Sunday, September 18, 2011

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இருந்து பரமக்குடிக்கு பயணம் செய்த சாதி வெறி

இப்படி நான் ஒரு தலைப்பை போட்டவுடனே , என்னய்யா கஞ்சா அடிச்சு இருக்கியா , சம்பந்தமே இல்லாத ரெண்டு விடயங்களை சம்பந்தப்படுத்தி பேசுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற வேலை என்று தெரியாதா என்று கேள்விகள் எழுப்பலாம். அது ஏன் உங்கள் இடத்தில் இருந்து நானும் இத்தலைப்பை பார்த்தால் எனக்கும் அப்படி தான் தோன்றும். ஆனால் அதையும் தாண்டி இவ்விரண்டின் மூலத்தை நோக்கி பிரயாணித்தால் அவை இரண்டும் ஒரே இடத்தில் இருந்து கிளம்பியவை என்று அறிந்து கொள்ள முடியும். அதற்கு நீங்கள் இந்த கட்டுரையை பொறுமையாக வாசிக்க வேண்டும்

சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரியில் ஏற்பட்ட கலவரம் ஆரம்பத்தில் ஊடக விபச்சரிகளால், கீழ்சாதி மாணவர்களால் அப்பாவி மாணவன் மீது நடத்தப்பட்ட வன்முறை என்றே பரப்புரை செய்யப்பட்டது. அடிபட்ட பாரதி கண்ணன் என்ற அசிங்கம் கத்தியை எடுத்து கொண்டு கொலை வெறியோடு அதற்கு முன்பு நடத்திய குத்தாட்டத்தை ஊடக விபச்சாரிகள் தகளுடைய கோவணத்திற்குள் வைத்து மறைத்து கொண்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது. பொது புத்தியும் எதிர் வினை தொடுத்த மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்தது. ஆனால் அவர்களில் யாருமே அதற்கு மூல காரணமாக அமைந்த நிகழ்வுகளான சென்னை அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லூரி விடுதியில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்கள் நடாத்திய வெறியாட்டத்தை தப்பி தவறியும் கூட மூச்சு விடுவதில்லை. ஒடுக்கப்பட்ட மாணவர்களும் எங்கெல்லாம் முறையிடமுடியுமோ அங்கெல்லாம் முறையிட்டு தோல்வியோடு திரும்பியதொடு மட்டுமல்லாமல், அதற்கு பிரதி பலனாக ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருந்து உருட்டல்களையும், மிரட்டல்களையும் தான் சந்திக்க வேண்டி இருந்தது.

இப்படி பட்ட சூழ்நிலையில் தான் அவங்க தாதா முத்துராமலிங்கத்தோட பிறந்த நாளும் வந்து சேர்ந்தது. இந்த தருணத்தில் இந்த முத்துராமலிங்க தேவர் யார் என்பதையும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். பொது புத்திக்கு அவர் ஏதோ ஓடுக்கப்பட்ட மக்களால் எதிரியாக கருதப்படுகிறார் என்றே படும். அவரை ஏன் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய எதிரியாக கருதுகிறார்கள் என்று எண்ணுவதற்கு எல்லாம் நேரம் இருக்காது. அதையெல்லாம் பற்றி சிந்திக்க முடியுமா அவங்களுக்கு. சாமி கண்ணை குத்திடுமே ..... சரி அப்படி என்றால் அவர் உணமையில் யாரு ? அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட அவருடைய கடந்த கால வாழ்வின் சில பகுதிகளை உற்று பார்த்தால் தெரியும்.

தமிழகத்தில் எல்லோருக்கும் கல்வி என்பதை சட்டமாக்கிய அய்யா காமராசரை “எங்கிட்ட கைகட்டி நிற்க வேண்டிய சாணாப்பயல் என்னையே எதிர்க்க துணிந்து விட்டான்” என்றும் சாணான் கடைகளில் பொருளை வாங்காதே என்றும் மேடைகளில் வெறியூட்டும் விதமாக பேசி விருதுநகர் பகுதிகளில் அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டவர் தான் இவர். அதுமட்டுமா ஒடுக்கப்பட்ட மக்களை பேருந்தில் ஏற்ற மறுத்த டி.வி.எஸ் குழும சாதி வெறியனை நோக்கி அய்யா சவுந்திர பாண்டியனார் "எங்களுடைய மக்களை பேருந்தில் ஏற்ற மறுத்தால் அந்த பேருந்துகளை எங்கள் பகுதிகளில் ஓட அனுமதிக்க மாட்டோம்” என்று கர்ச்சித்த போது டி.வி.எஸ் கம்பெனி சாதி வெறியர்களின் பேருந்துகள் எங்கள் பாதுகாப்பில் ஓடும் என்று வெறித்தனமாக அறிக்கை விட்டவர் தான் இந்த முத்துராமலிங்கம். இப்ப தெரியுமே அந்த மனிதரோட லட்சணம் என்னவென்று. இவையெல்லாம் சும்மா சில துளிகள் தான். இதை விட பெரிய மாமாங்கம் எல்லாம் செய்து இருக்கிறார். அவை எல்லாவற்றையும் பற்றி பேசியாச்சுன்னா இந்த கட்டுரையின் நோக்கம் திசை திரும்பி விடும்.

சரி மறுபடியும் தலைப்புக்கு வருவோம் சட்ட கல்லூரியில் ஆதிக்க சாதி வெறி படித்த மாணவர்கள் முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளை ஒட்டி சுவரொட்டி அச்சடித்தபோது அதில் அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் என்பதற்கு பதிலாக சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் என்று குறுப்பிட்டு இருந்தார்கள். இதை பார்த்த ஒரு சில மாணவர்கள் அந்த ஆதிக்க சாதி வெறியர்களிடம் போய் புரட்சியாளர் அம்பேத்கர் பேரில் அமைந்த கல்லூரியை சுவரொட்டியில் குறுப்பிடும் போது அவருடைய பேரை விடுத்து வெறும் சட்ட கல்லூரி என்று அச்சடித்து இருக்கிறீர்களே இது நியாயமா என்று கேட்டு இருக்கிறார்கள். அது அப்பவே வாக்குவாதமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக நம்ம அசிங்கம் பாரதி கண்ணன் என்ற நாட்டாமையின் கைவண்ணத்தில் அரங்கேறியது தான் அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் ஏற்பட்ட கலவரம். நம்மையே தட்டி கேட்டதோடு மட்டுமல்லாமல், ஆதிக்க சொறித்தனத்தை சுட்டி கட்டு விட்டார்களே ஈன சாதி பயல்கள் என்ற அவமானத்தில் நெளிந்து துடி துடித்த ஆதிக்க சாதி புழுக்கள் ஓன்று கூடி ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மாணவர்கள் மீது ராணுவ தாக்குதல் நடாத்த திட்டமிட்டனர். அதற்கு அவர்கள் தேர்தெடுத்த நாள் தான் 12 நவம்பர், 2008. ஆனால் அடிவாங்கி ஓடியது என்னவோ அசிங்கம் தான். அசிங்கம் கூட அசிங்கபடகூடாது என்பது தான் எம்முடைய அவா .ஆனால் அந்த அசிங்கத்திற்கு அல்லவா அது தோன்ற வேண்டும். தற்போது அந்த அசிங்கம் தனது பட்ட படிப்பை உயிருக்கு பயந்து சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கி கொண்டு வெற்றிகரமாக(?) படித்து முடித்து விட்டதாம். மாணவ பருவத்திலேயே கலவரத்தை தூண்டி விட்டவன் இப்ப வழக்கறிஞர் ஆகி விட்டானாம் இன்னும் என்னவெல்லாம் அரங்கேற்ற போகிறானோ ம்ம்ம்ம்ம்ம்ம் அவர் பட்ட படிப்பை முடித்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லாரி முன்பு கடந்த 16 தேதி வைக்கபட்ட ஆளி பதாகையிலும் மறுபடியும் அம்பேத்கர் பெயர் விடுபட்டு இருந்தது. பதாகையில் வானமே எல்லை என்று பொருள் படும் வாசகம் இருக்க, ஒரு புறத்தில் ஈழ(?) தாய் . செயா சிரித்து கொண்டிருந்தார். அந்த பதாகையை அது வைக்கப்பட்ட சமயம் என்று கூட்டி கழித்து பார்த்த பொழுது பரமக்குடியில் நடாத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு நன்றி செலுத்த வைக்கப்பட்டு இருப்பது போன்றே உணர்ந்தேன்.

From 19 September 2011


சரி இப்ப பரமக்குடியில் சாதி வெறி பிடித்த அரசு எந்திரத்தால் நடாத்தப்பட்ட வன்முறையின் மூலத்தை நோக்கி போவோம். ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய விடுதலை போராளியாக கருதும் இம்மானுவேல் சேகரனின் குரு பூசையை, முத்துராமலிங்கத்திற்கு அவரின் சாதியை சார்ந்தவர்கள் நடாத்தும் குருபூசையை போலவே சமீப காலமாக நடாத்தி வருகின்றனர். அது ஏற்கனவே ஆதிக்க சாதி வெறியர்களிடையே கடுமையான புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது. அது எப்படி நம்ம ஐயாவை மதிக்க மறுத்ததால் ஐயாவால் மரணதண்டனை விதிக்கப்பட்டு நம்ம பாட்டன்களால் வெட்டி கொல்லப்பட்ட இம்மானுவேலுக்கு நமது ஐயாவிற்கு செய்வது போன்ற குரு பூசையா எப்படி அது நடக்கலாம் என்று அவர்களின் கும்பி கொதித்து கொண்டிருந்தது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் அடுத்து அடுத்து வருகிற வருடங்களில் போராளி இம்மானுவேல் சேகரனின் குரு பூசையை கிட்ட தட்ட திருவிழாவாகவே மாற்றி கொண்டிருந்தனர். எதிர்ப்பு வலுக்க வலுக்க இம்மனுவேலின் குரு பூசைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. எண்ணிக்கை அதிகரிக்க பரமக்குடியை சுற்றி உள்ள பகுதிகளில் மட்டுமின்றி தமிழகம் முழுக்க ஒடுக்க பட்ட மக்கள் அவர்களுடைய ஆதர்ச நாயகனாக கொண்டாடும் போராளி இம்மனுவேலுக்கு புதுசு புதுசாக பட்டங்களை ஆளி பதாகைகளில் (Flax banner) சூட்டி அழகு பார்த்தனர் . அப்படி சூட்டப்பட்ட பட்டங்களில் ஓன்று தான் “எங்களின் தேசிய தெய்வீக தலைவர் இம்மானுவேல் அய்யா” என்று பரமக்குடி பக்கம் வைக்கப்பட்ட ஆளி பதாகைகள் (Flax banner) ஒன்றில் காணப்பட்டது. இது போதாதா சாதி வெறியர்களுக்கு. அதை கண்டு வெகுந்தேழுந்த ஆதிக்க சாதி வெறியர்கள் “எப்படி எங்கள் அய்யா முத்துராமலிங்கதிற்கு மட்டுமே நாங்கள் பயன்படுத்தும் பட்ட பெயரை இம்மனுவேலுக்கு வைக்கலாம்” என்று கொதித்தெழுந்ததொடு மட்டுமல்லாமல் அது காவல் நிலையத்திற்கும் கட்ட பஞ்சாயத்திற்காக எடுத்து செல்லப்பட்டது வழக்கம் போலவே காவல் துறை கட்டபஞ்சாயத்தார்களால் ஒடுக்கப்பட்டவர்கள் செய்தது தவறு என்று தீர்ப்பு கூறப்பட்டது. அதோடு சாதி வெறியர்களின் வெறி அடங்க வில்லை, திட்டமிட்டு மாணவன் பழனிகுமாரை படுகொலை செய்யும் வரை. அந்த படுகொலைக்கு காவல் துறை கட்டபஞ்சயத்தாரால் பரப்பட்ட பொய் தான் “முத்துராமலிங்கத்தை பற்றி அசிங்கமாக அந்த மாணவன் சுவரில் எழுதி வைத்தான்“ என்பது. பாருங்க படுகொலை செய்யப்பட்ட மாணவனை கொன்ற கொலையாளிகளை தேடி கைது செய்வதற்கு பதில் நம்ம காவலி துறை என்னவெல்லாம் பண்ணுகிறது என்று.....

சரிங்க பரமக்குடிக்கும் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கும் என்ன காரணம் என்று கேட்டால் அங்கேயும் விடயம் இருக்கிறது. சட்ட கல்லூரியில் நடந்த கலவரத்திற்கு பழிக்கு பழிவாங்க பெரிய அளவில் எதிர்தரப்பினரை போட்டு தள்ள வேண்டும் என்று கடந்த மூன்று வருடங்களாக ஆதிக்க சாதிவெறியர்கள் பல்வேறு மட்டங்களில் இருந்து திட்டங்கள் தீட்டியதன் விளைவு தான் பரமக்குடி சம்பவம். அதுவும் கலைஞருடைய ஆட்சியில் நடத்துவது என்பது தங்களுக்கு சரியான சூழலை அமைத்து தராது என்பதால் அம்மா எப்படியும் ஆட்சிக்கு வந்து விடுவார் அதன் பிறகு நடத்தலாம் என்று சாதி வெறியர்களின் தலைமை வளர்ந்து வரும் இளம் சாதி வெறியர்களை கடந்த மூன்று வருடங்களாக கட்டுபடுத்தி வைத்து இருந்தது. அம்மா பதவி ஏற்ற உடனேயே சட்ட கல்லூரி சம்பவத்திற்கு பழிக்கு பழிவாங்க பல்வேறு மட்டங்களிலும் ஆதிக்க சாதிவெறியர்கள் துரித கதியில் ஆலோசனைகளை முடுக்கி விட்டனர். இந்த முறை அவர்கள் நேரடியாக வீதிக்கு வராமல் அரசு இயந்திரத்தை வைத்து பழிவாங்கினால் அது பெரிய அளவில் தங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே அத்திட்டத்தின் அடிப்படை. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த நாள் தான் இம்மானுவேல் சேகரரின் குரு பூசை. அதற்காக அரசின் அதிகார மட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன ஆதிக்க சாதி வெறியர்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்த காவல் துறையினர் பரமக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் திட்டமிட்டு பணியமர்த்தப்பட்டனர். ஆதிக்க சமூகத்தை சேர்ந்த குற்றவாளிகள் இதற்கெனவே வெளியில் கொண்டுவரப்பட்டனர். ஆதிக்க சாதியினர் இருக்கும் ஊர்களில் எல்லாரும் தயார் நிலையில் இருக்குமாறு முன்பாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் இடங்களில் அம்மக்கள், காவல் துறையினரால் பாதுகாப்பு என்று பெயரில் பல்வேறு இன்னலுக்குள்ளாக்கப்பட்டனர். இவையனைத்தும் ஆதிக்க சாதி வெறியர்கள் எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடாத்தும் ராணுவம் போன்று செயல் பட்டு இருக்கின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் சந்தடி சாக்கில் ஒடுக்கபட்ட சமூகத்தை சேர்ந்த ஏதாவது ரெண்டு பெரிய தலைகளை போட்டு விட வேண்டும் என்றும் தாக்குதலுக்கு தலைமை ஏற்கும் காவல் துறையினருக்கு கட்டளை இடப்பட்டு இருந்ததாம். கிட்ட தட்ட அதன் அடிப்படையில் தான் ஜான் பாண்டியன் கைதும்நடை பெற்றது. ஆனால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு வந்த காவல் துறையினர் ஜான்பாண்டியன் கைது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற்று எண்ணவில்லை. அதோடு தாக்குதலுக்காக பரமக்குடியில் தயார் செய்து வைக்கபட்டிருந்த காக்கி ஆடை சாதி வெறியர்களுக்கும், வல்லநாட்டு பகுதியில் ஜான்பாண்டியனை கைது செய்த காவல் துறைக்கும் தொடர்பில் குளறுபடி ஏற்பட , பரமக்குடியில் காக்கி ஆடையில் இருந்த சாதி வெறியர்கள் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்ட தகவல் வருவதற்கு முன்ப துப்பாக்கி சூடு நடத்தி முடித்து இருந்தனர். ஜான்பாண்டியன் கைதினால் எழுந்த கட்டுக்கடங்காத கலவரத்தை கட்டுபடுத்தவே துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது என்று கதை எழுதலாம் என்று நினைத்திருந்த காவல் துறையின் திட்டத்தில் இதனால் மண் விழுந்தது எனலாம். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் பரமக்குடி துப்பாக்கி சூடும், ஜான்பண்டியனின் கைதும் சூட்டை கிளப்ப ஜான்பாண்டியனின் தலை மீது வைக்கப்பட்ட குறி நிறுத்தி வைக்கப்பட்டது என்றே சொல்லலாம். காவாலி துறையினரும், சாதி வெறியர்களும் தங்களுடைய திட்டம் இந்த அளவிற்கு சொதப்பும் என்று நினைக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது இன்னும் நிறைய உயிர் பலிகளை, அது நிறைவேறாமல் போனது அவர்களுக்கு வருத்தமே.

அது என்னங்க சட்டக்கல்லுரி கலவரம், பள்ளி மாணவன் பழனி குமார் படுகொலை, பரமக்குடியில் வைக்கபட்ட ஆளி பதாகை சம்பந்தப்பட்ட பிரச்சினை என மூன்று இடத்திலேயும் பெயரையும், பட்டத்தையும் பயன்படுத்துவது தான் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறதே ஏன் என்று பலர் கேட்கலாம். அங்க தான் நீங்க ஆதிக்க சாதி வெறியின் உள்நோக்கத்தை உரிந்து பார்க்க வேண்டும். ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எப்பவுமே தங்களுடைய சாதி பெயர்களின் மீதும் பட்டங்களின் மீதும் ஒருவித இனம்புரியாத காமவெறி இருந்து கொண்டே இருக்கிறது.. உடனே அவங்களை நம்ம பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் அனுப்ப வேண்டியது தானே என்று குதர்க்கமாக கேட்க கூடாது.

சமீபத்தில் கூட தெய்வதிருமகன் என்ற பெயரில் படம் எடுத்த போது அந்த பெயரை வைக்ககூடாது என்று ஆதிக்க வெறியர்கள் போராட படத்தின் தயாரிப்பாளரும் எதிர்நோக்க வேண்டிய வன்முறைக்கு பயந்து பெயரை தெய்வதிருமகள் என்று மாற்றி கொண்டார். அந்த படத்தின் தயாரிப்பாளர் பெயரை மாற்றி தப்பித்து கொண்டார். பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையின் காரணமாக அந்த பெயரை பயன்படுத்த, கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு அதுவும் ஒரு காரணமாகி விட்டது. சண்டியர் என தன்னுடைய படத்திற்கு பெயர் வைத்த போது எழுந்த எதிர்ப்புகளை கலைத்துறையினருக்கு எதிரான வன்முறை என்று கூப்பாடு போட்ட கமல் என்னும் அரைவேக்காடு, தெய்வதிருமகன் என்று ஒரு படத்திற்கு பெயர் சூட்டப்பட்டதனால் எதிர்ப்பு எழுந்த போது அதே கமல் தனது உடம்பில் உள்ள அத்துணை ஓட்டைகளையும் பொத்தி கொண்டதில் இருந்து கமல் என்ற குள்ள நரியின் வேலை தெளிவாக புலப்படும். பின்ன படம் எடுக்கிறேன் என்று சாதி வெறியர்களின் அரிப்புகளுக்கு சொரிந்து விடும் கலைஞனல்லவா அவர். சாதி வெறியர்களின் அரிப்புக்கு எதிராக எதையும் செய்து விட்டால் நாளைக்கு அவர்களுக்கு சொரிந்து விட முடியாதே என்ற கவலை அவருக்கு இருந்திருக்கும். இப்ப எல்லாத்தையும் விடுங்க. இப்படி பெயர்களுக்கும் பட்டங்களுக்கும் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடி கொண்டாடுவதும், பெயர்களை பயன்படுத்துவதில் எழும் முரண்பாடுகளால் மற்றவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் தொடருமானால், குறுப்பிட்ட சில தமிழ் பெயர்களை சூட்டி கொண்டு தமிழ்நாட்டில் நடமாட வேண்டுமென்றால் தற்காப்புக்கு ஆயுதம் வைத்து மடியில் ஆயுதம் வைத்து கொள்வது அவசியம் என்ற நிலைமை உருவாகி விடும்.

சாதி வெறியர்களின் அரிப்புக்கு மருந்திட வேண்டிய அரசாங்கம் அதை ரணகளபடுத்தி கொண்டிருக்கிறது...


என்னத்தை சொல்ல... ஒட்டு அரசியலுக்கு முன்பு மனசாட்சியும் மனிதமும் செத்து கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment