Thursday, January 29, 2015

சபரி சாமியும் ஓட்டை வடையும்



நேற்றிரவு தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்கியது தான் தாமதம் , பசியும் சேர்ந்து நம்மோடு கூட வந்து விட்டது . பசியை விரட்டி விடுவதற்காக தொடர்வண்டி நிலையத்திற்கு எதிர்த்தார் போன்ற ஒரு தள்ளுவண்டி கடைக்கு சென்று நாலு இட்டிலிக்கு சொல்லி விட்டு அப்படியே அந்த பக்கம் சுற்றி கொண்டிருந்த சபரி மலை பக்தர்களை நோட்டம் விட்டு கொண்டிருந்தேன். எல்லாரும் சுத்த பத்தமாக பட்டையும் பொட்டுமாக திரிந்து கொண்டிருந்தனர் அவர்களது தலை என்னமோ எண்ணெய்யை பல வருடங்களாக காணாத தலையாக தான் இருந்தது .

இப்படி நான் பராக்கு பார்த்து கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு கை என் காலை தடவி சென்றது . அது என்னது என்று குனிந்து பார்க்கையில் அப்போது ஒரு பக்தர் என் காலில் இருந்து கையை எடுத்தது தெரிந்தது ... என்னடா இது புது கோலமாக இருக்கிறது. சுத்த பத்தமாக இருக்கிற சபரி சாமி இந்த ஆசாமியின் காலை தொட்டு கும்பிடுகிறதே என்று அவரை உற்று கவனிக்கையில் அவரது கையில் ஒரு ஓட்டை வடை இருந்தது. இப்போது தான் எனக்கு புரிந்தது சாமி என்னோட காலை தொட்டுக் கும்பிடவில்லை. என் கால் மீது விழுந்த ஓட்டை வடையை லபக்கென்று தூக்கி அவரது தட்டில் வைக்க தான் கையை நீட்டி இருக்கிறார் என்று ... இப்போது பக்கத்தில் இருக்கிற இன்னொரு சாமி ஒருவிதமான முனகலான அதட்டலில் வடையை கீழே போடுமாறு உசு உசு என்று இந்த சாமியிடம் குறிப்பால் உணர்த்த முனைகிறார். இந்த சாமியோ அதை காதில் வாங்காமல் ஓட்டை வடையை தனது பல்லால் பதம் பார்க்க தொடங்குகிறார் ... ம்ம்ம் என்னதான் சாமியாக இருந்தாலும் ஓட்டையில் விழாதோர் இவ்வுலகில் ஏது?... இதற்கு இடையில் நான் அவங்க ரெண்டு பேரையும் உற்று பார்ப்பதை கவனித்தாரோ என்னவோ அவரும் பேசாமால் அமர்ந்து விட்டார் ... இதற்கிடையில் நமக்கு கிடைத்த இட்டிலியை லபக்கி கொண்டு நடையை கட்டினேன் ..

ஆனால் இப்போது பசி போய் ஓட்டை வடைக்காக காலில் விழுந்த அந்த சபரி சாமி என் மனது முழுவதும் ஆக்கிரமித்து இருந்தார் ...

பல நூற்றாண்டுகளாக எண்ணெய் பயன்படுத்தாத தலை , மண்ணில் விழுந்த ஓட்டை வடைக்காக பரிதபிக்கும் மனம் என இருக்கும் ஒரு மனிதர் எதற்கு வெட்டியாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து கொண்டு மலை ஏறணும்.... அந்த காசை கொண்டு தலையை எண்ணெயால் குளிப்பாட்டி வருடம் முழுக்க சுத்த பத்தமாகவும் , ஆசை தீர ஓட்டை வாடை வாங்கி தின்று மகிழ்ச்சியாகவும் இருக்கலாமே அந்த ஒரு மாத சாமியான ஆசாமி


https://www.facebook.com/anthony.fernando.796/posts/720115378072760

No comments:

Post a Comment