Friday, September 16, 2011

தமிழத்தின் பிரதான எதிர்க்கட்சி உடைக்கப்படுமா ? .... தற்போதைய காரமான கிசு கிசு பாட்டிலை உடைக்குமா பன்றி குட்டி

தேசியத்தையும் திராவிடத்தையும் முன்னுக்கு போக்குற கட்சி ...உடனே எந்த தேசியத்தை எந்த திராவிடத்தை என்று கேட்க பிடாது .... அது பற்றிய ரகசியங்கள் கட்சி ரெண்டா பிளந்த பிறகு தான் உலகுக்கு தெரிய வரும் ..... தற்போது நிறைய பேருக்கு கட்சியா பிளவா என்று குறுக்கும் நெடுக்கும் சந்தேகம் வந்திருக்குமே... அதை பற்றி எனக்கு தெரிந்த நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து கசியும் சேதியை தான் கக்க போகிறேன்.... அதுக்கு முன்னால் குடிகார காந்தம் எப்படி எதிர்கட்சி தலைவர் ஆனார் என்பதையும் பார்ப்போம். குடிகார கந்தம் அவரோட சொந்த உழைப்பில் ஒன்னும் அரசியலில் முன்னுக்கு வந்து விடவில்லை..... அவரோட நாயுடு சாதி பெருந்தலைகள் பண்ணிய திருவிளையாடல்களின் பலன் தானாம் அது. ஆரம்பத்தில் அண்ணன் கண்ணீர் குட்டை மீது தான் முதலீடு பண்ணி இருந்தார்களாம். அண்ணன் தாய் கழகத்தில் இருந்து வெளியே வர அண்ணனுக்கு போதை ஏற்றி விட்டதும் அந்த சாதி பெருந்தலைகள் தானாம்.

அண்ணனுக்கு அப்போது இளைஞகர்களிடையே இருந்த மவுசை வைத்து எப்படியாவது கல்லா கட்டி விட வேண்டும் என்று துடித்த சாதி பெருந்தலைகள் பொருளாதார உதவிகளை வாரி இறைத்ததோடு மட்டுமல்லாமல் சாதி சங்கங்கள் மூலமாக அவங்க சாதி ஓட்டுகளையும் முழுமையாக அண்ணனுக்கு திருப்பி விட எல்லா வேலைகளையும் செய்தார்களாம். ஆனால் அண்ணன் அடிக்கடி உணர்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகளால் அண்ணன் கண்ணீர் குட்டையின் அரசியல் வாழ்வு ஆட்டம் காண, சாதி பெருந்தலைகள் உழைப்பும் நாயுடு சாதி ஓட்டுகளும் வீணாகி போய்விட கூடாதே என்ற கவலையில் கண்ணீர் குட்டையை கைவிட்டு விட்டு புது ஆளை தேடி கொண்டிருந்த சமயத்தில் மாட்டியவர் தான் அப்போது கருப்பு புரட்சியாக பரிமாணம் எடுத்து கொண்டிருந்த குடிகார காந்தம். காந்தத்தின் செல்வாக்கை அரசியலில் மூலதனமாக்கி கல்லா கட்ட ஆசை பட்ட சாதி பெருந்தலைகள் குடிகாந்தத்துக்கு தங்களது ஆதரவை திருப்பி விட்டார்கள் அத்தோடு பெருளாதார உதவியையும் நாயுடு சாதி ஓட்டுகளையும் முழுவதுமாக பெற்று தர வாக்களிகப்பட்டதாம். ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் காங்கிரசோடு குடிகார காந்தத்தின் கட்சி கூட்டணி வைக்க முழு ஏற்பாடும் காங்கிரசில் உள்ள நாயுடு லாபி மூலமாக நடந்ததாம். ஆனால் காங்கிரசில் அப்போது பலமாக இயங்கி வந்த ரெட்டி லாபி அதற்கு முழு ஆதரவை அளிக்கவில்லையாம். அதற்கு காரணம் குடிகார காந்தம் ஆந்திராவில் சந்திர பாப்பாவோடு நெருங்கிய தொடர்பில் இருந்ததை காங்கிரசில் இருந்த ரெட்டி லாபி விரும்பவில்லை.

இந்த சமயத்தில் தான் நாயுடு சாதி பெருந்தலைகள் பாஜகவில் மோடியோடு நெருக்கமாக இருந்த மற்றுமொரு நாயுடு மூலமாக தமிழகத்து அம்மையாருடன் கூட்டணி ஏற்பட வழி வகை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அம்மாவின் தோழி அதை ஏற்கவில்லை. தேசிய அளவில் பலமான அரசியல் பின்னணி கொண்ட சாதியை சேர்ந்த குடிகார காந்தம் வளர்வது தங்களுடைய அரசியல் அதிகாரத்திற்கு வேட்டு வைத்து விடும் என்று சின்னம்மாவின் சாதிக்காரர்கள் உடுக்கை அடித்தது தானாம். ஆனால் சின்னம்மாவை சமாதானப்படுத்தியது அம்மாவின் முதன்மை குருவான மொட்டை மண்டையனாம். அதாவது குடிகார காந்தத்தின் ஒட்டு வங்கி அம்மா கட்சி கரை ஏறுவதற்கு மிகவும் அவசியம் என்றும், ஆட்சியை பிடித்த பிறகு குடிகாரனை அடக்கி விடலாம் என்று ராச குரு கொடுத்த ஆலோசனைகளால் ஒருவாறு சமாதானம் அடைந்த சின்னம்மா அந்த கூட்டணிக்கு பச்சை கொடி காட்டினாராம். ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, அவர்களே எதிர்பார்க்காத அபார வெற்றி பெற்ற பிறகு, குடிகாரன் அவர்களுக்கு பெரிதாக தேவை படவில்லை. அதோடு அம்மாவின் கவனம் இந்துத்துவ அரசியலில் திரும்ப..... குடிகார காந்தத்தை இனிமேல் வளரவிடுவது அவ்வளவு நல்லது கிடையாது என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக குடிகாந்தத்தின் டவுசரை எப்படி கழட்டலாம் என பல நாட்களாக நடந்த விவாதத்திற்கு பின் எழுந்த திட்டம் தான் இந்த கட்சி உடைப்பு வேலையாம். அதற்கு கருவியாக பயன்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் குடிகார காந்தத்தின் கட்சி அவை தலைவரான பன்றிகுட்டி.

From 17 September 2011


பன்றி குட்டிக்கு சாதி உடுக்கை அடிக்க படுகிறதோடு மட்டுமல்லாமல் மருத்துவருக்கு பதிலாக பன்றி குட்டியை அவர் சார்ந்த சாதியின் ஒரே தமிழக அரசியல் பிரதிநிதியாக மாற்றுவதற்கு உதவிகளும் அதற்கான பொருளாதார தேவைகளும் அளிக்கப்படும் என்று வாக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஏற்கனவே மருத்துவரை அரசியலில் இருந்து ஒழித்து கட்டும் வன்மத்தோடு குடிகார காந்தத்திடம் கூட்டு சேர்ந்த பன்னி குட்டிக்கு இப்போது இது தான் சரியாக தோன்றுகிறதாம். அதனால் பன்றி குட்டியும் அதற்கு தோதாக கட்சியில் உள்ள சொந்த சாதியை சேர்ந்த எம்எல்ஏக்களை ரகசியமாக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம் .அதற்கு உளவுத்துறை முழு வீச்சில் உதவி செய்து வருகிறதாம்....... உடனே என்னங்க இது இப்படி துரோகம் செய்யலாமா என்று சிலர் கேட்கலாம். அட போங்க சார் .... ஒரிஜினலிடமே ஆட்டையை போட்ட பன்னி குட்டிக்கு டூப்ளிகெட்டேல்லாம் எம்மாத்திரம். ஆக பன்னி குட்டியை கொண்டு குடிகாரன் கையில் இருக்கும் பாட்டில் சீக்கிரத்தில் உடைக்கப்படுமாம். ஆனால் குடிகாரனோட நிலைமையை பார்க்க தான் பாவமா இருக்குது. யாரு கண்டா தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளரை தாக்கிய சம்பவம் தூசி தட்டப்பட்டு குடிகாரனுக்கு வேலூர் சிறையில் அறை ஒதுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. ஒரிஜினலையே அரசியலில் ஓழித்து கட்ட இந்திரத்தின் மகனோடு திட்டமிட்ட அம்மா போலியை விட்டு வைப்பாரா என்ன.....

என்னதான் நடக்கணும் நடக்கட்டுமே......

No comments:

Post a Comment