Thursday, September 1, 2011

சாதி ________________ சுடப்படும் மறைக்கப்பட்ட ஓட்டை வடைகள் - அரிப்பு பாகம் -1

வாசகர்கள் கவனத்திற்கு: இங்கு படங்களில் இருக்கும் வார்த்தை விளையாட்டுகள் என்னுடைய சொந்த கருத்துகள் கிடையாது . ஒன்றிரண்டு வாரங்களுக்கு முன்பு சில அறிவாளிகளால் இணையத்தில் பதியப்பெற்ற மறைக்கப்பட்ட ஒட்டை வடைகளின் வரலாறை படிக்க நேர்ந்தது. அதை எல்லாரும் படித்து இன்புறும் வண்ணம் அவற்றை படம் பிடித்து இங்கே ஒட்டியுள்ளேன். இந்த வரலாற்று கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை என்னிடம் கிடையாது அவை யாவும் ஓட்டை வடைகளின் வரலாற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகளையே சாரும். குழந்தைகளை அருகில் வைத்து கொண்டு இதை படிக்க வேண்டாம் என்றும் தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்.From 2 September 2011


என்னமா யோசிக்கிறாய்ங்க..... காமராசர் சுயசாதி பற்றினால் தான் கன்னியாகுமாரியை தமிழ்நாட்டோடு இணைத்தாராம். குமுளி , பீர்மேடு போன்ற பகுதிகளில் எல்லாம் அவரோட சாதிக்காரங்க இல்லையாம்..... அட பாவி மக்கா .... அந்த கால கட்டத்தில் காமராசர் மொழிவாரியாக மாநிலத்தை பிரித்ததை ஆதரிக்காத பக்கா தேசியவாதி என்பது பலருக்கும் தெரிந்ததே. கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு இணைக்க போராடியவர்களில் முக்கியமானவர் மார்சல் நேசமணி. உண்மைய சொல்ல போனால் கன்னியாகுமரியை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று காமராசர் அக்கறை காட்டியதே இல்லை. உண்மை இப்படி இருக்கையில் தன்னோட சாதிகாரங்களுக்காக குமரியை தமிழ்நாட்டோடு இணைத்தார் என்பது சாதிய மனப்பான்மையோடு கர்ம வீரர் மீது அள்ளி தெளிக்கும் அவதூறுகளே அன்றி வேற என்னவாக இருக்க முடியும். ஏதோ குமரியில் நாடார் சாதிக்காரங்க மட்டும் தான் இருக்கிறாங்களா என்ன. அப்படி பேசுவது குமரியை தமிழ்நாட்டோடு சேர்க்க பாடுபட்டவர்களின் தியாகத்தை கொச்சை படுத்துவதாகும் என்று இந்த அறிவாளிகள் என்று தான் புரிந்து கொள்ள போகிறார்களோ. முத்துராமலிங்கத்தை விட இந்திய தேசியத்தின் மீது பன்மடங்கு பற்றுகொண்டவர் காமராசர் என்பதும் அதினாலேயே அன்றைய திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்ட்டார் என்பதும் வரலாறு


From 2 September 2011


காமராசரை சுயசாதி பற்றுள்ளவர் என்று கூறியவரின் சுய சாதி வெறி நாடறிந்தது தானே. கமாராசரை ஒரு குறுப்பிட்ட சாதியின் தலைவராக சுருக்க என்னமா திட்டம் போடுறாங்க. சுயசாதி வெறியினால் ஏனைய சாதியை சேர்ந்தவர்களின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டவர் காமராசரை பார்த்து சுய சாதிவெறியர் என்று கூறியதாக சொல்லபடுவது தான் இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவையாக இருக்கும்From 2 September 2011


விருதுநகர் வியாபாரிகள் மட்டும் தானா கலப்படத்தில் ஈடுபட்டார்கள், அப்போது வியாபார தொழிலை தங்களுடைய சாதிய ரீதியான உரிமையாக கருதி கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் கலப்படத்தில் ஈடுபடவில்லையா. விருதுநகர் வியாபாரிகள் என தனியா குறுப்பிட்டு அவர்கள் கலப்படத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்வதே, கடுமையான உழைப்பை மூலதனமாக வைத்து முன்னேறி கொண்டிருந்த ஒரு குறுப்பிட்ட சமூகத்தவர்களின் முன்னேற்றத்தை குலைக்க, அப்போதைய சூழலில் எல்லா விதமான வியாபாரங்களில் ஆளுமை செய்து கொண்டிருந்த ஆதிக்க சாதியினர் முத்துராமலிங்கத்தை கருவியாக பயன்படுத்தினதற்கான முக்கிய சான்றாகும்.

அ துசரி அவரு அவரை சுற்றி இருந்த அடி பொடிகளை தூண்டி விட்டு மக்கள் குடிக்க நீர் எடுக்கும் கிணறுகளில் மனித மலத்தையும் மண்ணெண்ணையையும் ஊற்றி கலப்படம் செய்ததை விடவா விருதுநகர் வியாபாரிகள் செய்து விட்டார்கள்From 2 September 2011


கூடை வியாபாரிகளான நாடார்கள், கலப்படம் , நாடார் வியாபாரி என்னை வெட்டுவேன் என்று கூறினார் , வெட்டினால் வெட்டட்டும் ஆயிரமாயிரம் முத்துராமலிங்கங்கள் தோன்றுவார்கள்..... போன்றதான வார்த்தைகள் அன்றைய கால கட்டத்தில் தங்களுடைய உழைப்பால் முன்னேறி கொண்டு இருந்த ஒரு சமூகத்திற்கு எதிராக என்ன மாதிரியான வெறுப்பை கக்கி இருக்கிறார் என்பதற்கான வரலாற்று அடையாளங்கள்.


ம்ம்ம்ம்ம்ம் ஒரு முத்துராமலிங்கம் பிறந்ததினால் தமிழகத்தில் ஏற்பட்ட சாதிய ரீதியான வன்முறைகள் இன்னும் ஒழியலை ...... ஆயிரமாயிரம் முத்துராமலிங்கங்கள் பிறந்திருந்தால் ...... தாங்காதுடா சாமீ..... இந்நேரம் ஒட்டு மொத்த தமிழ்நாடும் சுடுகாடா தான் இருந்திருக்கும்.


ஆயிரமாயிரம் தினகரன்களும் , கல்யாணிகளும் பிறக்க மாட்டார்களா, சமூகத்தில் சாதி ரீதியான பிளவுகளை அடித்து நொறுக்க , என்ற ஏக்கம் தான் மிஞ்சி நிற்கிறது.


From 2 September 2011


காமராசர் கள்ள நோட்டு அடித்தார் , பெரும்பாலான பிரபலமான பத்தாயிரம் பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் செய்தியாக வந்தது ...... என்பது போன்ற தகவல்கள் மூலம், பார்ப்பனிய வேசியம் எவ்வளவு வீரியமாக ஏழைகளின் கல்வி தந்தை காமராசருக்கு எதிராக செயல் பட்டு இருந்து இருக்கின்றன என்பது நன்கு தெரிகிறது. ம்ம்ம்ம் கர்மவீரர் எப்படி பட்ட சவால்களை எல்லாம் சந்திக்க வேண்டிய நிலையில் இருந்திருக்கிறார்.... அன்றைக்கு அய்யா பெரியார் மட்டும் காமராசருக்கு பக்க துணையாக இல்லைன்னா காமராசரை உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பாய்ங்க போல ..


இவரு தூக்கத்துல எதையாவது யோசித்து விட்டு வந்து அதையே நான் கேள்வி படுகிறேன் சந்தேகப்படுகிறேன் என்று சொல்லி விட்டால் உடனே இவரு சந்தேகபடுகிற ஆட்களை குற்றவாளியாக்கி தண்டனை குடுத்திடனும்...... தங்க முடியலப்பா ....... இவரு பட்ட சந்தேகத்துக்கெல்லாம் கர்ம வீரர் இவரு மேல கேசு போட்டிருந்தார்ன்னா...அவரு ஆட்சி பண்ணி இருக்க முடியாது நீதிமன்ற வாசலில் ஒரு கூடாரம் அடித்து குந்திக் கொண்டு தான் இருந்திருக்க வேண்டும்


ஒண்ணு மட்டும் நல்லா தெரிகிறது, பார்ப்பனியத்துக்கு முத்துராமலிங்கம் நல்ல அடியாளாக செயல்பட்டு இருக்கிறார்


From 2 September 2011


காமராசரால் தேசிய வியாதிகளுடைய மனம் உடைந்து போனதோ இல்லையோ..... ஆனால் தான் வளர்த்து விட்ட இந்திரா என்னும் பார்ப்பனிய கடா அவசரகால நெருக்கடியின் போது தன் மீதே பாய போவதை எண்ணி அதை சீரணிக்க முடியாமல் மனம் நொந்தவராக தான் கர்ம வீரர் இறந்து போனார் என்பது வரலாறு. காலம் பூரா அவர் எந்த தேசியத்துக்கு பாடுபட்டாரோ அந்த தேசியம் தான் அவரை சிறையில் போடவும் துணிந்தது. அது தான் வேதனையான உண்மை.

ஒரு கேள்வி நம்ம முத்துராமலிங்கம் எத்தனை கட்சிக்கு தான் ஒரே நேரத்தில் தலைவராக இருந்தாரு.... பார்வர்டு பிளாக் கட்சிகாரறு எப்படி சீர்திருத்த காங்கிரசின் தலிவரானார் ... ஒண்ணுமே புரியலையே


From 2 September 2011


முத்துராமலிங்கம் பண்ணியதிலேயே உச்சகட்ட காமடின்னு சொன்னா அது சுபாசை பர்மாவில் பார்த்தேன், போர் முனையில் பார்த்தேன், மூன்றாம் உலக போர் தொடங்கும் , சுபாசு தன்னுடைய சேனைகளோடு இந்தியாவிற்குள் நுழைவார் என்று சாமத்தில் வரும் சக்கம்மா குடு குடுப்பைகாரர் மாதிரி கட்டியம் கூறி கொண்டு அலைந்தது தான்.

ஆமா நேருவுக்கு முத்துராமலிங்கத்தை தெரியுமா என்ன ..... வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி தான்னு சொல்லி கொண்டு அலைந்தது போல் இருக்கிறது.

ஆகத்து 15 பாரத தாய்க்கு ரெட்டை விலங்கு பூட்டப்பட்ட நாளோ இல்லையோ ..ஆனால் பாரதத்தின் கற்பு வெள்ளைக்காரர்களால் அடிமாட்டு விலைக்கு பார்ப்பனியத்திடம் விற்கப்பட்ட நாள் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.From 2 September 2011


முத்துராமலிங்கத்தால் தூண்டி விடப்பட்டு பற்றி எரிந்த சாதி கலவரத்துக்கு காரணம் காமராசராம். இந்த கோமாளித்தனத்தை நினைத்து எங்க போய் முட்டி கொள்ள என்று தெரியவில்லை. ஆனால் மேல இருக்கிறவற்றை பதிந்தவர் ஒரு மாதிரியான சாதிய வெறித்தனத்தோடு கர்ம வீரரை சாதி வெறியராக காட்ட கடும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் கடைசியில் அவரே ஒரு கோமாளி ஆகி இருக்கிறார்.


பார்ப்பனியத்துக்கு கைக்கூலியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அத்துணை அடக்குமுறைகளையும் ஏவி விட்ட ஒருவரை கொண்டாடுவதும், சாதி மத பாகுபாடில்லாமல் எல்லா குழந்தைகளும் கல்வி அறிவை பெற வேண்டும் என்று திட்டங்களை கொண்டு வந்தவரை சாதி வெறியராக காட்ட முயற்சிப்பதும் சமூக ரீதியாக நன்மை பயக்கும் பரிணாம வளர்ச்சி கிடையாது, அது பரிதாபகரமான அழிவுகளை தேடுவதற்கான முன் முயற்சி என்று தான் கூற முடியும்


இப்படியெல்லாம் மறைக்கப்பட்ட ஒட்டை வடைகளை பற்றி ஆராய நேரத்தை செலவிடுவதை விட்டு விட்டு சக மனிதர்களோடு மனிதர்களாக சரிசமமாக வாழ்வதற்கு பயிற்சி எடுத்தல் நலம் என்று தோனுகிறது ....

மறைக்கப்பட்ட ஒட்டைவடைகள் பற்றிய பதிவுகள் தொடரும்4 comments:

மாசிலா said...

Thanx sharing this good post.

Thaniyan Pandian said...

தமிழ் நாட்டு பாடநூல்கள் மட்டும் படித்து, உலக அரசியல் உள்ளூர் உண்மைகள் தெரியாத ஒருவருக்கு, அல்லது அப்படி நடித்துக் கொண்டிருப்பவருக்கு, இதையும் படிக்கவும். ஒருவேளை சில பல உண்மைகள் புரியலாம் அல்லது எப்பவும் போல் உங்களின் ச(மூட)க பணிகளை தொடருங்கள்.

பலருக்கும் தெரியாத பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை
http://pasumponayya.blogspot.com/2011/07/blog-post.html

anthony said...

////பலருக்கும் தெரியாத பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை
http://pasumponayya.blogspot.com/2011/07/blog-post.html //// அவரு சொல்லிட்டாருன்னா உணமையாதான் இருக்கும் போல. பேசாம முத்துராமலிங்கம் பாட திட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்து அவரோட கண்டுபிடிப்புகளையும் , வீரம் சொரிந்த அடுத்த சாதியினருக்கு எதிரான வன்முறைகளை தூண்டி விடும் பேச்சுக்களையும் வருங்கால சந்ததிக்கு சொல்லி கொடுத்தீங்கன்னா எல்லாரும் விஞ்ஞானி ஆகி விடுவதோடு உலகத்தை ஆளும் பரம்பரையாகவும் மாறி விடுவாங்க. சீனா, ருசியா, ஐரோப்பா , அமெரிக்கா காரனுக எல்லாம் வேற ஏதாவது கிரகத்தை தேடி போய் பொழைத்து கொள்ள வேண்டியது தான்


அது சரி அவரோட "காம்பசை வைத்து உலகின் பெரும் கடல்களை யெல்லாம் பனிக்கட்டி ஆக்குற" ரகசியம் உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்க. எல்லா பய புள்ளைகளும் அதை கொண்டு கடலில் பனிச்சறுக்கு விளையாடி மகிழட்டும்

Robin said...

சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதாக எடுத்துக்கொள்ளுங்கள்!

Post a Comment