ரெண்டு நாள் பெய்த மழையில் ஊரே வெள்ளக்காடாகி விட்டதாம். இன்னும் கொஞ்ச நாளில் தனித் தீவாகி விடுமாம். எல்லா இடத்திலும் இருந்து கோபக் குரல்கள், வெடிக்கும் இடி சத்தங்களையும் தாண்டி எழும்புகிறது. ஒருவர் முந்தைய அரசை சாடுகிறார். இன்னொருவர் இன்றைய அரசை சாடுகிறார். ஆனால் இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் இச்சமூகத்தின் பேராசை தான் என்று தெரு வெளிகளில் நின்று உரக்க கத்துகிறேன் ..... ஆனால் குளங்களும் ஏரிகளும் நிரவப்பட்டு எழுப்பட்ட concrete கல்லறைகளை சொந்தமாக்குவதற்கு காதுகளை செவிடாக்கி கொண்டு விரைகின்றனர் இரு கால் மாக்கள். என்னவென்று கேட்டால் அங்கே தான் நீரூற்றுகள் அதிகமாம் . புல் வளர்வதற்கு ஏற்ற இடமாம். அவங்க சொல்லுறதும் சரி தான் . புதைக்கப்படப் போகும் இடத்தில் புல் வேகமாக வளர்ந்தால் , அங்கே தலை சாய்க்கப் போகும் எலும்பு கூடுகளுக்கு பஞ்சணை வாங்கும் காசு மிச்சமாகுமே .
இல்லாத ஒன்றை இருப்பதாக தேடி அலைந்து காணாமல் போகிறவர்களுக்கு மத்தியில் இருக்கின்றவைகளை சரியாக புரிந்து கொள்ள வாழ்பவன்
Thursday, January 29, 2015
எலும்புக் கூடுகளின் தேடல்
ரெண்டு நாள் பெய்த மழையில் ஊரே வெள்ளக்காடாகி விட்டதாம். இன்னும் கொஞ்ச நாளில் தனித் தீவாகி விடுமாம். எல்லா இடத்திலும் இருந்து கோபக் குரல்கள், வெடிக்கும் இடி சத்தங்களையும் தாண்டி எழும்புகிறது. ஒருவர் முந்தைய அரசை சாடுகிறார். இன்னொருவர் இன்றைய அரசை சாடுகிறார். ஆனால் இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் இச்சமூகத்தின் பேராசை தான் என்று தெரு வெளிகளில் நின்று உரக்க கத்துகிறேன் ..... ஆனால் குளங்களும் ஏரிகளும் நிரவப்பட்டு எழுப்பட்ட concrete கல்லறைகளை சொந்தமாக்குவதற்கு காதுகளை செவிடாக்கி கொண்டு விரைகின்றனர் இரு கால் மாக்கள். என்னவென்று கேட்டால் அங்கே தான் நீரூற்றுகள் அதிகமாம் . புல் வளர்வதற்கு ஏற்ற இடமாம். அவங்க சொல்லுறதும் சரி தான் . புதைக்கப்படப் போகும் இடத்தில் புல் வேகமாக வளர்ந்தால் , அங்கே தலை சாய்க்கப் போகும் எலும்பு கூடுகளுக்கு பஞ்சணை வாங்கும் காசு மிச்சமாகுமே .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment