Friday, November 11, 2011

சாட்டையா இப்படி ?????? நம்ப முடியவில்லையே .........

தலைப்புல என்ன இருக்கிறதோ அது தான் அந்த விடயத்தை பற்றி கேள்வி பட்ட போதும் எனக்கு இருந்தது. சரி யார் எப்படி போனால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருந்தாலும், நம்மளுக்கு தான் நம்ம கிட்ட வந்து சேர்ந்த விடயத்தை நாலு பேரிடம் சொல்லாவிட்டால் உறக்கமே வராதே அது தான்..... சரி மனதுக்குள்ள அரிக்கிற விடயத்தை வெளியில் கக்கி தொலைப்போம் என்ற பாணியில் இங்கே கக்கி விடுகிறேன்.

இணையத்தில் மஞ்சள் துண்டு பெரியவரை ஓட ஓட விரட்டியதில் நம்ம சாட்டை சாத்தப்பனோட பணி தவிர்க்க முடியாத ஓன்று. பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடகங்களில் இருந்து அரசியல் தளம் இப்போது கொஞ்ச கொஞ்சமாக இணைய தளத்தில் முங்கி வருகிறது என்பது சமீபகாலமாக இணையதளத்தை உற்று கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதுவும் ரகசியங்கள் துரத்தி துரத்தி வேட்டையாடப்படுவது என்பது தான் அதில் உள்ள முக்கியமான விடயம். திறந்து வைத்தால் பச்சக்கென பற்றி கொள்ளும் எரிபொருளை போல் இணையதளங்களில் ரகசியங்கள் ஒளியின் வேகத்தில் பற்றி எரிய தொடங்கி விடுகிறது.

நிலைமை இப்படி இருக்க ரகசியங்கள் பதினாறு வயதினிலே பரட்டை போன்றவர்களிடம் கிடைத்து விட்டால் அவற்றின் உரிமையாளரோட கதி அதோ கதி தான். ரகசியங்களை வேட்டையாடுவதில் தானே, மூழ்கடிக்க முடியாது என்று முழங்கிய மரக்கலங்களும் அரசியல் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. கர்ணம் தப்பினா மரணம் என்றார் போல் இங்கு வேட்டையாடுபவர்களும் வேட்டையாடப்படும் சூழ்நிலைக்கும் தள்ளப்படுவதுண்டு.

அப்படி தான் மஞ்ச துண்டு பெரியவர் பெயரை பயன்படுத்தி நடத்தப்பட்ட ரகசிய வேட்டையின் தளகர்த்தருக்கு உதவியாக சென்ற நம்ம சாட்டை புகழ் சாத்தப்பன் கடைசியில் வேட்டைக்கு அனுப்பினவங்களையே வேட்டையாடியது என்பது தனி கதை. ஆனால் ரகசியங்களை ஒட்டு கேட்கப்போன நம்ம சாட்டை சாத்தப்பன் ஓட்டைகளையும் வேட்டையாடி இருந்து இருக்கிறாரு என்பது தான் புதுகதை.

அதென்னங்க ஓட்டை வேட்டை கதை என்று எல்லாருக்கும் ஆர்வம் கொப்பளிப்பது இயற்கை தான். பின்ன ஒட்டைகளின் கதை என்றால் சும்மாவா ....

From Profile Photos

சரி அப்படி என்ன அவரு பண்ணுனாரு ?....... அண்ணன் என்ன பண்ணுணாறுன்னா......... நானும் ரகசியம் வேட்டைக்கு போகிறேன் என்று சொல்லி கொண்டு, இவரை வேட்டைக்கு அனுப்பியவங்களுக்கு தெரியாம ரகசியம் பேசும் ஆன்டிகளை பாலோ பண்ண ஆரம்பிச்சாரு. ஆனா அண்ணன் கொஞ்சம் வித்தியாசமானவரு வேட்டையில் மாட்டிய ஆண்டிகளிடம் ரொம்ப சாப்டா டீல் பண்ணுவாராம். அதாவது பிரச்சினையை ஆன்டிகளின் மேல் திணிக்காமல் ஆன்டிகளை வலையில் வீழ்த்துவதில் அண்ணன் எல்லாருக்குமே சங்கு ஊதி விடுவாராம். அதிலும் அண்ணன் ரொம்ப விவரமானவரு அது என்னன்னா பசை உள்ள பார்டிகளிடம் தூண்டில் போடுவதுதானாம். அதுங்களும் போனா போகுதுன்னு கேட்ட துட்டை வீசி எரிஞ்சி விடுவார்களாம். அதோடு அண்ணன் கொஞ்சம் பெரிய மனசு படைத்தவராம். அதாவது தொடர்ந்து பாலோ பண்ணி லொள்ளு பண்ண மாட்டாராம் பெரும்பாலும் அவர்களை தன்னுடைய நட்பு வளையத்திற்குள் கொண்டு வந்து விடுவாராம். பிரச்சினை பண்ண நினைக்கிற பார்டிகளிடம் அண்ணன் அவங்களோட ரகசிய நாடாவை காட்டி வாயை கட்டி விடுவாராம். அண்ணனுடைய வலையில் சிக்கியவர்களில் பெரும்பான்மையானோர் ஆத்துல வசிப்பவர்களாம். அண்ணன் கடலில் போடும் மடி வலையை ஆத்துல நன்னா போட்டுண்டு இருக்கார் போல. மாட்டினது மடி சார்ந்த அவங்களாகவே மாட்டி இருக்காங்க.

உடனே நிறைய பேரு சாட்டை சாத்தப்பன் வாயை அடைக்க தான் இது போன்று எழுதுகிறேன் என்று நினைக்கலாம். அது நம்முடைய எண்ணமல்ல .சொல்ல போனால் அண்ணனோட இன்வெச்டிகேட்டிவ் சர்னலிசத்தோட தீவிர ரசிகன் நான். தல ஓட்டைகளை வேட்டையாடியது ஒரு புறமிருந்தாலும் அதிகார வர்க்கத்தை அசைத்து பார்த்த ஒருவர் என்றால் மிகையாகது.எவ்வளவு துணிச்சலான விடயம் அது. பலத்த கதிர்வீச்சுக்களை கக்கும் மூலத்தை எதிர்த்து தனி மனிதனாக போராடுவதென்றால் சாதாரணமான நிகழ்வொன்றும் அல்லவே. அந்த விடயத்தில் நம்ம சாட்டை சாத்தப்பன் நிறைய சாதித்து இருக்கிறார் என்றாலும், அண்ணன் சாத்தப்பன் நடத்திய ஓட்டை வேட்டையை ஒன்றும் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. அது தனிப்பட்ட பெண்களின் அந்தரங்கத்திர்க்குள் நுழைந்த அத்துமீறல் அல்லவா.

எல்லாருகிட்டேயும் நல்ல பக்கங்களும் உண்டு கெட்ட பக்கங்களும் உண்டு. ஆனால் நல்ல பக்கங்களை மட்டும் ஊதி பெரிய காண்டமாக மாற்றி விட்டு, கெட்ட பக்கங்களை மற்றவர்கள் அறியாமல் செய்து விடுவது தான் கொஞ்ச நஞ்ச நல்லவர்களையும் காலப்போக்கில் கெட்டவர்களாக்கி விடுகிறது. ஒருவன் கெட்டவன் என்பதற்காக அவன் கூறும் உண்மைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் நல்லதல்ல. உண்மை எங்கிருந்து வந்தாலும் ஆதரிப்போம். அதற்காக ஏதோ ஒன்றிரண்டு உண்மைகளை கூறியதற்காக மகா ஆத்மா ஆக்கி விடுவது எல்லாம் எதிர்கால சமூகத்திற்கு தவறான வரலாறை சொல்லி கொடுத்து விடும். ஏனென்றால் இதற்கு முன்னால் பெண்களை வைத்து சுய பரிசோதனை என்ற பெயரில் பாலியல் பரிசோதனைகளை நடத்தியவர்கள் எல்லாம் மகாத்மா ஆக்கப்பட்ட கேவலமான வரலாறு கொண்டது தான் நம்முடைய சமூகம்

அது என்னவோ தெரியவில்லை அநியாயத்திற்கு எதிராக சாட்டையை சுழட்டும் பலரும் ஓட்டைக்குள் விழும் நிகழ்வு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொருத்தரும் ஒவ்வரு விடயத்தில் அநியாயத்திற்கு வீக்கா இருக்கைங்க. எது எப்படியோ அண்ணன் சாட்டை சாத்தப்பனுக்கு நேரம் நல்லா இருக்கும் வரைக்கு அவருடைய கதை ஓடும். ஆனாலும் நீருக்குள் அழுத்தி வைக்கப்படுகிற எந்த காற்றும் அங்கேயே அடைந்து கிடைப்பதில்லை. வாழ்க்கை காட்டற்றை போல ஓடிகொண்டிருக்கிற கால கட்டத்தில் அண்ணனுடைய ரகசியம் கூடிய சீக்கிரத்தில் சாந்தி...... சாரி சந்தி சிரிக்கக்கூடிய அளவிற்கு வந்துவிடும் போல தான் என்று அண்ணனுடைய மேட்டரை அறிந்தவர்கள் கசியவிடும் தகவலில் இருந்து தெரிகிறது. மாட்டாம இருக்கிறவரை மன்மதனின் ராச்சியத்தில் மன்மத ராகங்கள் தான்.

அதுவரை அண்ணன் சாட்டை சாத்தப்பனின் வாழ்வில் சாந்தியும் மோகனமும் நிலவட்டும்.

No comments:

Post a Comment