Friday, September 2, 2011

கார்த்திகேயனின் பிறப்பு பற்றிய புராணமும் , அதை தொடர்ந்து எழும் சில கேள்விகளும்படிப்பவர்கள் கவனத்திற்கு :

இங்கு கீழே நான் பதிந்து இருப்பது என்னுடைய சொந்த கருத்துக்கள் கிடையாது. யாரவது இந்த கதை மிகுந்த ஆபாசமாக இருக்குது என்று எண்ணினால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது. இந்து மதத்தில் உள்ள புனித புராணங்களில் ஒன்றான கார்த்திகேய புராணத்தை தான் நான் இங்கு தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதனுடைய ஆங்கில மூலம் பின்வரும் இணைய தளத்தில் காணப்படுகிறது http://www.astrojyoti.com/skandapurana-2.htm . மேலும். குழந்தைகளின் கண்களில் இந்த பக்கம் படாமல் படிப்பது குழந்தைகளுடைய வளர்ச்சிக்கு நல்லது. மேற்கொண்டு கார்த்திக் என்ற பெயர் கொண்ட யாரவது ஏன் மீது கோபப்பட்டால் அதற்கும் நான் பொறுப்பாளி ஆக முடியாது . வேண்டும் என்றால் அவர்கள் புதியதாக வேறு ஏதாவது அசிங்கபடுத்தப்படாத பெயரை தேர்ந்தெடுத்து கொள்வது நல்லது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. சரி வாங்க புராணத்துக்குள்ள போவோம்சிவாவும் பார்வதியும் தங்கள் குடும்ப வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் கந்தமதன் மலையில் மையம் கொண்டு சந்தோஷமாக அனுபவித்து கொண்டிருந்தனராம். அப்படி பட்ட அவர்களுடைய வாழ்வில் அவர்களுடைய கவனக்குறைவினால் பூமிக்கே மிகப்பெரிய ஆபத்து வந்ததாம்..... உடனே எல்லாருக்கும் அவங்க ரெண்டு பெரும் அப்படி என்ன கவன குறைவாக இருந்து விட்டனர் என்று கேட்கலாம்......


ஒருமுறை சிவன் பார்வதியோடு நெருங்கி உறவடிக்கொண்டிருந்தபோது சிவாவின் விந்து கொஞ்சம் தரையில் கொட்டிவிட்டது தானம் அது. அதன் விளைவாக உருவாகிய மிகக்கடுமையான வெப்பத்தால் பூமி தகிக்க ஆரம்பித்து உலக மாந்தர்கள் எல்லாரும் கதறி துடிக்க ஆரம்பித்து விட்டனராம்... அவர்களது கூக்குரல் விசுனுவிடமும் பிரம்மாவிடம் எட்டியதாம். அதை கேட்ட கண்ட விஷ்ணுவும் பிரம்மாவும் கூடி பேசி அக்னியை கொண்டு அந்த அழிவை தடுக்காலாம் என்ற முடிவுக்கு வந்து, உடனே அக்கினியை அழைத்து ஏதாவது செய்து பொங்கி வழியும் சிவனுடைய விந்தால் வரும் அழிவை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.


அக்னியும் உடனே சிவனும் பார்வதியும் சல்லாபித்து கொண்டிருந்த கந்தமாதன் மலைக்கு ஒரு துறவியின் வேடம் பூண்டு சென்றார் .அங்கு அவர் பார்வதியை பார்த்து அம்மா எனக்கு ஏதாவது பிச்சைபோடுங்கள் . பிச்சை எடுப்பதற்கு என் கையை தவிர வேறு எதுவும் இல்லை என்று கேட்டு கொண்டே பார்வதி கையில் உள்ள சிவாவின் விந்துவை பிடுங்கி அக்கினி சாப்பிட்டு விட்டார். இதை கண்டு கடும் சினம் கொண்ட பார்வதி அக்னியை பார்த்து நீ என்னை கேட்காமல் எனக்கு கிடைத்த விந்தை சாப்பிட்டு அவமதித்து விட்டாய் எனவே இன்றிலிருந்து ஒரு மாம்சம் அருந்தும் விலங்காக பிறப்பாய், அத்தோடு நீ அருந்திய விந்தினால் உன் உடம்பில் மிகுந்த வெப்பம் உண்டாகும் என்று சபித்தாள்.


பார்வதியின் சாபத்தால் அக்னியுடைய உடம்பு வெப்பத்தில் தகிக்க ஆரம்பித்தது . உடனே அக்னி சிவனிடம் அவ்வாறு எழுந்த உடல் வேதனையை தவிர்க்க ஏதாவதி பரிகாரம் சொல்லுமாறு கேட்டு கொண்டான். அதற்கு சிவா அக்னி தான் அருந்திய விந்துவை எதாவது பெண்களின் கருப்பையில் கொண்டு பதிந்தால் அவ்வேதனையில் இருந்து தப்பலாம் என்று பதில் அளிக்க, ஏற்கனவே தன்னுடைய உடம்பில் எழும்பிய வெப்பத்தினால் தவித்து கொண்டு தனியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்த அக்கினி, அவ்வழியாக எப்படா பெண்கள் வருவார்கள் என வழிமேல் விழி வைத்து காத்திருந்தான்.


அப்போது மிகுந்த குளிரினால் நடுங்கிகொண்டிருந்த ஆறு கிருத்திகைகள் தங்கள் உடலை வெப்ப மூட்ட அவ்வழியே வந்ததால் அவன் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று .அப்போது அக்கினி தான் சாப்பிட்ட சிவாவுடைய விந்தை அந்த கிருத்திகைகளின் உடலில் உள்ள ஓட்டை வழியே விட்டு விட்டு போய் விட்டான் அதன் விளைவாக அவர்கள் ஆறு பெரும் கர்ப்பமடைந்தார்கள். அதை கேள்விப்பட்ட அந்த பெண்களின் கணவன்மார்கள் அவர்களை சபித்தனர். அதனால் அவர்கள் நட்சத்திரமாய் மாறி வானத்தில் குடி கொண்டனர் அவ்வாறு நட்ச்சத்திரமாய் மாறுவதற்கு முன்பு அவர்கள் தங்களுடைய கருவை இமயமலையில் விட்டு சென்றனர். அந்த ஆறு கருக்களையும் கங்கை நாணல் புற்களும் புதர்களும் நிறைந்த ஒரு ஒதுக்கு புறத்திற்கு சுமந்து சென்றது. அங்கு ஆறு கருக்களும் ஒன்றிணைந்து கார்த்திகேயன் உருவானார் .இதை பற்றி கேள்வி பட்ட தேவர்கள் மிகுந்த ஆனந்தமடைந்தனர் சிவனும் பார்வதியும் கார்த்திக்கேயன் பிறந்த இடத்திற்கு சென்றனர். பார்வதி குழந்தை கார்த்திகேயனை எடுத்து ஆரத்தழுவி கொண்டாள்மேலே இருக்கிற புராணத்தை மொழி பெயர்த்து முடித்த பொழுது என்னுடைய மனதில் நிறைய கேள்விகள் எழும்பின அவற்றை கீழே வரிசை படுத்தி இருக்கிறேன். யாருக்கேனும் அக்கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அதை பதியுமாறு கேட்டு கொள்கிறேன்=> உறவு வைக்கிறதர்க்கு மலை தான் கிடைச்சுதா, மலை முகட்டில் இருவரும் அப்படி இருந்தால் உலகத்தில் இருக்கும் எல்லாரும் அவர்களை பார்க்க நேரிடும் என்ற கூச்சம் இல்லாத தம்பதியர்களா அவர்கள்


=>அப்படி உறவு வைச்சதால பூமி சூடாகியது என்றால் அவர்கள் உறவின் பொது அவ்வளவு கரியமிலவாயு உருவாகியதா. இதுல இருந்து உடலுறவு வைக்கிறதுனாலதான் பூமி சூடாகுதுன்னு சொல்ல வர்றாங்களா


=>எதற்காக ரெண்டு பேர் உறவு கொள்ளும் பொது இன்னொரு கடவுள் வந்து அப்படி உறவு கொள்ளும் இன்னொரு ஆண் கடவுளின் விந்துவை குடிக்கவேண்டும் . அப்பவே வெளிநாட்டுகாரனின் போர்னோ கிராபி காணொளியை பார்த்து கடவுளர்கள் எல்லாம் கெட்டு போய் இருந்தார்களா.


=>அந்த காலத்தில் முனிவர்கள் எல்லாம் விந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார்களோ என்ன ?, பிச்சை கேட்க போன இடத்தில் அடுத்தவரோட விந்தை பிடுங்கி சாப்பிடும் அளவுக்கு


=>வாடகை தாய் முறையை அப்பவே உருவாகிட்டான்களே. அது எப்படி சாத்தியம் ஆனது


=>அந்த முனிவர் உருவத்தில வந்த அக்கினி அவங்க ரெண்டு பெரும் உறவு கொள்ளும்போது விந்தை சாப்பிட்டான் என்று சொல்லபடுதே. விந்தை சாப்பிடும் அளவுக்கு இன்னொரு ஆள் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் புகுந்து, இருவரும் உறவு கொள்வதை வேடிக்கை பார்க்கிறான் என்பது கடவுளாக இருக்கும் ரெண்டு பேருக்கும் தெரியவில்லையா .


=>ஒரு குட்டி தெய்வத்தை உருவாக்குவதற்கு இத்தனை பெண்களின் கர்ப்பை சூறையாடவேண்டுமா


=>கடவுளருடைய திரு விளையாடல்கள் என்ற பெயரில் எதற்கு இவ்வளவு ஆபாசம்

No comments:

Post a Comment