Thursday, January 29, 2015

மணியாச்சியும் ஒரு மணியாட்டியும்

ஐயா மணியாச்சி வந்து விட்டதா என்று எதிர் இருக்கையில் இருந்த பெரியவர் ஒருத்தரிடம் கேட்க அவர் வாஞ்சி மணியாச்சி வந்து விட்டது என்று சொல்லி விட்டு , வாஞ்சி மணியாச்சியில் உள்ள வாஞ்சி என்னவென்று தெரியுமா ? என்று கண்டிப்பான ஆசிரியர் அப்பாவியான மாணவனிடம் பிரம்பை காட்டி கேட்கும் தொனியில் அப்பெரியவர் கேட்டபோது எனக்கு கொஞ்சம் திகைப்பு .... அடடா நான் மணியாச்சி வந்து விட்டதா என்று தானே கேட்டேன் இவர் வாஞ்சி என்றால் என்னவென்று தெரியுமா ? என்று பூட்டு போடுகிறாரே என்று எண்ணிய படி என்ன பதிலை இவருக்கு சொல்லலாம் என்று கொஞ்ச நேரம் மனதிற்குள் முழித்து கொண்டு இருந்தேன் . இதற்கு இடைப்பட்ட தருணத்தில் அவர் என்னை ஏளனமாக பார்ப்பது போல ஒரு பார்வையை தூக்கி எறிய.... ம்ம்ம்ம் அவராகவே வந்து வண்டியின் குறுக்கே வந்து படுத்து விட்டார் நாம ஏத்தாம விட்டா தான் தப்பு என்று எண்ணியபடியே , அய்யா இந்த பெயருக்கு பின்னால் வாஞ்சி நாதன் என்ற பார்ப்பன இளைஞர் இருக்கிறார் . அவர் ஆசு என்ற வெள்ளைக்கார துறையை சுட்டுக் கொன்று விட்டு தொடர்வண்டி பெட்டியின் கழிவறையில் போய் உட்கார்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவாக மணியாச்சி என்ற இந்த ஊருக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் என்றேன்


இப்போது நான் அது சரி வாஞ்சிநாதன் ஆசுதுரையை எதற்கு சுட்டார் என்ற காரணம் தெரியுமா ? என்று அவரிடம் வினவினேன். அவர் அதற்கு " அதுவா, அது ஆசு துரை நம் நாட்டு மக்களுக்கு ஏராளமான கொடுமைகள் செய்தான். அதனால் ஆசுதுரையை வாஞ்சிநாதன் சுட்டு கொன்றான். இது தான் வரலாறு என்றார். பதிலுக்கு நான் " யார் அந்த நாட்டு மக்கள் ?, அந்த வரலாறை எழுதியது யார் ? என்ற கேள்விகளை முன் வைத்தேன் . தம்பி நீங்க இளவயதுகாரங்க இல்லையா அதனால் உங்களை மாதிரி இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை, இப்போதெல்லாம் இளைஞர்களிடம் நாட்டுப்பட்டு பெரிதாக இருப்பதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அதற்கு நான் ஐயா நீங்க சொல்வது பார்ப்பனர்கள் தங்களுக்காக புனைந்து கொண்ட வரலாறு . நான் கேட்பது மண் சொல்லும் வரலாறை பற்றி ... அப்படியே தொடர்ந்து , தமிழகத்தில் இருந்த வெள்ளைக்கார மாவட்ட ஆட்சியாளர்களில் ஆசு துரை தான் உள்ளதிலேயே மிகவும் நல்ல மனிதர் . செங்கோட்டை பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் பிரசவ வழியால் அவதியுறுவதை பார்த்த அவர், மருத்துவமனைக்கு அப்பெண்ணை பார்ப்பன அக்கிரகாரம் வழியாக அழைத்து செல்ல முற்பட, அதை தடுக்க முற்பட்ட பார்ப்பன கும்பலை தனது கையில் உள்ள சாட்டையால் விளாசி தள்ளினார் . அப்படி சாட்டையால் விளாசி தள்ளப்பட்ட ஆட்களில் ஒருத்தன் தான் நம்ம வாஞ்சிநாதன் .


தன்னை சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருத்தரை தாங்கள் வசிக்கும் பகுதியின் வழியாக பசுமாமிசம் சாப்பிடும் மிலேச்சன் அழைத்து சென்று தீட்டு படுத்தி விட்டானே என்ற வெறியில் பழிக்கு பழி வாங்க ஆசு துரையை கொடூரமாக சுட்டு கொன்றான். தன்னுடைய சட்டை பையில் " பாரத மாதவையும் இந்து தர்மத்தையும் அழிக்க வந்த கோ மாமிசம் சாப்பிடும் ஒரு மிலேச்சனை கொள்வது நம்முடைய தர்மம்" என்று தனது கைப்பட எழுதிய கடிதத்தை சட்டை பையில் வைத்து விட்டு கழிவறையில் போய் தற்கொலை செய்து கொண்டார், இது தான் மண் சொல்லும் வரலாறு . உடனே அவர் ஆங்கிலேயர்கள் நம்மை மிகவும் கொடுமைப்படுத்தினர். கமலகாசன் நடித்த ஒரு படத்தில் கூட ஆங்கிலேயர்கள் நமது பெண்களை நிர்வாணமாக்கினர் என்று வரலாறு இருக்கிறதே என்று ஒரே போடாக போட்டார் . அதற்கு நான் முத்தம் கொடுப்பதற்காக படம் எடுப்பவர் கமலகாசன் , அங்கெல்லாம் பொய் வரலாற்றை தேடுவது ஒரு மாதிரி இல்லையா ? என்று கேட்டவாறே ... குமரி மாவட்டத்தில் சக இந்திய பெண்களை மார்பு சட்டை அணிய விடாமல் தடுத்தும், மார்பு சட்டை அணிந்த ஒரு பெண்ணின் மார்பகத்தை அறுத்து எறிந்தும் அட்டகாசம் பண்ணப்பட்ட வரலாறு தெரியுமா ? என்று கேட்டேன் . பேந்த பேந்த விழித்தார் . இதற்கு மேல பேசினால் அந்த பெரியவர் அழுது விடுவார் என்று அத்தோடு விட்டு விட்டேன.


உண்மையான வரலாறு மண்ணில் புதைந்து கிடக்கிறது .... அதை அந்த மண்ணில் போய் தேடினால் கிடைக்கும் .... கோவண கயிரில் (பூணூலில்) தொங்குவதை எல்லாம் வரலாறு என்று சொல்லிக் கொண்டு அலையக் கூடாது . அதன் பெயர் கோவணம் .

https://www.facebook.com/anthony.fernando.796/posts/719922414758723


No comments:

Post a Comment