Friday, January 30, 2015

குசும்பன் பொன்னாருக்கு ஒரு மடல்




ராசா பொன்னாரு நீ தெற்கத்தி மண்ணில் காவி வெறியேற்றி மக்களை உசுப்பிவிட்டு சாதித்து விடலாம் என்று தானே எண்ணுகிறாய் ..... ஆனால் தெற்கத்தி மண்ணில் காவி வெறியை விட ஆழமாய் வேர் கொண்டது சாதி வெறி என்பது காவி வெறியேறிய போதையில் நீ அறியாமல் இருந்து இருக்கலாம் ..... ஆனால் பழைய பகைகளை வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் நாளுக்காக காத்திருக்கும் பல கும்பல்களை நான் அறிவேன் .... வன்முறை வெடிக்கும்போது அது சாதீய வன்முறைகளாக தான் மாறும் . நீ எந்த காவி வெறியை ஏற்றி கொண்டலைகிறாயோ அந்த வெறிக்கு கிருத்துவ சமூகத்தை சேர்ந்த உனது உறவுகளும் பாதிக்கப்படும் என்பதை நீ அறியாயா ? நம் முப்பாட்டிகளின் முலையறுக்கப்பட்ட நாளில் இருந்து நீ ஒளி ஆண்டுகள் தொலைவில் இல்லை . அதன் வடுக்கள் இன்றும் கனன்று கொண்டு தான் இருக்கின்றன . அதை ஏற்படுத்திய கொள்ளிக்கட்டைகளும் புகைந்து கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் அது நம் முப்பாட்டிகளின் மீது வடுக்களை ஏற்படுத்திய கொள்ளிக்கட்டை என்பதை மறந்து , காவி எரிபொருள் கிட்டங்கியின் அருகில் நின்று கொண்டு.. உன் தலையில் அதை வைத்து சொரிந்து கொண்டிருக்கிறாய் . எல்லாம் கட்டு மீறி வெடித்து சிதறுவதற்குள் விழித்துக் கொள் ..... இல்லையென்றால் ..... உனது செயல்களாலேயே உன் கதை முடியும் நாள் வரும் ... அப்போது உனக்காக அழுவதற்கு உனது உறவுகள் இருக்க மாட்டார்கள் ....
அப்படியொரு மோசமான நாளை நீ சந்தித்து விடக் கூடாது என்பதே என்னுடைய ஆவல்

இப்படிக்கு
உன் மீதும் பரிதாபம் காட்டும்
உன் உறவு
அந்தோணி


பின்குறிப்பு: பொன்னாரன் இப்போது எந்த பொந்துக்குள் இருப்பாரோ என்று எமக்கு தெரியாது . யாராவது அந்த தேரையை காண நேர்ந்தால் அது அடைக்கலம் என்று அடைந்து கிடப்பது பாம்பின் பொந்துகள் என்று அதற்கு அறிவுறுத்தி எனது மடலையும் சேர்த்து விடுங்கள்.

https://www.facebook.com/anthony.fernando.796/posts/678180592266239

No comments:

Post a Comment