Saturday, November 5, 2011

கேசரி கண்ணேசனின் கைதிற்கு பின் உள்ள சாதீய சிக்கல்கள்


சமீபத்தில் முருகனின் ஆயுதத்தின் பெயரில் கல்வி வியாபார நிறுவனங்களை நடாத்தும் வியாபாரி ஒருத்தர் அவர் உறுப்பினராக உள்ள பச்சை அப்பன் கல்லூரியின் நிர்வாக குழுவில் உள்ள மற்றொரு உறுப்பினரை கைநீட்டி அடித்து விட்டார் என்ற செய்தி தமிழக ஊடகங்களில் அடிபட்டது பலருக்கு நினைவில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் ....

ஆமா அதுக்கென்ன இப்ப நீ என்ன சொல்ல போற என்று சில பேரு கேட்கலாம் அவங்களுக்காக தான் இந்த செய்தி. வேலின் சொந்தக்காரரான அண்ணன் கேசரி கண்ணேசனின் கைதிற்கு பின்னால் மற்றொரு ஆதிக்க சாதியின் பெரும் புள்ளி ராசாக்கள் இயங்கி இருப்பது தான் அது. என்னங்க ஆதிக்க சகதிகளுக்குள்ளேயே சண்டையா அப்படி என்ன பெரிய பிரச்சினை அது என்று யாராவது கேட்கலாம். வேற ஒண்ணுமில்லீங்க, பிரச்சினை முக்கு குளத்தின் அகம்படிந்த உட்சாதிக்காக உரிமை சண்டை நடத்துவதால் ஏற்பட்ட தகராறு தானாம் அது .

சரி இப்ப விடயத்திற்கு வருவோம், அந்த அகம்படிந்த உட்சாதியின் பெயர் ரெண்டு ஆதிக்க சாதியிலும் உட்சாதி பெயராக இருப்பது தமிழக சாதிகளின் புள்ளி விவரங்களை பற்றி அறிந்திருப்பவர்களுக்கு நன்கு தெரிந்த ஓன்று தான். இப்ப என்னன்னா அந்த தேவலோகத்தில் இருந்து வெடித்து விழுந்த சாதிகாரங்களுக்கும், திராவிட இயக்கத்தை கொண்டு ஆரம்ப காலங்களில் தமிழக அரசியலில் கோலோச்சியதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய முதலை போடாமலே தமிழ்நாட்டை மொட்டையடித்த மற்றொரு ஆதிக்க சாதிகாரங்களுக்கும் அகம்படிந்தவங்க யாருக்கு சொந்தம் என்பதில் வேறுபாடுகள் ஏற்பட்டு, அது இருபுறத்திலும் ஆயுதங்களை தீட்டும் அளவிற்கு இட்டு சென்று இருக்கிறது. கொடுமை என்னன்னா இதுவரை எக்குலமும் வாழட்டும் முக்குறவங்க மட்டுமே ஆள வேண்டும்” என்று வீர வசனம் பேசி கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு கூட்டம் சாதிய பதவி உயர்வு வேண்டி நம்ம மூணு பேரும் ஒண்ணா சேர்ந்து முக்கவும் வேண்டாம் நக்கவும் வேண்டாம். எங்களை முதலாளி சமூகத்தோடு அனுப்பி விட்டால் போதும் என்று சொல்ல ஆரம்பித்து இருப்பது தான். அதற்கு ஏற்ப இதுவரை தேவலோக சாதியில் ஒன்றாக எண்ணப்பட்ட அகம் படித்தவங்க எல்லாம் இப்போது முதலாளி சாதிகாரங்களோட சாதி பெயர்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனராம்.

இப்படி முரண்பாடுகள் கடந்த காலங்களில் வலுத்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு முதலாளி சாதிக்கு நீதி (?) வேண்டி கட்சி நடத்தும் பாபிலோன் தொங்கும் தோட்டத்து தாசனானவரு ஆதிக்க வெறியோடு முக்குறவங்க நடாத்துகிற குரு பூசைக்கு போட்டியாக மருது பாண்டிய சகோதரர்களின் குருபூசைக்கு ஏற்பாடு செய்து ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தாரு. ம்ம்ம்ம் சாதி வெறியர்கள் தங்கள் குத்தாட்டத்தை அரங்கேற்ற வெள்ளையரின் ஆதிக்கத்திற்கு எதிராக போர் தொடுத்த மருது சகோதர்களையும் விட்டு வைக்கவில்லை. பாபிலோன் தாசன் அத்தோடு நின்று விட வில்லை . அகம்படித்தவர்கள் முதலாளிகள் என்றும் அவர்கள் தேவ தாசர்களாக இருப்பது தாழ்த்தி கொள்ளும் செயல் என்றும் தூபம் போட ஆரம்பித்தாரு. அப்படியே தேவ மைந்தர்களால் முதலாளி இனம் காலம் காலமாக அனுபவித்து வந்த கொடுமைகளை (?) சந்தடி சாக்கில் பட்டியலிட்டு எரிகிற எண்ணெயில் மேலும் வெண்ணெயை வழிய விட்டாரு. அது என்னங்க கொடுமை என்று பலரும் கேட்கலாம். பசும்பொன்னாலான குருபூசை நாயகனால் மிரட்டப்பட்ட எத்திராசு முதலாளியில் இருந்து சீவலபேரி பாண்டியால் போட்டு தள்ளப்பட்ட முதலாளி வரையிலான சோக செய்திகள் தானாம்.

இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து வரும் ஆதிக்க சாதியினரின் யார் பெரியவன் மோதலுக்கு ரெண்டு சாதியிலுமே உள்ள சாதி சங்க தலைவர்கள் தூபம் போட்டு வருகிறார்கள் . அப்படி முதாலாளி சாதிக்காக தூபம் போடும் மற்றுமொருத்தர் தான் இந்த கேசரி கண்ணேசன். இந்த கல்வி வியாபாரி பச்சை அப்பன் ஆட்சி மன்ற குழுவில் உறுப்பினராக இருப்பவன் என்பது குறுப்பிடத்தக்கது. இந்த பச்சை அப்பன் கல்வி நிலைய ஆட்சி மன்ற குழுவில் கடந்த ஆட்சியில் பெரியவருக்கு கும்பிடு போட்டு உள்ளே நுழைந்தவன். ஏற்கனவே பச்சை அப்பன் அறக்கட்டளைக்கு குறி வைத்திருக்கும் சின்ன ஆத்தாளின் நடன ராசன் , ரொம்ப நாளாகவே முதலாளி சங்க பிரமுகர்களான பாபிலோன் தாசன் , கேசரி கணேசன் மீது முக்கும் குலத்தை உடைக்க சதி செய்கிறார்கள் என்ற ரீதியில் கடும் கடுப்பில் இருந்தாராம். அந்த கடுப்பின் எதிரொலி தான் கேசரி கணேசனை சுற்றி பின்னப்படும் வலைகளுக்கு காரணமாம். கூடிய சீக்கிரத்தில் பாபிலோன் தாசனும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவாராம்.

அதுசரி முக்குற குலத்தில் ஒன்றாக எண்ணப்பட்ட அகம்படிந்த உட்சாதியினர் சாதி ஏன் முதலாளி குலத்தை நோக்கி ஓட வேண்டும். அங்கே அகம் படிந்த உட்சாதியினர் இழிவாக நடத்தபட்டார்களா என்று யாரவது கேட்கலாம். அவங்களோட கவலை வேறு . அது என்னன்னா சின்ன ஆத்தாளின் சாதியை சேர்ந்தவர்கள் முக்குலத்தில் மற்ற இரு உட்சாதியினரையும் பின்னுக்கு தள்ளி விட்டு தங்களை முன்னிலைப்படுத்துவதை , சின்ன ஆத்தாளின் சாதிக்கும் மேலானவர்களாக தங்களை கருதி கொள்ளும் அகம் படிந்தவர்கள் அவமானமாக எண்ணுவதினாலேயே அவர்கள் முதலாளி குலத்தில் சேர விரும்புகிறார்களாம். ஆனால் இவ்வளவு காலமும் மற்ற இரு சாதியினரால் கட்டுபடுத்தி வைக்கப்பட்டு இருந்த சின்ன ஆத்தாளின் சாதியினர் தங்களுடைய சாதியினர் முன்னிலைப்படுத்தப்படும் இந்த சமயத்தில் முக்கும் குலத்தில் பிளவுகள் ஏற்படுவதை விரும்பவில்லை. ஆக அவர்கள் அகம் படிந்தவர்களை முக்கும் குலத்தில் இருந்தி பிரிக்க சதி செய்யும் முதலாளி சாதி தலைவர்கள் மீது கடும் கடுப்பில் இருக்கிறார்கள் .

இதெல்லாம் போதாதென்று முதலாளி சாதியினர் திமுக ஆதரவாளர்களாக வேறு இருப்பது அவர்களுடைய கோவத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது. முக்கு குளம் தமிழகத்தில் அசைக்க முடியாத ஒட்டு வங்கியாக உருவாகும் சமயத்தில் அந்த ஒட்டு வங்கியில் ஓட்டைகளை ஏற்படுத்த எதிர் முகாமில் உள்ள பெரியவர் முதலாளி சாதியை சேர்ந்த பிரமுகர்களை ஏவி விடுகிறாரோ என்ற சந்தேகமும் நடன ராசனிடம் அதிகமாகவே அதனால் நடன ராசனின் கைவண்ணத்தில் இனி வரும் காலங்களில் முதலாளி சாதி முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான ஆட்டம் அரங்கேற்றப்படுமாம்.

அப்படி ஒரு ஆட்டத்தின் முன்னோட்டம் தான் கேசரி கண்ணேசனுக்கு நேராக வீசப்பட்ட வலையாம்

4 comments:

suryajeeva said...

இதுக்கு நீங்க நேரடியாவே சொல்லி விட்டு போயிருக்கலாம்...

anthony said...

வீணா போறவங்களோட விடயத்தை கொஞ்சம் நக்கலாகவும் , படிக்கிறவங்க கொஞ்சம் மண்டையை பிச்சிகிற மாதிரியும் சொன்னா என்னன்னு தோணிச்சு தோழர் அதுதான் இப்படி . மற்றபடி இந்த பதிவு படிக்க ரொம்ப கொடூரமாக இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்

ஆர்.தியாகு said...

நாட்டுக்கு மிக முக்கியமான கட்டுரை.. . படித்தவுடன் anthony -யின் அறிவு திறனையும் ஆற்றலையும் கண்டு "அப்பப்பப்பா" "அடடடடா" என பாராட்டலாம் என தோன்றுகிறது.

ஜசரி கணேசை கைது செய்யப்பட்டதிற்கு ஒரு பின்புலம் குறுவது இருக்கட்டும்.

ஒரு சாதிய கட்டமைப்பை.... சாதிய கலாச்சாரத்தை விரும்புபவன் கூட இப்படி முழு நேரமும் ஜாதிய பற்றியே எண்ணிகொண்டிருப்பானா என்பது கடினம்தான். ஆனால் anthony -யால் மட்டும் முடிகிறது.

மீனவர் துயரத்தில் anthony -யின் துயரம் பெரும் துயரம்.

anthony said...

////ஒரு சாதிய கட்டமைப்பை.... சாதிய கலாச்சாரத்தை விரும்புபவன் கூட இப்படி முழு நேரமும் ஜாதிய பற்றியே எண்ணிகொண்டிருப்பானா என்பது கடினம்தான். ஆனால் anthony -யால் மட்டும் முடிகிறது.////

சொறி நோய் பீடித்து இருப்பவர்களை
குணப்படுத்தனும்னா அதை பற்றி தெரிந்து வைத்து கொள்வது ரொம்ப முக்கியம் தல.

Post a Comment