Monday, August 22, 2011

யார் இந்த அண்ணாவின் காதலர்கள் ?



கொஞ்ச நாளா ஊழலுக்கு எதிரான போர் என்று பத்திரிக்கை ஊடங்கங்களால் விளம்பரப்படுத்தப்படும் அண்ணா கசாரே என்ற காந்தியவாதியின் ... அவரு திரைமறைவில் என்னவென்ன சத்திய பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறாரோ அது அவரை சுற்றி இருக்கும் காற்றுக்கே வெளிச்சம்...... உண்ணாவிரத போராட்டமும் அதற்கு பின்னால் நிற்கும் வருங்கால இளைய பாரதத்தின் ஊற்று கண் எது என்றும் பார்க்க வேண்டியது அவசியம்.

அண்ணாவின் காதலர்கள் வேறு யாருமல்ல சாதீய வெறியும், வர்க்க வெறியும் சிறுவயதிலேயே ஊட்டி வளர்க்கப்படும் உயர்தட்டு வர்க்கத்தினர் தான் ... இந்தியா டைம்ச் போன்ற பத்திரிகைகள் சந்தடி சாக்கில் கசாரேவை தமிழ்நாட்டை காக்க வந்த ரெண்டாவது அண்ணா என்றும் இந்திக்கு எதிரான போர் தமிழகத்தில் செத்து விட்டது என்றும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிரான போரே ஒட்டு மொத்த தமிழகத்தின் இதய துடிப்பு என்றும் பக்கம் பக்கமாக வர்ணித்து தள்ளின. கூடவே தமிழர்கள் இப்போது இந்தியாவின் காவலர்களாக மாறி கொண்டிருக்கிறார்கள் என்றும், சந்தடி சாக்கில் தமிழர்களிடையே மொழிபற்று, இன உணர்வு எல்லாம் செத்து விட்டது என்றும் செய்தி வெளியிட்டு சுய இன்பம் கண்டு கொண்டது.


தமிழகத்தில் இந்த அண்ணாதேக்கு சொம்பு அடித்து கொண்டிருக்கிறவர்களை கவனித்தால் தெரியும்...... அண்ணாவிற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வரும் மகேந்திர சௌத்தரி (அடையாளத்தோடு தான் அலைகிறானுங்க) என்ற இளைஞர் வேறு யாருமல்ல மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அண்ணா கசாரேவின் கிராமத்தை சேர்ந்தவராம்... அதே மகாராட்டிர மாநிலத்தில் கையிர்லாஞ்சி என்ற ஊரில் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பமே சாதி வெறியர்களின் ஆதிக்க வெறிக்கு பலிகடாவானது..... அதில் உச்ச கட்ட கொடுமை என்னன்னா காவல் துறையில் சேர்ந்து சேர்ந்து நாட்டை காக்க வேண்டும் என்ற கனவுகளோடு படித்து கொண்டிருந்த இருந்த பெண்ணின் கற்பு ஆதிக்க வெறி பிடித்த ஒரு கிராமத்தின் ஒட்டு மொத்த ஆண்களால் சூறையாடப்படும் போது இந்த நவீன அண்ணாவின் காதலர்கள் பப்களில் உட்கார்ந்து கொண்டு காலாமின் 2020 இந்தியாவை பற்றி கனவு கொண்டு இருந்தவர்களின் நீட்சி......

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது பெற்றோர் குறுக்கு வழியில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய உயர் ரக கைபேசியும், மடிக்கணினியும் தான் அவர்களது ஆயுதங்கள்...... திறமையை பற்றி பக்கம் பக்கமாக பேசும் இவர்கள் அடுத்தவர்களின் உரிமையை பறிப்பதை பற்றியோ இல்லை முதுகில் கிடக்கும் கோவண கயிறை தடவி பார்த்து வேலை கொடுக்கும் சாதி வெறியர்களை பற்றி கவலை படுவதில்லை...... ஊழலின் ஊற்று கண்களாக இருக்கும் ரிலையன்சு, வேதாந்தா , டாட்டா போன்ற நிறுவனங்களில் தங்களை இணைத்து கொள்வதை வாழ்க்கையின் லட்சியமாக கொண்டவர்கள்... ஊழல் என்பதே இந்த அரைவேக்காட்டுகளுக்கு சுவிஸ் பாங்கில் உள்ள பணத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது....... பூர்வீக குடிமக்களின் நிலங்கள் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதராங்கள் கொள்ளை போவதும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாதியின் பெயரால் சமூகத்தில் மறுக்கப்படும் உரிமைகளும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளும்.. இவர்களுக்கு சமூகத்தில் புரையோடிப்போன ஊழலாக தெரிவதில்லை..... அதை ஊழல் என்று சொன்னால் போராட்டத்தை அவர்களுடைய வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்...... அவனுங்களின் பெற்றோர்கள் தானே அந்த சமூக ஊழல்களின் தூண்கள்..... பூர்வீக குடிமக்களுக்காக போராடுபவர்களை மாவோயிச்ட் , தேசத்துரோகி என்றும், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை திறமையின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறும் இந்த எதிர்கால கொள்ளையர்கள் கல்வியை விலை பேசும் நிறுவனங்களையோ அவர்களுக்கு தரகர்களாக செயல்படும் மமாக்களையோ என்றுமெ எதிர்ப்பதில்லை...அவர்களுடைய தயவில் தானே இந்த எதிர்கால கொள்ளையர்கள் வருங்கால இந்தியாவை பற்றி கனவு காண்கிறார்கள்


ஊழலை பொருத்தவரை அது இவர்களுக்கு 2010-ல் இருந்து தான் ஆரம்பிக்கிறது........ அதற்கு முன்பு சதுர்வேதிகளும், சர்மாக்களும், மேத்தாக்களும், குப்தாக்களும், மகேசுவரிகளும் (நம்ம ஊரு பொம்பளை பேருன்னு நினைச்சுகிடாதீங்க சாமியோவ் அதுவும்.... ஒரு சாதி பெயர் தான்), மேனன்களும், நாயர்களும், கோயங்காக்களும், செய்த ஊழல்கள் எல்லாம் கண்களுக்கு தெரிவதில்லை..... .நவீன கொள்ளையர்களான அம்பானி, அகர்வால், மிட்டல்கள் தான் இவர்களது ஆதர்ச நாயகர்கள். 2G ஊழல்னா இவர்களுக்கு ராசாக்களும் மாறன்களும் தான் தெரிவார்கள். அவர்களை உருவாக்கி கொள்ளையடித்த டாடா குழும தாதாக்கள், அம்பானி குழும அயோக்கியன்கள் எல்லாம் இவர்களது .கடவுள்கள்...... பின்ன அவர்களது கொள்ளை கூடங்களில் அடியாள் வேலை கிடைக்க, அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டைய போட்ட புராண புருசர்களின் கோவில்களில் வேண்டி கொண்டிருக்கும் கும்பலை சேர்ந்தது தான் இந்த நவீன அண்ணாவின் காதலர்கள் ...... அவங்க ரோல் மாடல்களை போலவே இவர்கள் ஊழல், ஊழல் என்று ஊளையிடுவார்களே தவிர ஊழல் செய்தவர்கள், அதில் ஈடுபடுபவர்கள் என்று அனைத்து மட்டங்களிலும் உள்ள காவாலி பயலுங்களோட பேரை வரிசைபடுத்தி சொல்லுங்கடான்னா சொல்ல மாட்டானுங்க..... அப்படி வெளியிட்டால் அவனுங்களோட பெற்றோர்கள் பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.


ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்று சொல்லும் அம்பி பயலுங்க ஊழல் செய்து கட்டிய தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து இனி சேர மாட்டோம் என்று சொல்லுவான்களா...... எல்லா மாணவர்களும் கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக வீதியில் இறங்கியபோது கல்லூரி கழிவறைகளில் பதுங்கி கொண்டவனுங்க தானே.... எப்படி அதை எதிர்ப்பானுங்க. திறமை திறமை என்று கூப்பாடு போடும் இவனுன்களோட முந்தைய தலை முறையினர் வெள்ளைக்காரன் மெக்காலே கல்வி முறையில் நிர்ணயித்த பாஸ் மார்க்கான 60 விழுக்காட்டை பெற முடியாமல் வெள்ளைகாரனுங்க காலில் விழுந்து அதை 35 விழுக்காடாக மாற்றின மொள்ளமாறி தனத்தை என்னவென்று சொல்ல போறாங்க ...... சாதிய ஏற்ற தாழ்வுகளால் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள் 35 விழுக்காட்டை 16 விழுக்காடாக குறைக்க சொல்லவில்லயே....... கல்வியிலும் வேலையிலும் அவர்களுக்கு வேண்டிய பிரதிநித்துவத்தை தானே கேட்கிறார்கள். அதை தரும் இட ஒதுக்கீட்டை எவ்வளவு கேவலமாக பேசுவான்களோ அவ்வளவு கேவலமாக பேசுவானுங்க. அதுல பெரிய கொடுமை என்னன்னா இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறிய கயவாளி பசங்களும் இந்த கும்பலோடு சேர்ந்து இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வன்மத்திற்கு சால்ரா அடிப்பது தான்.

இந்த ஊழல் எதிர்ப்பாளிகள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் இந்த கும்பல் எந்த அளவுக்கு ஒரு கச்சடா பாலிட்டன் கும்பல் என்பதற்கு அந்த கும்பலில் சங்கமித்திருக்கும் கோமான்களை உற்று கவனித்தாலே புரியும்...... அலுவலகத்தில் வேலை இல்லை என்றால் கூட வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு ஆபாச படங்களையும் காணொளிகளையும் அனுப்பும் நவீன கண்ணன்கள் இந்த கூட்டத்தில் அதிகமே உண்டு..... போராட்டத்திற்கு போகிறோமோ இல்லையோ தங்களுடைய அழகை அகில இந்திய தொலைகாட்சிகளில் காண்பிக்கும் தருணங்களை தவற விடாத இளம் பெண்டிர்களும் உண்டு. இதில் அவுட் சோர்சிங் என்ற நவீன சுரண்டல் துறையில் வேலை பார்க்கும் அடிமைகளும் உண்டு. அங்க அவனுங்க பண்ணுகிற பிராடு தனத்தை பற்றி வாயையே திறக்க மாட்டானுங்க. வாயை தொறந்தால் வேலை போய் விடும் என்கிற பயம் தான். தங்களுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களை எந்த அளவிற்கு சுரண்ட முடியுமோ அந்த அளவிற்கு சுரண்டி விட்டு ஊழலை பற்றி மணிக்கணக்காக பேசும் நீதி அரசர்கள் உண்டு......


ஊழலில் சம்பாதித்த பணத்தை பாதுகாக்கும் காவியுடை சாமியார்களிடம் மதி மயங்கி கிடக்கும் முழு கிறுக்குகளும்உண்டு, தமிழக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை அடைய வேண்டி பள்ளி கூட சான்றிதழில் பிறந்த தேதியை பிளேடால் கீறி மாற்றி அமைத்த கிருஷ்ணையர் போன்ற பக்கிரி பிளேடையர்களின் பேரன்களும், வட்டிக்கு விட்டு அடுத்தவனை சுரண்டுவதையே தொழிலாக கொண்ட மார்வாடிகளும் (விதி விலக்குகள் உண்டு) நாங்க ஆண்ட பரம்பரையாக்கும் (கோவணம் மட்டுமே கட்ட அனுமதிக்கப்பட்ட முன்னோர்களின் வாரிசுகள் தான்) என்று சொல்லி கொண்டு தனக்கு கீழ எவனை போட்டு அவன் மேல உட்கார்ந்து சவாரி செய்யலாம் என்று அலையும் அர்த்தநாரிகளும் இந்த ஊளைகளின் முதுகெலும்புகள். அதோடு ஆண் பாலியல் தொழிலாளர்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் உயர்தட்டு மங்கைகளும் உண்டு(பின்ன எல்லாரும் இருக்கும் போது இவங்க இல்லாமல் போகலாமா).


இந்த ப்ராடுகளின் முதல் நோக்கமே ஊழலுக்கு எதிர்ப்பான போர் என்று ஆரம்பித்து சந்தடி சாக்கில் இட ஒதுக்கீட்டால் தான் இந்தியாவில் ஊழல் ஆரம்பித்தது என்று ஒடுக்கப்பட்டவர்களின் அடிமடியான இட ஒதுக்கீட்டில் கைவைப்பது தான்... பின்ன இருக்காதா .... வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டு போகும் போது சொந்த மனைவிமார்களையே கூட்டி கொடுத்து காபி எச்டேட்டுகளையும், தொழிற்சாலைகளையும் வளைத்து போட்ட கூட்டத்தின் வழிதோன்றல்களுக்கு அடிமடியில் கைவைப்பது பழக்கமான விடயமாக தானே இருக்கும். ரெண்டாவது பெரிய மனத்தாங்கல் என்னடான்னா இவ்வளவு நாளும் எந்த தங்குதடையில்லாமல் பங்கு போட எவனும் போட்டிக்கு வராமல பண்ணி கொண்டிருந்த ஊழல்களில், ஒடுக்கப்பட்ட சமூகம் முன்னேறி விட்டால் அவர்களும் பங்கு கேட்க ஆரம்பித்து விடுவார்களோ, விட்டார்களே என்பது தான்.


ஊழலை ஒழிப்பது தவிர்க்க முடியாத முக்கியமான ஓன்று தான். ஆனால் இவர்கள் பேசும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் சமூக ஊழலை ஒழிக்க போராடினாலே இந்த ஊழலையும் கட்டுப்படுத்தி விடலாம். அடுத்தவனை எப்படி சொரண்டுவது என்று பால பாடம் எடுக்கும் சமூகத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளும், ஆதிக்க வெறியோடு எழும்பும் வன்முறைகளும் தானே ஊழலின் ஆதி பெற்றோர்கள். நான் ஆள பிறந்தவன் என்கிற எண்ணமே நான் சுரண்ட பிறந்தவன் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. எவன் எவனெல்லாம் ஆள பிறந்தவன், எங்களுக்கு மட்டும் தான் மணி அடிக்க உரிமை உண்டு என்று ஊளையிடுகிறான்களோ அவனுக தான் சுரண்டலில் முனைவர் பட்டம் பெறுகிற அளவுக்கு இருக்கிறானுங்க என்பதே கசப்பான உண்மை.



2 comments:

VANJOOR said...

CLICK AND READ

>>> அன்னா ஹஸாரேயின் மறு முகத்தை பார்ப்போமேயனால் அது பெரும்பாலோர்களுக்கு அதிச்சியாகவோ ஆச்சர்யமாகவோ இருக்ககூடும்.காவியை மறைக்கும் வெள்ளை. அன்னா ஹஸாரே . <<<



.

anthony said...

தங்கள் வருகைக்கு நன்றி . தங்களுடைய பதிவு அருமையான ஓன்று தகவல்களை அள்ளி தெளித்துள்ளீர்கள்

தகவல்களுக்கு நன்றி

ஏற்றத்தாழ்வற்ற தோழமையுடன்

அந்தோணி

Post a Comment