஒரு பிம்பமே அவர் வேலை செய்த பாதுகாப்பு துறையில் ஊழல் செய்வதில் உலக சாதனை புரிந்து கொண்டிருக்கும் பார்ப்பனிய அம்பிகளால் உருவாக்கப்பட்ட ஒன்றே. ஆரம்ப காலத்தில் இருந்தே அப்துல் கலாம் தன்னை பார்ப்பனியத்தொடு அடையாளப்படுத்தி கொள்ளுவதில் சுய இன்பம் கண்டவர் என்பது அவரை உற்று கவனித்து இருப்பவர்களுக்கு நன்கு புலப்படும் . அந்த பார்ப்பனிய காதல் தான் சாதாரண தொழில் நுட்ப வல்லுனரை இந்திய பாதுகாப்பு துறையின் ஆலோசகர் என்ற உயரத்திற்கும், இந்தியாவின் உயர்ந்த அலங்கார பதவியான குடியரசு தலைவர் பதவிக்கும் இட்டு சென்றது.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சாமியார் மடத்தில் பஜனை பாடுவது போல் அறிவுரை எடுக்கும் இந்த ஆத்மாவின் காலத்தில் அவரது தலைமையின் கீழ் இருந்த பாதுகாப்பு துறையில் பார்ப்பனிய அம்பிகள் ஊழலில் புகுந்து விளையாடினார்கள், இன்றளவிலும் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரிந்தும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் உடம்பில் உள்ள அத்துணை ஓட்டைகளையும் பொத்தி கொண்டு இருப்பது ஏனோ. பார்ப்பனிய அம்பிகள் கோலேச்சும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளையும் அது சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களையும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இந்த உத்தமர் குரல் கொடுக்க வேண்டியது தானே அங்க தான் சூட்சுமம் இருக்கிறது அப்துல் கலாம் தன்னை பிரதிநிதப்படுத்துவதற்கு யாருடைய காலையும் கழுவுவதற்கு தயங்க மாட்டார். அப்படி இருக்கையில் அவர் பார்ப்பனிய அம்பிகளின் பகையை எக்காலத்திலும் சம்பாதிக்க விரும்ப மாட்டார்.

From 23 October 2011


கல்வியில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியை ஒழித்து விட்டு எல்லாரும் மறுபடியும் கனவு காணவேண்டும் என்று கூவினதாலேயே அரைமண்டையர்களின் கனவு கண்ணனாக வானளாவ புகழப்படுபவர் தான் அண்ணன் கலாம். கலாம் அண்ணாத்தேக்கு அடுத்த இந்திய மாமாவாக.. அது தான் நேருவாக.... ஆசையோ என்னவோ அவரு எங்கெல்லாம் பொடிசுகள் கூட்டம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஜராகி கனவு காண்பதை பற்றி வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவார். உடனே யோவ்... அவரு ஒவ்வொரு குழைந்தைகளிடம் பேசி அவர்களை உற்சாகப்படுத்துவது தப்பா என்று சிலர் குரல் எழுப்புவது புரிகிறது. ஆனால் அவரு எந்த குழந்தைகளிடம் போய் வகுப்பெடுக்கிறார் என்று உற்று கவனித்தால் புரியும் அண்ணன் கலாமின் நோக்கம். பின்ன அண்ணன் எண்ண மாநகராட்சி பள்ளிகளில் போயா பாடம் எடுக்கிறார் ? சங்கர வித்தியாலயங்களிலும், கல்வி வியாபாரிகள் நடத்தும் கல்வி தொழிற் கூடங்களிலும் தானே போய் அவரது கனவுகளை கூவி கூவி வியாபாரம் செய்கிறார். அவனுங்க தானே அண்ணனின் விளம்பர மோகத்தை புரிந்து கொண்டு செயல்படுபவர்கள். மாநகராட்சி பள்ளி கூடத்திற்கு சென்று பாடம் எடுத்தால் எவன் கண்டுக்குவான். பூணூல் அணிந்து கொண்ட குழந்தைகளின் மீது அண்ணனுக்கு எப்பவுமே ஒரு தனி பாசம் தான்.

கல்வியில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது திறமையானவர்களுக்கு வாய்ப்புகளை மறுப்பது போன்ற செயல் என்று சொல்லும் மாமா கலாம், பிறப்பில் இருந்து இறக்கும் வரை மனிதர்களை சாதிவாரியாக பிரித்து சமூகத்தில் ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி மேலே உட்கார்ந்து கொண்டு பிறப்பின் பெயரால் சலுகைகளை அனுபவித்து கொண்டிருக்கும் அம்பிக்களை எதிர்த்து மட்டும் எதுவும் பேசிட மாட்டார். பின்னே.... அம்பியாண்டவர்கள் நடத்தும் ஊடகங்களில் தம்முடைய பெயரை இருட்டடிப்பு செய்து விட்டால் என்னாவது என்ற எண்ணம் விளம்பர பிரியரான மாமா கலாமிற்கு வராதா என்ன ? ....

என்னய்யா எளிமையாக வாழும் ஒருவரை போய் விளம்பர வெறியர் என்று சொல்லுகிறாயே என்றும் சிலர் கேட்கலாம் ? அப்படி பட்டவர்களுக்கு ஒரு கேள்வி. ஏன் மாமா கலாமை போல் எளிமையாக எந்த அறிவாளிகளும் வாழவில்லையா ? ...வாழ்கிறார்கள் ஆனால் அவர்கள் அவர்களுடைய எளிமையை வியாபாரமோ, விளம்பரமோ செய்வதில்லை. உதாரணத்திற்கு ஒடுக்கப்பட்ட இருளர் இன மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து கொண்ட அய்யா கல்வி மணியை கூறுவேன். கல்வி மணி என்ன மாமா கலாமை போல் அறிவாளியா என்றும் சில அறிவொழிகள் கேட்கலாம் . ஏன் அணுகுண்டு வெடிக்கிறவனும், அணுகுண்டை வைத்து அனுப்பும் ஏவுகணையை நிர்மாணிப்பதில் ஈடுபடுபவனும் மட்டும் தான் அறிவாளியாக இருக்க முடியுமா , சமூகத்தை மேம்படுத்த உழைக்கும் சமூக விஞ்ஞானிகள் அறிவாளியாக இருக்க முடியாதா என்ன ?

அதுவும் இந்த வருமான வரியை ஒழுங்காக கட்டாத நடிக மா...மாக்களுக்கு ஊழலுக்கு எதிராக பேசும் மாமா கலாமின் மீது எப்போதுமே ஒரு தனி ஈடுபாடு உண்டு. பின்ன இருக்காதா மாமா ஊழலுக்கு எதிராக தானே பேசுவாரு வரிகட்டாம அரசாங்கத்தை ஏய்ப்பவனுங்களை பற்றி எல்லாம் பேசமாட்டாருல்லா. அப்படி பேசுனா அவனுங்க என்னைக்கே கலாம் மாமாவுக்கு கட்டம் கட்டி இருக்க மட்டானுங்களா. மாமாவுக்கும் நடிகனுங்கனா ஒரு தனி இது தான். அது தான் ஏன் என்று புரியலை. அதிலும் பெரிய கொடுமை என்னன்னா கோலிவுட்டில் பூனை கண்ணழகியை வைத்து வியாபாரம் செய்த விவேகம் கெட்ட மாமா பயலை தன்னால் பங்கு பெறமுடியாத இந்திய விஞ்ஞான கல்வி நிறுவன விழாவில் தனக்கு பதிலாக அனுப்பி பேச வைத்தது தான். சாதி கூட்டங்களில் கைதட்டுக்களை வாங்குவதற்காக பேசுகின்ற ஒருத்தனை சமூகத்தை கட்டமைக்க தயாராகி கொண்டிருக்கும் எதிர்கால சிற்பிகளுக்கு மத்தியில் உரையாற்ற அனுப்பி வைத்ததை என்னவென்று சொல்ல..... மாமா கலாமின் கண்களில் தகுதி வாய்ந்த வேறொருவர் படவில்லையா... இல்லை படங்களில் தன்னை சின்ன கலைவாணராக அடை மொழியை (கலைவாணர் மட்டும் இருந்திருந்தால் இந்த பயலை வாரியலாலேயே விளாசி இருப்பார்) தனக்கு தானே வைத்து கொண்டு நடிகைகளின் புரோக்கராக அலையும் மாமா பயலின் தகுதியே போதுமென்று கலாம் மா..மா.. நினைத்தாரோ என்னவோ அது அவருக்கே வெளிச்சம்.

இதெல்லாம் போதாதென்று கூடங்குளம் அணுமின் நிலையம் பிரச்சினையில் நம்ம மாமா கலாம் என்ன சொல்கிறாரோ... அணுகுண்டை வெடிக்க வைத்தும் ஏவுகணையில் எப்படி அனுப்பலாம் என்றும் ஆராய்ச்சி செய்யும் மாமா என்ன சொல்லுவார் என்பது உலகம் அறிந்த விடயம் தானே..... அதை ஏற்று கொள்ள வேண்டும் என்று சேது பாலத்தின் ஒனரான ராமன் பெயரை கொண்ட மருத்துவர் ஒருவர் கலாமிற்கு வரிந்து கட்டி கொண்டு களத்தில் இறங்கியது அதை விட கொடுமை. வரிந்து கட்டியவரும் விவேகம் கெட்ட மாமாவும் சாதி கூட்டங்களில் சாதி வெறியை ஏற்றி கொண்டு அலைபவர்கள் என்பது மட்டுமின்றி இருவருக்கும் ஒரு விடயத்தில் நிறைய தொடர்பு உள்ளது. அது என்னன்னா பூனை கண்ணழகியை வைத்து மாமா பயல் வியாபாரம் பண்ணினான் என்றால் மருத்துவர் தன்னோட சாதிக்கட்சியின் மகளிர் அணியின் தலைவியாகவே ஆக்கி பெருமை(?) பட்டு கொண்டிருப்பவர். இப்படி பூனை கண்ணழகியை கஸ்டடியில் வைத்து கொண்டு அலைபவர்கள் கலாம் மாமாவிற்கு வரிந்து கட்டி கொண்டு இறங்கி இருப்பது பார்ப்பதற்கு எங்கேயோ இடிப்பது போல் உள்ளது . அதுசரி அவங்க எங்கே வைத்து இடித்தால் நமக்கு என்ன. அது அவங்களோட சொந்த விடயம்.

சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தூக்கத்திலும் பேசும் இந்த அம்பிகளின் அபிமானி மக்களின் உயிர்கள் பற்றிய பாதுகாப்பை கேள்விக்குறிக்குள்ளாக்கும் அணுமின் நிலைய பிரச்சினையில் பத்து நாட்கள் கழித்து தன்னுடைய கருத்தை சொல்வேன் என்று அறிக்கை விட்டார். இவர் கடந்த காலத்தில் குடிமக்களின் தலைவராக அமர்த்தப்பட்டதை எண்ணினால் எங்கேயாவது போய் முட்டி கொள்ளலாம் என்று தான் தோன்றுகிறது. அதுசரி இவர் எப்படி குடியரசு தலைவரானார் என்று யாராவது கேட்கலாம். ஆளுகின்ற கட்சிகளின் அடிமைகளாய் செயல்பட்ட குடியரசு தலைவர்களுக்கு மத்தியில் தெளிந்த சுய அறிவோடு செயல்பட்ட முத்தான கே.ஆர். நாராயணன் மீண்டும் குடியரசு தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் எங்கே தங்களது தப்பு தாளங்களை தொடர முடியாமல் போய்விடுமோ என்று கட்சி சார்புகளுக்கு அப்பாற்பட்டு பார்ப்பனிய அம்பிகள் ஓன்று கூடி அந்த முத்தை வீழ்த்த சிறுபான்மை முகமூடி அணிவித்து அனுப்பப்பட்ட அம்பு தான் நம்ம கலாம் மாமா. கலாமிற்கு எதிராக நின்றால் அவர்களை சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று முத்திரை குத்தி சிண்டு முடிந்து விடலாம் என்பதோடு குசராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான வெறியாட்டத்தை உலக நாடுகளின் மத்தியில் மறைக்க கலாமை ஒரு போர்வையாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கிற திட்டத்தின் ஒரு பகுதி தான் கலாம் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அம்பிகள் அவர்களோட கும்பிகளை ஓரிடத்தில் வைத்து விடாமல் ஓடியாடி வேலை செய்தது.. அவர்கள் தங்களுடைய வேலையை எவ்வித தடங்கலும் இன்றி செய்து முடிக்க தேர்ந்தெடுத்த ஒரு ஆயுதம் தான் விளம்பர பிரியரான அப்துல் கலாம்.


குசராத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளை, அதனை கட்டவிழ்த்து விட்ட அயோக்கியர்களை சக இசுலாமியாராக (சந்தேகத்திர்க்குறிய விடயம் தான்) இல்லையென்றாலும் சக மனிதன் என்றளவிலாவது இன்றளவு கூட கண்டிக்க வக்கில்லாத ஒருத்தரை சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்திய கவாலித்தனம் அரைமண்டையன்களின் மண்டையில் முளைக்கும் விபரீதமான புத்திகளுக்கு மற்றுமோர் உதாரணம்.

சமூகத்தை பற்றி எந்தவித தெளிவும் இல்லாமல் ஆய்வகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை கொண்டு வந்து சமூகத்தை வழி நடத்த சொன்னால் அவர் சமூகத்தை தனது ஆய்வு சாலையில் உள்ள சோதனை எலியாக தான் பார்ப்பார் என்பதற்கு கலாம் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. தங்களுடைய எளிமையை வைத்தே வியாபாரம் செய்பவர்களும் நம்மிடையே உண்டு என்பதை கலாம் நம்மிடையே இருப்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பதவிக்கு ஆசைப்படாதவரை போல் தன்னை காட்டி கொண்டு போட வேண்டியவர்களுக்கு எல்லாம் சால்ராவும் கூழை கும்பிடும் போட்டு ரெண்டாவது தடவையாக குடியரசு தலைவர் பதவியை அடைய அவர் பண்ணிய அலம்பல்கள் அவருடைய பதவி வெறியையும் அம்பலபடுத்தியது.

மொத்தத்தில் விளம்பரம் கிடைத்தால் சாதி, மதவெறியன்களோடு உறவாடுவது என்ன.... மனித மாமிசம் தின்பவர்களோடு கூட சாப்பாட்டு அறையை பகிர தயங்க மாட்டார் இந்த சைவ பிரியர். உள்ளதிலேயே பெரிய கொடுமை என்னன்னா அவரு சைவ சாப்பாடு சாப்பிட்டதால் நல்லவர் என்றும் எளிமையானவர் என்றும் விளம்பரம் கொடுத்தானுங்களே அந்த கொடுமை தான் தாங்க முடியாத கொடுமை.

4 comments:

புதிய பாமரன் said...

இவரில் சில பேச்சுக்களைக் கவனித்தால் 'கொஞ்சம் இதுவோ' அல்லது வெகுளியோ என்று நினைக்கத்தோன்றும். சினிமாவும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும், புரளிகளும் இவரை வளர்த்துவிட்டன. பூணூலால் பறக்கவிடப்பட்ட பட்டம். அறுந்து கீழே விழுந்தால் குப்பையாகிவிடும். ஆனால் மட்கக் கொஞ்சம் நாளாகலாம். ஏனென்றால் பிளாஸ்டிக் மாதிரி, அக்மார்க் அறிவியலாலான குப்பையல்லவா?!

anthony said...

தங்கள் வருகைக்கு நன்றி பாமரன் அவர்களே . பார்ப்பனிய வெறியர்கள் அவர்களுடைய கோவணகயிறினால் சமூகத்தில் பறக்கவிடும் போலிகளையும்,முகமூடிகளையும் அவ்வப்போது அடையாளம் கண்டு சமூகத்தை எச்சரிக்கை ஏற்படுத்துவது நல்லது . இல்லை என்றால் கோவணக்கயிறுகளால் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்கள் சமூகத்தை குழப்பமான நிலைமைக்கு இட்டு சென்று விடும்

Hai said...

குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து இரண்டு சூட்கேசுக்ளுடன் வெளியேருகிறேன் என்று தானே விளம்பரம் செய்து கொண்ட தானைத்தலைவர்.

மீண்டும் போட்டியில்லை என்று அறிவித்து விட்டு வெற்றிபெற வாய்ப்பிருந்தால் போட்டியிட தயார் என்று அறிவித்தவர்.

பீகார் மாநில அரசை கலைக்க மத்திய அரசு பணித்த போது சுற்றுப்பயணத்தில் இருந்தவாறே அப்படியே ஆகட்டும் என்று கையெழுத்திட்டவர்.

குடியரசுத்தலைவராயிருந்த காலத்தில அவருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை இல்லத்தை பூட்டி வைத்து ஐந்தாண்டு காலம் பாதுகாத்தவர்.


ஆனாலும் நல்ல தலைவருக்காய் கனவு காணச் சொல்லி சொன்னதை நாம்தான் புரிந்து கொள்ளவில்லை.

ஓசூர் ராஜன் said...

"ஊழலை ஒழிக்க வேண்டும் என்று சாமியார் மடத்தில் பஜனை பாடுவது போல் அறிவுரை எடுக்கும் இந்த ஆத்மாவின் காலத்தில் அவரது தலைமையின் கீழ் இருந்த பாதுகாப்பு துறையில் பார்ப்பனிய அம்பிகள் ஊழலில் புகுந்து விளையாடினார்கள், இன்றளவிலும் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரிந்தும்",அப்துல் கலாம் ஒரு அரசியல் கோமாளி ! அவரைவைத்து,ப.ஜ.க.வும்,காங்கிரசும் ஆடும் பரமபத விளையாட்டில் ஏமாற்றப்பட்டு வருபவர்கள் மாணவர்கள்,முஸ்லிம்கள்,உட்படஅதிகம்!நல்ல சிந்தனயுள்ள பதிவு!

Post a Comment