Saturday, August 20, 2011

யார் இந்த அண்ணாவின் பெயரை வைத்திருக்கிற அன்னகாவடி ?

கொஞ்ச நாளா எல்லா பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த ஆளோட முகமும் அவரை பற்றிய செய்திகளும் தான்..... எங்க பார்த்தாலும் வர்ற போற...... குறிப்பா கோவண கயிறை கொஞ்சம் வித்தியாசமாக உடம்புக்கு குறுக்கே போட்டு கொண்டு அலையுற கும்பலுங்க இவரை ஒரு ரெண்டாவது காந்தி, அப்பழுக்கற்ற உத்தமர், ஊழல் நாய்களுக்கு இவர் ஒரு டெர்ரியர் நாய் (இங்கிலாந்து அயர்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் வேட்டை நாய்கள்) , இந்தியாவை மீட்க வந்த ரட்சகர், பசுமை புரட்சியாளர், என்றெல்லாம் சொல்லுதுங்க. அந்த கும்பலுங்க யாரையாவது புகழனும்னா அதற்கு பின்னால் ஏதாவது காரியம் இருக்கணுமே.. அதை என்னன்னானு தெரிஞ்சுக்கிறதின் நோக்கமே இந்த பதிவை எழுத காரணம்.....வாங்க அப்படியே ஒரு சுற்று சுற்றலாம்....


இந்த கலியுக அவதாரம் பிறந்தது மகராட்டிராவில்.......... ம்ம்ம்ம்ம்ம் மகராட்டிராவை மறக்க முடியுமா சொந்த நிலத்தில் விவசாயம் செய்து சுயமரியாதையோடு வாழ்ந்தற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை ஒரு ஊரே ஓன்று கூடி அடித்தும், காவல் துறையில் சேர்ந்து ஊரை பாதுகாக்க வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த அந்த குடும்பத்து இளம்பெண்ணை கற்பழித்தும் கொன்ற ஆதிக்க வெறியர்கள் நிறைந்த கையிர்லஞ்சி என்ற ஊரடங்கிய மாநிலம்லா எப்படி மறக்க முடியும்...... புனே அருகில் உள்ள ரலேகான் சிட்டி என்ற ஊர் தான் ...... அங்க இவரு தரிசாக வனாந்திரமாக சவூதி அரபியா மாதிரி கிடந்த பூமியை..... உடனே அப்படின்னா அங்க நிறைய எண்ணெய் கிணறுகளை தோண்டி இருக்கலாமே என்றெல்லாம் கேட்க கூடாது ....... அவருடைய அபாரமான திட்டங்களால் பசுமை சோலையாக மாற்றி புரட்சி பண்ணிட்டார்னு சொல்லுறாங்க... அதில் இருந்து இந்தியா முழுக்கா எல்லா ஊர்களிலும் இருந்து அவருக்கு அவங்க ஊரையும் வந்து பசுமை சோலையாக மாத்தணும்னு கூப்பிட்டு தொல்லை குடுக்க அரம்பிச்சுட்டாங்க...... உடனே அப்படின்னா அவரு மாநிலத்தில் உள்ள விதர்பா என்ற பிரதேசத்தில் தான் இந்தியாவிலேயே .அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்களே அது ஏன் ? ...... இவரு அங்கெல்லாம் பசுமை புரட்சியை செய்யமாட்டாரா என்று குதர்க்கமாக கேட்க கூடாது..... அதெல்லாம் சிதம்பரம் ரகசியம்........ அவரோட சொந்த ஊரை இந்தியாவிற்கே ஒரு எடுத்துகட்டான மாநிலமாக மாற்றியததற்காக..... நம்ம அரசியல்வாதி பய புள்ளைங்க அவருக்கு விருதா குடுத்து தள்ளிபுட்டாங்க..... ஆனா இப்ப கடா நல்ல வளர்ந்தவுடன் தீனி வேற இடத்தில் கிடைக்கும்ன்னு தெரிஞ்சவுடன் வளர்த்த ஆள் மேலேயே பாய ஆரம்பிச்சுட்டுது.


இந்தியாவை மீட்க வந்த பரமாத்மா என்றெல்லாம் ஒரு உயர் சாதி ரகத்தை சேர்ந்த நாய்கள் எழுப்பும் ஊளைகளால் கொஞ்ச நாளா ஊர்ல கிடக்கிற திருட்டு நாய்ங்களோட தூக்கம் கேட்டு போச்சு. என்னடா இவ்வளவு நாளும் நம்ம கூட சேர்ந்து திருடுன எச்ச கறிக்கு சண்டை போட்ட நாய்ங்க இன்னைக்கு நம்மளை பிடிச்சு குடுக்க மாநகராட்சி வண்டியில் சுத்துதுங்க என்று குழம்பி போய் இருக்கின்றனவாம்..... நாய்களை பற்றி பேசுவதை அப்பாலிக்கா வச்சிக்கலாம்... இப்ப எப்பவாது கிடைக்கிற பழைய சோறை திருடி திங்கிற சொறிநாய்களை பிடிக்க அலைகிற குப்பை வண்டிகாரன், அவங்க வூட்டை எப்படியெல்லாம் பண்படுத்தி வைத்து இருக்கிறான்னு பார்ப்போம்........


ஊர்ல அவரை எல்லாரும் கடவுள் என்கிற ரேஞ்சுக்கு உயர்த்திட்டதாலோ என்னவோ இந்த அவதார புருசன் உறைவிடமா பயன்படுத்துகிறது காவி கோவில் தானாம்..... இவரு வறட்சியாக கிடந்த இவரோட ஊருல மக்களை திரட்டி குளம் கண்மாய் போன்றவைகளை தூர்வாரியும் புதிதாக வெட்டியும் தண்ணீரை சேமித்து அவரோட ஊர்ல விளைச்சலை பெருக்கி விட்டாராம்.... இப்ப இங்க யாராவது வந்து கேட்கலாம், இதெல்லாம் அந்த பகுதிகளில் வாழ்ந்த மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூக விடுதலை போராளிகளும் பண்ணிய விடயம் தானே, இவரு என்ன பெருசா பண்ணிட்டார்.... அவங்களுக்கெல்லாம் குடுக்காத ......... இந்த ஆளுக்கு மட்டும் நம்ம ஊடகங்கள் குடுக்கிறதே ...... அங்க தான் இருக்கிறது சூட்சுமம் ...அந்த சமூக விடுதலை போராளிகள் எல்லாம் கூடவே சமூகத்தில் கிளை விட்டு பரவி கிடந்த பார்ப்பனிய நச்சு செடியின் வேரையும் அல்லவா புடுங்க எத்தனிச்சாங்க ...அவங்களுக்கெல்லாம் இலவச விளம்பரம் கொடுத்தால் அதற்கப்புறம் நம்ம நெலமை என்னாவது என்று ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பொய்யை கயிறாக திரித்து உடம்பில குறுக்கா மாட்டி கொண்டு அலையும் அம்பி பசங்க யோசித்திருப்பாங்காளா இருக்கும் ...... ஆனால் நம்ம குப்பை வண்டி காரன் அப்படி கிடையாதுல்லா காவி கலர்ல கிடக்கிற குப்பைகள் சேதாரமாகாம அவற்றை அள்ளி சுமக்கிறதில் வல்லவராச்சே அதுனால தான் இந்த அன்ன காவடிக்கு இந்தளவுக்கு மரியாதை.


இவரோட ஊர்ல இவரு பண்ணிய மற்றுமொரு புரட்சி குடிகாரர்கள் அதிகம் வாழ்ந்த ஊராக இருந்த இந்த ஊரை மாற்றி காட்டியது தான் .... எப்படின்னா மரம் வெட்டி போட சொன்ன அய்யா ராமதாசு ஊழல் செய்தால் சாட்டையால் அடிப்பேன் சொன்னாரோ அதே தண்டனையை இவரு குடிகாரர்களுக்கு குடுத்தார்... அதாவது யாரவது குடிச்சிருக்காங்க என்று தெரிந்தால் இவரு அவர்களை மரத்தில் கட்டி வைத்து சவுக்கால் பின்னி எடுத்து விடுவாராம்....... உடனே யாராவது இந்த குப்ப அள்ளுரவரு அதே தண்டனையை, 25 வயதிற்கு உட்பட்டவர்கள் குடிக்க கூடாது என்று மகாராட்டிர அரசு ஏற்படுத்திய சட்டத்திற்கு எதிராக போராடும், இவரை ஆதரிக்கும் ஆங்கில ஊடகங்களை நடுத்தெருவில் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பாரா என்றெல்லாம் குசும்பு தனமா கேள்வி கேட்க கூடாது........ அப்படி பண்ணுனா எப்படி காவி குப்பையை பாதுகாக்கும் வேலையை தங்கு தடையில்லாமல் செய்ய முடியும்...... ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு நல்லது..... ஆனா கூத்தாடிகளே ரெண்டு பட்டால் ஊரை ஆட்டைய போடுற தொழில் வெளங்காம அல்லவா போய் விடும்... இந்த குப்பை வண்டிகாரன்... அதானுங்க அந்த பசுமை புரட்சி நாயகன் சொந்த ஊர்ல கிட்டத்தட்ட சர்வதிகாரி மாதிரி தானாம்....


இந்த ஆளு பண்ணிய செயல்கள் அனைத்திலும் காவி கும்பலை கவர்ந்த செயல்னு ஒன்றை சொல்லனும்னா இவருடைய கிராமத்தில் ஊருக்கு வெளியே இருந்த ஒடுக்கப்பட்ட மக்களை சமூக தளத்தில் அவங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து அவர்களை பெயர்த்து எடுக்காமல் அவங்க இருக்கிற இடத்தில் வைத்து அவங்க எல்லாருக்கும் காவி போர்வையை போட்டு இவரு மூட முயற்சி எடுத்து கிட்ட விதம் தான் அது. அதவாது அவரு காந்தியத்தை அமுல்படுத்திய விதம் தானுங்கோ...... ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு கும்பலோடு சென்று இந்த ஆள் அம்மக்களிடம் நீங்க எல்லாம் செத்த மிருகத்தை தூக்குறீங்க, குளிக்க மாட்டேன்குறீங்க (அடப்பாவிங்களா நீங்க தானே அவங்களை அதை வற்புறுத்தி செய்ய சொல்லுறீங்க, பொதுகுளத்தில் குளிக்க விட மாட்டேங்குறீங்க என்று அதிகபிரசங்கிதனாமா கேள்வி கேட்க கூடாது), அசிங்கமா பேசுரீங்க, , சாராயம், மாமிசம் சாப்பிடுறீங்க (வேதத்தில் அம்பிங்களே செத்த குதிரை கறி, பட்டசாராயம் சாப்பிட்டதாக சொல்லப்பட்டிருக்கே... இவங்க சாப்பிட்டா தப்பா என்றெல்லாம் கேட்கப்புடாது)...... நீங்க அதையெல்லாம் செய்யுறதினால் தான் சமூகம் உங்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்றெல்லாம் இந்த அரைலூசு கதை அளப்பாராம்... பிறப்பை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட சாதியின் பெயரால் தானே ஒடுக்கப்பட்ட மக்கள் பொது நீர் நிலைகளை பயன்படுத்தக்கூடாது, மேற்சட்டை அணிய கூடாது, செருப்பு போட கூடாது, என்று அவர்கள் கொடுமைபடுத்தப்படுவது இந்த ஆளோட கண்களுக்கு தெரியவில்லை. அம்மக்கள் அசுத்தமாக இருப்பதால் தான் சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது தான் இந்த அரை வேக்காட்டின் பார்வை..... இவனைத்தான் சமூக சேவகர் என்று ஒரு கூட்டம் கொண்டாடுது.....



பார்ப்பனிய ஊடங்கங்களின் ஒளியில் பல்லை காட்டி கொண்டிருக்கும் இந்த ஓநாய் அவனோட சொந்த ஊரில் .ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் டிஷ் ஆன்டெனா வைத்திருந்தற்காக கடுமையாக கண்டித்தானாம். கொடுமை என்னனா இந்த ஆளை பிரபலபடுத்தும் பார்ப்பனிய தொலைக்காட்சி ஊடகங்களின் அலைவரிசை அனைத்தையும் டிஷ் ஆன்டெனா மூலம் பெற்று தானே பார்க்க முடியும்.....அதை விடுங்க இந்த ஆளை தூக்கி சுமக்கிற அம்பி பயலுங்க 99 விழுக்காடு ருசியன் அலைவரிசை, பேசன் தொலைக்காட்சி போன்ற அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் கிளுகிளு படங்களை பார்த்த பின்பு தானே தூங்க போகிற பயலுங்க...... அப்பன்னா இந்த குப்பைகாரன் ஏன் இப்படி என்று நீங்க கேட்கலாம்...... நம்ம கிட்ட கைகட்டி வேலை பார்ப்பவன் வெளி உலகத்தை பற்றி அறிய ஆரம்பித்து, சிந்திக்கவும் தொடங்கி விட்டால் நமக்கு கிட்டிய அடிமை நம்மை எதிர்க்க ஆரம்பித்து விடுவானோ என்ற அந்த ஆளின் காந்திய பயமாக இருக்கலாம்


இந்த ஊழலை ஒழிக்க புறப்பட்ட உத்தமனின் ஊரில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதீய ஏற்ற தாழ்வுகள் என்னும் சமூக ஊழலால் இன்றளவும் சுரண்டப்படுகிறார்கள்...... உச்ச கட்ட கொடுமை என்னன்னா இவரோட ஊரை மாதிரி பிற ஊர்களை மாற்றுவதற்காக மகராட்டிர அரசாங்கத்திடம் 55 லட்சம் ரூபாயை நன்கொடையா வாங்கிய இந்த ஆள் அவங்க ஊரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் 75,000 கடனை அடைத்தற்காக விளம்பரம் தேடி கொண்ட உத்தமன்.


உலகத்தின் கண்களுக்கு முன்னால் இவரோட சொந்த ஊரை ஒரு முன்மாதிரி ஊராக மாற்றி இருக்கின்றதாக காட்சிய படுத்தினாலும்... ஊர் என்பது இவரை பொறுத்த அளவில் இவரோட சாதிகாரங்க இருக்குமிடம் மட்டும் தான்..... இந்த ஆளோட பார்வையில் ஒரு கிராமம் எப்படி இருக்கணும்னா...... காந்தி சொன்னது போல் ஒவ்வொரு கிராமமும் ஒரு மகர், ஒரு கும்கார், ஒரு சாமர், ஒரு சுனாரை உள்ளடக்கியதாக இருப்பதோடு ஒவ்வொருவரும் அவரவருக்கு சமூகத்தில் கொடுக்கப்பட்ட இடத்தின் அடிப்படையில் அவரவருக்கு இடப்பட்ட வேலைகளை செய்ய வேண்டுமாம், அதுவே சுய சார்புடன் கூடிய கிராமத்திற்கு நல்ல எடுத்துகாட்டாம். இப்படி காந்தி அவருடைய வாழ்நாள் முழுக்க பாதுகாத்த பார்ப்பனிய குப்பைகளை சுமந்து கொண்டு திரிகிறார், இந்த ஊழலை எதிர்க்கிறேன் பேர் வழி என்ற போர்வையில் திரியும் பார்ப்பனியத்துக்கு விளக்கு பிடிக்கும் அன்னகாவடி...... அது போதாதா காவி கும்பல் மற்றும் பார்பனிய ஊடக விபச்சாரிகள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க...... என்னவெல்லாமோ சாதனை செய்து விட்டார் என்று இந்த ஆளை புகழ்த்து தள்ளும் பார்பனிய ஊடகங்கள் இவருடைய கிராமத்தில் கடந்த 24 வருடங்களாக கூட்டுறவு சங்க தேர்தலோ, கிராம பஞ்சாயத்து தேர்தலோ நடைபெற அனுமதிக்கபடாதது பற்றி வாயே திறப்பது கிடையாது..... தேர்தல் நடந்தால் கட்சிகள் ஊருக்குள் நுழைந்து விடும் அது ஊரை பிளவுபடுத்தி விடும் என்பது தான் இவர் சொல்லும் காரணம்..... பின்ன சொந்த சாதிகாரங்க பிளவுபட்டா ஊருக்கு வெளியே இருக்கிறவனை எப்பிடி காலம் காலமா அடிமையாக வைத்திருக்க முடியும் இது தான் இந்த நடிகன் சனநாயகத்தை பேணி காக்கிற முறை..... அதனால் தான் பெரியார் சொன்னார் பேசாம வெள்ளைகாரன் கிட்டேயே அடிமையா இருந்து விடலாம் என்று ..... ஆனால் தனது தேவைகளுக்கு அரசியல்வாதிகளின் தயவை நாடுவதை இந்த காரிய கிறுக்கன் தவற விட்டதே கிடையாது.


எல்லாத்தையும் விடுங்க இந்திய உணவுத்துறையை கையில் வைத்திருக்கும் இந்த ஆளோட மாநிலத்துகாரனான பவாரோட உணவுத்துறை அமைச்சகத்தில் நடந்த ஊழலை பற்றியோ, சரத் பவாரின் பொண்ணு சுப்பிரியா சுலே செய்த ஊழல்கள் பற்றியோ, இல்லை...... 60 கோடிக்கு மேற்பட்ட மக்கள் ஒரு வேளை சாப்பாட்டை கூட சரிவர உண்ண முடியாமல் உறங்க (?) போகிற இந்த நாட்டில் இந்திய உணவு சேமிப்பு கிட்டங்கிகளில் அரிசியும் கோதுமையும் பாழ்படுத்தப்பட்டதை பற்றியோ...... வாயை என்ன சூத்த கூட இந்த கோமாளி திறந்தது கிடையாது..... பின்ன அவங்க சாதிகாரனை கையும் களவுமா பிடிச்சு கொடுக்க முடியுமா ...... பட்டினி கிடக்கிறவங்களை விட சுய சாதிகாரனோட மானம் முக்கியமில்லையா.


இவனோட ஊருல இருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களோட நிலைமை முன்பை விட மாறி இருக்கிறதா என்று கேட்டால்...... ஊர் ரொம்ப மாறி இருக்கு... ஆனால் எங்களோட நிலைமை இருந்த இடத்திலேயே தான் இருக்கு..... ஊரை அண்டி வாழ்வதை தவிர எங்களுக்கு வேற வழியில்லை என்பது தான் ஊருக்கு வெளியே தங்கியிருக்கும் அம்மக்களின் பதிலாக இருக்கிறது..... இவனை மாதிரி ஆளுங்க எப்படி ஏழைங்க சுரண்டப்படுவதற்கு எதிரா குரல் கொடுப்பனுங்க..... “மனு” எழுதி வச்ச நீதியை(?) மீறி விடும் செயலல்லாவா அது.


இந்த அன்னகாவடிக்கு பத்மசிரியில் இருந்து பத்மபூசன் என ஏகப்பட்ட விருதுகளை அள்ளி தெளிச்சிருக்கானுங்க...... இப்படி பட்ட முடிச்சவிக்கிக்கு எப்படியய்யா இவ்வளவு விருதுகள் என்று கேட்கலாம்...... இந்தியாவில் விருதுகள் அம்பிகளுக்கும் அம்பிகளை நக்கி பிழைக்கிறவன்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்டது தானே.... தவிர்க்க முடியாத சூழலில் தானே கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைத்திருக்கு


இப்படி பட்டவன் தான் ஊழலை எதிர்த்து போராடுகிறேன் என்று சொல்லி கொண்டு அலையுறான்.... நம்ம ஊருல அம்பி பசங்களோடு சில கேண பசங்களும் சேர்ந்து மெழுகுவர்த்தியை தூக்கி கொண்டு அலையுதுங்க.... யாரவது நம்ம ராம கோவாலனிடம் சொல்லுங்க..... கிருத்துவனுங்களோட புனித சின்னமான (ராம கோவாலனின் புது கண்டுபிடிப்பு தானுங்கோ) மெழுகுவர்த்தியை தூக்கி கொண்டு சுத்தறது கலாசார கேடாகி போயிடுமே...... இப்படியே விட்டா பாரத தாயின் புனிதம் என்னாவது....... நம்ம கோவாலன் தான் இவனுங்களுக்கு லாயக்கு

6 comments:

Samaran Nagan said...

அந்த பகுதிகளில் வாழ்ந்த மகாத்மா பூலே, அண்ணல் அம்பேத்கர் போன்ற சமூக விடுதலை போராளிகளும் பண்ணிய விடயம் தானே, இவரு என்ன பெருசா பண்ணிட்டார்.... அவங்களுக்கெல்லாம் குடுக்காத ......... இந்த ஆளுக்கு மட்டும் நம்ம ஊடகங்கள் குடுக்கிறதே ...... அங்க தான் இருக்கிறது சூட்சுமம் ...அந்த சமூக விடுதலை போராளிகள் எல்லாம் கூடவே சமூகத்தில் கிளை விட்டு பரவி கிடந்த பார்ப்பனிய நச்சு செடியின் வேரையும் அல்லவா புடுங்க எத்தனிச்சாங்க ...அவங்களுக்கெல்லாம் இலவச விளம்பரம் கொடுத்தால் அதற்கப்புறம் நம்ம நெலமை என்னாவது என்று ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பொய்யை கயிறாக திரித்து உடம்பில குறுக்கா மாட்டி கொண்டு அலையும் அம்பி பசங்க யோசித்திருப்பாங்காளா இருக்கும் ...... ஆனால் நம்ம குப்பை வண்டி காரன் அப்படி கிடையாதுல்லா காவி கலர்ல கிடக்கிற குப்பைகள் சேதாரமாகாம அவற்றை அள்ளி சுமக்கிறதில் வல்லவராச்சே அதுனால தான் இந்த அன்ன காவடிக்கு இந்தளவுக்கு மரியாதை.
..................அருமையான பதிவு !

anthony said...

தங்கள் வருகைக்கு நன்றி தோழரே ...மீண்டும் வருக

இப்படிக்கு

ஏற்றதாழ்வற்ற தோழமையுடன்

அந்தோணி

Indy said...

அண்ணே, எனக்கும் அவரை பிடிக்காது. ஆனாலும் நீங்க கொஞ்சம் நாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்கலாமே.

kumaresan said...

மன்மோகன் சிங்கை யார் பிரதமர் நாற்கசாலியில் உட்கார வைத்தார்களோ, அவர்களேதான் இப்போது அன்னா ஹசாரேயை உண்ணாவிரதப் பந்தலில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவர்கள் பார்ப்பணீய சக்திகள் என்பது உண்மையே. அதே வேளையில் பார்ப்பணீய சக்திகள் என்ற அடையாளத்தை மட்டுமே பார்ப்பது அன்ன ஹசாரேக்களின் உண்மை முகத்தையும், அவரை ஆடடுவிக்கும் சக்திகளையும் காண முடியாமல் செய்துவிடும்.

உலக நிதி மூலதனத்தை ஆள்கிற உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள், நாட்டின் மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதை விருமபுவதில்லை. ஆகவேதான் அரசியல் சாராத ஒருவரை இப்படி பெரும் வரலாற்று நாயகனாக சித்தரித்து மக்களின் கோபத்தைத் திசை திருப்புகிறார்கள்.

anthony said...

////உலக நிதி மூலதனத்தை ஆள்கிற உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள், நாட்டின் மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதை விருமபுவதில்லை. ஆகவேதான் அரசியல் சாராத ஒருவரை இப்படி பெரும் வரலாற்று நாயகனாக சித்தரித்து மக்களின் கோபத்தைத் திசை திருப்புகிறார்கள். ////

அய்யா குமரேசன், நீங்கள கூறுவது அனைத்தும் உண்மையே. அதே நேரத்தில் இந்தியாவில் நிதிமூலதனத்தை கட்டுபடுத்தி கொண்டிருப்பதும் வெளியிலிருந்து நிதிமூலதனத்தை கட்டுபடுத்தும் சக்திகளுக்கு ஏவலாளியாக இருப்பதும் பார்ப்பனியமே என்பதையும் இங்க கூற கடமை பட்டுள்ளேன். பார்ப்பனீயம் என்பது இந்திய மக்களை ஏய்க்க உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பயன்படுத்தும் ஒரு தளம் . அந்த தளத்தை அடித்து உடைக்க ஆரம்பித்தாலே உலக நிதி மூலதனத்தை ஆள்பவர்களின் இந்திய வேற ஆட்டம் கண்டு விடும்..... ஆனால் அதோடு மட்டும் நிறுத்து விட முடியாது ..எல்லா மக்களும் சம் தர்மத்துடன் வாழ வழி வகை செய்யும் ஒரு தளம் கட்டமைக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும். அந்த தளம் முற்றிலும் பழுதற்ற கொள்கைகளால் கட்டப்பட வேண்டியதும் மிக அவசியம்

தங்கள் வருகைக்கு நன்றி

மற்றுமொரு வரவை எதிர்பார்க்கிறேன்
ஏற்றத்தாழ்வற்ற தோழமையுடன்
அந்தோணி

VANJOOR said...

CLICK AND READ

>>> அன்னா ஹஸாரேயின் மறு முகத்தை பார்ப்போமேயனால் அது பெரும்பாலோர்களுக்கு அதிச்சியாகவோ ஆச்சர்யமாகவோ இருக்ககூடும்.காவியை மறைக்கும் வெள்ளை. அன்னா ஹஸாரே . <<<



.

Post a Comment