Tuesday, September 6, 2011

டி.ஆர்.பி ரேட்டை உயர்த்த அடிக்கப்பட்ட சாகசத்தை பற்றிய கிசு கிசு .

சமீபத்தில் சட்ட பேரவை உறுப்பினர் ஒருவரின் கைபேசி பறிக்கப்பட்டதாக தகவல் எல்லா ஊடகங்களிலும் வந்தது. அது உடன்பிறப்புகள் நிறைந்த கழகத்தில் இந்த ஆளும் அரசு மீதான கோவத்தை அதிகரிக்க செய்தது. கழக தந்தையே அறிக்கை விடுமளவுக்கு சென்றது. ஆனால் கைபேசி பறிக்கப்பட்ட சம்பவமே சொல்லி வைத்து நடாத்தப்பட்ட சம்பவமாம் என்று பட்சி ஓன்று வந்து காதில் கிசு கிசுத்து விட்டு போய் இருக்கிறது. ஏற்கனவே கடலில் கால்வாய் வெட்டியதில் தலைவருக்கு தெரியாமல் ஆட்டையை போட்டது, சின்னம்மாவோடு தொழில் முறை தொடர்புகளை வளர்த்து கொண்டது, மத்தியில் கழக தலைமைக்கு தெரியாமல் தனி ஆவர்த்தனம் பண்ணியது என பல விதங்களிலும் கழக தந்தையின் எரிச்சலுக்கு ஆளாகியிருந்தார், கைபேசியை சட்ட சபையில் இழந்த சின்னவரின் பெரியவர். இந்த நிலையில் சமீப காலமாக தளபதியிடமும் அவருக்கு நல்ல பெயர் அவ்வளவாக இல்லை. கிட்ட தட்ட கட்சி தலைமையும் அவரை எட்டப்பன் லிஸ்ட்டில் தான் வைத்து இருந்தது. கால்வாய் வெட்டியவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் தலைமைக்கு அவரின் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. அதிலும் அதிமுக நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் எல்லா இடத்திலும் அமோக வெற்றி பெற, மன்னாரன் கம்பெனியின் சொந்த குடியில் கால்வாய் வெட்டியவரின் வாரிசு பெற்றது திமுக தலைமைக்கு மிகுந்த வினோதமான இன்ப அதிரச்சியை ஆரம்பத்தில் அளித்தது. என்னடா தேர்தலில் பெரிய பெரிய கழக தலைகள் எல்லாம் சுருண்டு விழ மன்னாரன் கம்பெனியின் கோட்டையில் அறிமுக நாயகன் வெற்றி பெற்றது ஆச்சரியத்தை அளித்து இருந்தாலும் ஆரம்பத்தில் கழக தலைவர் அதை மாவட்ட செயல் வீரரின் கடின உழைப்பென்று தான் நினைத்தார். ஆனால் உண்மை என்னன்னா சின்னவரின் வெற்றி மன்னாரன் குடும்பத்து சின்னம்மாவுக்கும், கால்வாய் வெட்டியவருக்கும் இடையே ஏற்பட்ட புரிதலின் அடிப்படையில் கிடைத்த வெற்றியாம்.


கால்வாய் வெட்டியவரின் குடும்பத்து சின்னவரின் வெற்றி பூண்டி செல்வரின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும் அதனால் தான் பூன்டியார் தற்போதைய அரசால் குறிவைக்கப்படுகிறார் என்றே தளபதியும் நம்ப வைக்கப்பட்டார். பூண்டி செல்வர் கைது செய்யப்பட்டபோது கூட கால்வாய் வெட்டியவர் தன் பங்குக்கு களத்தில் இறங்கி ஒரு பகல் காட்சியை அரங்கேற்றினார். ஆனாலும் கழக தலைமைக்கு அவரின் செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படவில்லை. இப்போது அந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் நீ அடிக்கிற மாதிரி அடி நான் அழுகிற மாதிரி அழுகிறேன் என்று மான்னாரன் கம்பெனியோடு பேசி வைத்து கொண்டு அரங்கேற்றிய கூட்டு களவாணி தனம் தான் அந்த கைபேசி பறிப்பு போன்ற செயல்கள் எல்லாம். அதாவது ஏற்கனவே கழக பெருந்தலைகள் எல்லாம் கம்பிகளுக்கு பின்னால் அனுப்ப பட்டு கொண்டிருக்க கால்வாய் வெட்டியவரும் தன்னுடைய குடும்பத்தில் இருந்தும் யாரையாவது ஆளும் கட்சி டார்கட் பண்ணியது போல் காட்சியமைப்பை அமைத்தால் தலைவரின் நம்பிக்கையை பெற முடியும் என்று நினைத்ததன் விளைவே இதெல்லாமாம் ஏற்கனவே கழக தந்தையின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் கால்வாய் வெட்டியவரை மீண்டும் தலைமைக்கு நெருக்கமாக ஒரு உட்கார வைப்பதின் மூலம் தங்களுக்கு சாதகமான நிறைய தகவல்களை எதிர் முகாமில் இருந்து பெறலாம் என்று ஆளும் தரப்பும் நம்புகிறதாம். ஆனால் கழகத்தில் டி.ஆர்.பி ரேட்டு கூடுமா இல்லை இத்தோடு அதற்கு ஆப்பு வைக்கபடுமா என்பது பற்றி சரியான தகவல்கள் இல்லை.


ஆனால் கழக தலைமை இனி டி.ஆர்.பி ரேட்டுகளின் மீது நம்பிக்கை வைக்காமல் கழகத்திற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து நம்பிக்கைக்குரிய தலைவர்களை உருவாக்குவது தான் கழகத்தை வலுப்படுத்த உதவும். இல்லை என்றால் முதலுக்கே மோசம் என்ற நிலையை தான் கழகம் சந்திக்க நேரிடும்


என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது கழகத்திலே, ஒண்ணுமே புரியலை உலகத்திலே... ஆனா ஒண்ணு நிச்சயம், அடிக்கிற மழையில் நரியின் சாயம் ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்காது ... கூடிய விரைவில் சாயம் கலைந்து, நரியின் குட்டு வெளிப்படும் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment