Thursday, January 29, 2015

சித்தார்த்தனும் போதித்த மரமும்



மூடநம்பிக்கையில்
மூழ்கி கிடந்த
மூட சமூகத்தின்
அடிமைச் சங்கிலியை
அடித்து நொறுக்க
சித்தார்த்தன்
போதி மரத்தின் கீழமர்ந்து
துன்பத்திற்கான காரணிகளை
பகுத்து அறிந்து
புத்தன் ஆனான்
பொதி சுமப்பதற்காகவே
நேர்ந்து விடப்பட்ட
இருகால் மாக்கள்
புத்தன் ஞானம் பெற்ற
போதிமரத்தின் அடிமரத்தை
இரும்பு கோடலிகளால்
பிளந்து கொண்டிருக்கின்றன
பிறிதோர் புத்தன்
பிறந்திடகூடாதல்லவா...


No comments:

Post a Comment