இல்லாத ஒன்றை இருப்பதாக தேடி அலைந்து காணாமல் போகிறவர்களுக்கு மத்தியில் இருக்கின்றவைகளை சரியாக புரிந்து கொள்ள வாழ்பவன்
Tuesday, August 23, 2011
திமுகவினருக்கு ஓர் எச்சரிக்கை
கடந்த திமுக ஆட்சியின் மீது பல்வேறு ஊழல் குற்ற சாட்டுகள் இருந்தாலும், குறுப்பிட தக்க அளவில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியதில் கடந்த திமுக அரசின் செயல்பாடு அதற்கு முந்திய காலங்களை விட பல மடங்கு அதிகம். குறிப்பாக மருத்துவ காப்பீட்டு திட்டம், 108 அவசர சிகிட்சை ஊர்தி அறிமுகம், குடிசைகளை காங்க்ரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், சுய உதவி மகளிர் குழு போன்ற திட்டங்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றவை என்பதை எதிர்கட்சியினர் கூட மறுக்க முடியாது. கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்று தெரிந்த உடன் திமுக மறுபடியும் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனிய ஊடகங்களால் ஊதி பெரிதாக்கப்பட்டவை தான் 2G ஸ்பெக்ட்ரமும், ஈழத்துக்கு கலைஞர் எதிரி போன்ற விடயங்கள். ஸ்பெக்ட்ரம் விடயத்தை ஊதி பெரிதாக்க அவர்கள் ரெட்டை சகோதர்களில் இளையவரை பயன்படுத்தி கொண்டார்கள்.
சகோதரர்களின் அம்மா மற்றும் இளையவரின் மனைவி பார்ப்பனர் என்பதால் இளையவரை தங்களுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கு பார்ப்பனிய கும்பலுக்கு எளிதாக போய் விட்டது . ரெட்டை சகோதர்களை பார்பனிய கும்பல் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர எடுத்த ஆயுதம் தான் பார்ப்பனிய கும்பலின் ஆஸ்தான ஊடகமான “சந்து” வின் பங்குகள் சகோதர்களுக்கு வழங்கப்படும் என்ற போலியான உறுதிமொழிகள். இங்கு இளைய சகோதரரின் மனைவி “சந்து” ஊடக குழுமத்தை சேர்ந்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கேற்றார் போல் “சந்து” குழுமத்தில் குடும்ப பூசல் கட்டுக்கடங்காமல் போய் விட்டது என்றும் அந்த குழுமம் கைமாற போகிறது என்ற பொய்யான தகவல்களை வெளி உலகில் உலவ விட்டதன் மூலம் ரெட்டை சகோதர்களை எளிதில் நம்ப வைத்து விட்டனர். சந்தடி சாக்கில் பார்ப்பனிய கும்பல் ரெட்டை சகோதரர்களை பெரியவரின் குடும்பத்தை நோக்கியே திருப்பி விட்டார்கள். அதன் தொடர்ச்சி தான் பெரியவர் குடும்பத்தை ரெட்டை சகோதரர்கள் பிளவு படுத்த எடுத்த முயற்சிகள். ஆனால் ரொம்ப முக்கியமான விடயம் என்னன்னா பார்ப்பனிய கும்பல் அவர்கள் நோக்கத்தை அடைந்த பிறகு ஏற உதவிய ஏணியை எட்டி உதைத்து விட்டார்கள் என்பது தான். ரெட்டை சகோதரர்கள் யாருடன் சேர்ந்து கொண்டு வளர்த்து விட்டவரின் மீதே பாய்ந்தார்களோ அவர்கள் தான் இப்போது இளைய சகோதரருடைய கோவணத்தையும் கழட்ட வேலை செய்தவர்கள்
இப்போது அதே பார்ப்பனிய கும்பல் மற்றுமொரு வேலையில் இறங்கி உள்ளது கடந்த திமுக ஆட்சியை மட்டம் தட்டுவதற்கென்றே பல்வேறு கட்சி, மதம் மற்றும் சாதிகளின் போலி அடையாளங்களோடு ஆட்கள் உள்ளிறக்கப்பட்டுள்ளர்களாம்....... அந்த மாதிரி வேலைகளை ஊடங்கங்கள், இணையதளங்கள் என பல்வேறு தளங்களிலும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறதாம் அந்த பார்ப்பனிய கும்பல்.. அதவாது ஊடங்கங்களிலும் இணையதளங்களிலும் போலி அடையாளங்களோடு வந்து திமுக ஆட்சியில் நடந்த சில தவறுகளை பெரிது படுத்துவதும், அதே அரசு செய்த நல்ல திட்டங்களில் குறை கண்டுபிடிப்பதும், இல்லையென்றால் அத்திட்டங்களை பற்றிய மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் தானாம். அப்படி பரப்புரை செய்வதன் மூலம் கலைஞர் மீது கட்சி, சாதி, மத வேறுபாடில்லாமல் பொதுமக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள் என்பது போன்ற சூழலை செயற்கையாக உருவாக்குவதே அவர்களது திட்டம். திரும்பவும் திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களது முதுகெலும்புகளை ஸ்டாலின் முறித்து விடுவார் என்ற பயம் அவர்களிடம் இப்போதெல்லாம் மிக அதிகமாகவே இருக்கிறதாம். ஆகவே அந்த பார்ப்பனிய கும்பல் இந்திய அளவில் அவங்களோட கூட்டங்களை கட்சி வேறுபாடில்லாமல் சேர்த்து கொண்டு திமுக வை ஒழித்து கட்டும் வேலையில் இறங்கி இருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெரும் வட இந்தியாவை சேர்ந்த பார்ப்பனியர்கள் தமிழக கேடரில் சேர வேண்டுமென்று அறிவுறுத்தபடுகிறார்களாம். அதை செவ்வனே செய்து முடிப்பதற்கென திட்டங்கள் டெல்லியில் தீட்டபடுகிறது என்று ஒரு தகவல் நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து வந்து சேர்ந்தது ......
திமுகவிற்கு வெளியே உள்ள எதிரிகளை கூட சமாளித்து விடலாம் ஆனால் புல்லுருவிகளும், கருப்பு ஆடுகளும் இருப்பது தான் மோசமான விடயம். கடந்த ஆட்சியில் திமுக தவறுகள் இழைத்திருக்கலாம்.... ஆனால் அந்த தவறுகள் கட்டு கோப்பானது என்று கருதப்பட்ட ஒரு அமைப்பு அழிவதற்கு காரணமாக இருந்து விட கூடாது. ஏனென்றால் இப்போது வருங்கால முதலமைச்சர் என்று சொல்லி கொள்ளுகிறவன்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு எழவும் கிடையாது. அப்படி பட்டவன்களிடம் எதிர்கால தமிழகம் போய் சிக்கி விட கூடாது. அது மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையாகி விட கூடாது. திமுகவினரும் கழகத்தில் உள்ள மூட்டை பூச்சிகளை அங்கேயே வைத்து நசுக்குவதை விட தூர எடுத்து போட்டு எரித்து விடுவது நலம். அது திமுக என்ற வீடு கொளுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட எடுத்து கொள்ளும் செயலாகவே இருக்கும். தமிழக மக்களும் எதை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உலவி கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் எதிர்கால முதல்வர்கள் என்ற தோரணையில் உலவும் நச்சுக்கள் அகப்பட்டு அதை அவர்கள் விழுங்கி விடாமல் பார்ப்பது ரொம்ப முக்கியம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முண்டம்,தி மு க வில் இருப்பது வெறும் மூட்டைப் பூச்சி மட்டும் அல்ல.தேள் நச்சுப் பாம்பு,பூரான் போன்ற ஜந்துக்கள் தான்.இவை தவிர வேறு ஒன்றும் கிடையாது.தி மு க ஒழிந்தால் தமிழ் நாட்டுக்கு நல்லது.
திருந்தவே மாட்டீர்களா?
Post a Comment