Thursday, November 17, 2011

வரும் ஆனால் வராது என்ற ரீதியில் செல்லும் இலவச மடிக்கணினி திட்டம் .

முன்பு தாத்தா ஆட்சி கட்டிலில் இடம் பிடிக்க இலவச தொலைக்காட்சி திட்டம் என்றால் ஆத்தா மறுபடியும் ஆட்சி படிக்கட்டில் மலை ஏற உதவிய காரணங்களில் இலவச மடிக்கணினி திட்டம் முக்கியமான ஓன்று என்று சொன்னால் மிகையாகாது.

தாத்தா சொன்ன வாக்கை பெருமளவில் நிறைவேற்றியதாலோ என்னவோ அதே தொலைகாட்சிகளின் வழியாக தாத்தாவின் ஆட்சியின் குளறுபடிகளை ஊடகங்கள் மூலம் உப்பி பெருக்க வைக்கப்பட்டு ஆத்தோட கரையில் குத்தவைக்க வேண்டிய ஆத்தா அதிகார மலையேறி தமிழக மக்களை குத்தோ குத்தென்று குத்தி கொண்டிருக்கிறது. தமிழக மக்களும் உலக்கைக்கும் உரலுக்கும் இடையில் மாட்டிய தானியமாய் நைந்து போய் கொண்டு இருக்கிறார்கள்.

சரியப்பா ஏதோ மடிக்கணினி என்று சொல்ல வந்தீங்க, அதை பற்றி சொல்லுங்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த விவகாரத்தில் நிறையவே உட்குத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் அதற்கான காரணங்களை கொஞ்சம் விரிவாகவே பேச வேண்டி இருக்கிறது.

ஆரம்பத்தில ஆத்தா மடிகணினி திட்டத்தை அரங்கேற்றி எப்படியாவது கணிசமான ஒரு அமவுண்டை ஆட்டைய போடலாம் என்று தான் கனவு கண்டு கொண்டிருந்தாளாம். அதனால் தான் லினக்ச் போன்ற எண்ணற்ற இலவச இயக்குதளங்கள் இருக்க அதிக விலை கொடுக்க வேண்டிய மைக்ரோசாப்டின் இயக்கு தளத்தை இலவச மடிக்கணினிகளில் மேலேற்ற திட்டம் தீட்டப்பட்டது. மைக்ரோசாப்டின் தூதுவராக வந்த அமெரிக்க அரசின் கில்லாடி பெண்ணோடு பேரம் நடத்தப்பட்டது. அதையே நம்ம வெத்து சாமான்கள் ஈழ பிரச்சினையை உடனடியாக தெரிக்க வேண்டும் என்றும் ராச பட்சேவை தூக்கில் இட வேண்டும் என்றும் ஆத்தா கில்லாடி பெண்ணை உட்கர வைத்து பாடம் எடுத்தா என்றெல்லாம் ஊளையிட்டது தனிக்கதை. ஆனால் இப்ப என்னன்னா மைக்ரோசாப்டிடம் ஆத்தா கேட்ட குட்டி தொகையை கேட்ட உடனே மயக்கம் வராத குறை தான் அதனால் தான் அவங்களும் ரொம்பவே யோசிக்க ஆரம்பித்து விட்டான்களாம். அம்மா கேட்ட குட்டி தொகையே அவங்களுக்கு மாரடைப்பு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்துமானால் அவங்ளோட சைசில் கேட்டிருந்தால் அவங்களோட நிலைமை யானை அவங்க மேலேறி விளையாண்டது போல தான் இருந்திருக்கும. இப்ப விடயம் என்னன்னா அவங்களை ஆழ்ந்த யோசனையில் இருந்து விடுவிக்க ஒரு அதிர்ச்சி கொடுக்க தான் ,ஆத்தா சமீபத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகளில் இலவசமாக கிடைக்கும் இயக்க தளங்களை மேலேற்ற வேண்டும் என்ற அரசு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறான்களாம். கோவணக்கயிறுகள் குத்தாட்டம் போடும் ஊடகங்கள் அதை அப்படியே ஆத்தாவின் நிறைவாக திறமை என்று உருவி விட்டு கொள்ள, அதன் உள்நோக்கம் புரியாத நம்ம கைப்புள்ளைங்க எல்லாம் ஆத்தா ஏதோ பெரிய புருட்டுசியை ஏற்படுத்து விட்டது போல் ஆத்தாவின் மடியில் இருந்து எம்பி குதிப்பது தான் கொடுமை.

இது இப்படி இருக்க ஆத்தாவை சுற்றி உட்கார்ந்து கொண்டு பஜனை பாடும் அம்பிகளிளோட மற்றொரு கூட்டத்தின் கவலையோ வேறு மாதிரி இருக்கிறதாம். அதாவது தாத்தா கொடுத்த தொலைக்காட்சி பெட்டியின் மூலம் பரப்புரை செய்து ஆத்தா ஆட்சியை பிடித்தது போல் ஆத்தா கொடுக்கும் மடிப்பொட்டி மூலம் நடத்தும் பரப்புரைகளை கொண்டு தாத்தாவின் கூட்டம் ஆத்தாவிற்கு ஒட்டு மொத்தமாக ஆப்பு வைத்து விட்டால் என்னாவது என்ற கவலை தான் ஆத்தாவை வைத்து சூது ஆட்டம் நடத்தி கொண்டிருக்கும் அம்பிகளை ஆட்டி கொண்டு இருக்கிறதாம். அப்படி அம்பிகளுக்கு ஏற்பட்ட கவலையின் உச்சகட்டத்தின் விளைவு இப்போது அவங்க ஆத்தாவை சுற்றி இருந்து கொண்டு மடிக்கணினி திட்டத்திற்கு மூடு விழா நடத்தி விடலாம் என்பது போன்ற ஆலோசனைகளை பீச்சி அடித்து கொண்டு இருக்கிறார்களாம்.

அவங்களோட பயமும் சரி தானே ஊடகத்தை கையில் வைத்து கொண்டு பொய்களை கட்டவிழ்த்து விட்டு மக்களை எப்படி எல்லாம் முட்டாள்களாக்க முடியுமோ அப்படி எல்லாம் முட்டாளாக்கி கொண்டு இருந்தார்கள் . இணையதளம் அறிமுகமான காலங்களிலும் அதில் அவர்களது ஆட்டம் தான் மேலோங்கி இருந்தது. ஆனால் சமீப காலமாக கடந்த காலங்களில் சமூக போராளிகள் போராடி பெற்று தந்த சமூக நீதியால் பயன் பெற்ற உரிமை மறுக்கப்பட்ட கூட்டத்தை சேர்ந்த மக்களும் இணைய தளத்தில் வலம் வர ஆரம்பித்து விட்டமையால் அம்பிகள் ஒவ்வொரு முறையும் பொய்களை பரப்பும் போது பலமான எதிர்த்தாக்குதல்களை இணையத்தில் சந்திக்க நேரிடுகிறது. அதுமட்டுமல்ல சமூக போராளிகளின் வாரிசுகள் இப்போது பார்ப்பனிய வேசித்தனத்தின் கோவணத்தை அவிழ்த்து இணையத்தளத்தில் அதை அம்மணமாக ஓட விட்டு கொண்டிருப்பது, பார்ப்பனிய வேசித்தனத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து வியாபாரம் பண்ணும் அம்பிகளின் வியாபாரத்தில் மண்ணை அள்ளி போட்டு கொண்டிருக்கிறது. இப்பவே இப்படின்னா எல்லாருக்கும் மடிக்கணினி போய் சேர்ந்து விட்டால் என்னாவது என்று அம்பிகளின் அரைமண்டை எண்ண ஆரம்பித்ததான் விளைவு, இப்போது அவனுங்க இலவச மடிக்கணினி திட்டத்தை முழுமூச்சோடு எதிர்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

பின்ன வேதத்தை கேட்டாலே காதில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்று சட்டம் எழுதிய மனுவின் புத்திரர்கள், வேத மாதாவை சமூக நீதி மறுக்கப்பட்ட கூட்டம் அம்மணமாக்கி ஓட விடும் நிலையை ரசிப்பார்களா என்ன ? மடிக்கணினி இலவசமாக வழங்கப்பட்டு இணையத்தளத்தில் பெரியாரின் பேரன்களின் ஆட்டம் அதிகமாகி விட்டால் நம்ம பாடு திண்டாட்டம் என்ற எண்ணத்தின் செயல்வடிவம் தான், மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அப்படியே மண்ணை பூட்டு மூடிவிட வேண்டும் என்று ஆத்தாளுக்கு சாவி கொடுக்கும் படலத்தின் மூலமாம். ஆகா கூடிய விரைவில் இலவச மடிக்கணினி மூலையில் உட்காரவைக்கப்பட்டு மூடப்படலாம் என்று நம்பகமான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

மற்றொரு விடயம் என்னான்னா மைரோசாப்ட்டிற்கு இந்த ஏலக்குத்தகை கிடைக்கவில்லையென்றால் அங்கு முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அம்பிகளின் தலைகள் உருளுமாம். ஏதோ நல்லது நடந்தால் சரி.


சரி போய் வரட்டா.

3 comments:

SURYAJEEVA said...

quoted price 14000 rs
allotted price 10000 rs

இது நடக்காதுன்னு இவங்க தேர்தல் அறிக்கை கொடுத்த அன்னிக்கே எனக்கு தெரியும்... ஆனால் இவ்வளவு திரை மறைவு வேலைகள் இருக்கும்னு தெரியல... இதுல அண்டி வைருஸ் வியாபாரமும் வருகிறது..

Unknown said...

ம்ம்ம்ம் உண்மைதான். நல்ல நகைச்சுவை அரசியல் பதிவு,ஆனாலும் நம்ம மக்கள் திருந்துவாய்ங்க?மம்மி கொடுக்க இருக்கும் அம்மி(மிக்ஸி)க்கே ஓட்டு போட்டாலும் போடுவாய்ங்க.

கோவை நேரம் said...

இதுல இவ்ளோ இருக்கா..?

Post a Comment