Wednesday, November 30, 2011

2G – ராசாவின் கையில் மாட்டி தவிக்கும் கும்பல் பற்றிய கிசு கிசு

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழலில் குற்றம் சாற்றப்பட்டு திகாரில் இருக்கும் ராசாவின் கையில் அப்படி என்ன இருக்கும் .கட்சி தலைமையே அவரை கைவிட்டு விட்டதே என்ற எண்ணம் பலருக்கும் இருக்கலாம். ஆனால் உண்மை என்னன்னா ராசா ரொம்ப ரிலாக்சாக இருக்கிறார் என்பதே. தல ராசா பார்ப்பதற்கு தான் பட்டிக்காட்டான் மாதிரி இருந்தாலும் ஆள் ரொம்ப விவகாரமான புத்திசாலியாம். தலைநகரில் உள்ளா பிரபலமான வழக்கறிஞர்களே ராசாவின் புத்தி கூர்மையை பற்றி மூக்கில் விரலை வைக்கிறார்களாம். நல்ல வேளை வக்கீல் தொழிலுக்கு வராமல் இருந்தார், இல்லையெனில் நம்மை எல்லாம் ஓரங்கட்டி இருப்பார் என்ற மாதிரியான குரல்கள் ஒலிக்கின்றனவாம். அப்படி ராசாவிடம் என்ன தான் இருக்கிறதாம். அதை பற்றி தான் விளக்க போகிறேன்.

பொதுவாக எல்லா அமைச்சர்களும் தான் பதவி ஏற்கும் துறையில் எப்படி கொள்ளையடிக்கலாம், அதற்கான வழி வகைகள் என்ன இருக்கின்றன என்பதை தான் தேடுவார்கள் .ஆனால் தல ராசா கொஞ்சம் வித்தியாசமானவராம். அவரு தேடியது என்னன்னா கடந்த காலங்களில் ஆட்டைய போட்ட அமைச்சர்கள் விட்டு சென்ற தடயங்களை தானாம். அண்ணன் அவை எல்லாவற்றையும் துளி கூட மிச்சம் வைக்காமால் உறிஞ்சு எடுத்து விட்டாராம். அவை தான் அண்ணனின் தற்போதைய துருப்பு சீட்டுகள். ஆரம்பத்தில் தன்னிடம் அப்படியான எதுவும் இல்லாமல் காட்டி கொண்ட ராசா இப்போது தான் ஒவ்வொரு ஆயுதமாக வெளியில் எடுத்து வீசுகிறாராம். அது தான் பெரும் தலைகளை மண்டையில் கையை வைத்து கொண்டு உட்கார வைத்து விட்டதாம்.

எப்ப யாரை நோக்கி ஆயுதங்களை வீச வேண்டும் என்பதிலும் தல ரொம்ப நேர்த்தியாக செயல்படுகிறாராம். அவரு முதலில் குறி வைத்து இருப்பது சி.பி.ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறையை நோக்கி தான். அடுத்து அண்ணன் வீசியது கேடி சகோதர்களை நோக்கி, அந்த வழக்கில் தங்களது ஊடங்கள் மெல்லாம் ஓவராக பேசி கொண்டிருந்த கேடி சகோதர்களை தனது தொடர்புகள் மூலம் தன்னிடம் உள்ள அவர்களை பற்றிய விடயங்களை வெளியிடுவேன் என்று எச்சரிக்கையே விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அதை பற்றி ரொம்ப அலட்டி கொள்ளாமல் இருந்த கேடி சகோதர்கள் கொஞ்ச நாளில் ராசா யார் என்பதை புரிந்து கொண்டார்கள். சகோதர்கள் ரெண்டும் பேரும் குடும்பத்தொடு மூட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு பின்லாந்திற்கு ஓட அதுவும் காரணமாம். முரசொலி மாறன் மீது உள்ள மரியாதையால் சகோதர்கள் ரொம்ப பிரச்சினைகளை எதிர்கொள்ளாதவாறு இருக்க சில விடயங்களில் அவர்களை முன்னமே தனது தொடர்ப்புகள் மூலம் எச்சரித்தாராம்.

ஆரம்பத்தில் இருந்தே பிணை மறுக்கப்பட்ட கனி மொழி, மற்றும் அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பலருக்கும் திடீரென பிணை வழங்கப்பட்டதன் பிண்ணனியில் தல ராசாவின் வில்லத்தனமான காய் நகர்த்தல்கள் தான் காரணமாம். உள்துறையையும் அதை கட்டு படுத்துகிற தலைமையையும் பற்றி தன்னிடம் சிக்கியுள்ள மேலும் சில தகவல்களை தனது தொடர்புகள் மூலம் வெளியிடுவேன் என்று அடுத்த கட்ட ஆயுதத்தை அவர்களை நோக்கி வீசியது தான் காரணமாம். தில்லி மேலிடங்கள் ராசாவின் இந்த அதிரடி ஆட்டங்களை பார்த்து உறைந்து போய் கிடக்கிறார்களாம். அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க தான் கர்னாடக எட்டியப்பருக்கும் பிணை வழங்கப்பட்டதாம். மதவெறியர்களின் கட்சியை அமைதிபடுத்தினது மாதிரியும் இருக்கும் அல்லவா. இதில மற்றொரு கொடுமை என்னன்னா ராசாவை வேவு பார்க்க பைலட்டோட புள்ளையாண்டானை ராசாவிற்கு துணையாக அந்த துறைக்கு அனுப்பி வைத்தும் இப்படி கோட்டை விட்டு விட்டோமே என்ற கடுப்பும் கூடவே.

இவங்க இப்படின்னா தங்களை உத்தமர்கள் என்று காட்டி கொள்ளும் மதவெறியர்களின் கூடாரமும் இப்ப ராசாவின் காய் நகர்த்தல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார்களாம் . அந்த வழக்கில் ராசாவை பற்றி அவர்கள் அடக்கி வாசிப்பதன் காரணம் ராசாவிடம் மாட்டியுள்ள அவர்களின் கடந்த கால வண்டவாளங்கள் தான். அதிலும் செத்து போன மகராசன், மற்றும் அருண் சொறி விளையாண்ட விளையாட்டுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் ராசாவிடம் மலை போல் குவிந்து கிடக்கிறதாம். ஆனால் ராசாவோட புத்திசாலி தனம் என்னான்னா ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் வீசாம நேரம் வரும் பொது ஒவ்வொன்னா வீசவது என்பது தானாம். நாளைக்கு அந்த மதவெறி கட்சி ஆட்சிக்கு வந்தால் அதை வைத்து அவர்களிடம் பேரம் பேசலாம் என்பது தான் அவரது அமைதிக்கு காரணமாம்.


From 26 November 2011

சரி இவ்வளவு விடயங்களை கையில் வைத்துள்ள அவர் பேசாம பிணைக்கு விண்ணப்பித்து வெளியில் வரவேண்டியது தானே என்று பலரும் கேட்கலாம். அங்கதான் அதிர்ச்சியான விடயம் இருக்கிறது. வெளியில் வந்தால் தன்னை போட்டு தள்ள அதிகார வர்க்கம் தயராக இருக்கிறது என்பதை ராசா தனது தொடர்புகள் மூலம் அறிந்து வைத்திருப்பது தான். சி.பி.ஐ. யின் செல்ல குழந்தையாக இருக்கும், மற்றொரு தாதாவின் கும்பலுக்கு பயந்து பாங்காங்கில் இருப்பிடத்தை மாற்றி கொண்ட தேசபக்தி மும்பை தாதாவின் மூலம் ராசாவின் தலைக்கு குறி வைக்கபடுகிறதாம். அதனால் ராசா வழக்கின் சூடு தணியும் வரை திகாரில் இருப்பதே நலம் என்று நினைக்கிறாராம். இந்த வழக்கின் மூலம் எதிரிகளை சம்பாதித்தாலும் அண்ணன் நிறைய நண்பர்களை சம்பாத்தித்து விட்டாராம். அதாவது ராசா நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்ற மாதிரியான பேச்சு தான் தலைநகரின் அரசியல் மட்டும் கார்பரேட் வட்டாரங்களில் எதிரொலிக்கிறதாம்.

சிறைச்சாலையில் இருப்பது இவ்வளவு பாதுகாப்பா என்று நினைப்பவர்களுக்கு ஒரு விடயம் ஆத்தா தனது வழக்கின் முடிவை அறிந்த பிறகு சிறை நிரப்பும் ஆட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருக்கிறாராம். அப்ப எல்லாரும் பாதுகாப்பாக இருக்கலாம் தானே ....

No comments:

Post a Comment